நந்தா ரூமுக்குள் செல்லும் பொழுது தியா கண்ணாடி முன்பு நின்று தன் முகத்தையே பார்த்துக் கொண்டு நந்தா பாடிய பாட்டை பாடிக் கொண்டு இருந்தாள்.
“லேசாக கதவை திறந்து சென்று அவளது செய்கையை பார்த்த நந்தா சிரித்து விட “.
“நீங்க எப்போ வந்தீங்க “என்று திக்கி திணறி கேட்க .
மேடம் கண்ணாடி முன்னாடி நின்னு பாட்டு பாடிட்டு இருக்கும்போதே வந்துட்டேன் .
இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டீங்க போல .
ஆமாம்.
” மேடம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க “.
ஒன்னும் இல்ல ,சும்மா என்று விட்டு வெளியே செல்ல இரண்டு அடி எடுத்து வைக்க.
“அவளது கையைப் பிடித்து இழுத்தான்” .
உன் கிட்ட தாண்டி கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லாம போற என்றான்.
அவனது இந்த டி என்ற உரிமையான அழைப்பு எப்போதவது வந்து செல்லும்.
அதை தியாவுமே பழகிக்கொண்டாள்.
ஏதாவது ஒரு வேலையில் அவன் சொல்லும்பொழுது அதை ரசிக்க மட்டுமே செய்வாள் .
ஆராய மாட்டாள் .ஏன் ,அப்படி கூப்பிடுறீங்க என்று கேட்கவும் மாட்டாள்.
ஒரு சில நொடி அவனது கண்ணை பார்த்தவள்.
” இன்னைக்கு பாடுன பாட்டு யாருக்காக பாடுனது “என்று கேட்டாள் .
“உள்ளுக்குள் அவன் தனக்காக பாடி இருக்க மாட்டானா?” என்று ஏக்கம் இருந்தாலும், அதை மறைத்துக்கொண்டு கேட்க .
“யாருக்காக னா ?”
இதுல என்ன இருக்கு அர்த்தம் .
“யாருக்காகவும் நான் அந்த பாட்டு பாடலா”.
“நல்லா இருந்துச்சு பாடுனேன் எ”ன்று கையை கட்டிக்கொண்டு சிரிப்புடனே சொல்ல.
“போயா வாத்தி நீயும் உன் பாட்டும் ரசனை இல்லாத மனுஷன் “என்று விட்டு வெளியே செல்ல.
அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டான். வேறு எதுவும் பேசவில்லை.
தியா வெளியில் வர .என்ன பெரியம்மா, நான் வந்து இவ்வளவு நேரம் ஆகுது .
ஒரு டீ கூட கொடுக்கல என்று உரிமையாக தேவியிடம் போய் கேட்க .
அவளை முறைத்த தேவி .கூப்பிட கூப்பிட காதுல கூட வாங்காம ஏதோ ஒரு யோசனைல நீ போயிட்டு .
“என்கிட்ட வந்து இப்ப நான் டீ தரலன்னு சொல்றிய டி “என்று சொல்ல.
சிரித்து மழுப்பினாள். வேறு எதுவும் தேவி கேட்டுக்கொள்ளவில்லை .
இருவரும் சந்தோஷமாக இருந்தால் ,தனக்கும் சந்தோஷம் என்று எண்ணி அவர் டீயை இருவருக்கும் எடுத்து வந்து கொடுக்க .
நந்தாவும் பிரஷ் ஆகிவிட்டு வந்திருந்தால், டீ குடித்து விட்டு கொஞ்ச நேரம் காலேஜில் நடந்ததை நந்தாவும், தியாவும் சொல்ல.
நந்தா பாடிய பாட்டை ரசனையோடு தியா சொல்ல .தேவி அமைதியாக கேட்டுக் கொண்டார்.
“வீட்ல பாடுவாரா “என்றாள் .
ஏன் படாம அம்மா எப்பவாச்சும் கேக்கும் அடிக்கடி பாட செய்வார் .
இப்போ மேக்சிமம் பாடல .
“ஒருவேளை நீ வந்ததாலையோ” என்று உதயா குறும்போடு சொல்ல.
நந்தா” டேய் “என்று தனது மச்சானின் தலையில் கொட்டினான்.
இவ வந்தா நான் ஏண்டா பாடாம இருப்பேன் .
இவ வந்ததுக்கு அப்புறம் உங்க அம்மா கேக்கல. நான் பாடலை .அவ்வளவு தான் .
ஏன்,பெரியம்மா நீங்க இவர பாட சொல்லல என்று கேட்க. தேவி சிரித்துக் கொண்டே அமைதியாகிவிட்டார் .
அதன் பிறகு, நால்வரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அவர்களது அரை நோக்கி சென்றுவிட்டார்கள்.
தியா படித்துக் கொண்டே அடிக்கடி
நந்தாவை திரும்பி பார்க்க .
“படிக்கிற வேலையை விட்டுட்டு இங்க என்ன வேலை படிப்புல கவனத்தை வை “என்றான்.
நான் படிச்சிட்டு தான் இருக்கேன் சார் .
“நீ படிக்கிற லட்சணம் தான் நல்லா தெரியுதே” என்றான்.
“எந்த நேரமும் வாத்தியாரவே சுத்த வேண்டியது “என்று முறைத்தாள்.
” அப்புறம் எப்படி இருக்கணும் மேடம் “.
“வீட்டில் இருக்கும் போது எனக்கு புருஷனா அப்பப்ப நடந்துக்கலாம் “என்று சொல்ல.
வேகமாக நிமிர்ந்து தியாவை பார்த்தான்.
” புருஷன்னா எப்படி “என்று அவளது அருகில் வந்து உட்கார .
தியாவிற்கு உடல் வேர்த்து ஊத்தியது .ஒன்னும் இல்ல என்று விட்டு நகர்ந்து விட்டாள் .
நந்தாவிற்கு தன்னை மீறிய சிரிப்பு தோன்றியது. “கேடி” என்று சொல்லிவிட்டு அவனுமே அவனுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான் .
அவள் இன்னும் மனதளவில் கூட திருமணத்திற்கு ரெடியாகவில்லை.
தான் வேண்டும் என்று மட்டும் தான் தன்னை எங்கு இழந்து விட கூடிய நிலை வந்துவிடுமோ என்று தான் தன்னையே இப்போதே திருமணம் செய்து கொண்டாள்.
கல்யாணத்திற்கு என்று அவள் இன்னும் ரெடியாகவில்லை என்பதை நந்தா எப்பொழுதே உணர்ந்து விட்டான் .
ஆகையால் ,அவன் பேச்சு வார்த்தையோடே எதுவாக இருந்தாலும் நிறுத்தி விடுவான்.
அதை தவிர , அவளிடம் அதிகமாக நெருக்கம் காட்டியதில்லை .
தியவும் ,அவனது நெருக்கத்தை அதிகமாக விரும்பியதில்லை .
தியா விரும்பியது அவனுடைய காதலை தான். அவராக தன்னுடைய காதலை “தன் மேல் காதல் வந்து காதலை வெளிப்படுத்த மாட்டாரா ?”என்று எண்ணுகிறாள் .
ஆனால் ,அது உடனடியாக நடக்க வேண்டும் என்று கூட அவள் எண்ணவில்லை.
இப்போது இருக்கும் சிறு சிறு சந்தோஷங்களையே அவள் ஏற்றுக்கொண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறாள்.
இதுவே அவளுக்கு பிடித்தும் இருக்கிறது.
அவ்வப்போது நந்தா கூப்பிடும்” டி “என்று அழைப்பும் ,
தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் அவருடைய அக்கறையும் பார்த்து பொறுமையாகவே அவருக்கு தன் மேல் காதல் வரட்டும் .
அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லயே என்று எண்ணினாள் .
ஒரு சில நேரங்களில் ஒரு வேலை அவருக்கு வயது ஏறிக்கொண்டே இருக்கிறது குழந்தை என்று யோசிப்பாள் .
இருந்தாலும் ,அப்படியெல்லாம் அவர் யோசித்திருந்தால் தன்னிடம் அதைப் பற்றி பேசுவார் .
தன்னிடம் படிக்கும் பெண் என்று இதை பற்றி பேசாமல் இருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் அமைதியாக விட்டு விட்டாள் .
நாட்களும் அதன் போக்கில் அழகாக சென்றது .
அன்று உதயா வருவதற்கு நேரம் ஆகும் என்று சொல்லி இருந்ததால் ,தியா கல்லூரியில் இதற்கு முன்பு திருமணத்திற்கு முன்பு பஸுக்காக காத்துக் கொண்டிருக்கும் இடத்தில் கல்லூரி வளாகத்தில் உட்கார்ந்து இருந்தாள்.
அப்பொழுது நந்தா இரண்டு மூன்று ஆசிரியர்களுடன் பேசிக்கொண்டு நடந்து வந்தான் .
“நந்தாவை பார்த்தவுடன் தியாவிற்கு ஏதோ ஒன்று தோன்ற அவனைப் பார்த்த நொடி கண்ணடித்து விட்டாள் “.
சுற்றியுள்ள ஆசிரியர்கள் யாரும் பார்க்கவில்லை தான் .இருந்தாலும் , நந்தாவிற்க்கு சுருக்கென்று கோபம் வந்தது.
சுற்றி இருந்த ஆசிரியர்களிடம் ஒரு நிமிடம் என்று சொல்லிட்டு தியாவின் அருகில் வந்தான்.
தியா சார் என்று எழுந்து நிற்க .”இது காலேஜ்ன்றது ஞாபகத்துல இருக்கா” .
“நீ ஸ்டூடண்ட் என்றது ஞாபகத்துல இருக்கா *உனக்கு .
எனக்கு இருக்கு அதை மறந்துடாத .
காலேஜ்ல எப்படி நடந்து கொள்ளனுமோ அப்படி நடந்துக்கோ .
ஒவ்வொரு டைமும் சொல்லிட்டு இருக்க மாட்டேன் என்று அவளை கடினமாகவே எச்சரித்து விட்டு சென்றுவிட .
தியாவிற்கு தான் ஒரு மாதிரியாகி விட்டது. அவளுமே வேண்டுமென்று செய்யவில்லை .
திருமணம் ஆனதிலிருந்து ,திருமண பேச்சு எடுத்ததிலிருந்து கவனமாக தான் இருக்க செய்கிறாள்.
அவனிடம் பெரிதாக விளையாட கூட செய்யவில்லை .
அவளுடைய விளையாட்டு தனம் வீட்டில் மட்டும் தான் இருக்கும். எவ்வளவு விளையாட்டு தனமானாலும் வீட்டில் தான் வைத்துக் கொள்வாள் .
வீட்டிலுமே நிறைய நேரங்களில் இது போன்று செயல்களை செய்ய தான் செய்வாள் .
ஆனால் ,இப்பொழுது தான் முதல்முறையாக காலேஜில் செய்து இருக்கிறாள்.
அவள் வேண்டுமென்றும் செய்யவில்லை .
“தன்னை மீறிய உணர்வில் செய்துவிட்டாள்”.
அதை எண்ணி இப்பொழுது வருத்தம் கொண்டாள்.
உதயாவும் வந்துவிட உதயாவுடன் வீட்டிற்கு சென்று விட்டாள் .
வீட்டிற்கு வரும்போது தியா சோர்வாக இருக்க தேவி என்ன தியா என்று கேட்க .
ஒன்னும் இல்ல பெரியம்மா லைட்டா தலை வலிக்குது என்று விட்டு அமைதியாகி விட்டாள் .
பிறகு, ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருக்க .
நந்தா வீட்டுக்குள் வந்தவுடன் தியாவை தேடினான்.
அவள் கிச்சனில் மேடை மீது உட்கார்ந்து தேவியுடன் கதை அளந்து கொண்டு இருக்க .
“கிச்சன் வாசற்படியில் நின்று அவளை கைக்கட்டி முறைத்துக் கொண்டு நின்றான்” .
அவனைப் பார்த்த பிறகு தியா கீழே இறங்கி நிற்க .
தேவி எதையோ பேசிக்கொண்டே திரும்பியவர் தனது தம்பி அவனது மனைவியை முறைத்து கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு .
“என்னடா .ஏன் , இப்படி அவளை முறைச்சிக்கிட்டு நிக்கிற”.
“அவளே வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்கா நீ வேற இப்படி முறைச்சிட்டு நிக்கிற” என்று கேட்க.
“உன் மக என்ன பண்ணனானு அவளையே கேளு”.
“ஏன், இதுவரைக்கும் உன் மக உன்னிடம் எதையும் சொல்லலையா?”.
இப்பொழுது எல்லாம் அவன் தன் அக்காவிடம் அவ்வப்போது தியாவை மக என்று சொல்லி பழகி விட்டான் .
அவருமே அதை அமைதியாக ஏற்றுக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
உதயாவிடமும் அவ்வப்போது உன்னோட தங்கச்சி என்று தான் சொல்லுவான் .
இப்பொழுது தேவி தியாவை பார்க்க அவள் கையை பிசைந்து கொண்டு நின்றாள்.
“அப்படி என்ன தான்டா பண்ணா சொல்லி தொல ” என்றார் .
அவள் செய்த காரியத்தை சொன்னவுடன் தேவி சங்கடமாக தியாவை பார்க்க .
நான் வேணும்னு செய்யல பெரியம்மா என்று வாய் எடுத்தாள் .
“ஆமாம் மேடம் வேணும்னு செய்யல வேணான்னு செஞ்சாங்க “என்று சொல்லிவிட்டு பலமுறை சொல்லிட்டேன் .
“காலேஜ் கேம்பஸ் குள்ள என்ட்ரி ஆனதுக்கு அப்புறம் உனக்கும் எனக்குமான உறவு ஸ்டுடென்ட் ப்ரொபசர் என்ற உறவு தான்”.
“அதை தாண்டி புருஷன் பொண்டாட்டி உறவு கிடையவே கிடையாது “.
அத முதல்ல ஞாபகத்துல வச்சுக்கோ .
இதுக்கப்புறம் சொல்லிட்டே இருக்க மாட்டேன் .ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்ணம் பழுக்கிற அளவுக்கு இழுக்க போறேன்னு நினைக்கிறேன் என்று விட்டு சென்று விட .
“டேய்” என்றார் தேவி .
தேவி கூப்பிட கூப்பிட காதில் வாங்காமல் அதிக கோபத்தில் இருந்த நந்தா அவனுடைய அறைக்கு சென்று விட்டான்.
ஒன்னுமில்ல தியா நீ போய் அவனை சமாதானப்படுத்து என்று சொல்ல.
“இல்ல பெரியம்மா நான் போகல எனக்கு பயமா இருக்கு” என்றாள்.
“அவன் என்ன உன்ன அடிச்சிடுவானா ?”என்று சிரிப்புடன் கேட்க .
இல்ல இருந்தாலும், நான் பண்ணது தப்பு தானே .நான் வேணும்னு செய்யல .
“தப்புன்னு தெரியுதுல அப்புறம் ஏன் தியா” என்றார்.
தெரியல பெரியம்மா ஏதோ அப்போ தோணுச்சு.
அவன சுத்தி ஸ்டாப் இருக்காங்கன்னு தெரியும் தானே.
தெரியும் பெரியம்மா .இருந்தாலும் என்று அவளால் அதற்கு மேல் முடியவில்லை என்ன சொல்வது என்று..
தேவியுமே அவளுடைய வயதை கடந்து வந்தவர் என்பதால் எதுவும் பேசாமல் சிரிப்புடன்.அவன் கிட்ட பேசு சரியாயிடுவான் .
இல்ல நைட்டு நான் பாத்துக்குறேன் என்று விட்டு அங்கையே குட்டி போட்ட பூனை போல் இருக்க .
“அவள் வருவாள் என்று காத்திருந்த நந்தாவிற்க்கு ஏமாற்றம் தான் மிச்சம் “ஆகியது .
அவள் ரூமுக்கு வராமல் இருக்க ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தவன் சாப்பிடுவதற்கு வெளியில் வந்தான் .
உதயாவுமே வெளியில் சென்று இருந்தவன் வந்திருக்க .
தேவியே விஷயத்தை உதயாவிடம் சொல்லி இருக்க உதயா அதை பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை .
தியாவை சிரிக்க வைக்க மட்டும் ஒரு சில விஷயங்களை செய்து கொண்டிருந்தான் .
சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவர்களது அறைக்கு சென்று விட்டார்கள்.
ஒரு சில நொடி தயங்கி நின்ற தியா எப்படி இருந்தாலும் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் என்று எண்ணி விட்டு ரூமுக்குள் சென்றாள்.
நந்தா லேப்டாப்பில் ஏதோ வேலையாக இருக்க.
அவள் வந்ததை பார்த்துவிட்டு அமைதியாக இருந்தான் .
தியா எதுவும் பேசாமல் தன்னுடைய புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டு இருந்தாள்.
இப்பொழுதும் அவளாக வந்து தன்னிடம் பேசவில்லையே என்ற உடன் தொண்டையைக் கனைத்து விட்டு “மேடம்க்கு சாரி கேக்கணும் கூட தோணல “என்றான்.
நான் வேணும்னு செய்யல. நான் தான் சாரி அங்கையே சொல்லிட்டேன்ல .
திரும்பவும் அதையே பேசிட்டு இருந்தா என்ன என்றாள்.
வேற எப்படி பேசணும் என்று எழுந்து அவளது அருகில் வந்து அவளது கையை பிடித்தான்.
அவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது .
நான் வேணும்னு செய்யல சார். “அது என்று இழுத்தாள்”.
“எது “என்றான் .
ஒன்னும் இல்ல என்று விட்டு அமைதியாகி விட்டாள் .
அவள் தன்னிடம் மல்லுக்கு நின்று விளையாடிருந்தால் கூட ,அவன் ஏதாவது பேசி இருப்பான் .
அவள் அமைதியாகி விட்டவுடன் நந்தாவிற்குமே ஒரு மாதிரியாகி விட்டது .
அவள் செய்த தவறை அவள் அங்கையே உணர்ந்து விட்டாள் என்பதை அவனும் அறிவான்.
இருந்தாலும்,அவனது கோபம் தனியாததால் தான் வீட்டில் வந்து கத்தவும் செய்தான்.
ஆனால் ,அவள் அமைதியாக இருக்க அவனுக்குமே ஒரு மாதிரியாக இருந்தவுடன் அமைதியாகி விட்டான்.