இனி மயக்கம் போட்டுவிட்டால் என்றவுடன் மகிழ் இனியையே பார்த்து கொண்டிருந்தான் இனி எதுவும் பேசாமல் தனது அண்ணனை பார்த்து தலையாட்டியவுடன் அவளை கட்டி அணைத்துக் கொண்டு தனது சந்தோஷத்தை வெளி படித்தினான் அப்பொழுது பாண்டியம்மா பாட்டி தான் இப்போதுதான் இனி மாசமாக இருக்கிறாள் அதனால் இப்பொழுது நாம் மகிழனுடைய திருமணத்தை வைத்துக் கொள்ள வேண்டாம் ஒரு ஆறு மாதங்களுக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்றார் உதிரனுக்கு சிறிது சந்தோஷமாக இருந்தது ஏன் கயலுக்கும் கூட சந்தோஷமாக தான் இருந்தது அப்பொழுது வேலு தான் ஏன் மா என்று கேட்டார்என்னடா இப்படி கேக்குற வீட்டில் ஒரு பிள்ளை மாசமா இருக்கு உடனே கல்யாணத்தை வைக்க கூடாது அவளையும் பார்த்துக்க முடியுமா நம்ம ஓடி ஆடி கல்யாணத்துக்கு அனைத்தையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்ய வேண்டி இருக்கும் அது இல்லாமா இப்பதான் ஒரு கல்யாணம் முடிஞ்சு இருக்கு உடனே இன்னொரு கல்யாணத்த வச்சா கண்ணு பட்டுரும் என்றார் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர் சொல்வது சரி என்று பட்டதால் சரி என்று விட்டு அமைதியாகி விட்டார்கள் ஒரு ஆறு மாதங்களுக்கு பிறகு திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினார்கள் அப்பொழுது கந்தன் தான் எனது மகளுக்கும் வயதாகிக் கொண்டே செல்கிறதே என்றார் அவர் எப்படியாவது மகிழனுக்கும் கயலுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினார் அதன் பிறகு பாண்டியம்மாள் பாட்டி தான் சரி ஒரு நான்கு மாதங்கள் ஆவது போகட்டும் என்றார் அதன் பிறகு கந்தகனும் சரி என்று விட்டு அமைதியாகிவிட்டார் அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் இனியை தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள் அவளை முதலில் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என்றார்கள் அது ஒன்றும் பெரிதாக பிரச்சனை ஆகாது அவள் கம்பெனிக்கு வந்தாலும் உதிரன் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று சொன்னான் அப்பொழுதும் வீட்டில் உள்ளவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்கள் பாண்டியம்மா பாட்டியிடம் சென்று பேசினான் இல்லடா பேராண்டி முதல் குழந்தை பொதுவாகவே பெண்களுக்கு முதல் குழந்தை பார்த்திருக்கணும் இவளுக்கு சத்தான உணவுகள் எல்லாம் அதிகமாகவே கொடுத்து கொஞ்சம் அதிகமா தான் பாத்துக்கணும் சத்து குறைவா இருக்குன்னு சொல்லி இருக்காங்க தானே உனக்கே தெரியும் தானே என்றார் அதன் பிறகு அவனால் எதுவும் பேச முடியவில்லை உதிரனும் சரி ஒரு இரண்டு மாதங்கள் அவள் வீட்டில் இருக்கட்டும் என்று சொன்னான் இனியால் வீட்டில் இருக்க முடியும் என்று எல்லாம் தோன்ற முடிய இல்லை ஆனால் தனக்காகவும் தன் குழந்தைக்காகவும் தான் வீட்டில் இருந்தாக வேண்டும் என்பதால் சரி என்று சொன்னால் இப்படியே நாட்களும் ஓடியதுஇனியை எல்லோரும் தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள் தினமும் ஏதாவது மகிழ் தனது தங்கைக்காக வாங்கி கொண்டு வந்து தருவான் பழங்கள் சத்தான உணவுகள் என்று வாங்கிக் கொண்டு தருவான் அதுமட்டுமில்லாமல் அவளுக்கு பிடித்த உணவு வகைகள் என்னென்ன என்று அறிந்திருந்ததால் அதையும் தினமும் ஒன்று வாங்கிக் கொண்டு தருவான் வீட்டிலும் செய்ய சொல்லி பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்து தருவான் இப்படியே சென்று கொண்டிருந்ததுஇப்படியே கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஓடியது அன்று கந்தன் தனது மனைவியிடம் பேசினார் என்ன காவேரி நாலு மாதமாகிவிட்டது இன்னும் கயல் திருமணத்தைப் பற்றி வீட்டில் யாரும் பேசவில்லையே என்றார் நம்ம மருமகள் தான் முழுகாம இருக்கா அவளுக்காக தானே என்றார் அதான் இப்பொழுது இனிக்கு ஆறு மாதங்கள் ஆகிவிட்டதே பின்ன என்ன அவள் நன்றாக தானே இருக்கிறாள் அது மட்டும் இல்லாமல் கயலுக்கும் வயதுக்கு கூடிக் கொண்டே செல்கிறதே என்றார்காவேரிக்கும் அது சரி என்று பட்டதால் தனது தம்பியிடம் பேசினார் வேலூவும் சரி என்று சொன்னதால் காவேரியும் வேலுவும் தனது அப்பா அம்மாவிடம் பேசினார்கள் தாத்தா பாட்டிக்கு இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு பேசினார்கள் சரி திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினான் மகிழ் மகா வேகமாக நிமிர்ந்து மகிழனை பார்த்தால் மகிழன் இந்த நான்கு மாதங்களில் மகாவை கண்டு கொள்ளவே இல்லை வீட்டில் அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்று கூட அவன் நினைக்கவில்லை எப்பொழுதும் போல் தான் இருந்தான் அவளிடம் பேச வேண்டுமென்று கூட அவன் எண்ணவில்லை அதே போல் மகாவும் மகிழிடம் பேச வேண்டும் என்று எண்ணவில்லை வீட்டில் உள்ள அனைவருக்கும் இதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை அனைவரும் இனி மாசமாக இருக்கிறாள் என்பதால் அதிலேயே சந்தோஷமாக இருந்தார்கள் அதனால் வீட்டில் யார் யார் பேசிக் கொள்கிறார்கள் என்று கூட வீட்டில் உள்ளவர்கள் அறியவில்லை அவர்கள் இருவரும் இந்த நான்கு மாதங்களில் ஒன்றாக பேசிக்கொண்டதில்லை என்று கூட வீட்டில் உள்ளவர்கள் அறியவில்லை அவர்களுக்கு அனைவரும் எப்பொழுது போல் இருக்கிறார்கள் என்று தான் தோன்றியது ஏன் இலவட்டங்களாகிய கயல் எழில் நிலா முகில் இவர்களுக்கு கூட அவர்கள் இருவரும் பேசாமல் இருக்கிறார்கள் என்ற வித்தியாசம் கூட தெரியவில்லைஎப்பொழுதும் போல் இருக்கிறார்கள் என்பது போல் தான் தெரிந்தது இப்படியே நாட்களும் ஓடியது பத்திரிக்கை அடித்து ஊரில் உள்ள சொந்த பந்தங்களுக்கு ஊரில் உள்ளவர்களுக்கு அனைவருக்கும் பெரியோர்களே சென்று பத்திரிக்கை வைத்து விட்டு வந்தார்கள் உதிரன் இதில் எதிலும் அதிகம் நாட்டம் காட்டாமல் இருந்தான்அவன் அதிக நாட்டம் காட்டவில்லை என்று உடன் வீட்டில் உள்ள அனைவரும் அவனுடைய மனைவி மாசமாக இருப்பதால் அவளை நன்றாக பார்த்துக் கொள்வதில் அவனது கவனம் இருக்கு என்று எண்ணினார்கள் அது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களும் நீ இனியை மட்டும் கவனித்துக் கொள் திருமணத்தை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார்கள் அதனால் தான் அவன் அதிகமாக நாட்டம் காட்டவில்லை என்று எண்ணினார்கள் உதிரனுக்கு கயல் கூட பிறந்த தங்கைதான் அவள் மேலும் அதிக பாசம் வைத்திருக்கிறான் தான் இருந்தாலும் கயலை விட மகா தான் அவனுக்கு உயிர் என்றுதான் சொல்ல வேண்டும் சிறுவயதில் இருந்து உதிரனக்கு மகா தங்கை என்பதை விட உதிரனுக்கு அம்மா என்று கூட சொல்லலாம் அந்த அளவிற்கு தான் அவள் இதுவரை உதிரனிடம் பழகிக் கொண்டிருக்கிறாள் அது மட்டும் இல்லாமல் காதலித்துக் கொண்டிருக்கும் இருவரது காதலை அழித்துவிட்டு அந்த இடத்தில் தனது தங்கையை உட்கார வைக்க வேண்டும் என்று அவன் எண்ணவில்லை அதுவும் ஒரு காரணம் இப்படியே நாட்களும் ரெக்க கட்டி பறந்தது திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பந்த கால் நடுவதற்காக அனைத்து ஏற்பாடும் செய்து கொண்டு இருந்தார்கள் அப்பொழுது மகா தான் அனைத்தையும் ஓடி ஆடி செய்து கொண்டிருந்தாள் அவள் வேலை செய்வதை பார்த்து இனிக்கும் உதிரனுக்கம் தான் வயிறு எரிந்தது என்று சொல்ல வேண்டும் அவள் மேல் கொலவெறியில் இருந்தார்கள் அவளிடம் தனியாக பேசும் வாய்ப்பை கூட அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் மகிழும் ஏற்கனவே கூறியிருந்தான் உதிரனிடம் உதிர் இனி இருவரிடமும் இனிமேல் நீங்கள் இருவரும் எனக்காகவோ என்னுடைய காதலுக்காகவோ யாரிடம் சென்று பேசக்கூடாது இதைப் பற்றி இனிமேல் பேசவே கூடாது எனக்கும் கயலுக்கும் திருமணம் என்று ஆகிய பின்பு நீங்கள் இருவரும் யாரிடம் போய் பேசினாலும் அது தவறாக தான் போய் முடியும் அது மட்டும் இல்லாமல் இவ்வளவு நாட்கள் ஒற்றுமையாக இருந்த குடும்பமும் நீங்கள் போய் பேசினால் பிரிய நேரிடும் என்று சொல்லி இருந்தான் அவன் பேச வேண்டாம் என்று கூறியதோடு நிறுத்தி இருந்தால் கூட இருவரும் போய் வீட்டில் உள்ளவர்களிடம் பேசலாம் என்று தான் இருந்தார்கள் ஆனால் குடும்பம் இதற்கும் முன்பு இருந்தது போல் இருக்குமா என்று அவர்கள் அஞ்சினார்கள் முதலில் ஆரம்பத்தில் கயலுக்கு மகிழ் தான் என்று பேசும்பொழுது திருமணத்தை நிறுத்தி இருந்தால் அது தவறாகி இருக்காது ஆனால் இவ்வளவு தூரம் வந்த பிறகு திருமணத்தை பற்றி பேசி நிறுத்தினால் தவறாக போய்விடும் என்பதால் இருவரும் எதுவும் பேச முடியாத தங்களது கையால் ஆகாத தருணத்தை எண்ணி வருந்தினார்கள்மகா வீட்டில் உள்ள பெரியவர்களோடு சேர்ந்து திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் ஓடி ஆடி செய்து கொண்டிருந்தாள் அதேபோல் முகில் எழிலும் செய்து கொண்டிருந்தார்கள் இப்படியே நாட்கள் ரெக்க கட்டி பறக்க பறந்தது இன்று காலை முகூர்த்த வேளையில் திருமணத்திற்கு பந்த கால் நட்டு முதல் நலங்க வைக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள் அப்பொழுது அனைவரும் வேலை செய்து கொண்டிருந்தால் இனிக்கு மயக்கமாக இருக்கிறது என்பதால் நிலா இனி உடன் இருந்தால் கயல் மணப்பெண் என்பதால் அவள் அவளது அறையில் இருந்தால் மகா வீட்டில் உள்ள பெரியவர்களுடன் வேலை இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தாள் சரி நேரம் ஆகிறது என்று மகாவிடம் கயலை கூப்பிடுவர சொல்லி சொன்னார்கள் கயல் மட்டும் வராமல் இருந்தால் பந்த கால் நடும் இடத்திற்கு இன்னும் கயலை காணவில்லையே என்று எண்ணிக் கொண்டே மகா அவளது அறைக்குச் சென்றாள் அவளது அறையை சுற்றி முற்றி பார்த்தால் ஆனால் அங்கு கயல் இல்லை அவளுக்கு ஒன்றும் புரியவில்லை பாத்ரூமில் இருக்கிறாளோ என்று எண்ணி பாத்ரூம் கதவினை திறந்து பார்த்தால் அங்கும் அவள் இல்லை கயல் எங்கே இந்த நேரத்தில் சென்றால் என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அப்பொழுது அவளது கண்ணில் ஒரு கடிதம் பட்டது அந்த கடிதத்தை எடுத்து பிரித்து பார்த்தால் அதில் இருக்கும் கையெழுத்து கயல் உடையது அதில் கயல் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை வீட்டில் உள்ளவர்களுக்காக நான் இந்த திருமணத்தை செய்து கொள்ள விரும்பவில்லை ஆரம்பத்திலேயே எனக்கு இது திருமணத்தில் விருப்பமில்லை எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் ஆனால் வீட்டில் உள்ள யாரும் அதை கேட்பதாக இல்லை என்னை மன்னித்து விடுங்கள் உங்களுக்காக தான் நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன் ஆனால் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அது மட்டும் இல்லாமல் நான் வேறு ஒருவரை விரும்பி கொண்டிருக்கிறேன் அவர்கள் வீட்டில் இருந்து நம் வீட்டில் வந்து பேச சொல்லலாமென்று இருந்தேன் அண்ணனுக்கு திருமணம் முடிந்த பிறகு வீட்டில் பேச சொல்லலாம் என்று இருந்தேன் இப்பொழுது இனி மாசமாக இருக்கிறாள் அந்த நேரத்தில் அம்மாவும் என்னை மகிழ் மாமாவுக்கு திருமணம் செய்து வைப்பதாக கேட்டார்கள் நீங்கள் அனைவரும் அதற்கு சம்மதித்து விட்டீர்கள் நானும் எனக்கு இப்போது திருமண வேண்டாம் என்று கூறினேன் ஆனால் நீங்கள் யாரும் கேட்பதாக இல்லையே அதனால்தான் என்னை மன்னித்து விடுங்கள் முதலிலேயே நான் ஒரே முடிவாக திருமணம் வேண்டாம் என்று கூறியிருக்கலாம் உங்களை இதுவரை கொண்டுவந்து அசிங்கப்படுத்தியதற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி லெட்டர் எழுதி வைத்துவிட்டு அவள் வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தால் மகாவின் தலையில் இடியே இறங்கியது போல் இருந்தது மகாவிற்கு இப்படி ஒரு செய்தி புதிது தன்னுடனே சிறுவயதிலிருந்து வளர்ந்த தனது அக்கா கயல்விழி ஒருவரை விரும்புகிறாள் என்பதே அவளுக்கு புதிய செய்தி அதுவும் இதுவரை தங்களிடம் சொல்லாமல் இப்போது இவள் கல்யாணம் வரை வந்து இப்பொழுது ஓடிவிட்டாள் என்பது அதைவிட பேரதிர்ச்சியாக இருந்தது அப்போது கோதை தான் மகா சென்று இவ்வளவு நேரம் ஆகியும் கயலை அழைத்து வரவில்லை என்று கயலின் அறைக்கு வந்தார் அப்போது கயல் இல்லாமல் மகா மட்டும் தனியாக கயலுடைய அறையில் அதுவும் கையில் ஒரு லெட்டருடன் இருப்பதை பார்த்தவுடன் மகா என்று இரண்டு முறை கூப்பிட்டார் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த உடன் அவளது தோளில் தட்டினார் மகா திரும்பி பார்த்தால் அங்கு தனது தாயைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி நின்று என்ன மகா நீ மட்டும் நின்று கொண்டிருக்கிறாய் கயல் எங்கே என்றார் அவள் எதுவும் பேசாமல் தன் கையில் இருக்கும் கடிதத்தை கொடுத்தால் அவர் அந்த கடிதத்தை படித்துப் பார்த்துவிட்டு ஐயோ மகிழா என்று கத்தினர்மகிழன் முதற்கொண்டு வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இப்பொழுது கோதை எதற்காக இவ்வாறு கத்துகிறார் அதுவும் மகிழனை கூப்பிட்டு கொண்டே என்று எண்ணி வேகமாக வந்தார்கள்… வீட்டில் உள்ள அனைவருக்கும் கயல் வீட்டை விட்டு ஓடி விட்டால் என்று தெரிந்தால் வீட்டில் உள்ளவர்களின் நிலைமை என்ன ஆகும் ..மகிழனின் திருமணம் நின்றுவிடுமா இல்லை கயலை கண்டுபிடித்து திருமணம் செய்து வைப்பார்களா …என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
Itha munnadiye solli iruntha magizh Kum maha Kum mrgpana ready panirupanga . Unaku intha ketta per vename
மிக்க நன்றி சகி
Interesting
எதுக்காக கயலுக்காக காத்திருக்கப் போறாங்க. அதான், வீட்டுல இன்னும் ரெண்டு முறைப்பொண்ணுங்க இருக்காங்க தானே. அதுல ஏதாவது ஒண்ணை இழுத்து உட்கார வைக்கப் போறாங்க.. அதானே வழக்கம்.
எதுக்காக கயலுக்காக காத்திருக்கப் போறாங்க. அதான், வீட்டுல இன்னும் ரெண்டு முறைப்பொண்ணுங்க இருக்காங்க தானே. அதுல ஏதாவது ஒண்ணை இழுத்து உட்கார வைக்கப் போறாங்க.. அதானே வழக்கம்.