தியா சென்ற பிறகு ,நந்தா தான் என்ன க்கா என்று கேட்டான் .
ஒன்னும் இல்லடா ,அவளை பார்த்து பேசுறதுக்காக தான் வந்தேன்.எங்க மலர வெறுத்துருவாளோனு பயத்துல தான்.
நானும் உன்கிட்ட தியா காலேஜ்ல எப்படி இருக்கான்னு கேட்டதுக்கு “பழைய துள்ளல் குணம் இல்லைன்னு சொன்னியா ?”
அதனாலதான், வந்தேன்.இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் அவ பழையபடி இருப்பானு நான் சொல்லல .
இருந்தாலும் , அவளுடைய மொத்த கோவமும் மலர் பக்க திரும்பிருக்கும்னு பயம் என்றார் .
நந்தாவும் நானும் அப்படித்தான் யோசிச்சேன் என்றான் .சரிடா வா நேரம் ஆகுது வீட்டுக்கு போகலாம் என்று இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
இருவரும் வீட்டிற்கு போகும் பொழுது வீடு திறந்து இருந்தது .என்ன இன்னைக்கு உன் பையன் சீக்கிரம் வந்துட்டானோ என்று கேட்டுக்கொண்டே நந்தா உள்ளே வந்தான் .
அக்காவும், தம்பியும் எங்க சுத்திட்டு வரீங்க ..
ஜோடியா வரீங்க ..
இன்னைக்கு..
அதிசயமா இருக்கே.
உனக்கு என்னடா அதுல பொறாமை என்று தேவி மகனின் தலையில் லேசாக தட்டிவிட்டு டீ குடிச்சியா இல்ல போடட்டுமா என்றார் .
எல்லாம் போட்டு தான் வச்சிருக்கேன் என்று விட்டு கிச்சனுக்கு சென்று இருவருக்கும் எடுத்து கொண்டு வந்து கொடுத்தான்.
இருவரும் குடித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள்.
உதயா இருவரையும் குருகுருவென பார்த்துவிட்டு எங்க போயிட்டு வரிங்க ரெண்டு பேரும் என்றான்.
தேவி தனது தம்பியை பார்த்துவிட்டு தான் எங்கு சென்றேன் ,யாரை பார்க்க சென்றேன் என்று அனைத்தையும் சொன்னார்.
தன் மகனிடம் மறைக்க வேண்டும் என்றெல்லாம் தேவி எண்ணவில்லை.
அவர் அனைத்தையும் சொன்ன பிறகு ,நல்ல விஷயம் தான் மா பண்ணி இருக்க.
அந்த பொண்ணு ,இந்த மாதிரி சூழ்நிலையில் எந்த மாதிரி முடிவெடுக்கும்னு கூட சொல்ல முடியாது .
தினமும் காலேஜ் வரதே பெரிய விஷயம் தான். வீட்டிலேயே முடங்காம.. ஆனா, அதிலிருந்து வெளியே வந்துருச்சு .
நம்ம சொல்ல முடியாது. அதனால தான் டா மச்சான் என்று நந்தாவும் சொன்ன பிறகு ,சரி நீங்கள் இருவரும் பிரஷ் ஆகி விட்டு வாருங்கள் என்றான்.
சரி என்று விட்டு இருவரும் அவர்களது அறையை நோக்கிச் சென்ற பிறகு, உதயா சமையல் அறைக்கு சென்று சமைத்துக் கொண்டு இருந்தான்.
தேவி ,நந்தா இருவரும் வெளியே வந்தவர்கள் அவனை பார்த்து சிரித்து கொண்டார்கள்.
பிறகு மூவருமே ஒன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டார்கள் .
அன்றைய பொழுது அதன் பிறகு அதைப் பற்றி வேறு எதுவும் பேசவில்லை பேச வேண்டும் என்று எண்ணம் கூட மூவருக்கும் இல்லை .
அதை பற்றி நாம் ஏன், பேச வேண்டும் என்று அமைதியாக விட்டார்கள் .இங்கு வீட்டிற்கு சென்ற தியா வேகமாக தனது பேகை கழட்டி கீழே போட்டுவிட்டு , நிம்மதியா இருக்க கூட விட மாட்டியா .
வீட்ல தான் நிம்மதி இல்லை என்றால், வெளியே போனா கூட நிம்மதியா இருக்க விட மாட்டியா என்றாள்.
தனது மகளை கட்டிக்கொண்டு மலர் அழுதார். நீயும் பேச மாட்ற, உன் அப்பாவும் பேச மாட்டார்.
என் மேல என்ன கோவமா இருந்தாலும் அடிக்க கூட செய், திட்டக் கூட செய்யுங்கள்.
ஆனால் ,இப்படி பாட படுத்தாதீங்க டி என்றார். தன் அம்மா அழுவதை பார்த்தவுடன் தியாவிற்கு சிறிது வருத்தம் ஆகி விட்டது .
தனது தாயின் கண்ணை துடைத்து விட்டு இப்ப என்ன மலர் உனக்கு ஓவரா சீன் போடுற..
ஏன் ,”உன் புருஷன் கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே ,மாமா இன்னும் வரல டி” ..
அதனால்தான் ,”இப்ப பீல் பண்ணிட்டு இருக்கியா ?”அப்போ” எனக்காக பீல் பண்ணலையா” என்று முறைத்துக் கொண்டு நின்றாள்.
அவளை பார்த்து முறைத்துவிட்டு நான் அவருக்காக மட்டும் தான் நான் பீல் பண்ணுவேனா என்றார்.
சரி சரி ஒத்துக்குறேன். ஓவரா பண்ணாத தலை வலிக்குது என்றாள்.
எங்கடி போயிட்டு வந்த இவ்ளோ நேரமா ?நீ எப்பயும் வர பஸ்ஸுக்கு வரவே இல்ல ,அதான் பயந்துட்டேன் .
அவசியம் சொல்லியே ஆகணுமோ என்றாள் .எனக்கு பயமா இருக்கு தியா சொல்லாம, கொள்ளாம இருந்ததால என்றார்.
“எங்கையும் ஓடிவிட மாட்டேன் சரியா ?”என்றாள். தன் மகளை அடிக்க கை ஓங்கிவிட்டு கீழே இறக்கினார் .
நான் தப்பா சொல்லல தியா .நானும் தப்பா எடுத்துக்கல மா சரியா ?
நான் எங்கேயும் போகல, என்று விட்டு மலரின் கண்ணை ஒரு சில நொடி உற்றுப் பார்த்துவிட்டு நான் தேவி ஆண்டிகிட்ட பேசிட்டு வரேன்.
அவங்க என்ன பார்க்க வந்திருந்தாங்க. காலேஜ்ல நான் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருக்கும்போது என்றாள்.
இரண்டு அடி எடுத்து வைத்த மலர் அப்படியே நின்று தியாவை பார்க்க செய்தார் .
என்னடி சொல்ற என்றார் .”ஏதும் பிரச்சனை இல்லையே ?” என்றார் .
“அவங்க பிரச்சனை பண்ணுவாங்கன்னு நினைக்கிறியா? “.
தியா இன்னொரு விஷயம் நான் இப்பவே சொல்லுறேன். அவங்கள நான் தப்பு சொல்லவும் இல்ல ,அவங்க பிரச்சனை பண்ணுவாங்கனும் சொல்லல ..
“நீ ஏதாச்சும் ,அவங்க கிட்ட வார்த்தைய விட்டுட்டையானு தான் கேட்டேன்”.
எனக்கு பயமா இருக்கு ,கோவத்துல வார்த்தையை விட்டு இருந்தா,
நிதானம் இல்லாம அதானால தான் கேட்டேன்.
இன்னொரு விஷயம் எப்பேர்பட்ட சூழ்நிலையும் நான் தேவி அக்காவை தப்பு சொல்ல மாட்டேன் .
“அவங்கள பத்தி உன்ன விடவே, எனக்கு நல்லாவே தெரியும்.”
“அதனால ,தான் அவங்க வாழ்க்கையை” என்று விட்டு தேவி சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.
அதனால தாண்டி, “அவங்க வாழ்க்கையை கெடுத்துட்டு அவங்க வாழ வேண்டிய இடத்துல நான் வாழ்ந்துட்டு இருக்கேன் போதுமா” என்று கத்தினார்.
மலரு, நான் எதுவும் சொல்லலையே ..
நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை .நீ சொல்ல வந்தது இதுதான்.
என்று நிறுத்திட்டு..
இப்ப தேவி அக்கா உன் கிட்ட பேச வந்தது கூட என்ன பத்தி தான் பேசி இருப்பாங்க ..
ஆனா ,முழுசா உன்னிடம் எதையும் சொல்லி இருக்க மாட்டாங்கன்னு நம்புறேன் என்றார் .
“அப்ப ஏதோ ஒன்னு இருக்கு அப்படித்தானே “, என்றாள்.
அந்த ஏதோ ஒன்ன நீ புரிஞ்சுக்கிற காலம் வரும் .அப்ப புரிஞ்சுக்கலாம் ,இப்ப தேவையில்லாதது யோசிக்காத.
“என்ன நடந்துச்சு உன் வாழ்க்கையில் என்று நீ சொல்ல மாட்ட, நீ இங்க நிக்கிறதுக்கான காரணம் என்னன்னு சொல்ல மாட்ட”.
” நான் இந்த உலகத்தில் வந்த இருப்பதற்கான காரணம் என்னன்னு சொல்ல மாட்ட “அப்படித்தானே என்றாள்.
தியா கையை பிடித்த மலர் தெளிவா சொன்ன இதெல்லாம் நீ உணர காலம் புரிந்து கொல்ற காலம் வரும் .
இன்னொரு விஷயம் நான் என்னதான் இப்ப சொன்னாலும், நீ தான் நம்ம மாட்ட.
நான் சொல்றது உன்னால ஏத்துக்க முடியாது .எந்த சூழ்நிலையில என்ன நடந்துச்சு அப்படின்னு ஏத்துக்க முடியாது உன்னால.
அதுக்காக என் மேல தப்பு இல்லன்னு நான் சொல்ல மாட்டேன் .என் மேல தப்பு இருக்கு நானே சொல்றேன்.
நான் செஞ்சது தப்பு தான் .ஆனா ,அது அந்த சூழ்நிலையில எனக்கு சரியா பட்டுச்சு அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் .
நீ என்னை சுயநலவாதியா கூட நினைச்சிக்கோ ..
சுயநலம் புடிச்சவனு கூட நினைச்சிக்கோ என்று விட்டு சமையல் அறைக்கு சென்று டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் .
மலர் பேசியதையும் ,தேவி பேசியதையும் யோசித்து யோசித்து தியாவிற்கு தலை வலிப்பது போல் இருந்தது.
தன் மகள் பேசிய பேச்சால் அமைதியாக ஓரிடத்தில் மலர் உட்கார வேகமாக டீ குடித்துவிட்டு மலர் மடியில் படுக்க செய்தாள் தியா .
கண்ணம்மா என்ன ? என்றார் மலர்.
ஒன்னும் இல்ல லேசா தலை வலிக்குது என்று விட்டு கண்ணை மூடி கொண்டாள்.
மலருமே தனது மகளின் தலையை கொதி விட்டு அழ செய்தார்.” வேகமாக மலரின் கையை பிடித்து ஒன்னும் இல்ல சரியா ?”வருத்தம் தான் .
நான் உன்னை வெறுக்கல ,இப்ப இல்ல எப்பையும் வெறுக்க மாட்டேன் .
நான் உன்னை வெறுத்துட்டேனு நீ நினைக்காத என்றாள்.
உன்னுடைய அப்பாவை என்று மலர் கேட்க ..அமைதியாக இருந்தாள் தியா.
சரியாக உன் அப்பாவை என்று மலர் கேட்கவும் ,கண்ணன் வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
தன்மகள் தனது மனைவியின் மடியில் படுத்திருப்பதை பார்த்து லேசாக சந்தோஷம் கொண்டாலும் ,இப்பொழுது கூட இருவரும் ஏதோ வாதாடி கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.
எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டிற்குள் வந்து பின் கட்டிற்கு சென்று முகம் ,கை ,கால் கழுவி விட்டு வந்தார்.
தியா எழுந்து உட்கார செய்தாள். மலர் எதுவும் பேசாமல் சமையல் அறைக்குச் சென்று கண்ணனுக்கு டீ எடுத்து கொண்டு வந்து கண்ணன் கையில் கொடுத்தார்.
கண்ணன் மனைவி ,மகள் இருவரையும் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அந்த டீயை வாங்கி கொண்டு தியாவின் அருகில் உட்கார்ந்து தியாவின் கையை பிடித்தார் .
தியா அமைதியாகவே இருந்தாள். கண்ணனும் ஒரு மாதிரியாக இருந்ததால் டீ குடித்துக் கொண்டே தனது மகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
தியாவின் பார்வை தரையை தான் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் , அவளது கருமணிகள் அங்கும் இங்கும் உருளுவதை கண்ணன் பார்த்துக்கொண்டு இருந்தார்.
தன் மகள் ஏதோ யோசனையாக இருக்கிறாள் என்பதை உணர்ந்த கண்ணன் அமைதியாகவே இருந்தார்.
அவர் டீ குடித்துவிட்டு டம்ளாரை கீழே வைத்த அடுத்த நொடி , தியா அவரது கையை உதறிவிட்டு யாரும் என்கிட்ட வந்து எதையும் பேச வேண்டாம் மலரு .
யார்கிட்டயும் பேச வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை அப்புறம் நான் அதை பேசிட்டேன், இதை பேசிட்டேன் வார்த்தையை விட்டுட்டேன் அப்படின்னு சொல்லுவாங்க ..
என்னால அவ்வளவுதான் சொல்ல முடியும் ,என்று விட்டு தனது தந்தையை நின்று ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டாள் .
கண்ணனுக்கு வருத்தமாக இருந்தது .அவருக்கு ஒன்று மட்டும் புரிந்தது.
தான் டீ குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள், நான் டீ குடித்து முடித்தவுடன் எழுந்து விட்டாள்.
என்னை ,அப்பொழுது என் மகள் வெறுத்து விட்டாளா? தந்தை என்ற உணர்வு ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும் ,தான் செய்த தவறு அவளை எந்த அளவிற்கு பாதித்து இருக்கிறது .
அதுவும் தன்னை வெறுக்கும் அளவிற்கா ?தன்னை வெறுத்து விட்டாளா ?இது தனக்கான தண்டனையா என்று வருந்தினார் .
தண்டனை என்றவுடன் அவரது நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
இனியாவது கண்ணன் தான் செய்த தவறை உணர்வாரா? தான் செய்தது தவறு என்பதையும் உணர்வாரா ?