அத்தியாயம் – 49
அவளது சிற்றுண்டி அவ்வளவு ருசியாக இருக்கவும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டவன் அவளை சாப்பிட்டாளா? இல்லையா என யோசித்து கடைசியில் அவளிடம் ஏதும் கேட்காமலே கிளம்பினான்
அவளும் கூடவே கிளம்ப இருவரும் கார் அருகில் வர பாடிகார்ட்ஸ்ஸும் வந்தனர் ஒரு பாடிகார்ட் வண்டியை ஓட்ட உட்கார இன்று தான் எங்கு அமர்வது என்று அவள் முழிக்க அவளை பார்த்து லேசாக புன்னகைத்தவன்
“சிட் வித் நெக்ஸ்ட் ட்டூ மீ ஐ ஜஸ்ட் வாண்ட் ட்டூ டிஸ்கஸ் சம்திங் அபெளட் டூடே ஷூட்” என்று கூற சரி என்றபடி அவனது அருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்தாள்.
அவளிடம் இன்றைய ஷூட் பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டவன்
கேட்டானே ஒரு கேள்வி
“வாட் ஈஸ் மீண்ட் பை டாலி? ஓய் ஏ மேன் க்நாட் ட்டூ கேர்ள் நெக்? ஈஸ் திஸ் எனி பர்ப்பஸ்?”
என்று கேட்க அவளுக்கு விக்கியது. இதற்கு இவனுக்கு என்ன விளக்கம் கொடுக்க என்று தான் யோசித்தாள்.
அதன்பின் அவனுக்கு விளக்கம் கொடுத்தாள்
“தாலிங்கிறது வசதி இருக்குறவங்க தங்கம்லயும் வசதி இல்லாதவங்க மஞ்சள் கிழங்கு வெச்சும் ஒரு மஞ்சள் கயிறுல கட்டுறது கிறிஸ்தவ முறையில் மோதிரம் மாற்றிக்கிட்டா கல்யாணம் முடிஞ்சதுனு அர்த்தம் ஆனா இந்து முறையில் தாலி கட்டி மெட்டி போட்டாதான் திருமணம் முடிஞ்சதுனு அர்த்தம்.
பாரம்பரிய முறையில் இருந்து பின்பற்றபடும் முறையாகும் தாலியை பெண்கள் அவங்க கணவனா வரப்போறவரோட உயிரையும் உணர்வுகளையும் தன் நெஞ்சோடு சுமப்பதாகும் என கருத்து உள்ளது.
கணவன் மனைவிக்கான அடையாளமா தாலி கட்டப்படுது. ஒவ்வொரு வகைக்கும் வித விதமான தாலி வகைகள் உண்டு. அவங்க அவங்க பாரம்பரிய முறைப்படி அதில் மாறுதல் வரும்.
தங்கம் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பெண்களுக்கு இது இதயப்பகுதியை குளிர்ச்சியாக வைக்க உதவும்.
இது அறிவியல் பூர்வமாக பேசப்படுது.
இந்திய முறையில் பெண்களை விட ஆண்களை ஒருபடி மேலே சொல்லுவாங்க.
அதனால ஆண் பெண்களிடம் பணிந்து போகமாட்டாங்கனு சொல்லுவாங்க அதை தப்புனு நிரூபிக்கதான் ஆண்கள் பெண்களோட காலை தொட்டு அவங்க விரல்ல மெட்டி போடுறதா சொல்லுவாங்க.
மெட்டி போடும் விரலிலும் சயின்ஸ் இருக்கு பெண்களின் கால்விரலில் மெட்டி போடுற விரல் அந்த நரம்பு அவங்க கர்ப்பபையை வலுபடுத்தும்னு சொல்லுவாங்க இது திருமணத்துக்கு அப்புறம்தான்.
தன் கணவனை உணர்வுபூர்வமா தன் நெஞ்சோடு மறைச்சு வெச்சு ரசிக்குவாங்க பெண்கள்னு தான் தாலி அது அவங்க கணவனே அவங்க கூட இருக்குறதா சொல்லுவாங்க.
இதுலேயே ஒவ்வொரு முறையும் வேற வேற மாதிரி கல்யாண பழக்கவழக்கம் இருக்கு ப்ராமின்ஸ்ல ஒருமாதிரி நார்மல்ஸ்ல ஒருமாதிரி அண்ட் கோயம்புத்தூர் சைட்ல ஒருமாதிரி தெலுங்குமுறையில ஒருமாதிரி கர்நாடகா அண்ட் கேரளா சைட் ஒரு மாதிரி நார்த் சைட் ஒருமாதிரினு டிபரெண்ட்டா இருக்கும்”
என்று அவனுக்கு விளக்கம் கொடுக்க
ஒரு தாலியில இவ்வளவு விஷயமா என்றுதான் அவளை ஆச்சரியமாய் பார்த்தான் ஆராஷி.
தைரியமாய் அவனுக்கு விளக்கம் கொடுத்துவிட்டாள் ஆனால் இதுவரை தாலி கட்டும் சீன் நடித்தது இல்லையே இதை எப்படி சாமாளிக்க போகிறோம் என்றுதான் யோசிக்கலானாள்
அவளை வெறுப்பேற்றி வேலையை விட்டு ஓட செய்ய இதையெல்லாம் தனக்கு சாதகமாக நினைத்தான்.
‘சோ இவ சொல்றதை பார்த்தா தமிழ் முறை வெட்டிங் செம்ம செண்டிமெண்ட் அண்ட் ரொமான்டிக்னு நினைக்கிறேன் இதுல நான் இவகிட்ட க்ளோஸ்ஸா நடிச்சாலே போதும் அவ ஓடிடுவா’ என்று எண்ணியவன்.
‘முதல்ல இந்த கல்ச்சர் கல்யாணத்தை பத்திலாம் நல்லா விளக்கமா கத்துக்கனும்’ என்று எண்ணியவன் முதலில் இன்றைய ஷூட்டிங் பத்தி கத்துக்கலாம்னு அதில் மூழ்கி போனான்.
ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும் அங்கே பார்த்தவனுக்கு பெரிய ஷாக்.
அங்கு போடப்பட்டு இருந்த செட் அப்படி.
இரவுநேரமும் ஷூட் என்பதால் இன்று முழுவதும் அங்கேதான் அவனுக்கு வேலை.
அழகிய பர்ப்பிள் வண்ண பூக்களும் மஞ்சள் நிற பூக்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மண்டபம் போன்ற அந்த அரங்கம் அவ்வளவு அழகாக அவனது கவனத்தை ஈர்த்தது.
பர்ப்பிள், வெள்ளை, கோல்டன் கலர் என அடிக்காத வண்ணங்களில் மிகவும் நேர்த்தியாக அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது அந்த மண்டபம் செட்.
அவனிடம் வந்த அருந்ததியை பார்த்தவன் உடனே தனது டிரான்ஸ்லேட்டரை ஆன் செய்து கொண்டான்.
வந்தவள்
“சார் இன்னைக்கு உங்களுக்கு காஸ்ட்யூம் கம்மிதான் ஹீரோயின் ரெடி ஆக தான் கொஞ்சம் லேட் ஆகும் சோ உங்களோட மார்டன் ஷூட் முடிச்சுடலாமா?” என்று கேட்க
அதை கேட்டவன்
“ஓஓ.. ஓய் ஷி லேட்?” என்று கேட்க.
“பிகாஸ் ஆஃப் ஹர் காஸ்ட்யூம் அண்ட் ஜூவல்ஸ் சார்” என்றுவிட்டு அவள் டேப்பை திறந்து அதில் உள்ள புகைப்படத்தை காட்ட
அதில் பார்த்தவன்
மணமகன் புகைப்படம் பார்த்தவன் அதில் மணமகன் வேட்டி சட்டை அணிந்து சாதாரணமாக இருக்க மணமகள் புடவை நகை என இருந்ததை பார்த்தவன்
‘இவ இவ்ளோலாம் போட்டா ஆள் இருக்குறதே தெரியாதே?’ என எண்ணியபடி அவளை பார்த்தவனுக்கு அப்போது தான் ஒன்று புரிந்தது ‘அவளை இதுவரை புடவையில் அவன் பார்த்ததே இல்லையே இப்போதும் சாதாரண ஒரு காட்டன் சுடிதார் தானே அணிந்து உள்ளாள்’ என்று எண்ணியவன் அவளை காணவேண்டும் என்று எண்ணியபடி
“ஓகே ஐ வில் கெட் ரெடி” என்றுவிட்டு கேரவனுக்குள் செல்லப்போனவன் நின்று திரும்பி
“மிஸ் அருந்ததி நைஸ் வெட்டிங் ஹால் செட்.. இட்ஸ் கிவ்விங் ப்ளஸன்ட் லுக்” என்றுவிட்டு சென்றான் அவனுக்கு பின்னாடியே போனவளை பிடித்த அருந்ததி
“நான் வெறும் ஷூட்தான் பன்றேன் இந்த ஏற்பாடுலாம் உன்னோட ஐடியாதான்னு சொல்லிடனும்னு எனக்கும் ஆசையாதான் இருக்கு ஆனா எங்கே? சிங்கத்தின் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறது” என்றவள் சிரித்தபடி நிற்கும் மேதாவை பார்த்து “அடியே நீதான் சீக்கிரம் ரெடி ஆகணும் அவருக்கான வேலையை இன்னைக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் பார்த்துப்பாங்க நீ போய் ரெடியாகு.” என்று கூற சரியென மண்டையை ஆட்டியவள்.
மேக்கப் ஆர்டிஸ்ட்டை அழைத்து அவனுக்கு என்ன என்ன கொடுக்க வேண்டும் என்று அவள் ஏற்கனவே எழுதிய பேப்பரை கொடுத்து அதில் எதுவும் மிஸ் ஆககூடாது என்று கூறிவிட்டு சென்றாள்.
அவ்வளவு வேலைச்சுமையிலும் தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அவளை வேலையைவிட்டு துரத்தவேண்டுமா? என யோசித்தவன் ஆனால் இதெல்லாம் அவளது நடிப்பில் ஒரு அங்கமாக இருந்தால் அதனால் அவளை விரட்டியே ஆகவேண்டும் என எண்ணியவன் மேக்கப் ஆர்டிஸ்ட் வர அவர் கொடுத்த உடையை அணிய ஆரம்பித்தான் ஆனால் அவனது கஷ்டகாலம் அந்த வேட்டியை அணியதான் தெரியவில்லை அவனுக்கு. வெள்ளை நிற ஷார்ட்ஸ்ம் மேலே வெள்ளைநிற பனியனும் மட்டும் அணிந்து நின்றவனை பார்த்த மேக்கப் மேனுக்கு புன்னகைதான் வந்தது பின் அவரே அவனுக்கு உடையை அணிவித்து விட்டு அவனை ரெடி செய்ய அழகிய வெளிநாட்டு மணமகனாய் தாயாரானான் ஆராஷி.
அந்த பீச் கலர் சட்டையும் வெள்ளையும் கோல்டனும் மிக்ஸ் ஆன பட்டு வேஷ்டியும் அவனுக்கு மேலும் அழகை சேர்த்தது.
அவன் தயாரானதும் எழுந்து நடக்க போக வேட்டி திறந்து அவனது தொடைவரை வெளியே தெரிய உடனே அதை பிடித்தவன் மேக்கப் மேனிடம் திரும்பி
“என்ன இது கிழிஞ்சுபோன டிரஸ் எடுத்து வந்து இருக்கீங்க? ஒரு க்ரூம்க்கு இப்படிதான் கிழிஞ்ச டிரஸ் எடுத்துட்டு வருவீங்களா?” என்று ஆங்கிலத்தில் கோபமாய் கேட்க
முதலில் அவனது கேள்வியில் பதறிய மேக்கப் மேன் எங்கே கிழிந்தது என்று தேட அவன் அந்த திறந்திருந்த பகுதியை காட்ட அதை பார்த்தவருக்கு சிரிப்பு வந்துவிட்டது வேட்டியை பற்றி தெரியாமல் அவன் கேட்ட கேள்வி அவருக்கு சிரிப்பை கொடுத்துவிட அவனது கோவம் இன்னும் குறையாமல் பார்த்த பார்வையை பார்த்தவர்
அதன்பின் சிரிப்பை அடக்கியபடி
அவனுக்கு விளக்கம் அளித்தார் அப்போது தான் அவனுக்கு புரிந்தது
“ஓஓ…ஓகே” என்றபடி எழுந்து அதை பிடித்துக்கொண்டு நடக்க போனவனை தடுத்தவர்
எப்படி நடக்க வேண்டும் வேட்டியின் நுனியை எப்படி பிடித்தபடி நடக்கவேண்டும் என்று விளக்க புரிந்தவன் அவர் சொல்லியது போல செய்து காட்ட அவர் ஓகே சொல்லவும் வெளியே இறங்கி வந்தான்.
அழகாகவும் கம்பீரமாகவும் அவன் வேட்டி சட்டையில் இறங்கியதை பார்த்த அனைவருக்கும் அவன்மேல் காதல் வராமல் இருந்தால்தான் தப்பு.
அனைவரும் தன்னை ஒரு மாதிரியாக பார்ப்பதை பார்த்த அந்த பெரிய நடிகனுக்கே வெட்கம் வந்துவிட்டது.
எல்லோரும் ஆவென பார்க்க அருந்ததி கூட அவனை ஆவென பார்த்தாள்.
தனது ஸ்பாட்டில் வந்து நின்றவன்
“ஐயம் ரெடி மிஸ் அருந்ததி” என்று கூற ஆவென நின்றவள் கால்மேல் ஒரு மிதிவிட்டாள் நிலவினி.
அதில் சுயம் வந்தவள்
“ஆ..” என்று கத்தியபடி நிலவினியை பார்க்க
அவளோ அவனையும் சுற்றத்தையும் கண்காட்ட
“ஹிஹிஹி” என்றுவிட்டு
“சாரி சார் ரெடி ரெடி” என்றுவிட்டு பெருமூச்சு விட்டாள்.
‘இவன் என்ன இவ்ளோ அழகா இருக்கான் இதுல தான் மேதா கவுந்துட்டாளோ?’ என்று யோசித்தபடி
“ஜூவல்ஸ் அண்ட் டச்அப்” என்று குரல் கொடுக்க அவனுக்காக நகைகளை கொண்டு வந்த மேக்கப் மேன் அவனுக்கு ஒரு செயினும் கையில் மோதிரம்,பிரேஸ்லெட், வாட்ச் அணிவித்துவிட்டு அவனுக்கு நெற்றியில் சந்தனம் வைத்து
“யுவர் லுக்கிங் ஹான்சம் இன் திஸ் காஸ்ட்யூம் சார்” என்றுவிட்டு சென்றார்.
அதைகேட்டு புன்னகைத்தவன்
எப்படி போஸ்லாம் கொடுக்க வேண்டும் என அருந்ததி விவரிக்க அதே போல் போஸ் கொடுத்தவன்
அடுத்த அரைமணி நேரத்தில் எல்லா போஸும் கொடுத்து ஓகே ஆனதும் முடித்துவிட்டு ஓய்வாக அமர்ந்தான் உடனே அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.
எப்படி? என்பது போல அவன் அஸிஸ்டென்ட் டைரக்டரை பார்க்க “மேதா மேடம் ஆல்ரெடி இன்ஃபார்ம் சார்” என்றுவிட்டு டச்அப் மேனை கூப்பிட்டான் அவன் ஜூஸை குடித்து முடித்ததும் டச்அப் செய்ய சொல்லிவிட்டு சென்றான்.
இவளை நினைத்து பெருமைபடுவதா? இல்லை அவளது நடிப்பை எண்ணி நகைப்பதா? என்று புரியாமல் இருந்தான் ஆரா.
அவனுக்கு டச்அப் செய்யும் நேரம் மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து கலைந்த முடியை சரிசெய்து விட்டபடி வேறு ஏதேனும் கலைந்துள்ளதா? என செக் செய்ய இருவரும் மறைத்தபடி நின்றிருந்த வேளையில்
“வாவ் மேதா வொண்டர்ஃபுள் டேக் போலாமா? டச்அப் வேணுமா?” என்ற அருந்ததியின் குரலில் அவன் நிமிர்ந்து அவர்களை விலக்கிவிட்டு பார்க்க
அங்கே அருந்ததியை பார்த்து தலையை ஆட்டியபடி பேசிக்கொண்டு வந்த மேதாவைதான் பார்த்தான் ஆராஷி.
(பேக்கிரவுண்டில் அவங்க ஊர் பாட்டு வர நமக்கு எப்பவும் காதலன் பட சாங்தான்
இந்திரையோ? இவள் சுந்தரியோ? என்று ஒலிக்க) அவளது மாறுபட்ட தோற்றத்தை பார்த்தவன் ஒரு கணம் மயங்கிவிட்டான் என்பதே உண்மை.
செட்டுக்கு ஏற்றவகையிலும் அவனது பட்டு சட்டைக்கு ஏற்றவகையிலும் அவள் அணிந்து இருந்த சற்றே அடர் ஃபீச் நிற புடவையும் லைட் பர்ப்பிள் நிற பார்டரும் அதே நிறத்தில் ப்ளவுசும் அதில் நிறைந்த வேலைப்பாடுகளும்.
அந்த புடவைக்கு ஏற்றவண்ணம் அவள் மேலிருந்து கீழ் வரை அணிந்திருந்த ஆபரணங்களும் காதோர ஜிமிக்கியும் அதை தாங்கியபடி பின்னங்கூந்தலில் சொருகப்பட்டு இருந்த மாடலும் ஜடை பின்னப்பட்டு அதில் அழகாக வடிவமைக்கப்பட்ட டிசைன் ஜடை அலங்காரப்பொருளும் கையில் டெம்ப்ரவரியாக ஒட்டப்பட்டு இருந்த மெஹந்தி ஸ்டிக்கரும் ஸ்டாபெர்ரி நிற லிப்கிளாஸ் கண்ணுக்கு மை மட்டும் அணிந்து அளவான அதே நேரம் அழகான மேக்கப்பும் என அவ்வளவு அழகாக இறங்கி நடந்து வந்தாள் அவள்.
‘என்ன இவ இவ்ளோ அழகா இருக்கா?’ என்றுதான் அவன் உள்ளம் எண்ணியது.
தேவதையே நடந்து வருவதுபோல வந்தவளை கண் இமைக்காமல் பார்த்தான் ஆராஷி.
இன்னைக்கு கொஞ்சம்பெரிய எபியா கொடுக்க நினைச்சேன் ஆனா முடியல.
என்ன ஸ்பெஷல்னா நம்ம கதையோட ஹீரா ஆராஷி ஷிமிஜு க்கு அதாங்க BTS V (taehyung) பிறந்தநாள்🎂🎂🎂💐💐❤️❤️❤️.
அதுக்காக தான்.
அவரு இப்போ ஆர்மில இருக்காரு அதனால பிறந்தநாளை கொண்டாடலை நாம கொண்டாடுவோம்💐🎂❤️ கொஞ்சம்பெருசா ட்ரை பண்ணேன் ஆனா முடியல வேலை ஜாஸ்தி ஆகிடுச்சு முடிஞ்ச வரை இன்னொரு எபி கொடுக்க பார்க்குறேன்.
எல்லாரும் நம்ம ஹீரோக்கு ஒரு ஹாப்பி பர்த்டே சாங் பாடிட்டு போங்க🎂🎂🎂