Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 36

மீண்டும் மலரும் உறவுகள் 36

தியா அமைதியாக ரூமுக்குள் சென்று உட்கார்ந்து கொள்ள.

இதைப்பற்றி வேறு எதுவும் பேச விரும்பாததால் கண்ணன் மலர் இருவரும் பேசவில்லை .

இப்படியே நாட்கள் செல்ல ஒரு வாரம் கழித்து நல்ல நாள் பார்த்து தியா நந்தா இருவருக்கும் நிச்சயதார்த்தமும் சிம்பிளாகவே தியா வீட்டில் நடந்தேறியது.

பெண் வீட்டில் நிச்சயம் வைத்துக் கொள்வது வழக்கமாக உள்ளதால் தியா வீட்டிலே சிம்பிளாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட .

தேவி இருவருக்கும் மோதிரம் எடுத்துக் கொண்டு வந்திருக்க .

அந்த மோதிரத்தை இருவரும் மாற்றிக்கொள்ள .

நந்தா தியாவை முறைத்துக் கொண்டே தியாவின் கையில் மோதிரத்தை போட்டு விட்டான்.

தியா சிரிப்புடனே மோதிரத்தை வாங்கிக் கொண்டாள் .

பெண் வீட்டு சார்பாக மாப்பிள்ளைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் கண்ணன் கழுத்துக்கு ஒரு பவுனில் செயின் வாங்கி இருக்க .

அதை எடுத்துக் கொண்டு வந்து தியா கையில் கொடுக்க.

சபையில் இருந்த ஒரு சிலர் நீயே போட்டு விடுப்பா என்று சொல்ல .

கண்ணனுக்கு ஒரு சில நொடி ஒரு மாதிரியாக இருந்த உடன் தியாவின் கையில் கொடுத்து நீயே போட்டு விடுமா என்று சொல்லி விட.

தியாவும் வேறு எதுவும் பேசாமல் தன் கையாலையே அவனது உயரத்திற்கு எட்டததால் லேசாக எக்கியது  போல் போட்டு விட .

“தன் கை நந்தாவின் காது மடலை உரச இங்கு தியாவிற்கு உடல் சிலிர்த்து  அடங்கியது”.

நந்தா எப்பொழுதும் போலவே நின்று கொண்டிருக்க “ஜடம் “என்று லேசாக முனக செய்தாள்.

அவளைப் பார்த்து முறைத்து விட்டு பின்பு அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

பிறகு இரு பக்கத்தில் இருந்தும் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மட்டும் அழைத்திருக்க.

அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் .ஒரு சில நொடி தன் கண்ணை சுழலவிட்ட நந்தா  .

தியாவை சுற்றி  தேட. அவள் இல்லை என்றவுடன் ஒரு சில நொடி தயங்கி மலரை பார்க்க .

மலர் பின்னால் இருப்பதாக கை மட்டும் காண்பிக்க.

எதுவும் பேசாமல் பின் கட்டிற்கு சென்றான்.

தியா நந்தா போட்டுவிட்ட மோதிரத்தை சுழல விட்டு கொண்டே.

தன் கழுத்தில்  எப்பொழுதும் போட்டு இருக்கும் செயினை கையில் பிடித்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பின்னாடி இருக்கும் வாழை மரத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க .

“அப்படி என்ன மேடமுக்கு பலத்த யோசனை”.

அதான் “நினைத்ததை சாதிச்சிட்டீங்களே” என்று சொல்லிக் கொண்டே அவளது அருகில் சிறிது இடைவெளி விட்டு நிற்க.

ஒரு சில நொடி தன் பின்னால் குரல் கேட்டு அதிர்ந்தவள் .

அது நந்தாவின் குரல் என்றவுடன் சிரித்த முகமாகவே அவன் பக்கம் திரும்பி நின்றாள்.

கழுத்து செயினில் ஒரு கையையும் ஒரு கையை கட்டிக்கொண்டும் நிற்க .

“ஒரு சில நொடி அவளை நிதானித்து ரசித்து  தான் பார்க்க “செய்தான்.

நந்தா “புடவையில் புதுப்பொலிவுடன் இருப்பவளை ஒரு சில நொடியே ஆயினும் வைத்த கண் வாங்காமல் “பார்த்தான்.

தன் தலையை உலுக்கி விட்டு அவளை முறைப்புடன் பார்க்க .

அவனை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் .

“சாதிச்சிட்ட இல்ல” என்று திரும்பவும் கேட்க.

எனக்கு தேவையானதை  நான் தானே கேட்கணும்.

“ரொம்ப முக்கியம் “.

“இன்னும் ஒரு வாரத்துல எக்ஸாம் இருக்கு அதுக்கு  படிச்சிட்டீங்களா மேடம் “என்று கேட்க

“அதுக்குத்தான் இன்னும் ஒரு வாரம் இருக்கே என்றாள் அலட்சியமாக”.

அப்போ “மேடம் கவனம் படிப்பில் இல்ல இதுல தான் இருக்கு “என்றவுடன் தியாவிற்கு சுருக்கென்று கோபம் வர .

“உங்க கிட்ட வந்து நான் அப்படி சொன்னேனா” .

“எனக்கு தேவையானதை எப்படி நான் தான் கேக்கணும் சொன்னேனோ அது மாதிரி தான் எனக்கு படிப்பு முக்கியம் தான்  இதுவும்  முக்கியம்”தான்.

நீங்க எந்த அர்த்தத்தில கேக்குறீங்களோ எனக்கு தெரியாது .

“இப்பவே கல்யாணத்துக்கு ஆசைப்பட்டு நான் இங்க வந்து நிக்கல.”

“இத இப்போ  விட்டுட்டா கிடைக்காது என்ற பயத்தில் மட்டும்தான் இப்ப இதுக்காக வந்து நிற்கிறேன் “.

இல்லன்னா எனக்கு இவ்வளவு அவசரம் தேவையில்லை.

“நீங்க எந்த விதத்தில் கேட்டீங்கன்னு எனக்கு புரியல” நான் புரிஞ்சுகிட்ட அர்த்தம் தப்புன்னு சொல்லல .

ஆனாலும் இப்படி பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு பேசணும் .

“இதை விட்டா கிடைக்காது இது என்னோட வாழ்க்கை விசியம்”.

“அதே மாதிரி தான் படிப்பு என்னுடைய வாழ்க்கை தான்” அதை விட்டுட்டு எந்த ஒரு காலத்திலும் நிக்க மாட்டேன் .

எனக்கு தெரியும். என்னோட படிப்பை எப்படி பார்த்துக்கணும் .

“படிப்பில் எந்த ஒரு சூழ்நிலையிலும் கவனத்தை சிதற விடமாட்டேன்” என்று அவனை முறைப்புடன்  பார்த்துவிட்டு இரண்டு அடி எடுத்து வைக்க .

உதயா சிரித்த முகத்துடன் வந்தான் .

என்ன மாமா தனியா தியாவை பார்க்க வந்தியா என்று கேட்க .

வந்தவன் அமைதியாக இல்லாமல் வார்த்தையை  விட.

நந்தா மட்டும் இல்லாமல் தியாவுமே  உதயாவை முறைக்க.

” என்ன தியா மாமா முறைச்சா கூட  ஒரு நாயம் இருக்கு நீயும் முறைக்கிற”.

மாமா பெருசா ஏதாவது சம்பவம் பண்ணிட்டாரோ என்ற உடன் எதுவும் பேசாமல் இருவரும் முறைப்புடன் பார்த்துக் கொண்டு இருக்க.

தியா இரண்டடி எடுத்து வைக்க.

ஒரு நிமிஷம் என்றான் நந்தா.

இப்பொழுது உதயாவுமே நந்தாவை கேள்வியாக பார்க்க.

” நான் ஒன்னும் தப்பான நோக்கத்துல கேக்கல “எக்ஸாம் இருக்கு படிக்கலன்றதுக்காக தான் கேட்டேன் என்றவுடன் அவனை திரும்பிப் பார்த்து கையை மட்டும் காண்பித்தவள் .

“என்னுடைய படிப்பை எனக்கு கவனிச்சுக்க தெரியும் “.

“என் கவனம் சிதறாது “என்று மட்டும் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட.

ரொம்ப தாண்டா மச்சான் கோவம் வருது என்று தனது மச்சானின் தோளில் கை போட .

“மாமா ஏதாவது வார்த்தைய விட்டுட்டியா “என்று லேசான வருத்தத்துடன் கேட்க .

“டேய் அவ தப்பா புரிஞ்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.”

” மாமா இருந்தாலும் ,அவ  சின்ன பொண்ணு “.

“அவ சின்ன பொண்ணு அப்படின்றது உனக்கு இப்பதான் புரியுதா ?”

“எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கும் போது தெரியலையோ?”
என்றவுடன் தன் மாமாவை அடிபட்ட பார்வை பார்த்தான்.

அவளுக்கு படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நீயும் முக்கியம்.

“உன்ன இழந்துட்டாலும் அவ லைஃப் லாங் கஷ்டப்பட்டு தான் நிக்கணும் “அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் .

இதுல என்னோட சுயநலமும் இருக்கு அவளுக்காக மட்டும் நான் யோசிக்கல என்றவன் வேறு எதுவும் பேசாமல் நடக்க.

தன் மச்சானின் கையை பிடித்தவன் .அவனது கண்கள் கலங்கி இருக்க.

“அவதான் அப்படி போறானா, நீயும் போற”

.”எனக்கும் இன்னும் பக்குவம் வரணும் போல மாமா” என்றான்.

ஏண்டா இப்படி லூசு மாதிரி பண்றீங்க .

நான் என்னடா பண்ணேன் என்று தனது மச்சானை கட்டிக்கொண்டான் .

தேவி உள்ளிருந்து குரல் கொடுக்க .

வேகமாக மாமனும்,மச்சானும் உள்ளே சென்றார்கள் .எங்கடா போனீங்க ரெண்டு பேரும் .

“வீட்டுக்கு கிளம்புற ஐடியா இல்லையா ?”என்று கேட்க.

நீதான் ரொம்ப நேரமா இங்கையே சுத்தி சுத்தி வர .அப்றம் நம்ம கூட வந்தவங்கள சாப்பிட வைக்கிறது இல்லையா ?என்று தேவி சிரிப்புடன் சொல்ல.

எங்க அக்கா அவங்களாம் .அவங்களாம் வெளியே வண்டியில தான் இருக்காங்க. கிளம்பலாமா ?நேரமாகுது .

நம்  வீட்டுக்கு கிளம்பனும் என்று சொல்லிவிட்டு அனைவரையும் பார்க்க .

அக்கம் பக்கம் இருப்பவர்களும் ஒரு சிலர் கிளம்பி இருக்க.

சரி மலர் கல்யாணத்தை நம்ம பெரியவங்க மூணு பேருமே எடுத்து கட்டி செஞ்சுக்கலாம் .

மத்தவங்க காலேஜ் போறதுக்கும் கிளாஸ் எடுக்குறதுக்கும் சரியா இருக்கும்.

அவங்க யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று சொல்ல அதுவே மலருக்கும் சரி என்று பட .

சரி என்று விட்டு இருவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப.

தேவி தான் தியா சரி நாங்க கிளம்புறோம் என்று கிளம்ப.

சரி ஆன்ட்டி என்றாள். நந்தாவும் ,உதயாவும் முன்னாடியே சென்று இருக்க.

“ஆண்டி இல்ல பெரியம்மா சொல்லு” என்றவுடன் தியா மலரை பார்க்க .

மலருக்கு லேசாக கண்கள் கலங்குகியது. என்ன சொல்வது என்று புரியாமல் தேவியின் கண்ணையே பார்த்துக் கொண்டிருக்க .

“பெரியம்மா சொல்லுடா உனக்கு அதுல ஒன்னும் கஷ்டம் இல்லனா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை”.

“என் வீட்டுக்கு வந்து வாழ போறவ என் தம்பியோட வருங்கால பொண்டாட்டி “என்று அவளது தாடையில் தட்டி விட்டு சென்று விட.

“சரி பெரியம்மா பார்த்து போயிட்டு வாங்க” என்று அவர் வீட்டு வாசற்படியை தாண்டி செல்லும்போது சொல்ல .

சிரித்த முகமாகவே சரி என்று விட்டு சென்றார்.

அப்படியே நாட்கள் வேகமாக சென்றது .காலேஜில் நந்தா தியாவை பார்த்தாள் முறைப்புடனே சிடு சிடுவென என்று நடந்து கொள்ள .

“தியாவின் நண்பர்கள் ஏன் ?சார் உன்னிடம் இப்படி இருக்கிறார் “என்று கேட்க .

அவருக்கு தான் தெரியும் என்று விட்டு நைசாக நழுவிக் கொள்வாள் .

தியாவும் திருமணம் வரை தன்னுடைய சேட்டையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி அமைதியாக கடந்து சென்று விட்டாள்.

இருவருக்கும் முகூர்த்தப்பட்டு எடுக்கும் நாளும் வந்தது. எக்ஸாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எக்ஸாமுக்கு நடுவில் அவளுக்கு லீவ் இருக்கும் நாளில் புடவை எடுப்பதாக தேவி முடிவு செய்தார்.

அப்பொழுது  நந்தா தியா வர வேண்டாம் அவளுக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு என்று சொல்ல .

நந்தா ஒரே வார்த்தை போன்ல இருந்து வீடியோ கால் போட்டு அவன் காமிச்சுப்பான் என்று சொல்ல.

ஏற்கனவே இங்கு மலரிடம் தியாவும் அதை தான் சொல்லியிருந்தாள்.

எனக்கு பரிச்சை இருக்கு மா படிக்கணும் நான் உதயா அண்ணா விடம்  போன் பண்ணி வீடியோ கால்ல பாத்துக்குறேன் .

உங்களுக்கு பிடிச்சதை எடுங்க என்று சொல்லிவிட.

அதன் பிறகு புடவை கடைக்கு சென்ற பிறகு அவர்களுக்கு விருப்பமான ஒரு ஐந்து புடவை தேர்வு செய்து இருக்க .

அதை வீடியோ காலில் காட்ட உதயா போனை பிடித்துக் கொள்ள நந்தாவே ஒவ்வொரு புடவையாக காண்பித்தான்.

“ஒரு மூன்று புடவை அவளிடம் திரும்பத் திரும்ப எடுத்துக்காட்ட” உதயாவிற்கு தான் சிரிப்பு தாங்காமல் சிரித்து விட்டான்.

இதுதான் புடவை என்று சொன்னால் கூட பரவாயில்லை எனக்கே புரிகிறது அவளுக்கு புரியாத என்று மனதிற்குள் எண்ணிக் கொள்ள .

தியாவிற்க்குமே சிரிப்புதான். தன்னை அவர் பார்க்கவில்லை .

தான் மட்டும் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று  எண்ணியவள்.

அண்ணா கொஞ்சம் அவர்கிட்ட என்று இழுக்க.

“என்ன தியா  வர வர என்ன  என்னென்ன வேலையெல்லாம்  பார்க்க வைக்கிற “என்று லேசாக முனக செய்தாலும்,

தனது வருங்கால மாமா பொண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற .

மாமா புடவை ஒழுங்கா தெரியலையாம் குளோசப்ல வச்சு காமி என்று தனது மாமாவின் கையில் போனை கொடுக்க .

“கேடி” என்று விட்டு அமைதியாக அவளை முதல் முறையாக வீடியோ காலில் பார்க்க .

“அவனைப் பார்த்தவுடன் முதலில் கண்ணடித்து விட்டாள் “.

ஒரு நிமிடம் ஜெர்க்கானவன். அடுத்த நிமிடம் சிரித்து விட்டு முறைப்புடனே படிக்க சொன்ன என்ன வேலை  பாத்துட்டு இருக்க என்றான்.

எந்த நேரமும் வாத்தியாராவே சுத்தமா அப்பப்ப நார்மல் மூடுக்கு வரலாம் என்று விட்டு உங்களுக்கு எது புடிச்சிருக்கோ அதே செலக்ட் பண்ணிக்கோங்க .

எனக்கு எந்த பிரச்சனையும இல்ல. நல்லா தான் இருக்கு என்று விட்டு சரி என்று அவளே வைத்துவிட.

” அவளை நினைத்து தனக்குள் எழும் ஒரு சில உணர்வுகளை தடுக்கவும் முடியாமல் ,அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் “அமைதியாக தனது மச்சானின் கையில் போனை திணிக்க .

அவனுக்கு பிடித்த மூன்று புடவையை எடுத்துக் கொண்டு இவனுக்கும் எடுத்துக்கொண்டு தங்கள் சொந்த பந்தங்களுக்கும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்கள் .

முகூர்தத்திற்கு என்று எடுத்த மூன்று புடவை உடன் இன்னொரு கவரை நந்தா மலரிடம் நீட்ட .

“இது என்ன தம்பி? “அதான் என்னிடமே மூன்று புடவை இருக்கே என்று கேட்க .

தனது அக்காவை அமைதியாக நந்தா பார்க்க . இருக்கட்டும் மலர் பிளவுஸ் இதுக்கும் சேர்த்து தச்சிடு.

நீங்க எங்க தப்பிங்களோ அவங்க கிட்டையே தச்சிடுங்க அமௌன்ட் நான் கொடுத்துடறேன் .

இல்லக்கா இது என்று இழுக்க .ஒரு சில நொடி  அமைதியாக இருந்த நந்தா நலங்கு பங்க்ஷன் அப்போ போட்டுக்க எடுத்துட்டு போங்க என்று சொல்ல .

கண்ணனை மலர் பார்க்க கண்ணன் அமைதியாக கண்ணை மூடித் இருந்தவுடன் மலர் வேறு எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *