Skip to content
Home » மௌனமே வேதமா-3

மௌனமே வேதமா-3

அத்தியாயம்-3

   பிரணவி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் போது, வீடே அலங்கோலமாக காட்சியளித்தது.  ஆத்ரேயன் பரிசு பொருட்களை பிரித்து வண்ணப் பேப்பரை கத்தரித்தான்.

   வீட்டுக்கு தேவையானதை அவனும் அவன் அக்கா, மற்றும் மாமாவும் தான் சென்று வாங்கியது. ஆனாலும் புதுமண தம்பதியினருக்கு, புதுமனை புகுவிழா வீட்டிற்கு வருவதால் ஒவ்வொரு அட்டைப் பெட்டியிலும் புதிதாக கலர் பேப்பரும், சுற்றப்பட்டிருந்தது.

  கத்திரிக்கோல் கொண்டு கத்தரித்து பேப்பரை கிழித்து பொருட்களை அதனதன் இடத்தில் வைத்திடும் வேலையில் முனைப்பாய் இருந்தான்.

   தாலி கட்டிய மனைவி, கல்லூரி முடித்து களைப்பான மாணவியாக வீட்டிற்கு வந்து நிற்பதை அவன் ஏன் கவனிக்க போகின்றான்.‌ பிரணவிக்கு தான் நேர்த்தியான உடையணிந்த தன் பேராசிரியர், டிராக்பேண்ட், யூ வடிவம் கொண்ட காலர் இல்லாத டீஷர்ட் என்று மாறியிருக்க வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

   ஆத்ரேயன் நிமிர்ந்து பார்க்கவும், பிரணவி நேராக தனக்கான அறையாக எடுத்து கொண்டயிடத்தில் ஓடியொளிந்தாள்.

  சிறு குளியல் முடித்து உடைகளை தன் பீரோவில் அடுக்கினாள். காலையில் நகைகளை எல்லாம் பீரோவில் வைத்துவிட்டு பூட்டிவிட்டு சென்றிருந்தாள்.

   இரவு ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டுவிட்டு கிச்சனை உருட்ட நினைத்தாள். அவள் கேட்கும் முன்னரே “எனக்கு எதுவும் வேண்டாம். பக்கத்துல இருந்த ஹோட்டல்ல புலாவ் ரைஸ் வாங்கியிருக்கேன்” என்றான்.‌ அவன் வாங்கி வந்தது இரண்டு இருந்தது.

   எப்படியும் சமைக்க வேண்டுமே என்று விழிப்பிதுங்கியவளுக்கு அப்பாடி சமையல் வேலை இல்லை என்று தான் நிம்மதியடைந்தாள்.

    கிச்சனிலும் மளிகை பொருட்களை சங்கவி வாங்கி வைத்திருந்தாள்.

   தனித்தனியாக டப்பர் வேரில் பிரித்து போட்டாள்.
    அன்னையின் அறிவுரைப்படி ஒரளவு கைக்கு தோதாக சிலதை வைத்து விட்டு மற்றவை கப்போர்ட் போட்டிருந்த ஸெல்பில் அடுக்கினாள்‌.

    ஹாலுக்கு வரும் பொழுது அழகழகான பரிசு கவர் கிழித்தெறிந்து கிடக்க, அதனை எல்லாம் ஒன்றாக தொகுத்தாள்.

  வண்ண பரிசு கவர்கள் ஏன் எடுத்து வைக்கின்றாளென்று கேட்கவில்லை.

  எல்லாவற்றையும் எடுத்து வைத்து கைக்கு ஓய்வு தர, அறைக்கு சென்று விட்டான் ஆத்ரேயன்.

   பிரணவி வீட்டை பெருக்கி கூட்டினாள்.

   நேற்று வீட்டையே மிளிர வைத்த வண்ண விளக்குகள் இல்லை. ஆத்ரேயன் வரும் போதே பந்தல் லைட் எல்லாம் அகற்றிட கூறினான்.    அதனால் அவர்கள் வந்து வாடகையும் பந்தலையும் விளக்கும் எடுத்துக் கொண்டனர்.‌

  பிரணவி அதை தேடி இல்லையென்றதும் வாடகைக்கு கொடுத்தவர்கள் எடுத்து சென்றுயிருப்பார்கள் என்று யூகித்து கொண்டாள்.

      சாப்பிடும் போது “காலையில எதுல வந்த?” என்றான்.‌

    “ஆ..ஆட்டோல சார்” என்று கூறவும் புருவம் சுருக்கினான்.

   “இஷ்டத்துக்கு காசு இருக்குன்னு ஆடாத” என்றான். ஒரு பேராசிரியராக  கல்லூரி பெண் செலவழிப்பதை தான் உரைத்தான்.

   பிரணவிக்கோ அவன் நேற்று கொடுத்த பணத்தை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்துவதாக தோன்ற மடமடவென சென்றவள் “இது நீங்க நேத்து கொடுத்த பணம் சார். இதுலயிருந்து ஒரு பைசா எடுக்கலை” என்று கொடுத்தாள்.

    “லுக் நான் இந்த பணத்தை கேட்கலை. பொதுவா சொன்னேன்.” என்று எழுந்தவன், “எங்கம்மா எதிர என்னை சார்னு கூப்பிட்டா, அவங்க என்னை உட்கார வச்சி கிளாஸ் எடுப்பாங்க” என்று குறைப்பட்டுவிட்டு சென்றான்.

   பிரணவிக்கும் ‘அத்தைன்னு இல்லை… எங்கம்மா அமலா எதிர்ல சொன்னாலும் எனக்கு மண்டகப்படி போட்டுடுவாங்க.’ என்று கவலையில் ஆழ்ந்தாள்.

   “நான் உங்களை அப்ப எப்படி கூப்பிடறது சார்” என்றாள்.‌

   ஆத்ரேயன் அவளை திரும்பி பார்த்துவிட்டு நிசப்தமாய் அறையில் அடைந்துக் கொண்டான்‌.

   அவனுக்குமே அவள் எப்படி அழைத்தால் சரிவருமென்று தெரியவில்லை. சார் என்று மட்டும் அழைத்தால் கோபம் தான் உருவாகியது.
 
   ஆத்ரேயனை பொறுத்தவரை புரப்பஸர் ஸ்டூடண்ட் உறவுமுறை கண்ணியமானதாகவே இருக்க வேண்டும். இப்படி சிக்கலான உறவுக்குள் சிக்கியிருக்க கூடாது.
 
   சிக்கி விட்டப் பின் எவ்வாறு வாழ்வதென்று மெத்தப் படித்த ஆத்ரேயனால் கூட விவரிக்க முடியவில்லை.

  தன் பெற்றோரும் பிரணவி பெற்றோரும் வெகு இயல்பாய் கூறினார்கள்.

   அதெல்லாம் கல்யாணமான தப்பில்லையென்று.

  புரப்பஸர் ஸ்டூடண்டிடம் காதலிக்கற மாதிரி பழகக் கூடாது. மத்தபடி நீங்க காதலிக்கலையே. சூழ்நிலை சந்தர்ப்பம் இப்படி அமைந்துவிட்டது.

    அப்படியென்றால் கூட பெற்றவர்கள் பார்த்து முடித்த திருமணமாக தானே அமைந்தது‌ என்பார்கள்.

‌‌ தன் அக்கா சங்கவி மட்டுமே போதும். எந்தப் பக்கம் போனாலும் அணைப்போட்டு பதில் தந்து வாயை அடைத்திடும் பதிலை வீசுவாள்‌.

  இதில் மாமா வினய் வேறு. அக்காவிற்கு மேலாக பேசுவார். அவருமே அதெல்லாம் கல்யாணமாகி கை வளைவிற்குள் கொண்டுவந்துட்டா, ஸ்டூடண்டாவது புரப்பஸராவது என்று பேசியவரே.

   அறைக்குள் வந்தவனுக்கு ‘எல்லாம் மாறிவிட்டது. தன் வாழ்வில் தற்போது, தான் பாடம் கற்பித்த கல்லூரியில், தான் பாடம் நடத்திய வகுப்பறை மாணவியையே மணந்திருப்பது.

    எல்லாம் அவள் ஒருத்தியால்… அவள் மட்டும் தன் வாழ்வில் குறுக்கே வராமல் இருந்திருந்தால் இந்நேரம் தனக்கு இத்தனை கடினமான சூழல் இருக்காது. நல்லவேளை அவளை விட்டு இத்தனை தூரம் வந்தும் திட்டாமல் நாட்களை கடத்தமுடியவில்லை.

   ஆத்ரேயன் தன்னை அறியாமல் பல்லை கடித்தான்.

   பாவம் ஒரு பக்கம் பழியொரு பக்கம் என்பார்கள். அப்படி தான் ஆனது.

   அவளால் இங்கே பாதிக்கப்பட்டது பிரணவியும் தானும் மட்டுமே. அவள் நிம்மதியாக இருப்பாள்.

     சென்னையில் பேரும் புகழும் கிட்டி நல்ல வேலையில் உலா வந்திருக்க, இப்படி சம்பந்தமேயில்லாமல் தன் சொந்த ஊரில் தந்தையின் பள்ளி தோழனினிடம் நட்புக்காக சிபாரிசு முறையில் இந்த கல்லூரியில் அடியெடுத்து வைக்க விட்டுவிட்டாள்.

  நல்லவேளை இங்கே ஏற்கனவே வேதியல் ஆசிரியர் தேவைக்குரியவராக அறிவித்து இருக்க, ஓரளவு மனதை சாந்தப்படுத்தி கொண்டான். இல்லையேல் ஆத்ரேயன் மனமெல்லாம் ரணமாக மாறியிருக்கும்.

   கொஞ்ச நேரத்திலேயே தனக்கான இடறுகளை எண்ணி பார்த்தவனின் கதவை தட்டினாள் அவன் மனைவி.

    எரிச்சலாய் கதவை திறந்து “என்ன?” என்றான்.‌

    “யாரோ ஒருத்தர் வந்திருக்காங்க சார். ஏதோ நெட் கனெக்ஷன் கொடுக்கணுமாம். உங்க பெயரை சொன்னாங்க” என்றாள்‌.

    தன் எரிச்சலை ஒதுக்கி வைத்து வாசல் கதவை திறக்க சென்றான்.

   பிரணவி அதன்‌பின் தனக்கான அறைக்குள் சென்றிருந்தாள்.

   வீட்டில் தடையின்றி இணைய வசதி வேண்டி ஓய்ஃபைவ் கேட்டிருந்தான்.

    வீட்டிற்கு அதற்கான வேலைக்கு வந்திருந்தான் ஒருவன்.

   புது வீட்டில் லேசாக ஊசியெற்றும் விதமாக சின்ன சின்ன ஆணியில் ஓயரை மாட்டி ஓரமாய் மாடமை வைத்தான்.

   லேசாக தொண்டையை செருமி “சார் கொஞ்சம் தண்ணீ” என்றதும் டூல்ஸை எடுத்து கொடுத்து ஆத்ரேயன் கைகள் அழுக்காகயிருந்தது. தண்ணீரோடு ப்ரிட்ஜில் குளிர்பானத்தை வைத்திருந்தான்‌. அதனை எடுத்து தர பிரணவியை தேடினான்.‌
 
    கையில் அழுக்கோடு வேறுவழியின்றி வகுப்பறையில் அழைப்பது போல, ”பிரணவி” என்றான்.‌

   நிசப்தமான வீட்டில் ஆத்ரேயனின் கணீர் குரல் பிரணவியை உலுக்கி வேகமாய் கதவை திறந்து வரவைத்தது.

   அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தவள் நிதானமாய் நின்றிருந்தால் கூட பிரச்சனை ஆரம்பித்திருக்காது.

   “சார் கூப்பிட்டிங்களா?” என்றாள். அவளுமே கல்லூரியில் கூப்பிட்ட பழக்கத்தில் ‘சார்’ என்று விளித்தாள்.

  “தண்ணீ கேட்டார் கொண்டு வா. அப்படியே ஃப்ரிட்ஜில் ஜூஸ் இருக்கும்” என்று கூறினான்.‌

    தலையாட்டி “சரிங்க சார்” என்று சென்றாள். அவள் கிச்சனுக்குள் நுழையும் நேரம் சரியாக புதிதான எண்ணிலிருந்து யாரோ அழைத்திருந்தனர்.

     ஹலோ” என்றதும், “பிரணவி நான்‌ தான் மோனிகா” என்று இன்று கல்லூரியில் பார்த்த புது தோழி அழைத்திருந்தாள்.

    “ஹாய் மோனி இதான் உன் நம்பரா. சேவ் பண்ணிக்கறேன்.” என்று பேசினாள்.

    கூடவே கைகள் தானாக, தண்ணீரை கொடுக்க, அந்த நேரம், ஆண்கள் பேச்சு குரல் கேட்டதும், மோனிகா யாரென்று கேட்டாள்.

   மோனிகாவிடம் சார் என்று கூற முடியுமா? இல்லை கணவர் என்று கூறமுடியுமா? பட்டிமன்றமாக இதயத்தில் பதில் கூற தடுமாற, மோனிகாவே, “உன் ஹஸ்பெண்ட் கூடயிருக்காரா?” என்றதும், “ம்ம்… ஆமா ஹஸ்பெண்ட் கூடயிருக்கார்” என்று குளிர்பானத்தை கண்ணாடியில் ஊற்றினாள்.
 
   சற்று முன் ‘சார்’ என்று விளித்தவள், போனில் கணவர் கூட இருப்பதாக பேசவும் நெட்வசதி கொடுக்க வந்தவனோ, புது வீடு தனியாக இங்கே ஒரு ஆணை, சார் என்கின்றாள் போனில் கணவன் என்கின்றாள், என்ற பேச்சால் பிரணவியை தவறாக கருதினான்.

  தவறாக எண்ணியதை கூறாமல் கிளம்பியிருந்தால் இதோடு நின்றியிருக்கும். பிரச்சனையோ ஆத்ரேயன்‌ மனம் எரிமலையை கக்கியிருக்காது.

   ஆனால் வந்தவனோ, “என்ன சார் ஐயிட்டமா? புது பீஸா? உங்களை சார்னு சொல்லுது, அங்க ஹஸ்பெண்ட் கூடயிருக்கார்னு‌ சமாளிக்குது. எவ்ளோ சார் ரேட்டு?” என்று சாக்கடை மனம் கொண்டவனாக கேட்டான்.

   ஆத்ரேயன் கழுத்து நரம்புகள் புடைத்தது.

   ஆவேசமாய் அவன் சட்டையை பிடித்தான். அடுத்த நிமிடமே சட்டையிலிருந்து கையை எடுத்து, மூலையில் ஒரு கவரை ஒன்றும் பாதியுமாக பிரித்ததை எடுத்தான்.  

   மேலிருந்த கவரை கிழித்தெறிந்தான் ஆத்ரேயன். அதில் பிரணவி ஆத்ரேயன் தம்பதிகளாக எடுத்த புகைப்படம் இருந்தது.

    இதை ஹாலில் மாட்டவேண்டுமா என்று சலித்து சங்கவி அக்கா-மாமா வினய் எடுத்து வந்ததை அப்படியே வைத்திருந்தான்.‌ ஆனால் தற்பொழுது வார்த்தையாக அவள் என்‌ மனைவி. அவள் அவன் ஹஸ்பெண்ட் கூட இருப்பதாக போனில் கூறியது சரிதான். அவளொன்றும் தவறான பெண் இல்லை என்று பேச்சில் விவரிக்காமல், கோபமான முகத்தில் பறைச்சாற்றினான்.‌

  அகத்தின் அழகு முகத்தில் தெரிய இணைய வசதி கொடுக்க வந்தவனோ, “சாரி சார்.. ரியலி சாரி” என்றான்.
 
    “நான் புரப்பஸர் அவ என் ஸ்டூடண்ட். எங்க பேரண்ட்ஸ் எங்களுக்குள் திருமணம் செய்துட்டாங்க. இது போதுமா? வேற பதில் வேண்டுமா?” என்று கர்ஜிக்கும் நேரம் குளிர்பானத்தை நீட்டியிருந்தாள் பிரணவி.

  குளிர்பானத்தை மறுக்கும் முடிவோடு “இல்லைங்க மேம் ஜுஸ் வேண்டாம்” என்று பதவிசனமாய் பதில் தந்தான். பொன் தாலி அணிவித்த இல்லாள் என்றதும் வந்த மரியாதை.

   இவளை பற்றி அசிங்கமாய் உரைத்தது அறியாத பிரணவியோ “பரவாயில்லை அண்ணா. வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்கும்.” என்றாள்.

  அவளின் ‘அண்ணா’ என்ற அழைப்பு வந்தவனை வார்த்தையால் கொன்றியிருக்கும்.‌

‌‌   ஆத்ரேயன் முன் தலை கவிழ்ந்து வாங்கிக் கொண்டான். 

     இணைய வசதி கொடுத்து அவன் சென்றதும் ஆத்ரேயன் பிரணவி முன் வந்தான்.

   “உனக்கு அறிவேயில்வையா? மொத்தமா மூட்டை கட்டி வச்சிட்டியா?
    அவன் எதிர்க்க என்னை சார்னு கூப்பிடற, போன்ல ஹஸ்பெண்ட் கூடயிருக்கேன்னு பேசற. அவன் மார்க்கமா பார்த்துட்டு‌அசிங்கமா பேசறான்.‌

   நமக்குள் இருக்கற உறவு புனிதமானது. அதை கேவலமா நினைக்க வச்சிட்ட” என்று கத்தினான்.

பிரணவிக்கு ஆத்ரேயனை விசித்திரமாக பார்வையிட, கண்களின் பார்வையை வேறு திசையில் மாற்றினான். “நான் புரப்பஸர் ஸ்டூடண்ட் ரிலேஷன்ஷிப்பை சொன்னேன்.” என்றான். பிரணவிக்கு சொல்லாமலேயே புரிந்தது. வந்தவன் என்னவிதமாக எண்ணி பேசியிருப்பானென்று கணிக்க முடிந்ததே.

‌ அதே போல ஆத்ரேயன் கூறியதும் உண்மை தான் சொல்லிக்கொடுக்கும் ஆசான், மாணவர் உறவு புனிதமானது.
   இப்படி அந்த உறவே கணவன் மனைவியாக பாவிக்க கலங்கியவனாய் நின்றான்.

    ஆத்ரேயன் அறிந்தும் ஏற்க மறுப்பது, கணவன் மனைவி உறவும் புனிதமானது என்பதை.

    ஒருவேளை பிரணவி உரிமைக் கொண்டவளாக மாறும் தருணத்தில் உணரலாம். இல்லை… தன் எண்ணத்தில் மாற்றமின்றி ஆத்ரேயன் கடக்கலாம். காலம் இவர்களை சுற்றி தானே சுழலப்போகின்றது.
   
-தொடரும்.

 
ஹாய் ரீடர்ஸ் கொஞ்சம் சிரமம் பார்க்காம லாகின் செய்து வாசிங்க‌. சின்ன காரணத்துக்காக தான் சொல்லறேன்.

13 thoughts on “மௌனமே வேதமா-3”

  1. 😂😂😂… Oru kalathula student professor apditha erunthanga… But ippo apdi erukangalanu therila…. But intha story vera level la eruku… Stident professor thaandi mature boy… Childish girl ah thaa kadhai padikkum pothu thonuhtu… Avanga veetla nadathukura paakum pothu… Nice epi sis… Keep rocking

  2. M. Sarathi Rio

    மௌனமே வேதமா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    அடேயப்பா…! எம்புட்டு பிரச்சினைகள்…? முதல்ல ஆத்ரேயனை ஏங்க, ஏனுங்கன்னு கூப்பிடணுமா, இல்ல வாடா, போடான்னு கூப்பிடணுமான்னு முடிவு பண்ணனும். அப்புறம் வீட்ல புரபஸர் ஸ்டூடண்டா நடந்துக்கணுமா இல்லை கணவன் மனவியா நடந்துக்குணுமான்னு டிசைட் பண்ணனும். அப்புறம் அவன் சமைச்சு அவ சாப்பிடணுமா…
    இல்லை இவ சமைச்சு அவன் சாப்பிடணுமான்னு டிசைட் பண்ணனும், அடுத்து வீட்டு வேலை, அவளை(னை) காலேஜ்ல ட்ராப் பண்றது இதெல்லாம் யாரு செய்வான்னு டிசைட் பண்ணனும். எல்லாத்தையும் விட முக்கியமானது, வீட்ல மதுரை ஆட்சியா..? இல்ல சிதம்பரம் ஆட்சியான்னு டிசைட் பண்ணனும். ஆனா, எனக்கென்னவோ இங்க தான் தோன்றி ஆட்சி தான் நடக்குதோன்னு தோணுது.
    இதுக்கு எதுக்கு கல்யாணம் ? கச்சேரி ? தனிக்குடித்தனம் ? தெரியலையே ? புரியலையே?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *