மணமக்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள் வீட்டிற்கு சென்றவுடன் இனியை விளக்கு ஏத்த சொன்னார்கள் அவளும் விளக்கேற்றி வந்தவுடன் அனைவரும் சுவாமியை தரிசனம் செய்தார்கள் பிறகு அவர்கள் வீட்டில் உள்ள வரவேற்புரையில் மணமக்களை உட்கார வைத்து பால் பழம் கொடுத்தார்கள் சிறியவர்கள் சிறிது விளையாட்டு செய்தார்கள் அப்போது மகா அந்த செயினை தன் கையில் தான் வைத்துக் கொண்டு இருந்தால் அவள் கையில் வைத்துக் கொண்டிருக்கும் செயினை கயல் வாங்கினால் மகா எதுவும் பேசாமல் கயல் கையில் அந்த செயினை கொடுத்தால் அவள் கொடுத்தவுடன் கயல் நிலாவை பார்த்தால் நிலாவும் கயிலை பார்த்துக் கொண்டே தனது அண்ணனிடம் சென்றார்கள் வீட்டில் உள்ள அனைவரும் என்னதான் அப்படி செய்யப் போகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் கயலும் நிலாவும் சேர்ந்து அந்த செயினை உதிரனின் கழுத்திலே மாட்டி விட்டார்கள் அவன் இருவரையும் ஏன் என்பது போல் மட்டும் தான் பார்த்தான் வாயால் ஏன் என்றெல்லாம் கேட்கவில்லை அண்ணா இது மகா உனக்காக முதன்முதலாக வாங்கி கொடுத்தது இதை நீ எங்களுக்காக தர வேண்டியது இல்லை என்றவுடன் அவன் அவனது அறைக்குச் சென்று அவனது வேளத்தில் பர்சில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு வந்து இருவரின் கையிலும் கொடுத்தான் இருவரும் சிரித்துக்கொண்டே சென்று விட்டார்கள் வேண்டாம் என்று எல்லாம் சொல்லவில்லை அதேபோல் மகாவின் கையிலும் பணம் கொடுத்தான் மகா அண்ணன் கொடுத்த பணத்தை வாங்காமல் எனக்கு இது வேண்டாம் எனக்கு அத்தை என்று கூப்பிட ஒரு மருமகனோ மருமகளோ பெற்று தா அதுதான் எனக்கு நீ எனக்கு தரும் பரிசு நான் ஆர்த்தி சுற்றியதற்கு நீ எனக்கு கொடுக்கப் போகும் பரிசு அது தான் என்று கூறிவிட்டு எழுந்து விட்டால் வீட்டில் உள்ள அனைவரும் மகாவை பார்த்தார்கள் இனி ஏண்டி உனக்கு உடனே குழந்தை வேணுமா கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் பெத்து கிட்ட வேணாங்குதா என்ற சிரித்துக் கொண்டே கேட்டாள் மகாவும் சிரித்துக்கொண்டே அது உங்க விருப்பம் ஆனால் இந்த வீட்டிற்கு விளையாட அடுத்த தலைமுறை என ஒரு குழந்தை வந்தால் நன்றாக இருக்கும் அதுதான் நீங்கள் இருவரும் உங்கள் வேலையில் நீங்கள் விருப்பப்பட்டது போல் நல்ல முறையில் செட்டில் ஆகிவிட்டீர்கள் அல்லவா நீ குழந்தையை மட்டும் பெற்றுக் கொடு அத்தை நாங்கள் மூவர் இருக்கிறோம் சித்தப்பா மாமன்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
தாத்தா பாட்டி கொள்ளு தாத்தா பாட்டிலாம் இருக்கிறார்கள் வளர்த்து தருவார்கள் அதை பற்றிய கவலை உனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்டு அவளது அறைக்குச் சென்று விட்டாள்மகா அவளது அறைக்கு சென்றவுடன் கயல் நிலா இருக்கும் இடத்திற்கு மகிழ் வந்தான் இருவரும் நிமிர்ந்து மகிழை பார்த்துவிட்டு என்ன மாமா என்று கேட்டார்கள் ஏன் நான் கொடுத்த பணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள் என்று கேட்டான் இருவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே மாமா நீங்க கொடுத்தா அது நீங்க கொடுக்குறதா இருக்கும் எங்களுக்கு எங்க அண்ணன் கையால இருந்து ஒரு ரூபாய் கிடைச்சாலும் அது பெருசுதான் நாங்க ஆரத்தி சுத்துனதுக்கு மாப்பிள்ளை கிட்ட இருந்து தான் எதிர்பார்த்தோம் நீங்க கொடுக்குற காசு எப்பயும் எங்க அண்ணன் கொடுக்கிற காச ஆகாது அது வேற இது வேற மத்த நேரமாக இருந்தால் நீங்க கொடுக்காமலே உங்க பாக்கெட்ல இருந்து நாங்க எடுத்துப்போம் அது வேற என்று கூறினார்கள் மகிழ் இருவரது தலையிலும் ஒரு கொட்டு போட்டான் பிறகு வீட்டில் உள்ளவர்களும் சரி என்று கூறிவிட்டு அனைவரையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள் என்றார்கள் மாலை 3 மணி போல இருந்தது அவர்களுக்கும் சிறிது அசதியாக இருந்ததால் அவ்வாறு சொன்னார்கள் அன்று இரவே மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்தார்கள் உதிரன் அவனது அறையில் இருந்தான் பெரிதாக அவர்கள் எதுவும் செய்யவில்லை இன்று முதல் இரவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜோசியரிடம் கேட்டு நல்ல நேரம் மட்டும் தான் பார்த்தார்கள் மற்றபடி அதற்காக என்று வேறு எதுவும் செய்யவில்லை இரவு 8:00 மணி போல் அனைவரையும் சாப்பிட வைத்தார்கள் அப்பொழுது நிலா தான் காவேரியிடம் என்ன பெரிம்மா அதுக்குள்ளே சாப்பிட கூப்பிடுறீங்க நம்ம எப்பவும் லேட்டா தானே சாப்பிடுவோம் என்றால் அப்பொழுது காவேரி உனக்கு பசிக்காது அதுக்காக எல்லாருமே அப்படியே இருக்க முடியுமா சீக்கிரம் சாப்பிட்டு தூங்குங்க டா எங்களுக்கு அசதியாக இருக்கு என்றார் சரி என்று விட்டு அனைவரும் சாப்பிட வந்தார்கள்.
ஆனால் பெரியவர்கள் அதற்காக இவ்வளவு சீக்கிரம் அனைவரையும் சாப்பிட வைக்கவில்லை ஒரு காரணத்தோடு தான் சீக்கிரமாக சாப்பிட அழைத்தார்கள் வயதுக்கு வந்து பெண் பிள்ளைகளும் இருக்கிறது ஆண் பிள்ளைகளும் இருக்கிறது அவர்களை வைத்துக் கொண்டு இப்போது இவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்வது அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அவர்களுக்கும் மனதில் சஞ்சலங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் இவ்வாறு செய்கிறார்கள் அதிலும் இருப்பதில் அனைத்திலும் கடைக்குட்டி அகல் நிலா தான் அவள் இந்த ஒட்டுமொத்த வீட்டின் செல்லமும் கூட அப்படி இருக்கும்போது இப்படி செய்தால் அவர்கள் மனதில் ஏதாவது சஞ்சலம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று எண்ணினார்கள் அதனால் சீக்கிரமாகவே சாப்பிட்டவுடன் அவர்களை அறைக்கு அனுப்பி வைத்தவுடன் நாம் முதலிரவுக்கு தேவையான ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணினார்கள் அதேபோல் அனைவரும் சாப்பிட வந்தார்கள் அனைவரும் சாப்பிட்ட கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நிலா சொன்னால் அப்பொழுது மகிழ் தான் நிலா போதும் பேசிய வரை நாளை பார்த்துக்கலாம் எல்லாத்துக்கும் அசதியாக இருக்கு பாரு எனக்கு கூட அசதியா இருக்கு நான் தூங்கி எவ்வளவு நாள் ஆகும்னு உனக்கே தெரியும் தானே நிலா குட்டி மாமா தூங்கனுமா இல்லையா தான் தூங்க வேண்டாமா என்றான்மகிழ் தனக்கு அசதியாக இருக்கிறது என்று கூறியவுடன் நிலா வேறு எதுவும் கூறாமல் சரி மாமா என்று விட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.
அப்போது மகிழ் தான் கயலை பார்த்தான் கயலும் சரி மாமா எனக்கும் தூக்கம் வருது நான் இன்று ஒரு நாள் நிலா கூட தூங்குகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் சென்று விட்டால் அவள் ஒரு அளவுக்கு பக்குவம் உடையவள் தான் அவள் ஒன்னும் அவ்வளவு சிறிய பெண் அல்ல அதனால் வேறு எதுவும் சொல்லாமல் அவளுக்கும் புரியும் என்பதால் வேறு எதுவும் சொல்லாமல் நிலா இருக்கும் அறைக்கு சென்று விட்டால் ஏனென்றால் நிலாவிற்கு தூக்கம் வந்தால் அவள் உடனே தூங்கி விடுவாள் அவளுக்கு தூக்கம் வராததால் தான் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்ததால் கயல் அவளுடன் பேசிக்கொண்டே அவளது அறையில் தூங்க விடலாம் என்று அவளது அறைக்கு சென்றாள் பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைத்து பாத்திரங்களும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள் அப்போது எழிலும் முகிலும் தான் உதிரனின் அறையில் அவனது கட்டிலில் பூக்களால் சிறிது அலங்காரங்கள் செய்து கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அங்கு மகா வந்து நின்றால் இருவரும் என்ன செய்கிறீர்கள் என்று எட்டி பார்த்தாள் எழில் தான் என்ன பண்ற மாதிரி தெரியுது என்று கேட்டான் விடு பீல் பண்ணாதடி உன்னோட ஃபர்ஸ்ட் நைட்டுக்கும் இதே மாதிரி ரெடி பண்ணி விடுறேன் என்றான்சீ போடா நாயே என்றால் மகா அவன் தான் லூசு மாதிரி பண்றனா நீ யும் அவனுக்கு ஏத்த மாதிரி பண்ணிட்டு இருக்க என்றால் முகிலை பார்த்து எதுடி லூசு மாதிரி பண்றது என்று கேட்டுக் கொண்டே அவ்வளவு காதல் பிடித்து திருகினான் அப்போது முகிலன் தான் எழில் கொஞ்ச நேரம் கம்முனு இரு என்றான் முகிலன் ஆமாண்டா இவளுக்கு ஒன்னொன்னா அண்ணனுக்கு ரெண்டு பேரும் பொங்கி கிட்டு வந்துருங்க என்று சொல்லிக் கொண்டே அவளது காதில் இருந்து கை எடுத்தான்.
ஆமா நாங்கதான் பொங்கி கிட்டு வரோம் நீ போங்கம்மா அடங்கியே இரு எங்களைவிட பொங்கரது நீதான் மகா சிரித்துக்கொண்டே எழிலின் தோளில் இரு பக்கமும் கை போட்டுக் கொண்டு சரி விடு எழிலு என்றாள் எழில் திரும்பாமலே அவன் பின்பக்கம் இருந்து மகாவின் நெற்றியில் இடித்தான் அப்பொழுது மகிழும் அந்த அறைக்கு வந்தான் உங்க விளையாட்டெல்லாம் முடிஞ்சிடுச்சா வேலையெல்லாம் முடிஞ்சுச்சுனா வெளிய வாங்க நேரம் ஆகுது என்றான் மகிழை முறைத்துக் கொண்டே முவரும் வெளியில் வந்தாங்க அப்போது எழில் தான் கவுண்டர் கொடுத்தான் இவர் என்னடா எப்ப பார்த்தாலும் வீரப்ப இருக்காரு என்றான் அய்யனாருன்னு சொல்ரது கரெக்டா இருக்குடா இவருக்கு பேரு எந்த நேரம் பார்த்தாலும் மூஞ்ச உர்னு வைத்துக்கொண்டு என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள் எப்போதும் எப்போதும் முகத்தை உர்னு என்று வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே வந்தான் அப்பொழுது மகிழ் வேகமாக வந்து எழில் தலையில் ஒரு கொட்டு கொட்டினான் மூவரும் என்ன எதுக்கு இவர் காதில் நாம் பேசியது விழுமோ என்று திரும்பி பார்த்தார்கள் அதெல்லாம் விழுவும் எனக்கு காது நாலு பக்கமும் தான் இருக்கு போங்க நேரம் ஆகுது என்றான் மூவரும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள் மகா கொஞ்ச தூரம் நகர்ந்து சென்று மாமா சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எப்ப பாத்தாலும் மூஞ்ச உர்ன்னு வச்சுட்டு அய்யனார் மாதிரி தான் சுத்துற கையில அருவாள் மட்டும் தான் இல்ல என்று சொல்லிவிட்டு வேகமாக அவளது அறைக்கு ஓடி விட்டாள்மகிழும் சிரித்து விட்டான்.
மற்ற இருவரும் மகிழணை பார்த்து சிரித்து விட்டு அவர்களது அறைக்கு சென்று விட்டார்கள் என்ன பண்றதுன்னு தெரியல ஒரு ஒரு டைம் இதுங்க பண்றது எல்லாம் பாத்தா கோவம் வருது ஒவ்வொரு டைம் சிரிப்பு வருது என்று சிரித்துக் கொண்டிருந்தான் அப்பொழுது உதிரன் என்ன மச்சான் சிரிச்சி கிட்டு இருக்கிற தனியாக என்றான் எல்லாம் இந்த வீட்ல இருக்க வானரங்கள் பண்றத பார்த்தால் சிரிக்க தான் தோணுது என்றான் சரி விடுடா மச்சான் சரி மாப்ள என்று கூறிவிட்டு மகிழும் சென்றுவிட்டான் உதிரன் அவனது அறைக்குச் சென்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தான் இதுங்க மூனும் என்னென்ன பண்ணி வச்சிருக்காங்க என்று நினைத்தான் அவர்கள் செய்து வைத்திருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அப்பொழுது அவனது அறை கதவை திறந்து கொண்டு இதழனி அவனது மனைவியாக முதன்முதலாக அவனது அறைக்குள் நுழைந்தாள் இதழ் உதிரனை பார்த்து கொண்டே வந்தாள் இனி உதிரனின் அறைக்குள் வந்து கதவை சாத்திவிட்டு பால் சோம்பை அங்குள்ள ஒரு மேசையின் மீது வைத்துவிட்டு உதிரனை பார்த்து கண்ணடித்தால் உதிரனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை திருமணப் பேச்சு எடுத்ததில் இருந்து நம்மிடம் அதிகமாக பேசாமல் ஒதுங்கிய சென்றவளா இவள் என்று எண்ணினான்உதிரன் உடனே இதழ் என்று கூறிக் கொண்டே அழைத்துக் கொண்டே சென்று அவளை தூக்கி சுற்றினான் உதிர் உதிர் விடு என்று கத்தினாள் …
இனி அவர்கள் வாழ்க்கையில் நடத்துவது அனைத்து நல்லவையாகவே இருக்கட்டும் அவர்கள் இனிதே அவர்களது இல்லற வாழ்க்கையை தொடங்கட்டும்( நமக்கு இனி அங்க வேலை இல்லப்பா)மகிழ் அவனது அறைக்குச் சென்று படுத்துக்கொண்டு திருமண பேச்சு எடுத்ததில் இருந்து நடந்த ஒவ்வொன்றையும் நினைத்துக் கொண்டே நிமிர்ந்து படுத்து கொண்டு தனது காலை ஆட்டிக் கொண்டு படுத்திருந்தான் கண்களை மூடிக்கொண்டு தான் யோசித்துக் கொண்டிருந்தான் அப்போது அவனது அரை கதவை திறந்து கொண்டு கதவு திறக்கும் சத்தம் கூட கேட்காமல் திறந்து கொண்டு ஒரு உருவம் வந்து அவனது அருகில் உட்கார்ந்தது மகிழ் கதவை தாழ்ப்பாள் போடாமல் தான் இருந்தான் தன்னைத்தேடி இன்று தனக்காக ஒரு உருவம் வரும் என்பதற்காகவே கதவை தாழ்ப்பாள் போடாமல் காத்துக் கொண்டிருந்தான் ..மகிழன் யாருக்காக காத்துக் கொண்டிருந்தானோ அந்த உருவம் தான் இப்போது மகிழனின் அறைக்கு வந்ததா ..அதேபோல் இப்பொழுது சத்தம் எழுப்பாமல் கதவைத் திறந்து கொண்டு வந்த உருவம் யார் ..
.என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
அன்புடன்❣️தனிமையின் காதலி❣️
Interesting
மிக்க நன்றி
அநேகமா அது மகாவா தான் இருக்கணும்.
Apo maha magizh wife avalukaga tha wait panrana
மிக்க நன்றி