ஆலி-29
சைதன்யன் ருத்ரேஷ் வீட்டிற்குச் செல்வதைச் சாடுகின்றானா? அங்க தருணேஷ் இருப்பது இவனுக்குள் என்ன எண்ணத்தைத் தோற்றுவித்ததோ.
கடவுளே இது போன்ற இக்கட்டு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. இனி அங்குப் போவதை தவிர்க்க வேண்டும்.
அகமேந்தி முடிவெடுத்தவளாகக் காரில் சோகமாக மாறி இருந்தாள்.
சைதன்யன் இருமுறை காரில் அவளைப் பார்த்தான் வாடியமுகம் கண்டு தனக்குள் சிரித்தவன் அவளைத் தன் தோளாடு அணைத்து, “ஸ்வீட்ஹார்ட் தருணேஷ் பற்றி நான் எதுவும் சொல்லலை. அவன் நான் வந்தாளே சைலண்ட் ஆகிடறான். நீ ருத்ரேஷ் கூட பழகறது தான் ஜிலஸா இருக்கு. அவன் என்னிடம் பழகறதை குறைச்சிட்டான் டி. அதான் வலிக்குது.
உன்னை அண்ணினு அக்சப்ட் பண்ணி உரிமையா பேசறான். என் மேல கோபத்தில இருக்கான். எப்படிப் புரியவைக்கனு தெரியலை.”
“நீ அட்லிஸ்ட் அம்மானு….. இல்லை… சித்தினாவது கூப்பிடலாமே.” என்றதும்
“ஏன் பெயர் கூப்பிட்டா என்ன. நான் என் அம்மாவை பெயரிட்டு தான் கூப்பிடுவேன். இவங்களையு…” என்றவன் உலறிய தன் கூற்றில் அகமேந்தி அவனை மொத்தியெடுத்தாள்.
“அடேய் நான் கூட நீ கோபத்தில் திமிரில் கூப்பிடறேனு நினைத்து பீல் பண்ணினேன் டா.” என்று அடிக்கச் சிரித்தபடி தன் வீட்டில் காரை நிறுத்தினான்.
“நீங்களா நினைச்சிக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்ண.” என்று சிரித்தவன் அவள் கைபிணைத்து இழுத்து தூக்கவும் அகமேந்தி மொத்தமும் மறந்தாள்.
முத்ததில் ஆரம்பித்துக் கவிதை இயற்றினான்.
நள்ளிரவில் சைதன்யன் “ஹாப்பிப் பெர்த் டே லிட்டில்” என்று அனுப்பினான். அகமேந்தி அவன் தோளில் சாய்ந்து அவளின் போனில் ஹாப்பிப் பெர்த் டே என்று ஜிப் மெஸேஜ் அனுப்பினாள்.
அதற்கு மட்டும் “தேங்க்யூ அண்ணி லவ் யூ” என்று அனுப்பவும், அவளின் போனை பிடுங்கி “யூ லிட்டில் இடியட் எனக்கு ரிப்ளை பண்ணு” என்று அனுப்பவும் “குட்நைட் அண்ணி பை” என்றதும் சைதன்யன் போனை கொடுத்துவிட்டு குப்புறப்படுத்து உறங்கினான்.
அடுத்த நாள் காலை அகமேந்தி கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“எதுக்கு டி சேலை?” என்றான்.
“உனக்குத் தெரியாது கல்பனா பாட்டி என்னைத் தனியா கூப்பிட்டு திட்டும். எதுக்கு….” என்று தன் காலில் நெயில் பாலிஷ் அணிந்தபடி பேசவும் அவளிடமிருந்து அதனை வாங்கி நெய்ல்பாலிஷ் போட்டுவிட்டான்.
“அவனுக்குக் கிப்ட் கொடுத்துட்டுப் போகலாம்” என்று அகமேந்தி கூறவும்,
“வேறவழி… பட் நான் காரிலே இருப்பேன்.” என்று உறுதியாகக் கூறிவிட்டான்.
சொல்லியது போலவே காரில் அமர்ந்துக் கொண்டு கண்ணாடியில் தலைவாரிக் கொண்டிருந்தான்.
“தன்யன் அவன் கோபமாக இருந்தாலும் உன் வருகையை எதிர்பார்ப்பான் டா.” என்று அகமேந்தி கூறவும், “இங்க பாரு வீட்டிலே சொல்லிட்டேன். அவனுக்குப் பார்க்கணும்னா. அவனே வரட்டும். என்னோட விஷ்ஷஸ் கூட ரிப்ளை பண்ணலை பொடிப்பையன்.” என்று முறுக்கி கொண்டான்.
“அப்போ தருணேஷ் கூட மோதின. இப்ப இவனோடவா…?” என்று முறுவலித்து வீட்டுக்குள் சென்றாள்.
ருத்ரேஷ் அண்ணியைப் பார்த்தும் அண்ணாவை எதிர்பார்க்க, அண்ணா வரலை என்றதும் முகம் வாடினான்.
“ஹாப்பிப் பெர்த் டே ” என்று பரிசை தரவும் வாங்கியவன், “அண்ணி… அ..” என்று கூப்பிடவும் தருணேஷும் வாசலில் பார்த்து “அவன் வரலையா?” என்றான்.
“என்னது?” என்றதும் “ஒன்றுமில்லை…” என்றவன் கேட்கவும் தயங்கினான்.
வெளியே ஹாரன் அடிக்கவும், “ஓகே ருத்ரேஷ் நான் கிளம்பறேன்.” என்றதும் ருத்ரேஷ் “என்னயிது வந்ததும் போறிங்க. பழிவாங்கறாரா?” என்று கேட்டான்.
இம்முறை அகமேந்திக்குக் கோபம் வந்திடவும், “அறைஞ்சேனா… என்ன வார்த்தை பழிவாங்கறாரா… நீ பெரிய ஆளு உன்னைப் பழிவாங்க.
இன்னிக்கு தாலி பிரிச்சி கோர்க்கணுமாம். அப்பா இந்த டேட் பிக்ஸ் பண்ணியிருந்தார். நான் தான் மறந்துட்டேன். நேற்று தான் தன்யன் நினைவுப்படுத்தினார். நாங்க ஊருக்கு கிளம்பிட்டோம். உன் பெர்த் டே என்றதால இங்க இருக்க முடியுமா. அவர் வெளிய வச்சிட்டு நான்…”
“உங்களோட வெகஷன் பிளான் பண்ணினேன். எல்லாரிடமும் இருக்க விரும்பினேன். வருணிகா அண்ணியிடமும்கேட்டு வரச்சொல்லிட்டேன். நீங்க இப்படிச் சொல்லறிங்க.” என்று வருந்தினான் ருத்ரேஷ்.
“என்னோட என் ஹஸ்பெண்ட் லைப்க்கு முக்கியம் கொடுக்கணுமே. அதுவுமில்லாம நேரம் பார்த்து நாள் பார்த்து வைச்சது. அங்க இருக்கற கிளவி நான் போகலை என்னைக் கொன்றிடும். வேண்டுமென்றால் நீங்களும் வாங்க” என்றதும் ருத்ரேஷ் அவன் பாட்டிற்கு வெளியே சென்று காரில் அமர்ந்தான். சைதன்யன் எதையும் பார்க்காதது போலக் கவனிக்க ஆரம்பித்தான்.
தருணேஷ் ப்ரியங்காவை பார்க்கவும், “நீங்களும் வாங்கத்தை. நான் மறந்துட்டேன். அவர் நினைவுப்படுத்தினார். என்னால முன்னாடியே சொல்ல முடியலை.” என்று அழைக்கவும் வருணிகா வந்து, “வாவ் சேரி சூப்பரா இருக்கு.” என்றாள்.
“ஊருக்கு போறோம் வருணி… தாலிப் பிரித்துக் கோர்க்கணும்.”
“ஊருக்கா…. வசந்த் அண்ணா சொல்லும் உங்க ஊர் அருமையா இருக்கும்னு. நான் ஒர் நாள் வருவேன்.” என்று வருணிகா கூறி முடித்தாள்.
“அம்மா அந்த ஒர் நாள் இன்னிக்கா எடுத்துப்போம். அவனும் கார்ல உட்கார்நதுட்டான். போலாமா டிரஸ் பேக் பண்ணுங்க.” என்று வருணி பார்த்து பேசவும், அகமேந்தி சூப்பர் பிளான்.” என்று ஆமோதித்தாள்.
“என்ன விளையாடறிங்களா அண்ணாவிடம் பர்மிஷன் கேட்கணும். பாருங்கம்மா இவரை… சைதன்யன் சார் அமைதியா விட்டுட்டார் அண்ணாவும் என்னைத் தடை செய்யலை என்று ஊருக்கு வா ஆர்டரா போடறார்.” என்று ப்ரியங்காவிடம் மாட்டி விட்டாள்.
“அம்மா ருத்ரேஷ் கார்ல உட்கார்ந்துட்டான். சாத்தான் வேதம் ஓதலை.” என்று கூறியும் அகமேந்தி தருணேஷிடம் எதுவும் வாதிடவில்லை.
பின் கிளம்பி வரவும் முன்பக்கம் சைதன்யன் ருத்ரேஷ் அமர்ந்திருந்தனர்.
ப்ரியங்கா பார்த்துவிட்டு “ருத்ரேஷ் நீ பின்னாடி வா. அண்ணி உட்காரட்டும்” என்று சொன்ன அடுத்த நொடி கீழே இறங்க முயன்றவனின் காலரை இழுத்துப் பிடித்திருந்தான் சைதன்யன்.
“பரவாயில்லை. அவ பின்னாடி உட்காரட்டும். அகமேந்தி…நீ” என்றதும் அவள் விளையாட்டுக்கு முறைத்தாள்.
“அதற்கு இல்லை பா. வருணியும் வர்றா. ருத்ரேஷ்னா தருணேஷ் மடியில் உட்கார்ந்துப்பான்.”
சைதன்யன் தற்போது காலரை விடுவிக்க, ருத்ரேஷ் கீழே இறங்கினான்.
”அய்யோ நான் அண்ணாவிடம் கேட்கலை. நீங்களா…” என்று பதறினாள்.
“வசந்திடம் நான் பேசறேன் மா. உட்காரு.” என்று சைதன்யன் ஆணையிடவும் சரியென்று காரில் அமர்ந்தாள்.
உடனே தருணேஷ் அமரப் போகவும், ப்ரியங்கா அவனைப் பிடித்துத் தள்ளி நிறுத்தி நான் போகணும் என்றாள்.
தருணேஷ் அமர்ந்திடவும் ருத்ரேஷ் ஜம்பமாக அமர்ந்தான்.
சைதன்யன் கண்ணாடி அணிய அதே போல ருத்ரேஷும் கண்ணாடி அணிய சைதன்யன் திரும்பி பார்த்துச் சிரித்துக் கொண்டான்.
கார் சீறிப் பாய்ந்து பறந்தது. இளையாராஜாவின் பாடலை இசைக்கவிட்டு வண்டியை சுமூகமாகச் செலுத்தினான்.
ருத்ரேஷ் பின்னிருக்கையில் இருந்து அகமேந்தியின் காதில் என்னவோ கிசுகிசுத்தான்.
உடனே அகமேந்தி சிரித்துவிட்டு, பாடலை மாற்றி ஏ.ஆர் ரஹ்மானின் பாடலை இசைக்க விடவும், சைதன்யன் உடனே ருத்ரேஷை பார்த்து மீண்டும் இளையராஜாவின் பாடலை போட்டு விட்டான்.
“தன்யன் என்ன பண்ணற.”
“இங்க பாரு எனக்குச் செல்ப் டிரைவிங் இப்படிப் போனா தான் பிடிக்கும்.”
“அவனுக்குத் தூக்கம் வருதாம்”
“ரொம்பப் பேசனிங்க இரண்டு பேரையும் ஜன்னலில் தள்ளி விட்டுடுவேன். கீப் கொயிட்” என்றவன் பாட்டை மாற்றவில்லை. சற்று நேரத்தில் ருத்ரேஷ் உறங்கிவிட்டான்.
“பாருங்க அவன் தூங்கிட்டான்.” என்று அகமேந்தி கவலைக் கொள்ள, “அவன் ரெஸ்ட் எடுக்கறது ரொம்ப முக்கியம் ஆனா அங்க போனா ரெஸ்ட் எடுக்க மாட்டான். இங்க தூங்கட்டும்” என்றதும் வசந்த் போன் அடித்தது.
“சொல்லு வசந்த். இமயன் சாரை காண்டக் பண்ண முடிந்ததா?” என்று கேட்டான்.
“சார் எத்தனையோ முறை கால் பண்ணிட்டேன். வீட்டுக்கு கூட வந்துட்டேன் சாரு. அவரோட பிரெண்ட் தான் இருக்காங்க. அவரைப் பார்க்க முடியாது. யாரிடமும் சொல்லாம எங்கயோ போயிட்டாராம். நான் நம்ம ருத்ரேஷ் பற்றிச் சொன்னேன். அதுக்கு அவரோட பிரெண்ட் நல்லப்படியா பார்த்துக்கோங்க என்று மட்டும் சொன்னார். என்ன சார் பண்ண?” என்றான்.
“ஓகே… தேங்க் பண்ணி அவர்களைத் தெரிஞ்சுக்க எண்ணினேன். ம்ம்ம்… சரி அவர் வந்தா நம்ம அவரைத் தேடியதா ஹாஸ்பிடலில் வீட்ல கொடுக்கச் சொல்லி நான் அனுப்பியதை கொடுத்திடு.” என்றான்.
“சூர் சார். சார்… வருணிகா.” என்றான் வசந்த்.
“எங்களோட தான் அழைத்துப் போறேன் வசந்த்.” என்றதும் “ஓகே சார் ஓகே சார்.” என்று முடித்துக் கொண்டான்.
“என்னாச்சு தன்யன்? இமயன் சார்?” என்று கேட்க, “தெரியலை மா. அவர் இன்னமும் எங்க இருக்காருனு தெரியலை. சரியான நேரத்துக்கு வந்து நமக்கு உதவி செய்துட்டு உடனே காணமல் போயிட்டார். இனி மருத்துவத்திற்கு வரமாட்டாருனு அவர் பிரெண்ட் செய்தியில் சொல்லறார்.” என்றான் சைதன்யன்.
நடுவில் இளைப்பாறவும், ப்ரியங்கா கால்களுக்குச் சற்று ஒய்வுக்காவும் தர நிறுத்தினான்.
சைதன்யன் ஹோட்டல் ஒன்றில் நடக்க அகமேந்தி வராததைக் கண்டு, “சாப்பிட யாரும் வரலையா?” என்று அதட்டினான்.
அகமேந்தியோடு வருணி வர கூடவே தருணேஷ் வர, ப்ரியங்காவும் ருத்ரேஷை அழைத்து வந்திருந்தாள்.
உணவுகளை அவரவர் ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருக்க, ருத்ரேஷ் மட்டும் உம்மென்று வந்தான். அடிக்கடி சைதன்யனிடம் பார்வை கலந்தவன் திரும்பி கொண்டான். அகமேந்தி ப்ரியங்கா கைகளில் சாப்பிட மற்றவர்கள் ஸ்பூனில் சாப்பிட்டனர்.
பில் வரவும், தருணேஷ் பர்ஸ் எடுத்து வராததை உணர்ந்தான். வருணிகா அருகே இருக்க, “வருணி… நான் பர்ஸ் எடுத்துட்டு வரலை நீ பே பண்ணு.” என்றான்.
“தருண் பத்தாயிரம்கிட்ட பில் என்னிடம் இருக்குமா சொல்லு.” என்று பாவமாய்க் கேட்டாள்.
“அதானே உங்க அண்ணன் வசந்த் கொடுக்க மாட்டான்.” என்றதும் வருணி முறைக்க, அகமேந்தியும் ப்ரியாங்காவும் கை அலம்பச் சென்றதால் திருதிருவென விழித்தனர்.
பேரர் வரவும் “இன்னிக்கு உன் பெர்த் டே தானே நீயே பே பண்ணு” என்று சைதன்யன் சட்டமாய்ச் சீரக மிட்டாயை வாயில் போட்டான். மெல்ல ருத்ரேஷோ அழுவும் நிலைக்குத் தயாரானான்.
இப்படி ஒர் லஞ்ச். பேமிலியா சாப்பிட்ட நிம்மதி சந்தோஷம் அவனுள் ஆக்கிரமித்து இருக்க, சட்டெனப் பே பண்ணு என்றதும் தனது அம்மாவை தேடினான்.
ப்ரியங்காவோ ரெஸ்ட்ரூம் சென்றிருக்க, தருணேஷ் பேசியதை வேறு கேட்டிருந்தவன், “அண்ணி பே பண்ணுங்க” என்றான் அகமேந்தியிடம்.
அகமேந்தி பர்ஸை திறக்க, “ஏய்… இன்னிக்கு உன் பெர்த் டே வா. அவன் தருவான் அவன் பேக்கெட்டில் இருக்கு.” என்றதும் ருத்ரேஷ் தன் பேண்டை ஷர்ட் பாக்கெட்டை பார்க்க, அதில் ஒர் கார்டு பளிச்சிட்டது.
“இது…?” என்று எடுத்து வைக்க, கார்டு எடுத்துச் சென்றான் பேரர்.
என்னோடது இல்லை.” என்று ருத்ரேஷ் சொல்ல “உங்கண்ணா யாராவது கிப்ட் பண்ணியிருக்கலாம்”என்றார் சைதன்யன்.
ருத்ரேஷிற்குக் கோபம் விட்டு விட்டு வந்தது. பணம் செலுத்தியப்பின் கார்டு வரவும் அதனைத் தான் எடுக்கலாமா வேணடாமா என்று யோசிக்க அகமேந்தி அதனை எடுத்து ருத்ரேஷ் சட்டையில் வைத்தாள்.
“இங்க பாரு டா. ஊருக்குப் போய்க் கொஞ்சம் எங்க அப்பா அப்பத்தா முன்னாடி நடிக்கணும். அதுக்கு இப்பவே தயாராகு. இல்லை… உன்னையும் உங்க அண்ணனையும் அங்க இருக்கற கிணற்றுல தள்ளிவிட்டுடுவேன்.” என்று மிரட்டவும் பயந்தான்.
“அண்ணி சும்மா தானே மிரட்டின. தள்ளி விட மாட்டாய் தானே?” என்று கேட்கவும் “உங்கண்ணாவை தள்ளி கொலை செய்யப் பார்த்தேன். கண்டிப்பா செய்வேன்.” என்று சிரித்தாள்.
மீண்டும் பயணம் ஆரம்பித்தது. இம்முறை ஏ.ஆர் ராஹ்மான் பாடல் இசைக்கத் தூங்காமல் வழிநெடுகிலும் மரத்தை பார்த்து ஜன்னலில் வேடிக்கை கண்டான்.
அகமேந்தியின் வீட்டுக்கு வந்து கார் நிற்கவும் கல்பனா பாட்டி, “ஏய் செல்வராசு… மாப்பிள்ளை வீட்டார் வந்துட்டாங்க.” என்று கூச்சலிடவும் ஒர் ஊரே திரண்டனர்.
வீட்டுக்கு அழைத்து அவர்களுக்குப் பருக பானம் தரவும் ருத்ரேஷ் வேடிக்கையாகப் பார்த்தான் .
சற்று நேரத்திற்கெல்லாம் தாலிப்பிரித்துக் கோர்க்கும் சடங்கில் மும்முரமானார்கள்.
ருத்ரேஷ் தருணேஷ் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து இருவரும் வேடிக்கை பார்த்தனர். வருணிகா ப்ரியங்கா இருவரும் அகமேந்திக்கு தேவையை எடுத்துக் கொடுக்கச் செய்தனர்.
ப்ரியங்கா செய்யவும் கூட்டத்தில் ஒர் குரல் சுமங்கலி தான் செய்யணும் அவங்க எட்டி நிற்க வேண்டாமா என்றதும் ப்ரியங்கா எழுந்து கொள்ள, சைதன்யனோ “செய்யலாம் தப்பில்லை. நீங்க செய்யுங்க” என்று ஆணையிட்டான். ப்ரியங்கா கிறிஷ்டியன் அதனால் இதுபோன்றதில் பழக்கமும் இல்லாமல் போகத் தவிக்க, கல்பனா ஆச்சியே வந்து இதெல்லாம் அதுல கோர்க்கணும் அம்புட்டு தான் மா. இதுல மனசு தான் வேண்டும்.” என்று கொடுக்க, “எதுக்குப் பிறகு எதைக் கோர்க்க தெரியலை. வருணி செய்வா. இல்லை திருமணமானவங்க செய்யணும்னா வேறயாராவது செய்யச் சொல்லுங்க” என்று கொடுக்கவும் செல்வராசு மனைவி கோதை ஆர்வமாகக் கோர்த்தாள்.
பின்னர் மஞ்சள் கிழங்கு கட்டி இதைப் போட்டு முடித்து, மதியம் உணவு தயாராகி இருந்தது.
தருணேஷ் வருணேஷ் இருவரும் சேரந்து சாப்பிட, ப்ரியங்கா வருணிகா இருவரும் ஓட்டுதலோடு பழக ஆரம்பித்தனர்.
அகமேந்தி சைதன்யன் இருவரும் அருகே அருகே உண்ணவும், திருமணத்துக்குப் போட்டோ எடுக்கும் அண்ணா இதற்கும் போட்டோ பிடிக்க வந்திருக்க, “அண்ணா இந்தப் போட்டோ எப்பவும் வேண்டும் அடம்பிடிப்பிங்களே எடுத்துக்கோங்க” என்று சைதன்யனுக்கு ஊட்டி விட்டாள்.
புகைப்படக்காரனோ, கல்யாணத்துக்குச் சேர்ந்து நில்லு மானு சொன்னா அப்படித் திட்டுச்சு. மாப்பிள்ளை தான் தானா எடுங்க சொல்லி அவரா போட்டோ எடுக்க வைச்சார். இப்ப பார்த்தியா…” என்றவாறு போட்டோ எடுத்தான்.
தருணேஷுக்கு அன்று அகமேந்தி நிலைமை என்ன என்று புரிந்தது. என்ன அகமேந்தி புரிய வைக்க வேண்டியதில்லை. அவளாகவே தன்னால் குழப்பம் வராது என்று புரிந்து கொண்டாள். ஆனால் ருத்ரேஷு பொருத்தவரை தான் பேசி புரிய வைக்க வேண்டும். இன்னிக்கு இரவுக்குள் சொல்லணும்.
மாலை கேக் வரவும் ருத்ரேஷ் கட் செய்து ப்ரியங்காவுக்கு முதலில் ஊட்டினான். பின்னர் தருணேஷுக்கு ஊட்டி முடித்தான். சைதன்யன் எப்படியும் தனக்கு ஊட்ட மாட்டான் என நகரவும் அகமேந்திக்கு ஊட்ட வந்த ருத்ரேஷ் சைதன்யனுக்கு ஊட்டி விட, தன்னால் வாயை திறந்து பெற்றுக் கொண்டான். அடுத்து அகமேந்தி வருணிகாவுக்குக் கொடுத்தான்.
வித்யாதரன் கல்பனா ஆச்சிக்குக் கையில் கொடுத்தான். வித்யாதரனோ ஊர் வழக்கம் போலக் காசை எடுத்து கொடுத்து ஆசிர்வதிக்க, ருத்ரேஷ் வாய் தன்னால் “மணி வேண்டாம். சைதன்யன் அண்ணா கார்டு தந்துயிருக்கார். சோ மணி வேண்டாமெனத் தயங்கினான்.
“அகமேந்தியோ அடேய் இது ஒரு வகைப் பிளசிங்கு வாங்கு. என்று தந்தை தோள் மேல் கைப்போட்டு கண்ணடிக்க, வாங்கினான்.
ஒர் கேக்கை எடுத்து வருணியும், அகமேந்தியும் எடுத்து ஊட்ட வந்தவர்கள் அவன் முகத்தில் பூசி விடவும் அம்மா… பாருங்க… இந்த அண்ணியை” என்று பிசுபிசுவென முகம் கழுவ தருணேஷ் அழைத்துச் சென்று தோட்டத்தில் சைதன்யன் கூறியதை கூறி முடித்தான். சைதன்யன் மேல் தவறில்லையென அறிந்ததும் ருத்ரேஷ் கண்கள் கலங்கியுது. தருணேஷும் சொல்லிவிட்ட கலக்கத்தில் கலங்கி நின்றான்.
-சுவடு பதியும்.
-பிரவீணா தங்கராஜ்.
ஒன் மோர் எபிக் இருக்கு. இன்றோடு நிறைவு கொடுக்கறேன்.

Super sis. How tharunesh come back. What happened to ruthresh? Intresting sis.
Ellarum onna swrnthutanga happy