Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 49

மீண்டும் மலரும் உறவுகள் 49

வேகமாக வீட்டிற்குள் சென்ற உதயா ஹாலில் வந்து உட்கார.

தியா பின்னாடியே வந்தவள் அவளுடைய  ரூமுக்கு  சென்று  இரண்டு கவர் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் .

தேவி ,நந்தா இருவரும் என்னவென்று புரியாமல் பார்க்க .

இதில் இருக்க ஒரு கவர் நீங்களும் பெரியம்மாவும்  அண்ணனுக்கு இத்தனை வருஷமா செலவுக்கு கொடுத்த பணம்.

இது அவரோட சேவிங்ஸ்.

இது அவர் எனக்கு கொடுத்த பணம் என்று மூன்று கவர் வைக்க.

தேவியுமே மூன்று லட்சம் பணமாகவும் ,20 பவுன் நகைகள் கொண்டு வந்து வைக்க .

இருவரையும் பார்த்த நந்தா சிரித்துவிட்டு .

தன்னுடைய ரூமுக்கு சென்று இரண்டு பத்திரங்களையும் ,பேங்க் பாஸ்புக் மற்றும் பத்து பவுன் நகையுடன் வந்து வைக்க.

உதயா எழுந்து நின்று விட்டான் .”என்ன மாமா இது” என்று..

“ஏன் டா ?இப்படி கேக்குற”.

“இவ்ளோ நாளா என்ன என்னவா நினைச்சுட்டு இருந்த”என்று கேட்க .

“இல்ல மாமா அது” என்று விட்டு அமைதியாக .

“உங்க அம்மாவுக்கும் சரி ,எனக்கும் சரி நீ தனாவை விரும்பறேன்னு தெரியும்” .

நீயா சொல்வேன் மட்டும்தான் வெயிட் பண்ணினோமே தவிர .வேறு எந்த ஒரு காரணமும் கிடையாது.

“நீ சொல்லாததுக்கும் ஏதாவது ரிசன் இருக்கும்னு நாங்க நம்புறோம் “என்றான்.

மாமா நான் என்று விட்டு நான் என்னோட விருப்பத்தையே ஆடி 17 அன்னைக்கு தான் மாமா தனாகிட்ட சொன்னேன்.

இப்பொழுது நந்தா, தேவி இருவருமே அதிர்ச்சியாக பார்க்க .

நான் தியாகிட்ட கூட இப்போ வரை  சொல்லல மாமா .உங்கள போல அவளுக்கும் என் மேல டவுட் தானே தவிர .

தியா கிட்டயும் நான் சொல்லல .

அவ நம்ப வீட்டுக்கு வந்த பிறகு உங்க மூணு பேரிடமும் சொல்லனும்னு நெனச்சேன்.

தியாவும் நம்ம குடும்பம் தான மாமா .

என்னுடைய தங்கச்சி உன்னோட பொண்டாட்டின்னு யோசிச்சு அவ வந்த பிறகு  என்னோட வாழ்க்கையோட பெரிய விஷயம் ,முக்கியமான விஷயத்தை சொல்ல நினைச்சேன்.

அவ இல்லாம உங்க ரெண்டு பேர் கிட்ட மட்டும் சொல்ல எனக்கு விருப்பமில்லை அதுக்காக மட்டும் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் .

அதுவுமே இப்ப நீ சாயங்காலம் வந்ததுக்கு அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்.

இப்படி நடக்கும் என்று நான் யோசிக்கல என்றான் .

சரிடா விடு டா அதுக்கு என்ன இப்போ .

“இல்ல மாமா ஆன இவ்ளோ இது என்று அவன் எடுத்துக் கொண்டு வந்து வைத்த அனைத்தையும் காட்ட”.

“ஏன் டா நான் உன்னை மகனா நினைத்து தானே வளர்த்திருக்கிறேன்” .

“நான் உனக்கு எதுவும் செய்ய கூடாதா?” என்றான்.

அப்படி சொல்லல ஆனா என்றான்.

டேய்  அன்னைக்கு தியா சொன்னது தான் .

“இந்த வீட்ல இருக்க எல்லாத்துலயும் எங்க அக்காவுக்கு சரி பாதி பங்கு  இருக்கு சரியா?”.

“எங்க அக்காவுக்கு இருக்கும் போது ,எங்க அக்கா பெத்த மகன் உனக்கு இருக்காதா?” .

இந்த வீடாகட்டும் இன்னும் என்னோட அப்பா அம்மா அதாவது உன்னோட தாத்தா பாட்டி சேர்த்து வச்ச நிலங்கள் ஆகட்டும் எல்லாத்துலயும் பாதி  பாதி பங்கு இருக்கு.

ஆனா ,அதை எதையும் நான் இங்கே கொண்டு வந்து வைக்கல .

“இது என் சொந்த உழைப்பில்  உனக்காக உன்னுடைய எதிர்காலத்துக்காக நான் எடுத்து வச்சது மட்டும்தான் சரியா ?”.

“இப்படி நான் சரி பாதி பங்கு பிரிச்சா என்னையும் ,எங்க அக்காவையும் பிரிக்கிறதுக்கு சமம் டா .”

“சொத்தையும் சரி ,என் அக்காவையும்  சரி என் ஆயுசு முடியிற வரை நான் பிரிக்க நினைக்க மாட்டேன்” .

அத பத்தி இங்க நான் பேசவும் செய்யல.

பேங்க்ல உன் பேர்ல ஒரு 20 லட்சம் போட்டு வைத்திருக்கிறேன். உங்க அம்மா ஒரு மூணு லட்சம் கொண்டு வந்து வச்சிருக்காங்க .

நீ வச்சிருக்கறதே உன்னோட சேவிங்ஸ் ஓட சேர்த்து இரண்டு லட்சம் இருக்கும் போல.

அது இல்லாம என்கிட்ட கொஞ்ச பணம் கையில இருக்கு இது தவிர வேற எதுவும் வேணாம் .

“இத வேணாம்னு சொல்ல மாட்டேன்னு” நினைக்கிறேன் என்று விட்டு நந்தா கைய கட்டிக்கொண்டு தனது மச்சான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

தனது மாமாவை கட்டிக்கொண்டு இதெல்லாம்  வேணான்னு சொல்லல மாமா .

ஆனா இப்போ இது தேவையானு தான் யோசிச்சேன் .

புரியலடா உன் தங்கச்சி அங்க உன் கல்யாணத்தை கிரான்ட்டா பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கா மறந்துடாத .

சிம்பிளா கோவில்ல வச்சுக்கலாம் இல்ல  மாமா .

“ஏன் டா இன்னும் இந்த வீட்ல யார் டா “இருக்கோம் .

  “ரெண்டு பேர் சம்பாதிக்க உன் கல்யாணத்தை ஏன் டா சிம்பிளா செய்யணும் “நாங்க.

உங்க கல்யாணம் ஆனா சிம்பிளா கோவில்ல தான மாமா நடந்தது.

அண்ணா போதும்  நான் தப்பா நினைப்பேன்னு நினைச்சு நீங்க இத சொல்லலானு எனக்கு தெரியும் .

ஆனா எங்க  கல்யாணம் என்னோட சூழ்நிலையால நடந்த விஷயம் அது உங்களுக்கும் தெரியும் .

இன்னும் சொல்லப்போனால் உங்களால் மட்டும் தான் என் கல்யாணம் நடந்துச்சு அண்ணா.

நான் இப்போ இங்க வந்து நிற்க முக்கிய காரணம் நீங்க மட்டும் தான் .

ஆனால் ,”இது அதுக்கு நன்றி கடன் இல்ல”.

நான் உங்கள என்னோட சொந்த அண்ணனா நினைச்சு மட்டும் தான் இங்க பேசிட்டு இருக்கேன் என்று விட்டு அமைதியாகி விட்டாள் .

“அவளை தோளோடு அணைத்துக் கொண்ட உதயா நீ எப்பவுமே என்னோட தங்கச்சி தான்டா” என்று சொன்னான்.

தியா உதயாவை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள். உதயாவும் அவளை பார்த்து சிரித்து விட்டு  தன் கண்ணில் இருக்கும் கண்ணீரை துடைத்துக் கொண்டே  திரும்ப.

வாசலில் நிற்கும் கண்ணன் ,மலர் இருவரையும் பார்த்தான்.

உதயா வாங்க என்று அழைத்து விட்டு  அமைதியாகி விட .

மற்ற மூவரும் அதன் பிறகு தான் கண்ணன் மலரை பார்க்க செய்தார்கள்

இருவரது கண்களும் கலங்கி தான் இருந்தது .இங்கு கண்ணனுக்கு தான் குற்ற உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக மேலும் கூடி கொண்டே இருந்தது .

இப்படி தன் மகளை தாங்கக்கூடிய இவர்கள் கிடைப்பது அபூர்வம் என்று சொல்வதை விட .

தான் இவர்களுக்கு அவ்வளவு தீங்கு செய்தும் தன்மகள் சொன்னது போல் பாவம் அதுவும் நம்பிக்கை துரோகம் செய்திருக்க.

