தியா வீட்டிற்கு வந்து ஐந்து நாட்கள் ஆகியது.
உதயா ஐந்து நாட்களும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுற்றி கொண்டிருந்தான்.
தனா தியா காலேஜ் வராமல் நானும் செல்ல மாட்டேன் அடுத்த வருடம் சென்று கொள்கிறேன்.
இந்த வருடம் வீட்டில் இருந்து தியாவையும் குழந்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல .
“அத தான் நான் பார்த்துக்கிட்டு இருக்கேனே டி நீ காலேஜ் போ என்று தேவி சொல்ல” .
இல்லத்தை என்றாள்.நந்தா முறைத்துக் கொண்டு இருக்க.
யார் என்ன சொன்னாலும் நான் போறதில்லை என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
தியாவுமே சிரித்து கொண்டாள். அதன் பிறகு தனாவும் தினமும் வீட்டிலிருந்து குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள .
தியா தான் உதயாவின் அருகில் வந்து அவனது தோளில் தட்டி என்ன அண்ணா பலத்தை யோசனை .
“உன் மருமக பிள்ளைகளுக்கு என்ன பெயர் வச்சு இருக்க” என்று கேட்டாள் .
“இதுக்கு தான் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திட்டு இருக்கியா டா என்று நந்தா சிரிப்புடன் கேட்க” .
உனக்கு என்ன மாமா வந்துச்சு என்று முறைத்துவிட்டு ..
“நீ தானே எனக்கு பேர் வச்ச மாமா “என்றான்.
அதுக்கு என்ன என்று கேட்க.”அதே மாதிரி நான் என் மருமக பிள்ளைகளுக்கு பேர் வைக்க வேண்டாமா ” என்றான்.
என் தங்கச்சியை சுத்தி வர சொன்னா உன் தங்கச்சி சுத்தி வர.
“உன் தங்கச்சி சுத்தி வந்த நேரம் உன் பொண்டாட்டியை சுத்தி வந்து இருந்தா கூட கொஞ்ச உதவிகரமாக இருந்து இருக்கும் என்று சிரித்துக் கொண்டே நந்தா”.
உதயா தன் மாமாவை முறைத்துக் கொண்டு இருக்க .
வீட்டில் சார் இருக்கீங்க சரி .என்ன பெயர் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க என்று தியா கேட்க .
அது சஸ்பென்ஸ் என்று தேவி சொல்ல ரொம்ப ஓட்டாத மா என்று விட்டு உள்ளே சென்று விட்டான் .
அதன் பிறகு யாரும் எதுவும் பேசவில்லை .அப்படியே இரண்டு நாட்கள் சென்றது.
இன்று குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவும் ஏழாம் காப்போம் இடுவதாக இருந்தது.
பெயர் வைப்பதற்கு சுற்றியுள்ள ஒரு சிலரை அழைத்து இருந்தார்கள்.
தன் சொந்த உழைப்பில் வாங்கிக் கொண்டு வந்து சிறிய கழுத்து செயின் இரண்டு குழந்தைகள் கழுத்திலும் போட்டு விட்டான் உதயா.
வெள்ளி கொலுசு ,வெள்ளிக்காப்பு வெள்ளி அருணா கயிறு என்று வாங்கிக் கொண்டு வந்திருக்க.
கண்ணன் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.
இது நான் தாய் மாமாவாக என் தங்கச்சிக்கு குழந்தைகளுக்கு வாங்கிட்டு வந்து இருக்கேன் .
வேற எந்த ஒரு காரணமும் இல்லை என்று கண்ணனை பார்த்து சொல்லிவிட்டு தியாவை பார்த்து சிரித்தான்.
கண்ணன் சிரித்த முகமாகவே நின்று கொண்டிருக்க,
தன் மனைவியை கையோடு அழைத்துக் கொண்டு வந்த நந்தா குழந்தைங்க அருகில் நிற்க .
நந்தா உதயாவை பார்த்து “என் மச்சானுக்கு இந்த அளவுக்கு அறிவு இருக்க போலையே “என்றவுடன் உன்னோட வளர்ப்பு மாமா கொஞ்சமாச்சும் சூடு சொரணை வெட்கம் மானம் இருக்கும் என்று விட்டு இரு குழந்தையின் வயிலும் சக்கரை தண்ணியை வைத்தான்.
முதலில் பிறந்தது ஆண் குழந்தை என்பதால் ஆண் குழந்தையின் காதில் கீழே குனிந்து தமிழ் இனியன் தமிழ் இனியன் தமிழ் இனியன் என்று மூன்று முறை சொல்லிவிட்டு .
அடுத்து பெண் குழந்தையின் அருகில் வந்து பெண் குழந்தையின் காதில் வந்து கவிநிலா கவிநிலா கவிநிலா என்று மூன்று முறை சொன்னான்.
இருவரும் சிரித்த முகமாக தன் மாமாவையே பார்த்து போக்க வாயை போட்டு சிரித்துக் கொண்டிருக்க .
உதயா குழந்தைகளை கொஞ்சி விட்டு இருவரையும் பார்த்தான்.
இரண்டு குழந்தைகளும் சிரித்த முகமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
பிறகு தேவி வந்து குழந்தையின் பெயரை மட்டும் மூன்று முறை காதில் சொல்லிவிட்டு தன் தம்பியின் அருகில் போய் நின்று கொண்டார்
கண்ணன் ,மலர் இருவரும் தங்களால் முடிந்ததை செய்துவிட்டு அவர்களும் பெயர் சொல்லிவிட்டு அருகில் நிற்க.
அதன் பிறகு தான் நந்தாவும் ,தியாவின் சென்று குழந்தை காதில் பெயரை சொன்னார்கள்.
அப்போது தனா தான் தியாவிடம் என்கிட்ட ஒரு வார்த்தை கூட உங்க அண்ணன் சொல்லல டி பேர் வைக்கிறதை பத்தி என்று சொல்ல .
அப்புறம் எதைப்பற்றி டிஸ்கஸ் பண்ணினாரு .
வாழ்க்கையை பத்தியா என்ற உடன் லூசு போடி என்று விட்டு லேசான வெட்கத்துடன் தானா நகர்ந்து விட்டாள்.
அழகாக சென்றது நாட்கள்.
மூன்று மாதங்கள் ஓடி இருந்தது.
குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வரலாம் என்று குலதெய்வ கோவிலுக்கு சென்று குழந்தை பிறந்த பிறகு பொங்கல் வைத்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தார்கள் .
அன்று இரவு தியா குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்க .
சந்தோஷமா இருக்கியா டி என்று அவளது மடியில் படுத்து கொண்டு கேட்டான்.
சந்தோஷமா இல்லாமலா மாமா என்றாள்.
இப்போ பசங்களும் வந்துட்டாங்க கொஞ்சம் டயர்டா இருப்பா இல்ல என்றான்.
அவனைப் பார்த்து சிரித்தவள் . “மாமா நான் உன் கிட்ட அப்படி சொல்லலையே நீயா நான் டயர்டா இருக்கேன்னு நினைச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல “என்றாள்.
உண்மையா என்றான்.
உண்மையா நான் டயர்டா இல்ல பகல் முழுசும் பெரியம்மாவும் தனாவும் குழந்தையை பாத்துக்குறாங்க . நான் என்ன டயர்டா இருக்கேன்.
நைட் முழுக்க நீ இருக்க வேற என்ன மாமா எனக்கு வேணும் .
என்ன சுத்தி என்னை உள்ளங்கையில வச்சு தாங்குற இத்தனை உறவு இருக்கும் போது நான் எந்த வகையிலும் சோர்ந்து போக மாட்டேன் .
சோர்வாகவும் இருக்க மாட்டேன் என்று அவனது இடுப்பை கட்டி அணைத்துக் கொண்டு அவனை பார்த்து சிரித்தாள்.
அவனைப் பார்த்து கண்ணடிக்க .குழந்தை தூங்குகின்றதா என்று ஒரு சில நொடி எட்டிப் பார்த்தான்.
இரண்டு குழந்தைகளும் தொட்டிலில் தூங்கி கொண்டு இருக்க .
தன் மனைவியை கொஞ்சி விட்டு அவளிடம் நெருங்கி இருந்தான்.
அவள் காதில் சமரசம் பேசிட” வாத்தி “என்றாள் .
இந்த வாத்தி என்ற வார்த்தையை கேட்டே ரொம்ப நாள் ஆகுது டி கேடி என்று முத்தமிட்டான் அவளது நெற்றியில் “…
அவனைப் பார்த்து சிரித்துவிட்டு அன்று குழந்தை பிறப்பின் போது அவனது நெஞ்சில் முத்தமிட வந்தவள் தன்னையும் மீறி வழி அதிகமாகி விட அவனது நெஞ்சில் கடித்திருந்தாள்.
அந்த பல் தடம் இன்னும் அவனது நெஞ்சில் இருக்க .அவனது ரோமங்களையும் தாண்டி அது தெரிய .
மாமா வலிக்கிதா என்று கேட்டாள்.
“இது வலிக்கலடி நீ கத்துனது தான் வலிச்சுச்சு “என்று சொல்லி சிரித்து அழுத்தி அவளை தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான்”.
இங்கு தனா மூஞ்சை திருப்பி வைத்துக் கொண்டிருக்க .
இப்போ உனக்கு என்ன தாண்டி பிரச்சனை என்றான்.
நீங்க தான் பிரச்சனை .
நான் என்னடி பண்ணேன்.
நானும் ஒரு வாரமா கேட்டுட்டு இருக்கேன்.
என்ன கேட்டுட்டு இருக்க.
உங்க தங்கச்சிக்கும் குழந்தை பொறந்துச்சு என்றாள்.
அதுக்கு என்ன இப்போ ?.
“இப்படி பட்டும் படாமல் பேசிட்டே இருந்தா என்ன அர்த்தம் ?”
என்ன உன்கிட்ட பட்டும் படாமல் பேசுறாங்க எப்பயும் போல தாண்டி பேசிட்டு இருக்கேன் .
அதேபோலத்தான் பேசுறீங்க என்று விட்டு அமைதியாக ஆகிவிட்டாள் .
என்ன தாண்டி இப்போ உனக்கு பிரச்சனை .
அவனுக்கு தான் ஒன்றும் புரியாமல் இருந்தான். அப்போது ஒரு போன் கால் வர வெளியில் வந்தான் .போன் பேசிக்கொண்டு இருந்தான்.
இங்கு நந்தா தனது மனைவியிடம் தன் தேடலை முடித்துவிட்டு குழந்தையை தூக்க வேண்டும் என்ற காரணத்தினால் ,தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தியாவையும் குளித்துக் கொண்டு வர சொல்லிவிட்டு அதுவரை குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளை தூங்க வைத்துவிட்டு அவளுக்கு பசிக்கும் என்பதால் பால் காய்ச்சுவதற்கு வெளியில் வந்தான்.
போன் பேசிவிட்டு உதயா ஏதோ யோசனையாக இருப்பதை பார்த்தவன்.
“அவன் தோளில் கையை வைக்க என்னடி என்று கேட்டுக் கொண்டடே திரும்ப “.
தன் மாமா இருப்பதை பார்த்துவிட்டு என்ன மாமா என்றான்.
ஏதாவது சண்டை யா டா என்று கேட்க .
சண்டே இல்லை மாமா. அவ ஏதோ சொல்றோ எனக்கு தான் புரியல என்று..
தன் மாமாவை அழைத்துக் கொண்டு ஹாலில் உட்கார வைத்து தன் மாமாவின் அருகில் உட்கார்ந்து கொண்டு தன் மாமாவின் தோளில் சாய்ந்து கொண்டான் .
தனது மச்சானின் கையில் அழுத்தம் கொடுத்து “உதயா அவ உன்கிட்ட எதிர்பார்க்கிறது ஒன்னு தான்”.
அதை கொடுப்பதில்லை உனக்கு என்ன தயக்கம் என்று எனக்கு தெரியல டா.
“உனக்கும் கரெக்டான ஏஜ் தான் ,அவளுக்கும் கரெக்டான ஏஜ் இது தான் முடிவு எடுக்க வேண்டியது நீதான் “.
அவ என்ன பேசுறான்னு புரியாத அளவுக்கு நீ கிடையாது .
ஆனால் ,இப்போது இது தேவையானு மட்டும் தான் நீ யோசிக்கிற என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்.
மேற்கொண்டு நீ என்ன முடிவு பண்ணனும்னு நீ தான் யோசிக்கணும் .
நான் ஒன்னும் சொல்ல முடியாது என்று விட்டு எழுந்து பால் காய்ச்ச சென்று விட்டான் .
பால் காய்ச்சி கொண்டு வந்தவன் தனது மச்சானின் கையிலும் ஒரு கிளாஸை வைக்க .
தன் மாமாவை பார்த்து சிரித்தவன் .என்ன மாமா பொண்ணுங்க தான் கையில பால் கிளாஸை எடுத்துட்டு போவாங்க.
ஆனா ,நீ உன் மச்சான் கைல குடுக்குறியா என்றான் .
எப்படி வேணாலும் வச்சுக்க டா என்று தோளில் தட்டி விட்டு நல்ல முடிவா யோசி என்று விட்டு அமைதியாக ரூமுக்கு சென்றுவிட .
கையை கட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் தியா.
“தூங்கலையா டி “என்று கேட்க பசிக்குது பால் காய்ச்சி தரீங்களா என்று கேட்கலாம்னு வந்தேன்.
நீங்க அண்ணன் கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன் மாமா என்றாள்
தனா அவனை பார்த்துப்பாள் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று தோளில் தட்டி அவளுக்கு பாலை கொடுத்துவிட்டு படுக்க வைத்தான்.
உள்ளே வந்த உதயா தனாவை பார்க்க .
அவள் அழுது கொண்டே படுத்திருந்தாள் .
தனா என்று அழைக்க என்ன என்று கேட்டு கொண்டே அழுகை உடனே எழுந்து உட்கார்ந்தாள் .
அவன் பால் கிளாஸை நீட்ட.
நான் உங்க கிட்ட பால் கேட்டேனா என்று விட்டு அமைதியாக படுத்து விட்டாள் .
ஒரு சில நொடி அமைதியாக பார்த்தான் .அந்த பால் காசை முடி வைத்துவிட்டு தனாவின் அருகில் படுத்து நெருங்கி வர .
உங்களுக்கு என்ன தான் பிரச்சனை நான் தான் அமைதியா விலக்கிட்டேன் இல்ல.
அப்புறம் நீங்களா நெருங்கி வர வேண்டியது அப்புறம் என்ன குத்தம் சொல்ல வேண்டியது .
“நான் ஒன்னும் இந்த உடம்புக்கு ஆசை படவில்லை என்று விட்டு அமைதியாகி விட “.
அவளை ஓங்கி அறிந்திருந்தான் .
“புருஷன் கிட்ட பொண்டாட்டி உடம்பு சேவைக்கு வருவதில் தப்பில்ல டி “
அதுக்குன்னு எப்படி வேணாலும் பேசுவியா , யோசிப்பியா என்று “அவளை இருக்கி அணைத்து அவளது இதழில் தன் மொத்த மூச்சையும் தன்னுடைய உணர்வையும் கொட்டிக் கொண்டிருந்தான்” .
அவனை வேகமாக தள்ளி விட்டு அதனால ,அதனால தான்டா உன் கிட்ட கேட்டேன் .
நான் என்ன ரோட்ல போறவன் கிட்ட யா என்னோட பீலிங்ஸ் காட்ட முடியும்.
ஒரு வாரமா மூஞ்சை தூக்கி வச்சிருத்த இப்ப எதுக்குடா வந்த என்று அவனது நெஞ்சிலே அடிக்க.
ஓவரா பண்ணாத டி என்று அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு இப்பொழுது பாலை நீட்ட.
அவனைப் பார்த்து முறைத்துவிட்டு பால் பாதி குடித்துவிட்டு மீதியை கொடுக்க
இது என்ன ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பால் கொண்டு வந்தியா என்று கேட்க.
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்றான்.
ஏதோ நடந்து இருக்கு என்ற உடன் மாமா தான் பால் கொடுத்தார் என்ற உடன் தனாவும் சிரித்து விட்டாள் .
போடா என்று விட்டு திரும்பிப் படுக்க .
இன்னும் மேடமுக்கு கோவம் குறையில்லையோ என்று அவளை இறுக்கி அணைத்து தன்னுடைய தேடலை அவளிடம் தேட தொடங்க ஆரம்பித்து இருந்தான் .
அங்கே அழகான தாம்பத்தியம் அரங்கேறியது இல்லறம் நல்லறமாக ஆரம்பமாகியது.
நாட்கள் அழகாக வேகமாக சென்றது.
ஒரு வாரம் கழித்து நந்தா குடும்பத்துடன் எங்காவது சென்று வரலாமா என்று கேட்க .
எங்க டா என்று கேட்க .
எங்கையாவது போலாம் என்றான்.
இல்லடா பசங்க இருக்கும்போது என்றார்.தேவி .பசங்களுக்கு தான் ஏழாவது மாசம் ஆயிடுச்சு இல்ல இன்னும் வெளியே எங்கேயும் போகக் கூடாதா என்றான்.
சரி போயிட்டு வரலாம் என்றவுடன், தனா மலர் அத்தை கண்ணன் மாமா என்று கேட்க .
அனைவரின் பார்வையும் தியா பக்கம் சென்றது .
உங்களுக்கு விருப்பம் இருந்தா கூப்பிட்டு கோங்க என்னையா ஏன் பாக்குறீங்க என்று விட்டு அமைதியாக விட்டாள் .
கண்ணன் மலரிடம் கேட்க இல்லை என ரெண்டு பேரும் வரல நீங்க போயிட்டு வாங்க என்ற உடன் வேறு எதுவும் பேசவில்லை .
மற்ற ஐந்து பேரும் குழந்தையை அழைத்துக் கொண்டு கவி நிலா ,தமிழினியன் இருவரையும் அழைத்துக் கொண்டு ஊட்டி சென்று இருந்தார்கள்.
ஒருவாரம் அங்கு சந்தோஷமாக இருந்து சுற்றி பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள் .
ஊட்டி சென்று வந்து இரண்டு நாளும் தனா சோர்வாகவே இருக்க .
தியா தான் என்னடி என்று கேட்க .
இல்ல அங்க போயிட்டு வந்தது உடம்பு ஒன்னும் ஒத்துக்கொள்ளவில்லை போல ஒரு மாதிரி இருக்கு என்றாள்.
சரி என்று அமைதியாகி விட்டாள் தியா.
அடுத்த அரை மணி நேரத்தில் ஹாலில் இருந்த தனா சோர்வாகவே இருக்க .
தேவி தான் என்ன பண்ணுது என்று கேட்டார்.
அப்பொழுது மலர் வீட்டிற்கு வந்தார் . ஊட்டி சென்று விட்டு வந்த காரணத்தினால் தனது பேரப்பிள்ளைகளை பார்க்க வந்திருந்தார்.
குழந்தைகளை பார்த்துவிட்டு என்ன தனா சோர்வாக இருக்க என்றார்.
ஒன்னு இல்ல அத்தை ரெண்டு நாளா ஒரு மாதிரியா இருக்கு .
போயிட்டு வந்தது ஏதோ ஒத்துக்கொள்ள வில்லை போல ..
அதான், ஒரு மாதிரி இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தனா மலர் மீதே மயங்கி விட .
வேகமாக தேவி தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தர .
தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி விட்ட மலர் அக்கா எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே உதயா தனாவின் அருகில் வந்து நின்று அவளது தலையில் தட்டினான்..
தனா தான் மயக்கத்தில் இருந்து எழுந்தவள் என்னங்க என்று கேட்க.
இந்த மாசம் என்ன தலை குளிக்கல தான இன்னும் என்று கேட்க.
அவனை திருத்திரு வென பார்த்து விட்டு சுற்றி பார்க்க.
கண்ணன், மலர், தேவி ,உதயா, நந்தா தியா என்று நின்று கொண்டிருக்க .
தியா மட்டும் முறைத்துக் கொண்டு நின்றாள் .
உனக்கு எப்ப எதைக் கேட்கணும்னு விவஸ்தை இல்லையா டா அண்ணா என்று விட்டு எதுவும் பேசாமல் தன் கணவனை பார்த்து அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் கிட் வாங்கிக் கொண்டு வர சொல்லி இருக்க.
அவனும் கிட் வாங்கிக் கொண்டு வந்து தர .
தனா உதயா இருவரும் ரூமுக்கு சென்று டெஸ்ட் பண்ணி பார்க்க.
யூரின் இரண்டு சொட்டு அந்த கிட்டில் வைத்துக்கொண்டு தனா அமைதியா உட்கார.
அதை வேகமாக எடுத்து பார்த்த உதயா அதியா எடுத்துக் கொண்டு வந்து தியாவின் கையில் கொடுக்க.
தன் அண்ணனை கட்டிக்கொண்டு அழ செய்தாள் .
எதுக்குடா இப்ப நீ அவ கிட்ட இவ்ளோ சத்தம் போட்டுடு இருக்க என்றாள்.
உதயா தியாவை கட்டிக்கொண்டு அழுதான் .
என்ன அண்ணா என்று கேட்க .
அவ தான் தியா ஒன் இயர் போகட்டும்னு சொன்னா.
இப்போ என்று விட்டு அமைதியாகி விட ..
ஒரு சில நொடிக்கு பிறகு அப்போ என்கிட்ட மறைச்சி இருக்கா இல்ல என்று அவன் அடுத்த வார்த்தை வாய் திறப்பதற்குள் அவனை ஓங்கி அறிந்திருந்தாள் தியா.
“குழந்தை வேணாம்னு சொல்லி இருக்கலாம், ஆனா வர குழந்தையை அழிக்கிற அளவுக்கு போக மாட்டா “இதை நான் உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை .சரியா ? என்று தனாவை பார்க்க .
“அவள் உதயாவை முறைத்துக் கொண்டு நிற்க. நீயே போயி அடிவாங்கி சாவு எனக்கு என்ன வந்தது “என்று விட்டு தனாவை கட்டிக்கொண்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் .
“உதயாவை வேகமாக கட்டி அணைத்த நந்தா மச்சான் நீ என்ன மாமா ஆகிட்ட டா “என்றான்.
“இல்ல தாத்தா என்றான் சிரித்து கொண்டே…நந்தா உதயாவை முறைக்க. “அனைவரும் சிரித்தார்கள்
கண்ணனுக்கு சந்தோஷம்தான் இருந்தாலும் அமைதியாகிவிட்டார் .
தனா வேகமாக ரூமுக்குள் செல்ல.
தன்னுடைய ரூமுக்கு சென்ற உதயா அவளை பின் பக்கம் இருந்து கட்டிக்கொள்ள .
அவளது கண்ணீர் உதயாவின் கையை நினைத்து இருந்தது .
குழந்தை வேணான்னு தான் சொல்லியிருந்தேன் ,அதுக்கு காரணம் கூட தியாக்கு குழந்தை பிறந்து இப்பதான் ஏழு மாசம் ஆகுது .
அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் சொன்னேன்.
ஆனா நீங்க என்று விட்டு அமைதியாக ப்ளீஸ் சாரி டி தனா என்றான்.
அவனை இழுத்து அணைத்து தாடையில் இதழ் பதித்தவள் .அவனை விட்டு விலகி நின்று எனக்கு இதுல சந்தோஷம் தான் உதயா என்றாள்.
அவளை வேகமாக இருக்கி அணைத்து அவளது நெற்றியில் இதழ் பதித்தான் .
இருவரும் வெளியில் வர தேவி பூஜை அறைக்குச் சென்று சாமியிடம் வணங்கி நின்றார் .
இந்த குடும்பம் இப்பொழுது போல் எப்பொழுதும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் .
அதற்கு நீங்கள் தான் இறுதிவரை துணை நின்று எங்களை காத்து நிற்க வேண்டும் என்று தேவி வணங்கி நின்றார் .
அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள் .
அன்றே மருத்துவமனைக்குச் சென்று டாக்டரையும் பார்த்துவிட்டு வந்தார்கள்.
தனா மாசமாக இருப்பது உறுதி ஆகி விட வீட்டிற்கு வந்தவுடன் அனைவருக்கும் சந்தோஷம்.
தியா தன் கையாலே அனைவருக்கும் சாப்பாடு செய்து போட்டாள் .
சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவர்களுடைய ரூமுக்கு சென்று விட்டார்கள் .
கண்ணன் மலர் இருவரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.
தியா அவளுடைய அறையில் இருக்க நந்தா உள்ளே வந்தான்.
சிரித்த முகத்துடன் அவளைப் பார்த்தவன் என்ன டி கேடி இப்போ சந்தோஷமா அத்தை ஆகிட்ட என்று கேட்டான் .
அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவனைப் பார்த்து சிரித்தவள் .
“யோவ் வாத்தி” என்று அவனது சட்டையை பிடித்து இழுத்து தானாகவே அவனது இதழோடு தன் இதழை பொருத்தினாள்.
பிறகு அவனை விட்டு விலகி அவனை பார்த்து சிரித்து விட்டு எனக்காக ஒரு ஒரு பாட்டு பாடேன் என்று கேட்டாள்.
இந்த நேரத்தில டி என்றான் .
எந்த நேரமா இருந்த என்ன பசங்க ரெண்டு பேருமே பெரியம்மா கிட்ட இருக்காங்க பாடு மாமா ப்ளீஸ் .
எனக்காக பாட உன்கிட்ட ஒரு பாட்டுமே இல்லையா ?என்று சிணுங்கினாள்.
கேடி என்று அவளைப் பார்த்து சிரித்து விட்டு தியாவையே ஒரு சில நொடி உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான் .
மாமா என்று திரும்ப சிணுங்க செய்தாள். அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவளை பார்க்க கண்களில் மூடி நின்றாள்.
அடுத்த நொடி அவளது கண்களில் இதழ் பதித்து விட்டு அவள் கண் மூடிக்கொண்டு இருக்கும் வேலையில் தன் மெல்லிசை குரலால் மெதுவாக பட ஆரம்பித்தான்.
முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
எங்கே எந்தன் இதயம் அன்பே…
வந்து சேர்ந்ததா…
முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
நந்தவனம் இதோ இங்கேதான்…
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்…
நல்லவளே அன்பே உன்னால்தான்…
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்…
நொடிக்கொரு தரம் உன்னை…
நினைக்க வைத்தாய்…
அடிக்கடி என்னுடல்…
சிலிர்க்க வைத்தாய்…
நொடிக்கொரு தரம் உன்னை…
நினைக்க வைத்தாய்…
அடிக்கடி என்னுடல்…
சிலிர்க்க வைத்தாய்…
முதல் பார்வை நெஞ்சில் என்றும்…
உயிர் வாழுமே…
உயிர் வாழுமே…
முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
உத்தரவே இன்றி உள்ளே வா…
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்…
அந்த நொடி அன்பே என் ஜீவன்…
வேறெங்கு போனது பாரடி உன்னில்…
உன்னைக் கண்ட நிமிசத்தில்…
உறைந்து நின்றேன்…
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்…
உன்னைக் கண்ட நிமிசத்தில்…
உறைந்து நின்றேன்…
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்…
என் சுவாசக் காற்றில் எல்லாம்…
உன் ஞாபகம்…
உன் ஞாபகம்…
முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
எங்கே எந்தன் இதயம் அன்பே…
வந்து சேர்ந்ததா…
முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…
என்று நந்தா பாடி முடிக்க தியா அப்பொழுதும் கண்ணை முடி கொண்டு அவனது பாட்டில் லயித்து இருந்தாள்.
நந்தா அவளைப் பார்த்து சிரித்தவன் .அவளது மூக்கில் லேசாக கடித்துவிட்டு அவளது உதட்டில் பட்டும் படாமல் முத்தமிட்டு அவளை விட்டு விலக .
கண்ணைத் திறந்து அவனது சட்டையின் இரண்டு பட்டன்களை அவிழ்த்துவள் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு தன் பெயரில் முத்தமிட்டு சிரித்தாள்.
“நந்தாவும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு கேடி என்றான். தியாவும் சிரித்துக் கொண்டே யோவ் வாத்தி என்று அவனது நெஞ்சில் ஒரு கடி கடித்தாள்”
இப்பொழுது போல இவர்களின் சந்தோஷம் இப்பொழுது இருக்க வேண்டும் என்று வாழ்த்தி இவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.
மிக்க நன்றி .
இதுவரை கதைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் மிக்க நன்றி
இங்கு கண்ணன் செய்தது குற்றம் தான் .குற்றம் மட்டுமல்ல நம்பிக்கை துரோகம்.
சந்தேகத்தால் விளைந்த விளைவு .ஆனால் அவரது சந்தேகம் அவருக்கு ஒரு வாழ்க்கையை இழக்க செய்து இருந்தாலும் ,இன்னொரு வாழ்க்கையை நல்ல வாழ்க்கையை கொடுக்க செய்திருந்தது.
அந்த வாழ்க்கையின் மூலம் அவர் செய்த துரோகத்திற்கு பிரயிசித்தமும் தண்டனையும் கிடைக்கப்பெற்றது .
கண்ணனை போன்றோர் இவ்வுலகில் இப்பொழுது வரை வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் ,மலரை போன்ற மனைவி அமைந்தார்களா ?என்பது இறைவனுக்கே வெளிச்சம் .
நந்தாவை போன்று உதயாவை போன்று அவர்களும் இவ்வுலகில் இருப்பது சாத்தியமா என்பது தெரியவில்லை.
இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையே ஆகும் .
தன்னை பெற்று வளர்த்த தன்னுடைய தந்தையாகவே இருந்தாலும், அதுவும் தன் மேல் உயிராகவே இருப்பவராக இருந்தாலும் ,அவர் செய்த துரோகத்திற்கான தண்டனையை அவர் வாழ்நாள் முழுக்க அனுபவித்து ஆக வேண்டும் அவருக்காக தன் வாழ்க்கையை இழக்க விரும்பாத தியா அவருக்கு தண்டனையாகவும் தன் காதல் இந்த ஒரு காரணத்திற்காக அதுவும் அவருடைய துரோகத்திற்காக கைகூடாமல் செல்லக்கூடாது என்பதற்காகவும் தனக்கு கிடைத்த உதயாவின் உதவியுடன் நந்தாவின் கைப்பிடித்து இருந்தாள்.
உதயா தன் விருப்பத்தை சொல்லியிருந்த போதும் தன்னுடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக தனக்கு விருப்பம் இருந்தும் உதயாவை விட்டு விலகி இருந்த தனா.
சித்தியால் வருத்தம் ஏற்பட்டு இருந்தாலும் ,தன் தந்தை சொன்ன காரணத்திற்காகவும் தன் காதலுக்காகவும் நந்தாவுடன் பேசி இருக்க .
அதன் மூலம் உதயாவை கைப்பிடித்து இருந்தாள் தனா .
இந்த கதை முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையே என்னை சுற்றியுள்ள நான் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கக் கூடியதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை.
தேவி அவரை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை..அவரை போன்றோரை பார்ப்பது அரிது.
தன்னையும், தன் வாழ்க்கையையும் அழித்தவர்களை ஒதுங்கி கூட சென்று இருப்பார்கள் .ஆனால்,தன் தம்பி வாழ்க்கை ,அதுவும் அவர்களுக்கு பிறந்த மகள் என்ன செய்வாள் என்று எண்ணி தியாவை தன் மகளா பார்ப்பது பெரிய விசியம் .
சுபம் 🙏
கதை முடிந்து விட்டது.கதையின் நகர்வு எப்படி உள்ளது என்பதை சொல்லுங்க நண்பர்களே.மறக்காம கமெண்ட் மற்றும் ரேட்டிங் கொடுங்க.