அத்தியாயம்-4
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அதிகாலை ஜீவன் எழுந்து முடித்து, தன்னிருப்படம் அறிந்து, “சே… ஒரு நைட்டை வேஸ்ட் பண்ணிட்டேன். பாவனா என்ன செய்யறாளோ?” என்று எழுந்து சோம்பல் முறித்தான்.
பாவனவோ, தன் அன்னைக்கு தான் மாலதீவு வந்து சேர்ந்ததையும், ஒரு சில போட்டோவையுமா அனுப்பி, கூடுதலாக ஜீவன் மிகவும் நல்லவர். தனியாக தனி ரூம் தந்து கண்ணியமாக பழகுவதாக அனுப்பியிருந்தாள்.
வினோத் அதையெல்லாம் காவேரியிடம் காட்டி அக்காவின் நலத்தை தெரிவித்தான். காவேரிக்கு அதன்பின் நிம்மதி பிறந்திருக்க வேண்டும்.
பாவனாவுமே சந்தோஷமாய் இரவில் கண்ட பால்கனி வியூவை பகலில் பார்வையிட்டாள்.
கடற்கரையொட்டி நிறைய செயற்கை மரப்பாதை அமைத்து நடந்து செல்லும் விதமாக, அமைத்திருந்தனர்.
இதில் வித்தியாசமான மரக்குடில் கீழே பல்வேறு பிகினி அழகிகள் அங்கிருந்த ஆண்களின் விழிக்கு தரிசனம் தந்து படுத்திருந்தனர்.
பெரும்பாலும் அரைகுறை ஆடைகள். அதெல்லாம் இங்கே தவறாகவும் தெரியவில்லை. ஒருவேளை இந்த இடத்தில் சேலை கட்டி ஒரு பெண் நடந்தால் அது தான் வித்தியாசமாய் தெரியும் என்று ஆராய்ச்சி செய்தாள்.
பெரும்பாலும் பணம் படைத்தவர்கள் கையில்லாத சட்டை, தொடைவரை அணியும் உடை க்ராப் டாப் என்று பிரா அளவிற்கு டாப் எல்லாம் சாதாரணமாய் இருக்க, இங்கே பிகினி பெரிதாக ஆபாசமாக தெரியவில்லை. அதனாலோ என்னவோ இந்த இடத்தில் குடும்பமாய் வந்தவர்கள் கூட அவருண்டு அவர் வேலையுண்டு என்று இயல்பாய் கடந்து செல்வதை கவனித்தாள்.
‘வாழ்ந்தா இது போல வாழணும். யார் என்ன சொல்வாங்கன்னு இல்லாத வாழ்க்கை. பணம் தேடுதல் இல்லை. எந்த இலக்கும் இல்லை.’ என்று நினைத்தவளுக்கு நேற்று இந்நேரம் தெரு கோவிலில் பிரசாதம் வாங்கி பிள்ளையாருக்கு வேண்டுதலோடு நன்றியுரைத்தது நினைவு வந்தது.
தன் கைப்பையில் வினாயகர் புகைப்படத்தை எடுத்தாள். அத்துடன் நேற்று வைத்த விபூதி பிரசாதம் வேறு எடுத்து பார்த்தாள்.
‘கடவுள் இருக்கார்… இல்லைன்னா அம்மாவோட உடல்நிலைக்கு சட்டுனு பணம் கிடைக்குமா? இந்தளவு முன்பணம், வேலை எல்லாம் கடவுள் கிருபை’ என்று சூரியனை கண்டு வணங்கினாள்.
நேற்றே ஒப்பந்தம் முடிவானதே இதற்கு மேல் வேலை என்னயிருக்கும்? ஜீவன் சார் ஒரு வாரம் ஆபிஸ் வேலை என்று கூறியிருந்தாரே என்று சிந்திக்க, முதலில் குளித்து தயாராகி இருப்போம் என்று முடிவெடுத்தாள்.
‘நேற்று ஜீவன் சாரே என்னை தேடி வந்தார். இன்னிக்கு நாம போய் குட்மார்னிங் சொல்வோம்’ என்று தயாராகி அவனது அறைக்கு வந்தாள்.
கதவை தட்ட, “எஸ் கம்மின்” என்று என்றான்.
“குட்மார்னிங் சார்” என்றதும் “ஏய் ரூம் சர்வீஸ் இங்க பாட்டில்” என்று ஆரம்பித்தவன், அரையும் குறையுமாக இருக்க பாவனா திரும்பிவிட்டாள்.
“சாரி சார்.” என்றாள். “ஓ.. பாவனா நீயா. நான் ரூம் சர்வீஸ்னு நினைச்சேன்” என்றவன் நெருங்க வருவதை கண்டு, “நீங்க ரெடியாகிட்டு வாங்க சார் நான் வெளியே வெயிட் பண்ணறேன்” என்று சக்கரம் கட்டியவளாக வெளியேறினாள்.
“ஏய் பாவனா இட்ஸ் ஓகே கமான்” என்றவன் குரல் அவசரத்தில் ஓட்டமும் நடையுமாக சென்றவளை எட்டியிருக்காது.
“மக்கு மக்கு. பொறுமையா போன் பண்ணியே போயிருக்கலாம்” என்று தன்னையே தீட்டி தீர்த்தாள்.
ஜீவனோ முட்டாள்.. நைட்டும் மிஸ் பண்ணிட்ட. மார்னிங்கும் ஓடிட்டா. இன்னிக்கு நைட்குள்ள இவளை முடிக்கறேன்” என்றவன் குளிக்க சென்றான். ஏனோ தள்ளி தள்ளி பாவனா சென்றதில் வெறியேறியது.
முதலில் காலை உணவை முடித்து பிறகு பார்ப்போமென பாவனாவை உணவகத்திற்கு அழைத்து செல்ல திட்டமிட்டான்.
அதன் பொருட்டு பாவனாவின் அறைக்கு வந்து சேரும் போது அவளோ சாக்லேட்டை விழுங்கினாள்.
“என்ன பாவனா… குழந்தை மாதிரி சாக்கி சாப்பிடற?” என்றான்.
“சார் பசிச்சது.” என்று சிரிக்க, “ஓ… ஸ்வீட்.. வா.. ஹோட்டலுக்கு போவோம். இங்க சீ ஃபுட் ஸ்பெஷல் தெரியுமா” என்று கை நீட்ட, ஒரு மரியாதைக்கு கையை கொடுத்தாள்.
அவளை அழைத்து சென்றவன், “உனக்கு மாடர்ன் டிரஸ் ரொம்ப அழகாயிருக்கு” என்று புகழ, “சென்னை போனா இதெல்லாம் போட முடியாது. அம்மா தோலை உறிச்சிடுவாங்க. இங்க போட்டுக்கறேன்” என்று மொழிந்தாள்.
உணவகம் வந்ததும் அவளது கை அளவில் உள்ள சிங்கி இறால் தட்டில் வைக்கப்பட்டது.
சம்பல், சிங்கி நான் ரொட்டி சான்ட்வெச் என்று வாங்கி உணவருந்தினர்.
சிங்கியை போட்டோ எடுத்த பாவனாவோ “எங்க வீட்ல தம்பி வினோத் ஒரு முறை அவன் பிரெண்ட் கூட போய் இறால் வாங்கிட்டு வந்தான் சார். கை அளவு இருந்தது. அது எவ்ளோ பெருசுனு சொல்லி சீன் போட்டான். இப்ப பாருங்க தட்டு அளவுல நான் சாப்பிடறேன். வீட்டுக்கு போய் இதை காட்டணும்” என்று குழந்தையாக கூற, ஜீவனோ அவளது வெள்ளெந்தியில் தொலைந்து, இப்பொழுதே அடைய துடித்தான்.
“ஹாய் ஜீவன்” என்று தோளில் வணிக ரீதியான நட்பில் ஒருவன் வந்து பேசவும், அதில் கவனத்தை களைந்தான்.
பாவனா காலார கடலுக்கு மேல் மரப்பாதையில் அமைத்தில் நடந்தாள்.
அங்கிருந்து எட்டிபார்த்த பொழுது வண்ண மீன்கள் சில கடலில் நீந்துவதை கண்டாள்.
அதையே பார்த்தவள் எதிரே யாரையோ மோதி நிமிர்ந்தாள்.
“அர்னவ்” என்று ச்நதோஷ் வரவும் அர்னவ், பாவனாவை கண்டு நிற்க, “சா.. சாரி.. நீ.. நீங்க” என்று கூற, சந்தோஷ் “ஹாய் மேம்” என்றான்.
“ஹா..ஹாய்” என்று பேச, அர்னவ் முகம் திருப்பி நடந்தான்.
பாவனாவுக்கு அந்த நேரம், ஏதோ தன்னை இந்த பைலட் நிராகரிப்பது போல தோன்றியது.
“சார் இல்லையா மேம்” என்று பேச்சு தொடுக்க, அங்கும் இங்கும் ஜீவனை தேடினாள்.
“சந்தோஷ் போலாம்” என்று குரல் தர, பாவனா பதில் தரும் முன், “இவன் ஒருத்தன் வேகத்துக்கு பிறந்தவன்” என்று ஓடினான்.
பாவனாவோ கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு தங்கள் அமர்ந்த இடத்தில் சென்றாள்.
ஜீவனோ “சாரி டியர். தொழில் சார்ந்த ஆட்களா கண்ணில்படவும் பிரைவேஸி மிஸ்ஸாகுது. நாம வேற தீவுக்கு போயிடலாம். ரூமுக்கு போய் கிளம்பு” என்று தூரிதப்படுத்த, “இங்க எத்தனை தீவு சார்” என்று கேட்டாள்.
அவளுக்கு விமானத்துல மாலதீவுக்கு போறோம் என்று மட்டுமே ஜீவன் உரைத்திருந்தான். இப்பொழுது இங்கேயிருக்க மீண்டும் தீவு என்றால் வேறொரு இடமா என்று முழித்து கூடவே நடந்தாள்.
ஜீவன் போனில் பைலட் சந்தோஷை அழைக்க, சந்தோஷோ “அர்னவ் அவன் விமானத்தை ரெடியா வைக்க சொல்லறான். பேமண்ட் பண்ணும் போது செகண்ட் தீவு சொல்லிருந்தானே அங்க போகணும்னு ஆர்ட்ர்.” என்று கூற, அர்னவ் தன் வெண்ணிற உடையை உடனே எடுத்தான்.
பாவனா ஜீவன் விமானம் தரையிறங்கிய இடத்திற்கு வந்து சேரும் போது, தன் பைலட் உடையில், தோளில் பெல்டில் பைலட் அணியும் மற்ற விஷயங்கள் தூரிதமாக அணிந்திருந்தான்.
சற்று நேரத்திற்கு முன்பு தான் ஷார்ட்ஸ் ஸ்லீவ்லஸ் பனியன் என்று நின்றியிருக்க அர்னவ் உயரத்திற்கு அவன் நெஞ்சில் தலை மோதினாள்.
அவனை தலையுயர்த்தி நிமிர்ந்து பார்க்க, அவனது பார்வையை காண திணறி பேசியது நினைவு வந்தது.
தன்னை விட அதிக உரயரமான உருவத்தை கண்டு திகைத்து விட்டாள் பாவனா.
இப்பொழுது மீண்டும் பார்வையிட ஏதோ திருட்டு முழி விழித்தாள்.
பைலட் தொப்பியை அணிந்து விமானத்தில் கதவை திறந்து ஏற, சந்தோஷ் அவனும் ஜீவனை ஏற கூறினான்.
“சார்.. செகண்ட் தீவு நீங்க சொன்ன இடமா?” என்று கேட்டதும் “எஸ்.” என்று ஜீவன் ஏறினான்.
பாவனா ஜீவன் ஏறியதும் கதவை அடைத்து சந்தோஷ் அமரவும், “டேக் ஆஃப் பண்ணிடலாமா?’ என்று கேட்டு விமானத்தை இயக்க ஆரம்பித்தான் அர்னவ்.
சப்தம் எழுப்பி கிளம்ப விமானம் மேலெழுப்பியது.
இம்முறையும் ஜன்னல் பக்கம் தலையை திருப்பி பாவனா வேடிக்கை பார்த்தாள். இனி இந்த இடம் வருவேனோ மாட்டேனோ? கடைசியாக கண்கொள்ளா காட்சியாக கவனித்தாள். கீழே பரந்துவிரிந்த அத்தீவு குட்டியாக காட்சியளிக்க கடலலை மட்டுமே கீழே இருந்தது.
“போதும் வேடிக்கை பார்த்தது உட்காரு” என்று கட்டிப்பிடிக்க, சந்தோஷோ அதிர்ச்சியாகி மெதுவாக வீடியோவிலிருந்து பார்வையை திருப்பி கொண்டான். ஏன் அணைத்து விடலாமென்று கூட கைகள் சென்றது.
ஆனால் நொடியில் பாவனா ஜீவனை தள்ளி விட்டு ஏதோ பதறி பேச, ஜீவன் இளக்காரமாய் சிரித்து பேசுவதாக தெரிந்தது.
“அர்னவ்.. அர்னவ்.. சம்திங் ராங்” என்றான் சந்தோஷ்.
அர்னவோ வேகம் காட்டும் கருவி, விமானம் செல்லும் இடம், அவ்விடத்தின் தட்பவெட்ப நிலை, எரிப்பொருள் என்று அனைத்தும் சரியாக இருக்கின்றதா பார்வையிட்டபடி, “எவரிதிங் ஓகே தானே” என்றான்.
“அதில்லை அர்னவ். அந்த ஜீவன் அந்த பொண்ணிடம் அத்துமீற ட்ரை பண்ணறான்.” என்றான் பதட்டமாக.
”பச்… காசுக்காக வந்த பொண்ணு தானே. என்னத்த அத்துமீறுறது. அவளே படுக்க சம்மதிச்சு தான் வந்திருப்பா.” என்று வீடியோவை காண பிடிக்காமல் மேகத்தை பார்த்து பேசினான்.
“அர்னவ்.. இல்லைடா.. அந்த ஜீவன் அந்த பொண்ணை அடிக்கறான். அவ அவனை தள்ளி விடறா” என்று கூறவும் அர்னவ் வேண்டா வெறுப்பாய் வீடியோவை பார்க்க, பாவனாவை முத்தமிட துணிந்திருந்தான் ஜீவன்.
அவளோ மறுக்கும் விதமாக அங்கும் இங்கும் முகத்தை திருப்பி போராடினாள்.
“சந்தோஷ் என்னனு பாரு” என்று கூற, ஆடியோவை ஒலிக்க விட்டான்.
“சார் சார்.. நீங்க என்னை தப்பா நினைக்கறிங்க. நான் உங்க பி.ஏ மட்டும் தான். இந்த மாதிரி பிஹேவ் பண்ண இங்க வரலை. நான் உங்களோட தனியா வந்தது கேவலமா நினைக்காதிங்க. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க. நான் அந்த மாதிரி பொண்ணுயில்லை” என்று பாவனா குரலில் பயந்திருந்தது அப்பட்டமாய் கேட்டது.
“சந்தோஷ்… நீ விமானத்தை ஓட்டு. நான் வந்துடறேன்” என்று காதுகேள் கருவியை கழட்டி, சந்தோஷிடம் விமானத்தை இயக்கும் பணியை பார்த்துக்க கூறி, சீட்பெல்ட் கழட்டினான்.
அர்னவ் எழுந்ததும் சந்தோஷ் முனைப்பாக விமானத்தை இயக்கும் பணியில் முழ்கி, அடிக்கடி எதிரே இருந்த வீடியோவை கவனித்தான்.
ஜீவன் வலுக்கட்டாயமாக பாவனாவுக்கு முத்தம் தருவதில் குறியாக இருக்க, அர்னவ் ஜீவனின் தோள் பட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் குத்துவிட்டான்.
ஜீவன் சுழன்று ஓரமாய் விழுந்தான். அதை வீடியோவில் பார்த்த, சந்தோஷோ “அடப்பாவி.. என்ன மேல கை வச்சிட்டான். போச்சு போச்சு இந்த ட்ரீப் அவ்ளோ தான்” என்று முனங்க, பாவனாவோ, கையெடுத்து கும்பிட்டாள். அவளது உதடுகள் துடிக்க நன்றி உரைப்பதை உணர்ந்தான் அர்னவ்.
ஜீவன் எழுந்து நின்றவன், “ஹேய் ஹௌ தேர் யூ? யார் மேல கை வச்சியிருக்க தெரியுமா? ஆப்ட்ரால் பைலட் நீ. என்னை அடிப்பியா?” என்று பாய்ந்து வர, “ஆப்ட்ரால் பைலட் இல்லடா… இந்த நிமிஷம் உனக்கு நான் தான் கடவுள். வம்பு வச்சிக்கிட்டா நீ உறுத்தெறியாம எங்கயாவது செத்துடுவ.” என்று அதட்டலாய் மொழிந்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 eppdiyo endha jeevan kita erundhu kaapathitanga 🙏😊
அருமையான பதிவு
Interesting
Super nalla ennum kuthu vidu da
ராஜாளியின் ராட்சசி…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 4)
அப்பாடா…! இந்த லூசுக்கு இப்பத்தான் புரிஞ்சது போலயிருக்கு.. அந்த ஜீவன் ஒரு உமனைசர்ன்னு.
நல்ல வேளை, அர்னவ் இருந்ததால் காப்பாத்திட்டான். இனிமேல் அவளோட வேலை ஹோ கயா தான் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wow Arnav super sema.punch. intresting sis.
Bhavana thappichita ah nalla vela santhosh video moola ma bhavana oda nilamai ah parthutu correct time ku arnav punch vittu help pannitan
Super arnav podu nalla avana nee vera bhavana va thappa ninachita
👌👌👌👌