உதயா வீட்டிற்குள் நுழையும்போது எங்க டா போயிட்டு வர என்று நந்தா கேட்க .
சிரிப்புடனே பார்த்தியா என்று சொல்ல.
“என்ன வேலை பண்ற என்று தனது மச்சானின் கழுத்தை நெரிப்பது போல்” வந்தவன் .
அவனது தோளை இருக்கி கையை போட்டுக் கொண்டு பார்க்கல.
ஆனா நீ எப்படியும் அங்க தான் ஒளிஞ்சிருப்பன்னு தெரியும் என்றான்.
என்ன சொன்னா என்றவுடன் .
அனைத்தையும் ஒப்புவித்தான் உதயா.
அமைதியாக தான் தேவியும் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் ,நந்தாவும் சரி ,தேவியும் சரி இருவராலும் தியா சொன்ன தண்டனை என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
இருவருமே உதயாவை பார்க்க .
எனக்கே லைட்டா கஷ்டமா தான் இருக்கு என்று விட்டு அமைதியாகி விட்டான் .
நந்தா தனது அக்காவை அமைதியாக பார்த்தான் .
சரி ரெண்டு பேரும் போயிட்டு பிரஷ் ஆயிட்டு வாங்க உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் என்று உதயாவை பார்த்து தேவி சொல்ல.
ஏம்மா எங்க போறோம் என்று கேட்க.
எங்க போறன்னு கேள்வி கேட்கறத விட்டுடு ரெண்டு பேரும் ஃப்ரெஷ் ஆயிட்டு நல்ல டிரஸ் போட்டு வரலாம் என்று சொல்ல.
தன் அக்காவை இரண்டு முறை திரும்பி பார்த்த நந்தா எதுவும் பேசாமல் ரூமுக்கு சென்று வேறொரு டிரஸ் போட்டு கொண்டு வந்தான் .
உதயா அப்போதுதான் வந்ததால் டீ குடித்துவிட்டு முகம் ,கை ,கால் கழுவிக்கொண்டு வேறொரு டிரஸ் போட்டுக் கொண்டு வர .
இருவரையும் வாங்க போலாம் என்று கூப்பிட்டு கொண்டு சென்றார்.
நீ ஒரு பைக்ல வரியா நாங்க ரெண்டு பேரும் ஒரு பைக்ல வரட்டா என்று நந்தா கேட்க.
“ஏன் நான் ஓட்ட நீயும் ,அவனும் என் பின்னாடி உட்கார்ந்து வர அவ்வளவு கஷ்டமா இருக்கா” என்று கேள்வி கேட்க .
தன் அக்கா இப்படி எல்லாம் கேட்க மாட்டார் என்று எண்ணிய நந்தா.
தன் மச்சானை முறைத்துவிட்டு நீயே ஓட்டு என்று விட்டு அமைதியாக தனது அக்காவின் பின்னாடி உட்கார.
உதயா அதன் பின்பு உட்கார்ந்தான் .
போகும் வழி எங்கும் எங்கு போகிறோம் என்று கேட்க .
எதுவும் வாய் திறக்காமல் வந்த தேவி ஒரு வீட்டின் முன்பு நிறுத்தினார்.
ஒரு சில நொடி எதையோ யோசித்து நந்தா தனது அக்காவை பார்க்க .
அவர் கண் மூடி திறந்தவுடன் எதுவும் பேசவில்லை .உதயா தான் அமைதியாக யார் வீடு உனக்கு தெரியுமா? மாமா என்று கேட்க .
எல்லாம் நீ பார்த்த வேலை தான் வாடா என்று தனது மச்சானின் கையை இறுக்கி பிடித்து தனது அக்காவின் கையையும் இறுக்கி பிடித்துக் கொண்டான் .
தேவி தனது தம்பியை மனதிற்குள் மெட்சிக் கொண்டு அமைதியாக தனது தம்பியின் கையில் அழுத்தம் கொடுத்துக் கொண்டார் .
மூவரும் வீட்டிற்குள் சென்றார்கள் .
வீடு திறந்து இருக்க கதவை இரண்டு முறை தேவி தட்டினார்.
சமையலறையில் டீ போட்டுவிட்டு கையைத் துடைத்துக் கொண்டு வந்து மலர் தேவியை பார்த்து விட்டு ஒரு நிமிடம் ஷாக் ஆகி நின்று விட்டு நீங்க என்று கொண்டே வந்து நின்றார்.
யாரோ கதவைத் தட்டி தனது தாய் அமைதியாக நிற்கிறாரே என்று எண்ணி எட்டிப் பார்த்த தியா .
அங்கு நந்தா ,உதயா ,தேவி மூவரும் இருப்பதை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியாக தான் பார்த்தாள்.
பிறகு வேகமாக சென்று வாங்க என்று அழைக்க. மூவரும் உள்ளே வர.
மலர் தியாவை முறைத்து பார்த்தாள் .தியா உட்காருங்கள் என்று சேர் எடுத்து போட .
எதுவும் பேசாமல் மூவரும் அமைதியாக உட்கார .
அப்பா பின்னாடி இருக்கிறாரு தியா போய் கூப்பிட்டு வா என்று சொல்ல .
ஒரு சில நொடி தன் தாயைப் பார்த்தவள் வேகமாக எதுவும் பேசாமல் பின் கட்டிற்கு செல்ல .
வாழை மரத்தில் இருக்கும் சருகுகளை கீழே எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் கண்ணன்.
தியா வந்து அமைதியாக நிற்க .என்ன கண்ணம்மா என்று வாய்வரை கேட்க வந்தவர்.
தனது மகளின் முறைப்பில் சொல்லுமா என்று கேட்க .
தேவி ஆண்டி, நந்தா சார் ,உதயா அண்ணன் வந்திருக்காங்க என்று சொல்ல.
தன் கையில் இருப்பவற்றை கீழே போட்டுவிட்டு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தார் .
வந்த வேகத்தில் அப்படியே அமைதியாக நின்று விட்டார் .
என்ன பேசுவது என்று அவருக்கு புரியவில்லை .
கண்ணனும் வந்து நின்ற பிறகு தேவி தான் பேச செய்தார்.
தியா பேசி இருப்பானு நினைக்கிறேன் .இது ரொம்ப நாளைக்கு இழுத்து போட விருப்பல.
சூட்டோட சூட முடிச்சிடலாம் .இன்னொன்னு நந்தாவுக்கு வயசு கூடிட்டே போகுது .
நீங்க கேட்கலாம் தியாவுக்கு இது கல்யாண வயசா அப்படின்னு .அது மட்டும் இல்லாம ரெண்டு பேத்துக்கும் வயசு வித்தியாசம் இருக்குன்னு .
“என் தம்பி உங்க பொண்ண நல்லா வச்சு பார்த்துப்பான் என்ற நம்பிக்கை இருந்தா உங்க பொண்ண என்ன நம்பி ,என் தம்பியை நம்பி கொடுங்க “.
என்னால என் தம்பி அவளை நல்லா பார்த்துப்பான் என்ற நம்பிக்கை கொடுக்க முடியும் .
அதே மாதிரி எங்க வீட்டு மருமகளா நானும் நல்லா பார்த்துப்பேன் என்ற நம்பிக்கையை கொடுக்கிறேன் .
எங்க மேல நம்பிக்கை இருந்தா உங்க பொண்ண நம்பி கொடுங்க என்று சொல்ல.
கண்ணனின் முழு பார்வையும் நந்தாவின் மீது இருக்க .
நந்தா கண்ணனின் பார்வையை உணர்ந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்து எனக்கு விருப்பம் .
“உங்க பொண்ணை என்னை நம்பி கொடுக்கலாம் என்று சொல்ல” .
கண்ணனுக்கு இருந்த ஒரு நம்பிக்கையும் அற்றுப் போனது என்று தான் சொல்ல வேண்டும் .
எப்படியும் நந்தா ஒத்துக் கொள்ள மாட்டான் .தனக்காக என்று எல்லாம் கண்ணன் யோசிக்கவில்லை.
அவனை ஒரு சில வருடங்கள் வளர்த்திருந்தாலும் படித்துக் கொண்டிருக்கும் பெண் ,அதுவும் வயது வித்தியாசத்தில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ள மாட்டான் ,என்ற நம்பிக்கையில் இருந்தவர் .
இப்பொழுது அவன் எனக்கு சம்மதம் என்று கூறியவுடன் அவனை அமைதியாக அதிர்ச்சியுடன் பார்த்தார்.
என்ன நம்பி உங்க பொண்ண நீங்க கட்டிக் கொடுக்கலாம் .
எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் என்று நந்தா சொல்லிய உடன் தன் மகளை அடிபட்டு பார்வை பார்த்தவர் அமைதியாகவே நிற்க.
இதுக்கு மேல நீங்க தான் முடிவு பண்ணி சொல்லணும் .
தியாவை பெத்தவங்களா உங்களோட முடிவை எதிர்பார்த்து நிற்கிறேன்.
நல்ல பதிலா சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன் என்று தேவியின் பார்வை மலர் மீது இருக்க .
மலர் இதில் தான் என்ன சொல்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றவர் கண்ணனை பார்க்க.
கண்ணனால் வேறு எதுவும் பேச முடியாமல் நேற்று தன் மகள் பேசிய பேச்சில் அடிபட்டு இருந்தவர் .
இன்று தனக்கு இருந்த ஒரே நம்பிக்கையான நந்தாவும் தனக்கு விருப்பம் என்று கூறியவுடன் இதில் இதற்கு மேல் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தவர் .
சரி என்பது போல் தலையாட்ட சரிக்கா ஒத்துக்கிறோம் .ஆனால் என்று இழுக்க.
ஒரு பொண்ணுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் அப்படின்றது என்னுடைய தம்பிக்கு தெரியும்.
உங்க பொண்ண படிக்க வைப்பான் .இப்ப மட்டும் கிடையாது .
மேற்கொண்டு எவ்வளவு தூரம் படிக்கணும் என்று தியா விரும்புகிறாளோ மொத்தமா படிக்க வைப்பான்.
தன்ன நம்பி வந்த பொண்ணை எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு காரணத்துக்காகவும் விட்டுக் கொடுத்திட மாட்டான் என்றவுடன் மலர்,கண்ணன் இருவருக்கும் சுருக்கென்று தைத்தது.
இது கண்ணனுக்காக இருந்தாலும் அமைதியாக தான் இருக்க செய்தார்.
சரி எங்களுக்கு சம்மதம் என்று மலர் சொல்லிய பிறகு ,
உதயாவை பார்த்து அவனது கையில் வட்டி சாவியை கொடுத்து டேங்க் டிக்கியில் ஒரு கவர் ஒரு தாம்பூல தட்டும் இருக்கும் எடுத்துட்டு வா என்று சொன்னவுடன்.
ஒரு முடிவோடு தான் வந்து இருக்கியா என்று தன் தாயை பார்த்து வாய்விட்டு கேட்க . தேவி லேசாக சிரிக்க செய்தார் .
அதே கேள்வியை நந்தா மனதிற்குள் கேட்டுக் கொண்டான் .
உதயா வண்டியில் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து தர.
தேவி கவரில் இருந்து அனைத்தையும் தாம்பூல தட்டுக்கு மாற்றியவர் .
நந்தாவை எழுந்திருக்க வைத்து உதயா, நந்தா,தேவி மூவருமாக கண்ணன் மலர் தியா மூவரையும் வாங்க சொல்ல.
அமைதியாக வாங்கி கொண்டார்கள் .
இது சும்மா சம்பார்த்தாயம் தான் இன்னும் ஒரு வாரத்துல நிச்சயம் வச்சுக்கலாமா ?உங்களுக்கு சம்மதமா என்று கேட்க .
கண்ணன் இப்பொழுது அதிர்ச்சியுடன் தேவியை தான் பார்க்க .
இல்ல சீக்கிரம் முடிச்சிட்டா நல்லது என்று நினைக்கிறேன் என்று விட்டு கல்யாணத்தை இன்னும் ஒரு மாசம் கழிச்சு இந்த வருஷம் படிப்பு முடடிந்துவிடும் தியாவுக்கு லீவ்ல வச்சுக்கலாம் என்று சொல்ல .
அனைத்தும் உடனடியாக நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கண்ணன்.
தன் கண்கள் கலங்க எதுவும் பேசாமல் தன் மகளைப் பார்க்க .
தியாவிற்க்குமே இவை அனைத்தும் அதிர்ச்சி தான் .இருந்தாலும் தேவி சொன்னது போல் அனைத்தும் ஒரே மூச்சில் முடித்தால் தான் உண்டு .
“இடைவெளி விட்டால் எங்கு அனைத்தும் நடக்காமல் போய்விடுமோ “என்ற அச்சத்தில் அமைதியாக நின்றாள்.
மலருக்கு தான் அடி வயிறு வேறு கலங்க செய்தது. தான் பெற்ற மகள் ஆசையாக வளர்த்த மகள் தங்களது சம்மதம் கூட வேண்டாம் .
“அதுவும் உங்களுக்கு தண்டனையாக இந்த கல்யாணம் என்று சொல்கிறாளே “.
அவளது விருப்பம் முக்கியம்தான் அதற்காக இன்னும் இரண்டு வருடங்கள் கூட பொறுக்க முடியாத என்ற பார்வையுடன் தேவியை பார்க்க .
கண்ணை மூடி திறந்து எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் என்பது போல் சொல்ல .
வேறு எதுவும் பேச முடியாத மலர் தனது கணவனை பார்க்க .
அவர் அமைதியாக இருந்த உடன் சரிக்கா எங்களுக்கு சம்மதம் .
மலர் உங்களுக்கு யாரெல்லாம் கூப்பிடனும் நினைக்கிறீங்களோ கூப்பிட்டுக்கோங்க .
கல்யாணம் சிம்பிளா முடிச்சுக்கலாம்னு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் உங்க விருப்பம் .
நீங்க தான் சொல்லணும் என்று சொல்ல கண்ணன் ஒரே வார்த்தையாக வேகமாக எங்களுக்கு சொந்த பந்தம் என்று எதுவும் கிடையாது .
சிம்பிளாவே முடிச்சுக்கலாம் . நிச்சயத்தை கூட அக்கம் பக்கம் இருக்கவங்க வச்சு முடிச்சுக்கலாம் என்று சொல்லிவிட.
“ஏன் மலர் ,உன் கூட பொறந்தவங்க அப்புறம் உங்க வீட்டு காரவங்க கூட பொறந்தவங்க என்று வேகமாக கேட்க” .
கண்ணன் வேகமாகவே தேவியை பார்த்தார். தேவியின் பார்வை மலரிடம் இருக்க .
கல்யாணத்துக்கு கூப்பிட்டுக்குவோம் அக்கா. நிச்சயத்துக்கு வேண்டாம் என்று விட .
வேறு எதுவும் பேசாத தேவி இதற்கு மேல் தனக்கு இவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் சரி மலர் .
நல்ல நாளா பார்த்துட்டு ஒரு வாரத்தில் நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம் என்று விட.
தேவி மூவரிடமும் சொல்லிக் கொண்டு வெளியில் கிளம்பியவர் ஒரு சில நொடி நின்று மலரை பார்த்தார்.
என்ன அக்கா என்று கேட்க.
“எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் நின்ன இடத்துல என் தம்பி யாரையும் நிக்க வைக்க மாட்டான்”.
என் வளர்ப்பு அந்த அளவுக்கு போய்டாது. “பழி வாங்குகிறேன் என்று சொல்லி எந்த ஒரு இடத்திலும் நிக்க வைக்க மாட்டான்” நம்பலாம் என்று விட்டு செல்ல .
இங்கே கண்ணனுக்கு தான் உடல் கூசியது .இதுவரை தேவி அமைதியாக இருந்திருந்தாலும் இதில் அவர் கொடுத்தது சாட்டையடி போல் தான் இருந்தது .
அவர்கள் மூவரும் கிளம்பி விட தியா வேறு எதுவும் பேசாமல் ரூமுக்குள் சென்று உட்கார்ந்து கொண்டாள்.