தன் மகளை உள்ளங்கையில்   வைத்து தான் இந்த மொத்த குடும்பமும் தாங்குகிறது  எண்ணி இதுதான் தனக்கு கிடைத்த பெரிய தண்டனை என்று எண்ணினார்.

உங்க கல்யாணத்துக்கு பத்தி பேசுறதுக்கு தான் வந்தோம் பா.

“அதான் உன் மகளே பேசிட்ட இல்ல அது போதாதா மலரு  “என்றார் தேவி.

சின்ன புள்ள ஏதாச்சும் தப்பா பேசி இருந்தா .இல்ல ,நீங்க எப்படி அதை எடுத்துக்குவீங்கன்னு தெரியல அதான் என்று அமைதியாக ஆகிவிட்டார் மலர்.

நீ நல்லது கேட்டது  சொல்லிக் கொடுத்து  தான் வளர்த்து இருக்கீங்க மலர்.

நல்ல பழக்க வழக்கம்தான் . அவ பேசினதுல எதுவும் தப்பில்ல .

“இந்த கல்யாணத்தை  முன்னாடி நின்னு எடுத்து நடத்த போறவளே அவ தான்” .

நாங்க  என்ன அவ தப்பா பேசிட்டதா  நினைக்கப் போறோம்.

இந்த கல்யாணத்தை கிரண்டா பண்ணனும் என்கிற ஆசை எனக்கும் இருக்கு நந்தாவுக்கும் இருக்கு .

இதுல நாங்க தப்பா நினைக்க எதுவும் இல்ல.

அவள வளர்த்தது யாரு நீ மலர் என்று மலரை தோளோடு அணைத்துக்கொள்ள .

“உன்னோட வளர்ப்பு எப்பையுமே தப்பாகது “என்று மலரின் கண்ணை துடைத்து விட்டார்.

மலருமே தேவியை கட்டிக்கொண்டு அழ செய்தார்

அதன் பிறகு தியா டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க .

குடித்துவிட்டு இருவரும் கிளம்பி விட்டார்கள். போகும்போது கண்ணன் ஒரு சில நொடி உதயாவை திரும்பிப் பார்க்க .

உதயா கண்டும் காணாமல் அமைதியாக இருந்தான்.

“ஒன்னும் இல்ல பா “என்று தியா சொன்னவுடன் அதிர்ச்சியாக தான் கண்ணன் தியவை பார்க்கச் செய்தார்.

  எப்போது கண்ணன் தேவிக்கு துரோகம் செய்தார் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து அப்பா என்று கூப்பிடுவதை  தியா நிறுத்தி  இருந்தாள்.

இன்று  ஒன்னும் இல்லப்பா என்று சொன்னவுடன் “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்று சொல்வது இதுதான் போல எண்ணினார்.

தியா  சொன்ன ஒரு வார்த்தை அவருக்கு போதுமானதாக இருக்க தன் மகளை அணைத்து அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு கிளம்ப.

தியா அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்தாள் .

உதயாவுமே அவளது நெற்றியில் இதழ் பதித்து” உன்ன மாதிரி ஒரு தங்கச்சி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் “என்று சொல்ல .

கண்ணன் நெற்றியில் இதழ் பதிக்கும் போது எதுவும் தோன்றதா  , தியாவிற்கு உதயா இதழ் பதித்தவுடன் நேற்று நந்தா  இதழ் பதித்தது மன ஓட்டத்தில் வந்து செல்ல.

நந்தாவை திரும்பி பார்த்தாள். அவன் அவளை குறுகுறு பார்வையோடு சிரிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க.

தியாவிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. நந்தாவை பார்த்துவிட்டு அப்படியே நகர்ந்து விட்டாள்.

இதுக்கு மேல ஒன்னும் சமைக்க வேண்டாம் என்று விட்டு நந்தா வெளியில் சென்று சாப்பாடு வாங்கிக்கொண்டு  வர .

நால்வரும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் ரூமுக்கு சென்று விட்டார்கள்.

இங்கு ரூமுக்கு சென்றவுடன் தியாவிற்கு தான் படபடப்பு அதிகம் ஆகியது.

நேற்று “அவன் இதழ் பதித்துவிட்டு சென்றவுடன் அந்த நிமிடம் மட்டும் குறுகுறுப்பு இருக்க” .

அடுத்த நிமிடம் தேவி கூப்பிட்டதால் வெளியில் வந்த தியா அதை  மறந்திருந்தாள் .

ஆனால், இப்பொழுது உதயா இதழ் பதித்தவுடன் தன்னையும் மீறி  நினைவுகள் நேற்றைய நாளில் வந்து செல்ல நந்தவை பார்க்க.

“அவனின் குறுகுறு பார்வையும் அவனின் இதழ் பட்ட இடமும் குறுகுறுக்க.”

ஓரிடத்தில் நிலையாக  நிற்க முடியாமல் கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

“அவளைப் போலவே அவளது மனமும்  ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தது” .

அதையே நினைத்துக் கொண்டு ஒரு பக்கமாக படுத்து இருக்க .

ரூமுக்குள் வந்த நந்தா அவளை பார்த்துவிட்டு அவளை பின் பக்கம் இருந்து பார்த்து சிரித்துவிட்டு எதுவும் பேசாமல் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவளது அருகில் வந்து உட்கார்ந்தான்.

“மேடமுக்கு  படிக்கிற வேலை இல்லையா?” அதுக்குள்ள படுத்திட்டீங்க என்று கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டவுடன் அவளது மொத்த உணர்வும் எங்கோ ஓடி சென்றிருந்தது.

எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நான் காலைல எழுந்திரிச்சு படிச்சுக்கிறேன் என்று  அவளுக்கே கேட்காத வண்ணம் சொல்ல.

“காத்து மட்டும்தான் வருது சத்தத்தை காணோம்” வெளிய அவ்வளவு வாய் ஆடுன.

” இப்ப எங்கடி சத்தத்தையே காணோம் “என்றும் அவளை சீண்டிடும் பொருட்டு கேட்டான் .

அவன் பக்கம் திரும்பி படுத்து  இப்போ உங்களுக்கு என்ன தாங்க பிரச்சனை “பேசினாலும் குத்தம் பேசவில்லை என்றாலும் குத்தம் “என்று கேட்டு விட.

அவளது கண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான் .

“அவனது பார்வை  தனக்குள் ஏதோ ஏதோ மாற்றங்களை உருவாக்குவது உணர்ந்தாள்”.

அவனை விட்டு எழுந்து உட்கார. நந்தா அப்போதும் அமைதியாகவே இருக்க .

என்ன எதுக்கு இப்போ பாத்துட்டே இருக்கீங்க என்று திக்கி திணறி கேட்டாள்.

அவளை ஒரு சில நொடி பார்த்து சிரித்து விட்டான் .

அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்து அவளது கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டான் .

அவளது  கண்ணையே பார்த்துக் கொண்டிருக்க.

“நேரம் ஆகலையா ?”இல்ல உங்களுக்கு வேலை இருந்தா பாருங்க இல்லனா தூங்கலாம் என்று சொல்ல.

நந்தா சிரித்துவிட்டு தூக்கம் வந்தா தூங்கு  உன்ன யாரு வேணாம்னு  சொன்னது என்றான் .

அவள் கையை பார்க்க . நந்தா அவளது கையை விட்டு விட.

அப்போ நான் அவ்வளவுதான்  உங்களுக்கு அப்படி தானே  என்று ஒரு சில நொடி தன்னையும் மீறி கண்கள் கலங்க கேட்க .

“அவளை இழுத்து அணைத்து கொண்டவன் என்ன தான் டி உனக்கு பிரச்சனை” .

“நீ தான் கையை விட சொல்லி பார்த்த அதான் விட்டேன் .கையை விட்டவுடன்  நான் உங்களுக்கு அவ்வளவு தானனு கேட்கிற.”

அவ்வளவு உரிமையா வெளியே பேசின .தனா வீட்ல பேசிட்டு வந்த அப்புறம் உனக்கு என்ன தாண்டி பிரச்சனை என்றான்.

நான் பேசினேன் தான். ஆனா “அந்த உரிமையா நானா எடுத்துக்கிட்டேன்னு தோணுது” .

நீங்க இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு அந்த உரிமையை கொடுத்த மாதிரியே தெரியல என்று சொன்னாள்.

அடுத்த நொடி அவளை அடிக்க கை ஓங்கி  கொண்டு வந்தவன் கீழே விட்டிருந்தான்.

அதிர்ச்சியாக தியா அவனை பார்த்துக் கொண்டிருக்க .

“நீயா எதையாவது யோசிக்க வேண்டியது. நீயா வார்த்தையை விட வேண்டியது .இல்லையா?”

” மனுஷன் என்ன யோசிக்கிறான் என்று  எல்லாம் யோசிக்கிறதே கிடையாது இல்ல”

என்ன பேசுறேன்னு யோசிச்சு பேசு தியா என்று விட்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

தியா அதிர்ச்சி பார்வையோடு அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *