Skip to content
Home » மழலை மொட்டே!

மழலை மொட்டே!

கொஞ்சும் மழலை பேச்சு
பிஞ்சு பொன் விரலின் பஞ்சு தன்மை
தன்னிலை உணரா நிலையில்
தத்தி நடக்கும் பாதம்
நடைப்பழகும் தங்க தேரே
கை விரல் நீ கடிக்க வலிக்காது
உன் பற்களின் வளர்வை கண்டு
சிரிக்கும் மழலை மொட்டே!
உன் அழுகையும் அழகு தான்
பொம்மை வைத்து விளையாடும் கரும்பே!
சுட்டி தனம் செய்யும் உன் குறும்பு
உன்னிலை உணராது உறங்கையிலே
தாயின் மனம் இரசிக்கும் உன்னையே!
இப்படியே இருந்து விட கூடாதா?
என என்னையும் ஏங்க செய்து
வையகம் மறக்க செய்கிறதே!

Thank you for reading this post, don't forget to subscribe!

-பிரவீணா தங்கராஜ்.

இக்கவிதை கொஞ்சமா திருத்தப்பெற்று ‘குழந்தை’ என்ற தலைப்பில், ராணிமுத்து இதழில் ஜனவரி 16 2009 அன்று வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *