Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 59

மீண்டும் மலரும் உறவுகள் 59

மீண்டும் மலரும் உறவுகள் 59″உன்னோட தம்பிக்கு ,என்னோட மச்சானுக்கு டியூஷன் பீஸ் கற்ற உரிமை கூட எனக்கு இல்லையா டி “என்று கையை கீழே போட்டுவிட்டு மெதுவாக கேட்க .உரிமையில்லைன்னு சொல்லல. அந்த உரிமையை பணம்,காசா கொண்டு போகாதீங்கன்னு சொல்றேன்.இப்படி ஒரு நல்ல டியூஷன் சென்டர் இருக்குன்னு சொல்லுங்க .தப்பு இல்ல அங்க கொண்டு போய் சேர்த்து விடுங்க.டெய்லி கூட கூப்பிட்டு வாங்க, கொண்டு போய் விடுங்க .நான் வேணான்னு சொல்லல .பீஸ் கட்ட வேணாம்னு சொல்றேன்.இத பழகி விட வேண்டாம் என்று சொல்கிறேன்.புரியல தனா என்று கோபத்துடனே அவள் கையை பிடித்து கேட்டான் .இதை பழகி விடுவது நமக்கு நல்லது இல்ல .ஏற்கனவே நம்ம கல்யாணத்தப்போ என் பேருல இருந்த வீட்டை   சித்தி பேருக்கு  எழுதி கொடுத்தாச்சு .அப்பவே அது அப்பா பேருல எழுதி கொடுத்திருக்கணும் என்று அழுகையுடனே சொல்ல.அவள் தாடையை பிடித்தவன் . தனா எதையோ மறைத்து பேசுற உடைச்சு பேசினா தான் எனக்கு புரியும்.நான் எதாச்சும் வார்த்தையை விட்டுட்டாலும் தப்பாயிடும் என்றான் அவனை கட்டிக்கொண்டு அப்பா கிட்ட அம்மா நடந்துக்கிற விதமே சரியில்ல .ரெண்டு கடை வாடகையில் இருக்கு .ஒரு வீடு வாடகையில் இருக்கு அது மூணுமே என்று நிறுத்தினாள் .அதுவும் உன் பேர்ல தான் இருக்கா என்றான்.ஆமாம் என்று தலையாட்ட .”இப்போ அது மூணையும் அவங்க பேருல எழுதி வைக்க சொல்லி கேட்டுட்டு இருக்காங்களா ?”அதனால மாமாவை என்ன பண்ணாங்க உங்க சித்தி என்றான்.சரி விடு இப்ப தூங்கு காலைல பேசலாம் இத பத்தி என்றான்.இல்ல  என்றாள் தனா காலையில பேசலாம் சொல்றேன் தான தூங்கு என்று அவளை தன் மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுக்க .அடுத்த அரை மணி நேரத்தில் தூங்கி இருந்தாள்.மறுநாள் விடிந்தவுடன் தியா இன்னைக்கு தனா காலேஜ் வர மாட்டா என்று விட்டு அமைதியாகி விட.தன் மாமாவை பார்த்துக்கொண்டு நின்றான்.எங்கையாச்சும்  போகணுமா டா ஏதாச்சு பண்ணனும் என்று நந்தா கேட்க.நான் பாத்துக்கிறேன் மாமா .ஆனா ,இருந்தாலும் நான் செய்வது சரியா ?தப்பா மட்டும் எனக்கு புரியனும் என்று விட்டு நேற்று நடந்த அனைத்தையும் சொல்ல.சரி நீ என்ன யோசித்து வச்சு இருக்க என்று தேவியும் நந்தாவும் கேட்க .அவங்க இப்ப குடியிருக்க வீடு அவங்க சித்தி பேர்ல இருக்கட்டும் .நமக்கு வேணாம் .ஆனா, அந்த ரெண்டு கடையையும் இன்னொரு வீட்டையும் அவங்க தம்பி ,தங்கச்சி பேருலயும் அவங்க அப்பா பேருலயும் எழுதி வச்சிடலாம். வேற எதுவும் அவங்க சித்தி பேருல இருக்க வேணாம்.நான் தெரிஞ்ச பிரெண்ட்ஸ் கிட்டயும் இத பத்தி டீடெயில்ஸ் கேட்டுட்டேன் .ஆனா, நான் எடுத்திருக்க முடிவு சரியா ? தப்பானு நீங்க சொன்னீங்கன்னா மேற்கொண்டு அதைப்பற்றி நான் யோசிப்பேன் என்றான்.நந்தா தனது மச்சானை கட்டிக்கொண்டு நீ எடுத்து முடிவு சரிதான் .அதையே செய். அதுல வர வருமானமே அவங்களுக்கு போதும் .சிட்டில தான் ,மெயின் ஏரியால தான் மூன்றுமே இருக்கு .சோ வாடகையே  ஓரளவுக்கு வரும். அதுவே அவங்க குடும்பம் நடத்த போதுமானது தான்.அதனால நீ என்ன யோசிச்சிருக்கியோ அதை செய்.உனக்கு ஏதாவது ஹெல்ப் தேவை என்றால், என்னையோ இல்ல அக்காவையோ கேளு .சரிடா எனக்கு காலேஜ்க்கு லேட் ஆகுது என்று டைம் பார்க்க .சரி மாமா போயிட்டு வா . தியா நீ எப்படி போவ என்றான்.நானே தனியா ஸ்கூட்டில போய்க்கிறேன் அண்ணா.எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை என்று விட்டு “தனாவை கட்டி அணைத்து பேசி தீர்த்துக்கோ டி “என்று விட்டு சென்று விட்டாள்.அதன் பிறகு தனாவை அழைத்துக் கொண்டு தனாவின் பிறந்த வீட்டிற்கு சென்ற உதயா தான் எடுத்த முடிவை சொல்ல .தனாவின் சித்தி குதித்தார்.இந்த வீடும் சரி ,மீதி இருக்க சொத்தும் உங்க கைய விட்டு போயிடலாம் .என்ன ?சொல்ல போனா எல்லா சொத்தும் தனா பேருல தான்  இருக்கு .இந்த வீட்டோட நீங்க தனியா தான் இருந்தாகணும்.உங்க பசங்களே உங்க பின்னாடி நிக்க மாட்டாங்க என்பதை நீங்க மறந்துறாதீங்க என்றவுடன் தனாவின் சித்தி பார்வதி க்கு கை கால் நடுங்க ஆரம்பித்தது .சொன்னாலும் சொல்ல விட்டாலும் அதுதானே உண்மை.தனது கணவனாகட்டும். தன்னுடைய பிள்ளைகளாகட்டும் தன் பக்கம் நிற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தவர் .தனாவை முறைத்துக் கொண்டு நிற்க .நாளைக்கு நல்ல நாள் .நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம் என்றான்.இல்லப்பா என்று தனாவின் அப்பா சொல்ல.இல்ல மாமா நான்  எடுத்து இருக்க முடிவு சரிதான் .உங்க பொண்ணுக்கும் இதுல சம்மதம் .எங்களுக்கு உங்க சொத்து வேணாம் .உங்க சொந்த பந்தம் தான் வேணும்.எனக்கு என் மச்சானும் என் மச்சினிச்சியையும் எப்படி பாத்துக்கணுமோ அப்படி பார்த்துக்க தெரியும் .இதுல இருந்து வர வாடகையை உங்க வருமானத்துக்கு போதுமானது.உங்க தேவைக்கு போதுமானது, சரி மாமா என்று விட்டு தனாவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டான் .நீங்க ஆபீஸ் போகலையா? என்று கேட்க.எந்த நேரமும் ஆபீஸையே கட்டிட்டு அழ முடியாது என்றான்.தனா அவனை முறைத்துக் கொண்டு நிற்க .வண்டியில் ஏறு  என்றான்.எங்க போறோம் என்று கேட்டாள்.எங்கேயோ போறோம் வண்டியில் ஏறு.”ஏன் ?என்னை நம்பி ஏற மாட்டியா “என்றான்.”உங்களை நம்பி என் வாழ்க்கையையே கொடுத்து இருக்கேன் “என்று சிரித்து கொண்டே சொல்ல.வண்டியில் ஏறி உட்கார்ந்து அவனது தோளில் கை வைத்தாள்.அவள் கை வைத்த கையில் அழுத்தம் கொடுத்தவன் .வண்டி எடுத்துக்கொண்டு தியேட்டரில் சென்று நிறுத்தினான்.படத்துக்கா என்றாள்.தியேட்டருக்கு படம் பார்க்க தான் வருவாங்க என்று அழைத்துக் கொண்டு சென்றான்.படம் பார்த்து முடியும் வரை அமைதியாக தனா படத்தையே பார்த்துக் கொண்டிருக்க .ஒரு சில நொடி அவளை திரும்பிப் பார்த்த உதயா அமைதி ஆகிவிட்டான் .வீட்டிற்கு மாலை போல் வந்திருக்க.அவள் வீட்டில் நடந்ததை தனா தேவி ,நந்தா, தியாவிடம் சொல்லி இருக்க.நாளை ரிஜிஸ்ட்ரேஷன் செய்து கொள்வதால் நாளைக்கும் தனா விடுமுறை எடுத்திருந்தால் ,ரிஜிஸ்ட்ரேஷன் முடித்த கையோடு தனது மச்சானுக்கும் கொழுந்தியாளுக்கும் இரண்டு புது உடை எடுத்துக் கொடுத்து ஹோட்டலுக்கு அழைத்து சென்று பிரியாணி சாப்பிட வைத்து மூவரையும் வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டு வந்தான்.அன்று இரவே தனா உதயாவை கட்டிக் கொள்ள .அவளை பார்த்து சிரித்து விட்டான் .மேடமுக்கு இப்போ தான் என்ன புரிஞ்சிக்க முடிஞ்சுதா என்றான் நக்கலாக.தனா அவனை முறைத்து விட்டு  அமைதியாகி விட .”ஹலோ மேடம் எனக்கு உன் மேல ஆசையும் இருக்கு ,காதலும் இருக்கு சரியா ?”.”உனக்கும் இருக்கு என்று  எனக்கும் தெரியும்”.நமக்கான நேரம் கொஞ்சம் வேணும் அது மட்டும் கொடு என்றான்.” அதுக்காக கட்டிக் கூட பிடிக்க கூடாதா ?”என்று சிரித்துக் கொண்டே கேட்க.”கட்டிப்பிடித்த பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன் “.அதன் பிறகு,நடக்கிற அனைத்துக்கும் ஓகே என்றால், எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என்றான் சிரித்து கொண்டே.அவனைப் பார்த்து முறைத்து விட்டு அவன் நெஞ்சிலே அடித்தாள்.” அவளை இருக்கி அனைத்துக் கொண்டு சும்மா சொன்ன தனா” என்றான்.அப்புறம் என்ன என்றாள் .எதுவும் பேசாமல் அவளை கட்டி அணைத்துவிட்டு அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.அவனை கட்டிக்கொண்டு உறங்கி விட்டாள் தனா.நாட்கள் அழகாக சென்றது. தேவி தனது மகனையும் ,தம்பியையும் பார்த்து சந்தோஷம் கொண்டார்.அவர்களது வாழ்க்கையை எண்ணியும்  சந்தோஷம் கொண்டார்.நாட்கள் அழகாக சென்று இருந்தது .தனா ,தியா இருவரும் கல்லூரி இறுதி ஆண்டில் இறுதியில் இருக்க கடைசி செமஸ்டர் ஆரம்பமாக இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தது.”மாலை கல்லூரி முடிந்து வந்ததிலிருந்து தியா நகத்தை கடித்துக் கொண்டு ஹாலில் நடந்து கொண்டு இருக்க”.தேவி அன்று லேட் ஆகவே வீட்டிற்கு வந்திருந்தார்.அவர் வரும்பொழுது சிரித்துக் கொண்டே போனில் பேசிக் கொண்டே வர.அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த தியா எவ்ளோ நேரம் பெரியம்மா.” வெளிய போனா சிக்கிரம்  வீட்டுக்கு வரணும்னு தெரியாதா?”என்று எரிந்து விழுந்தாள்.தேவி ஒன்றும் புரியாமல் அவளை பார்த்துக் கொண்டு நின்றார் .அப்போதுதான் வீட்டுக்கு வந்த உதயா என்ன தியா இப்படி  கேட்கிற இது என்ன பழக்கம் என்றான்.அண்ணா” நான் எங்க பெரியம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன் உங்களுக்கு என்ன வந்துச்சு “என்று கேட்டாள் எங்களுக்கு என்ன வந்ததா என்று தனாவை பார்க்க .தனா உதட்டை பிதிக்கி தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று சொல்ல .அவனைப் பார்த்து முறைத்து விட்டு தேவியின் கையை பிடித்தவள் ஹாலில் உட்கார வைத்துவிட்டு தேவியின் அருகில் உட்கார்ந்து கொண்டாள் .”தேவி அவளை என்னடி என்று பார்க்க”.”பெரியம்மா  உங்களுக்கு ரெஸ்ட் தான வேணும். இனிமே உங்களுக்கு வேலைக்கு போற வேலை இல்ல “.”முழு நேரமும் வீட்ல இருக்க வேண்டியது தான் என்று சொல்ல”.எங்க அத்தையை வீட்டில் இருக்க எதுக்குடி சொல்ற அவங்க எதுக்கு ரெஸ்ட் எடுக்கணும் என்று வேகமாக கேட்டுக் கொண்டு வந்து தனா நின்றாள்.”எங்க பெரியம்மாவை ரெஸ்ட் எடுக்க சொல்ற உரிமை எனக்கு இருக்கு ,அதை கேட்க நீ யாரு டி” என்றாள்.தேவியின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டவள் .”பெரியம்மா இனி லைஃப் எல்லாம் உங்களுக்கு பெரிய வேலை இருக்கு தானே”.”இனி வீட்டில் தானே இருப்பீங்க வேலைக்கு போக மாட்டீங்க தானே. என்று விட்டு  நீங்க வேலைக்கு போவீங்களா ?”என்று அழுகை உடனே கேட்க .தேவி வேகமாக அவளை கட்டி அணைத்துக்கொண்டார். .”உண்மையா வா டி “என்று கேட்க .அப்படின்னு தான் நினைக்கிறேன் .சரியா தெரியல ரெண்டு மூணு நாளா ஒரு மாதிரி இருக்கு .அது என்று விட்டு நிறுத்திவிட.நந்தா, உதயா இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை .வேகமாக சமையல் அறைக்கு சென்று சர்க்கரையை எடுத்துக் கொண்டு வந்து தியாவின் வாயில் போட்டுவிட்டு வேகமாக சாமி ரூமிற்கு சென்று சாமியை வணங்கி திண்ணுறு எடுத்துக் கொண்டு வந்து அவளது நெற்றியில் பூசி விட்டு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டார்.நந்தா என்று அவன் தோளில் கை வைக்க.டேய் மடையா உனக்கு இன்னமுமே புரியலையா? என்று கேட்க..அவனுக்கு லேசாக பொறி தட்டியது போல் இருந்தவுடன் தியாவை வேகமாக பிடித்து இழுத்து உண்மையா வா டி என்றான் .”அவள் லேசாக தலையாட்டிக் கொண்டே அவன் கண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க” .”அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளை தூக்கி சுற்றினான்” .அக்கா என்று வேகமாக கட்டிக் கொள்ள .தேவியுமே தனது சந்தோஷத்தை தன் தம்பியிடம்  பகிர்ந்து கொண்டார் .கொஞ்சம் ஆச்சு நீயும் ,உன் மகளும், உன் தம்பியும் புரியிற மாதிரி பேசுறீங்களா ?எனக்கு என்ன என்று புரியல என்றவுடன் ..அவனது தலையில் தேவி கொட்ட .தனது மச்சானை இறுக்கி அணைத்துக் கொண்டவன் .”என் மச்சான் தாய் மாமன் ஆகிட்டான் என்று சொல்லி உதயாவை தூக்கி சுற்ற”.உதயாவிற்கு தான் கைகால் புரியவில்லை .ஒரு சில நொடி தன் மாமாவின்  தோளில் தட்டிக் கீழே இறக்கி விட சொன்னவன் .வேகமாக தியாவின் அருகில்  மண்டியிட்டு உட்கார்ந்து அவள் வயிற்றில்  காதை வைத்து .”குட்டிமா நீ இருக்கியா ,இல்லையான்னு தெரியல என்று அழுகை உடனே ஆரம்பித்தான்”.” உன்னை விட எங்க அம்மாவோட வாழ்க்கையிலும் சரி ,எங்க மாமாவோட வாழ்க்கையில் சரி சந்தோஷத்தை யாராலும் கொண்டு வர முடியாது “.”சீக்கிரம் இந்த மாமா மடியில வந்து சேரு டா தங்கம் “என்று தன்னை மீறி தியாவின் வயிற்றில் முத்தமிட்டு இருந்தான்.”தியா  வேகமாக அவனை தன் வயிற்றோடு இறுக்கி அணைத்தவள். கீழே குனிந்து அவனது தலையை கோதி விட்டாள் “.எழுந்து நின்று அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.”தனா தான் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்துடலாமா ?  “.”கன்ஃபார்ம் பண்ணாம நம்மளே பேசக்கூடாது “என்றவுடன் உதயா அவளை அடிக்க கை ஓங்க.டேய் என்று வேகமாக தேவி ,நந்தா இருவரும் கத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *