Skip to content
Home » மௌனமே வேதமா-9

மௌனமே வேதமா-9

அத்தியாயம்-9

     சார் நான் உங்களிடம் தனியா பேசணும்” என்று ஆத்ரேயன் கூப்பிட, ஜெகநாதனோ, “இல்லைங்க தம்பி நீங்க எதுக்கு கூப்பிடுவிங்கன்னு எனக்கு தெரியுது. பொண்ணை படிக்க வையுங்க. இப்ப கல்யாணம் பண்ணி வைக்காதிங்க. இதானே…

  மன்னிக்கணும் தம்பி. எப்ப இரண்டு பொறுக்கிங்க வந்து என் கண் எதிர்ல என்‌ மகளை என்னென்னவோ பண்ணறதா பேசினாங்களோ. அப்பவே கல்யாணம் முடிச்சி ஒரு பொறுப்பான ஆண்மகனிடம் ஒப்படைக்கணும்னு முடிவெடுத்துட்டேன் .

   நீங்க பிரணவியை மாணவியா பார்த்து திருமணம் பண்ணிக்காட்டி கூட வேற யாரையாவது கட்டி வைப்பேன்.‌
   இது உறுதி.” என்று ஆணித்தரமாக உரைத்தார்.

   “ஆத்ரேயா அநியாயம் பண்ணாத. நானே கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாக்கு கொடு.

   அந்த மிதுனா பொண்ணு மூஞ்சில கரியை பூசு.

   பிரணவிக்கு என்ன குறைடா. அழகா அறிவான பொண்ணா, உன்னை பெரிய பழிலயிருந்து காப்பாத்தியிருக்கா. சும்மாவா அவ போட்டோ நம்ம வீட்டுக்கு வந்துச்சு. இதெல்லாம் கடவுள் எழுதி வச்சிருக்கான் டா.” என்று சங்கவி கூற, “அய்யோ அக்கா சும்மாயிருக்கியா? அவ என் ஸ்டூடண்ட்” என்று அதட்டினான்.

   “மாப்பிள்ளை பொண்ணு நல்லாயிருக்கு. நீ என்ன உன் ஸ்டூடண்டையா லவ் பண்ணின? இல்லை அவளிடம் பிளார்ட் செய்தியா? தானா உன்‌ அப்பா அம்மா வரன் தேடினப்ப வந்தவள்.

   இது பக்கா அரேஜ்மேரேஜ். இதுல நீ புரப்பஸர் அவ ஸ்டூடண்ட் எதுக்கு குழப்பிக்கற?” என்று அறிவுறுத்த அக்கா கணவரை திட்ட இயலாது நின்றான்.

   பிரணவி தலை குனிந்து நின்றாள்.

   ஆத்ரேயன் நெஞ்சு விம்மி, “பிரணவி இங்க என்ன நடக்குது தலை குனிந்து இருக்க? உங்கப்பாவிடம் கல்யாணம் வேண்டாம்னு சொல்லு.” என்றான்.

   “நான் எங்கப்பாவுக்கு பாரமா இருக்க விரும்பலை சார். அவருக்கு எது சரின்னு தோணுதோ செய்யட்டும்.

   நான் எந்த தப்பும் பண்ணலை சார். போன் பவுச்ல இருந்தது. மிதுனா செய்ததை வீடியோ எடுத்தேன். ஏன் எடுத்தேன் அது உங்களுக்கு சாட்சியா வச்சி பழியை நீக்கினேன்னு எனக்கே தெரியலை.

   ஏதோ கனவு மாதிரி நடந்துடுச்சு.
மிதுனா முடியை பிடிச்சி இழுத்து அந்த இரண்டு பேர் முன்ன நிற்க வச்சி அசிங்கப்படுத்தினது தான் இப்ப நிஜமா முன்ன நிற்குது. என்னால அப்பாவிடம் கல்யாணம் வேண்டாம்னு எப்படி சொல்லறது. அவர் இஷ்டப்படி நடப்பேன்.” என்றாள்.

   “முட்டாள் அவர் என்னை மணக்க சொன்னா?” என்றதும் “தெரியலை சார். நீங்க தான் என்னை ரிஜெக்ட் பண்ணிட வாய்ப்புண்டே. யாராவது வருவாங்க” என்றாள்.

    “லூசா நீ.” என்றதும் சங்கவி தம்பியை திருப்பினாள்.

   அவ அப்பா சொல்படி கல்யாணம் பண்ணுவதா சொல்லிட்டா. நீ என்ன முடிவு எடுக்க போற?

    உன்னை அவப்பெயர்ல இருந்து காப்பாற்றினவளுக்கு, பரிசா நன்றி சொல்லறதுக்கு பதிலா படிப்புக்கு மூடுவிழா செய்யற, பேஸ் ஆத்ரேயா.” என்றதும் ஆத்ரேயன் தவிப்பாக பார்த்தான்.‌

   சங்கவியோ, “நீ நினைச்சா இந்த பொண்ணு படிப்பை தடுக்காம படிக்க வைக்கலாம். நீ இவளை கல்யாணம் பண்ணிக்கோ. அதே காலேஜ்ல பிரணவியை படிக்க அனுப்பு.” என்று கூற, ஆத்ரேயன் தலையை உலுக்கி நடந்தான்.‌

   ஒரு தூணின் பக்கம் சென்று பின்னந்தலையை கோதினான்.

    பவானியோ “தம்பி ஒரு வாரம் நேரம் எடுத்துக்கோங்க. எம் பேத்தியை கட்டறதா இருந்தா சொல்லுங்க. இல்லையா நன்றி சொன்னதோட உங்க வேலையை கவனிங்க. என் பேத்திக்கு வேற யாருடனாவது கல்யாணம் நடக்கும்” என்றார் திட்டவட்டமாக.

        அங்கே நீரை மட்டும் பருகிவிட்டு ஆத்ரேயன் அவன் குடும்ப ஆட்கள்  புறப்பட்டார்கள். பிரணவி வீட்டில் மழை பேய்ந்து ஓய்ந்தது போல இருந்தது.

   ஜெகநாதனோ “என்னம்மா அப்பா மேல் கோபமா?” என்றார்.‌

“இல்லைப்பா… நீங்க நல்லது தான் செய்விங்க. ஆனா ஆத்ரேயன் சார் கல்யாணம் பண்ண மாட்டார்ப்பா” என்றாள்.

  ஜெகநாதனுக்கு ஆத்ரேயனை கண்டதும் பிடித்திருந்தது. ஒரு பெண் வலிய வந்து பேசினால் ஆண்கள் அவளை உபயோகப்படுத்தி நூரயெறியும் இக்காலத்திலும் அறிவுரை செய்து திருத்த பார்த்தது எப்பேற்பட்ட விஷயம். மகளுக்கு இதை விட ஒழுக்கமானவன் கிடைப்பானா?!

   ஆத்ரேயனுக்கு மனக்குழப்பம் ஏற்பட, தவிப்பாக சுற்றும் போது சங்கவி வந்து, “அந்த பொண்ணை கட்டிக்கிட என்னடா?” என்றதற்கு, “அவ என்‌ ஸ்டூடண்ட். எப்படிக்கா?” என்றான்.‌

    “ஏன்டா புரப்பஸரா இருக்கறவங்க பொண்ணை கட்டிக்க மாட்டாங்களா? அப்படி பார்த்தா அந்த பொண்ணு ஏதோ காலேஜ்ல படிச்ச மாணவி தானே. அப்ப புரப்பஸர் கட்டிக்கிட மாட்டாளா?

நீ தான்டா இப்படி உருட்டற. அங்கங்க‌ வந்து பாரு படிக்கிற பிள்ளையோட வாத்தியார் ஓட்டம்னு இருக்கு.” என்று‌ கூற, ”நான் ஒன்னும் அப்படிப்பட்டவன் இல்லை” என்று கொதித்தான்.

   “சரிடா அவர் பிரணவியை யாருக்காவது கட்டி தர்றார். அவன் குடிக்காரனோ ஒழுங்கில்லாதவனா இருந்தா என்ன பண்ணுவ? நாளைக்கு அவ மீதி வாழ்க்கை என்னாகறது.‌ படிப்பும் போய் வாழ்க்கையும் போகவா?” என்றதும் ஆத்ரேயன் கவலையுற்றான்.

    அதன் பின் தினமும் ஆத்ரேயனிடம் சங்கவி வினய் இருவரும் ஒரு வாரம் திரும்ப திரும்ப பேசி மூளைச்சலவை செய்ய பார்த்தார்கள்.

  ஆத்ரேயன் மறுக்கும் முடிவோடு திரிந்தான்.
  அப்பொழுது தான் சாரதா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் ஒரு கையெழுத்தும் சான்றிதழும் வாங்க வந்தான்.

  பரீட்சை வரும் நேரம் இப்படி போவதால் கல்லூரி பெரிதும் கவலையுற்றது. இதில் மிதுனா ஜாலியாக வகுப்பில் இருந்தாள்.
 
   தன்னால் பிரணவி படிப்பு பாழாவதா? என்ற கவலை அதிகமாக தாக்கியது.

    வேறு யாராவது திருமணம் செய்தால் படிக்க வைப்பாரா? அப்படி வைத்தாலும் இரண்டு மாதத்தில் எக்ஸாம் வரப்போகின்றதே. பிரணவி வீட்டிலிருந்தால் எப்படி படிப்பாள்? இதே எண்ணியவன் ஜெகநாதனிடம் மீண்டும் தனியாக பேச முயன்றான்.

   அவரோ இவனுக்கு மேலாக பிடிவாதம் பிடித்து, “படிப்பு போனா போகட்டும் தம்பி. என்‌‌ அம்மா கல்யாணம் பண்ண சொல்லிட்டாங்க” என்று முடித்தார்.

    வேற வழியின்றி நான் பிரணவியை மணந்துக்கறேன் என்றான். ஆனால் பிரணவி திரும்ப அதே கல்லூரியில் பரீட்சை எழுத வேண்டுமென்றான்.‌

   வீட்டிலும் கல்யாணம் முடிஞ்சு எங்க ஊர் பக்கம் இருக்குற காலேஜ்ல ஆத்ரேயன் புரப்பஸார வேலைக்கு போறான்.‌ அங்க பிரணவியை மூன்றாம் வருடம் படிக்க போகட்டும் என்று இரண்டாம் வருட பரீட்சை எழுத மட்டும் அனுமதி வாங்கினாள்.

    அந்த இரண்டு மாதத்தில் படிப்பு வீடு என்றிருக்க, மறுபக்கம் கல்யாணத்துக்கு உண்டான வேலைகளும் நடைப்பெற்றது.

   திருமணம் முடித்து ஊருக்கு வருவதால் அப்பொழுதே கல்லூரி வந்து பாடம் நடத்த சிபாரிசுடன் நுழைந்தான்.

   சிபாரிசு என்றாலும் ஆத்ரேயன் கல்வி தகுதி எல்லாம் தாராளமாக கொடுக்கலாமென்று உரைத்தனர். அதில் மனம் அமைதியானது.
  
      பிரணவியை கல்லூரிக்கு செல்ல கூறினான்.‌

  அவள் மிதுனாவினால்  பயந்து பரீட்சைக்கு மட்டும் போவதாக கூறினாள்.‌

  ஆத்ரேயன்‌ பயப்படாமல் செல் என்றான்.

‌‌ காலையில் இவள் வந்ததை கண்டு‌ மாலை வாசலில் அந்த இரண்டு பொறுக்கியை வரவழைத்தாள். பிரணவிக்கு லேசான நடுக்கம் வந்தது. தந்தை வெளியே இருப்பாரென வர, ஜெகநாதனுமே இவ்விருவரை கண்டு அச்சத்தில் வெளுத்திருந்தார்.‌

   பிரணவி அருகே செல்லும் முன் அந்த இருவரை மோதும் விதமாக ஆத்ரேயன்‌ காரில் குறுக்கே வந்தான். அவன் இறங்கும் போதே அவன் தோற்றம் மிரட்டாமல் மிரட்டியது.

   “என்ன பயம்? செகண்ட் இயர் எக்ஸாம் முடியற வரை வந்துட்ட. உங்கப்பா தான் கூட்டிட்டு வரணுமா. பயப்படாம ஹாண்டில் பண்ண பழகு” என்று கடித்தான்.

   பிரணவி சம்மதமாய் தலையாட்டி காரில் ஏறினாள். அதன் பின் தனியாக ஜெகநாதன் அழைத்து வந்து அழைத்து சென்றார்.‌
  
   மிதுனா தான் தனியாக திரிந்தாள். யாரும் பழக யோசித்தனர். ஆதரவு குறையவும் ஓரளவு கல்லூரி முதல்வரும் கண்டித்து இருக்க, பிரணவி அருகே சென்றால் டிசி வழங்குவதாக கூறிட அடங்கிப் போனாள். அந்தளவு ஆத்ரேயன் கோபத்தை வெளிப்படுத்தினான்.

    பிரணவிக்கும் ஆத்ரேயனுக்கும் திருமணம் என்று கல்லூரி ப்ரின்சிபாலுக்கு பத்திரிக்கை வைக்கப்பட்டது. ஏதோ பிரணவிக்கு உதவுவதாக நினைத்தனர். இல்லை என்றதும் திருமணமா? என்று ஆச்சரியப்பட்டார்.

   ப்ரின்சிபாலோ “இந்த அவசர கல்யாணம் இங்க நடந்த நிகழ்வாலையா?” என்று கேட்டாலும் ஆத்ரேயன் பதில் தராமல் போக புரிந்துக் கொண்டார்.

    ஒப்புக்கு அங்கே பணிப்புரிபவரிடம் பத்திரிக்கை வைத்தான்.

   தன்னிடம் படிக்கும் மாணவியை ஆத்ரேயன் கரம் பற்றுவதாக கிண்டல் கேலி செய்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நடந்ததை தெரிந்ததால் கேலி செய்யவில்லை.

பரீட்சை முடிந்ததும் லீவில் இடைப்பட்ட நாளில் திருமணத்தை நிறுத்த ஆத்ரேயன் போராடினான்.‌ அம்மா அக்கா அப்பா மாமா என்று நால்வரும் இவன் திருமணத்தை வெகுவாக எதிர்பார்த்ததால் ஆத்ரேயன் கருத்தை காதிலே வாங்கவில்லை.

பிரணவி அப்பாவிடம்‌ திருமணத்தை நிறுத்த கூறினால் ‘மூச்சை நிறுத்திடுவேன் மாப்பிள்ளை. என் பொண்ணு, நான், என் மனைவி, அம்மா எல்லாரும் விஷம் வாங்கி குடிச்சிடுவோம்.’ என்று மிரட்டினார்.‌

‌ அதன் பின் ஆத்ரேயன் எப்படி பேசுவான்?
   பிரணவியிடம் “உங்கப்பாவிடம் படிப்பு முடிய கல்யாணம் பண்ணிப்பதா வாயை திறந்து சொல்லேன்” என்று திட்டினான்.‌

‌”இல்லை சார் அப்பா என்னால் மனசொடிந்து போயிட்டார்.‌ அப்பா கைநீட்டற மாப்பிள்ளையை கட்டிக்கணும். அதானே சார் நல்ல பொண்ணுக்கு அழகு” என்றாள்.

  “என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” என்று கோபமாய் கேட்க, “எங்கப்பா பார்த்த மாப்பிள்ளை சார் நீங்க. நான் ஒன்னும் மிதுனா மாதிரி பாடம் நடத்தறவரை காதலிக்கலை.” என்றாள். ஏனோ அதன் பின் ஆத்ரேயன் பிரணவியிடம் வாதடவில்லை.

  ஏன் திருமணம் நெருங்கும் வரை திருமணத்தை நிறுத்துவதை பற்றி பேசுவதை குறைத்து கொண்டான்.

   ‘பரசுராம் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’ காலேஜில் வேலை கிடைக்க அங்கே புதிதாக கட்டிய தனி வீட்டை வாங்கி குடிபுகுந்து வாழ்வை துவங்க பெரியவர்கள் விரும்பினார்கள்.

  காலையில் திருமணம் மாலையில் ரிசப்ஷன் என்று ஒரே நாளில் நடிக்க ஒப்பந்தமானவன் போல ஆத்ரேயன் அன்று சிரமம் பாராது நின்றான்.

‌ மணமுடித்து ஆத்ரேயன் வீட்டில் ஒரு வாரம் பிரணவி பெற்றவர்களும் கூடவே இருக்க வைத்தார்கள்.

  பிரணவி தனியாக திருச்செந்தூரில் தனிக்குடித்தனம் சென்றிடுவதால் இப்படி.‌ அதனால் ஆத்ரேயன்-பிரணவி என்று நெருங்கி பேசவோ பழகவோயில்லை.

   ஆத்ரேயனோ அவளை மூன்றாம் வகுப்பு படிக்க மற்ற ஏற்பாட்டை பார்த்திருந்தான். அவனே நேரிடையாக தலையிடாமல் சங்கவி அக்காவின் கணவர் வினய் மூலமாக சீட் வாங்கினான். 

   இங்கு கணவன் மனைவி என்று காட்டிக்கொள்ளாமல் மாதங்களை ஓட்டினர்.

‌ இதோ இப்பொழுது வரை அப்படியே…
   ஆத்ரேயன் கல்லூரியில் புரப்பஸர் பிரணவி ஸ்டூடண்ட் என்று இருப்பது சரி.

வீட்டில்?

அவன் கணவன் மனைவியாக‌ வாழும் முடிவுயின்றி திரிந்தான்.

  அவனுக்குள் ஆழத்தில் இருந்த எண்ணம் பேசுவதற்கு தடைவிதித்தது.

   பிரணவி ஓரளவு அவளும் தனியாக ஒதுங்க, நிம்மதியானான்.‌

  மாணவியை வழிநடத்தும் ஹாஸ்டல் வார்டனாக பாதுகாத்தான்.‌

   பிரணவி உள்ளத்தில் ஆத்ரேயனுக்கான எண்ணங்கள் என்ன என்று அறிந்தால் மாறலாம்.

   பிரணவிக்கும் இந்த புரப்பஸர் ஆத்ரேயனை அளவுக்கு அதிகமாக பிடிக்குமே.

-தொடரும்.

13 thoughts on “மௌனமே வேதமா-9”

  1. Super sis nice epi 👌👍😍 marriage pannitanga sari aana vaazkhai eppdiye poga mudiyuma aathreyan manasu maaruma parpom 🤔

  2. Athreiyan ne veetula yum professor ah vae irukirathu ethuku andha ponnu ah kalyanam panna athukaga udanae husband and wife relationship la kondu poga sollala aana inga pechu ku kooda pancham ah iruku yae

  3. M. Sarathi Rio

    மௌனமே வேதமா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 9)

    ஓ… அப்படின்னா பிரணவியும் ஆத்ரேயனை உள்ளுக்குள்ளேயே விரும்பியிருக்காளோ…?
    இது எப்ப நடந்தது…? ஒருவேளை, ஒரு தலை காதலோ,..? இ்ல்லை க்ரஷ்ஷா ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *