Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 69

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 69

அத்தியாயம் – 69

நின்ற சாஹித்யனிடம் மேதா எங்கே என்று கேட்க அவன் அவளை காயப்படுத்தியதை கூட மறந்துவிட்டு சாதாரணமாக பேசுகிறானே என்று கோபப்பட்டவன்
தனது கோவத்தையெல்லாம் அடக்கி கொண்டு
“அவ ஊரைவிட்டு போய்ட்டா எங்கேயோ காணாம போய்ட்டா” என்றுவிட்டு வேகமாக சென்றுவிட்டான். அவனது பேச்சு புரியாமல் நின்ற ஆராஷி தனது மேனேஜரை பார்க்க அவருக்கு தமிழ் புரியும் ஆதலால் அவர் மொழிபெயர்க்க முதலில் அதிர்ந்தவன் பின் டிராம முடிஞ்சுடுச்சுபோல அதான் ஓடிட்டா என்று எண்ணியபடி தோளை குலுக்கியவனுக்கு அவள்மேல் தவறில்லை என்பதே ஏதோ உறுத்தலாக இருந்தது. ஆனாலும் அவள் நடிக்க வந்தவள்தானே என்று அந்த உறுத்தலை கைவிட்டான்.
அவனது மேனேஜர் அதுவரை அவனைதான் பார்த்துக்கொண்டு இருந்தார்.
அவரது பார்வை அவனை துளைக்க ஏதேதோ எண்ணியவன் அவரிடம் காலையே கிளம்ப வேண்டும் என்றபடி ஓய்வெடுக்கும்படி கூறி தனது உடைமைகளை பேக் செய்ய போனான். ஆனால் ஏனோ மனது பாரமாகவே இருந்தது அவளும் எங்கே போனாள் என்று தெரியவில்லை.
இந்த ஒரு தவறு அவள்மேல் இல்லை என்பதால் அவள் தவறானவள் இல்லை அல்லவே.

அவளது வாயாலேயே அவளது காதலனிடம் பேபி பேபி என்று நடிப்பதை பற்றி பேசினாளே
அதை தானே கேட்டோமே?
என்று ஏதேதோ எண்ணியவனுக்கு அவளது அதிர்ந்து அழுது சிவந்த கண்கள் தன்னவளை நியாபகம் படுத்த இருவரும் ஒருவராக இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்குமே.
என்ற எண்ணம் தோன்றியது.
அடுத்த நொடி மனம் நோக அதையும் விட்டெறிந்தான்.
அவள் இப்போது தன்னவள் அல்லவே அவள் வேறு ஒருவரின் மனைவி அவரது குழந்தைக்கு தாய் அவளை தான் தன்னவளாக எண்ணுவது தவறு என்றே எண்ணினான்.
ஆனால் அவளுக்கு ஏன் தன்னை பற்றிய நினைவே இல்லாதது போல இருந்தாள்.
ஒருவேளை அவளுக்கு தன்மேல் காதலெல்லாம் இல்லையோ வெறும் பரிதாபம் மட்டுமா? அதனால்தான் அவளுக்கு என்னுடைய நியாபகமும் அதன் தாக்கமும் இல்லாமலே போனதா? என்னை மறந்து விட்டாளோ? ச்சே ச்சே அதான் தெரியும் என்று சொன்னாளே.
ஆனால் பழகியவள் போல இல்லாமல் தூர நிறுத்தினாளே திருமண வாழ்க்கை அவளை என்னை மறக்க செய்துவிட்டது போல என்றெண்ணி கவலையில் தோய்ந்தவனுக்கு தேஜூவிடம் ஒரு ஒதுக்கமே வந்தது அவனுக்கு புதிதாக பார்ப்பவள் போலதான் இருந்தது அவனுக்கு. ஆனால் மேதா.
காரணமே இல்லாமல் மேதாவின் நினைவு வந்து நின்றது அவனில்.

அவளது கண்கள், அவளது வேலை அக்கறை என்று நினைவு வர அதில் எதுவுமே நடிப்பு போல தெரியவில்லையே அவளிடம் நான் உணர்ந்த நெருக்கம் தான் தேடியவளிடம் கூட உணரவில்லையே. அவள் ஏன் பொய்யாய் போனாள் அத்தனையும் நடிப்புதானே? போய்ட்டா நடிச்சது போதும்னு போய்ட்டாளா இல்ல என்கிட்டே மாட்டிக்கிட்டதால இனிமேல் இங்க அவளோட நடிப்பு வேலைக்கு ஆகாதுனு போய்ட்டாளா? என்று மனம் புழுங்க யோசித்தவனுக்கு மூச்சே அடைப்பது போல தோன்ற அங்கிருந்து வெளியே வந்தான் வந்தவன் கண்ணில் அந்த பார்க் பட அன்று அவளை அங்கு கண்டதை எண்ணினான்.
சாதாரணமாக அவள் அன்று அணிந்து இருந்த புடவையும் எந்த மேக்கப்பும் இல்லாத அவளை அழகாக காட்டியதே ஆனால் எது நடிப்பு எது உண்மை என்று புரியாமல் கலங்கி போனான்.
அங்கு சென்று அமர்ந்தவனுக்கு ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்த அவனது ஜிம்மியை பார்த்தான் அவளை அழைக்க அவளோ வேறு யாருக்கோ காத்து இருந்தாள் ஆனால் அவளைத்தான் காணவில்லையே
ஏக்கமாய் பார்த்தவள் அவனிடம் வராமல் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.
அதை பார்த்தவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவன் அழைத்தால் ஓடிவந்து அணைத்து கொள்பவள் இன்று தன்னை தவிர்த்துவிட்டு போவது அவனுக்கு மேலும் மேலும் வேதனையே அளித்தது.

தான் தேடியவளும் தனக்கானவள் இல்லை தந்தையும் வேறு ஒருவளை நடிக்க அழைத்து வந்தார் தன்னை தேடி வந்தவளும் நாடககாரி ஆகிபோனாள்.
இப்போது தன்னுடனே இருப்பவளும் தன்னை தவிர்த்து செல்ல ‘தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? தன் வாழ்வில் வரும் பெண்கள் யாரும் தன்னை புரிந்து வரவில்லையே ஏன்?’ என்று யோசித்து யோசித்து அவனுக்கு தலைவலியே வந்து விட்டது.

அங்கு ஒவ்வொரு இடமும் அவளையே நியாபக படுத்த ‘ச்சே என்ன இது? ஏமாத்திட்டு போனவள பத்தி நான் ஏன் இவ்ளோ யோசிக்கிறேன்? முதல்ல இங்க இருந்து போகனும்’ என்றென்னியபடி எழுந்து மீண்டும் ரூமிற்குள் வந்தான் வந்தவன் அவளை பற்றிய சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பெட்டியை அடுக்க தயாரானான்.
பேக் செய்துவிட்டு படுக்கையில் விழுந்தவனுக்கு மீண்டும் மீண்டும் மேதாவின் கலங்கிய முகமே நினைவில் வர தலையணையை எடுத்து முகத்தை மூடியபடி படுத்துவிட்டான்.
புரண்டு புரண்டு படுத்தவன் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு தான் உறங்கினான் காலை அவனது ஜப்பான் மேனேஜர் வந்து அவனை எழுப்ப தலைவலியோடு எழுந்து அமர்ந்து
“மேதா ஒன் கிரீன் டீ” என்று கேட்டபடி எழுந்து முகம் கழுவ போனவனை விசித்திரமாய் பார்த்தார் அவர்.
போனவன் ஒருகணம் அப்படியே நின்றான்.

என்னவாயிற்று தனக்கு என்று எண்ணியபடி தலையில் அடித்துக்கொண்டவன் திரும்பி
மேனேஜரை பார்த்து
“நா..நான் ரெடியாகிட்டு வர்றேன்” என்றபடி வாஷ்ரூமிற்குள் புகுந்து கொண்டான்.
இந்த ஆராஷி அவரை மிகவும் வியக்கவைத்தான்.
அவன் சென்ற நேரம் உள்ளே வந்தான் சாஹித்யன்.
வந்தவன் அவரிடம் இதெல்லாம் ஆராஷியோட பொருட்கள் மேதாவிடம் லாக்கர்ல இருந்தது என்று ஒரு டிரான்ஸ்லேட்டர் மற்றும் இரண்டு டைரி அவளது டேப்லெட் என்று சகிதம் இருந்தது. அதை வாங்கியவர் என்னவென்று கூட பார்க்காமல் நன்றி கூறியபடி நடந்த தப்புக்கு ஆராஷி சார்பாக மன்னிப்பை வேண்டியவர்.
அந்த பொருட்களை தனது லக்கேஜ்ஜில் வைத்தார்.

சாஹித்யன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அதற்குமேல் என்ன சொல்வது என்று அவர் அமைதியானார்.
கிளம்பி வெளியே வந்த ஆராஷி அங்கு சாஹித்யன் நிற்பதை கண்டு மரியாதை நிமித்தமாக குட் மார்னிங் சொன்னான் பதிலுக்கு அவனும் குட் மார்னிங் சொல்லியபடி எல்லாம் தயாராக இருப்பதாகவும் இருவரும் உணவு அருந்தி விட்டு வந்தால் புறப்படலாம் லாட் டைம் கம்மியாக கொடுத்து இருப்பதாக கூறினான் சாஹித்யன்.
சரியென கிளம்பியவன் ஜிம்மியை அழைக்க அவளோ அவனிடம் வராமல் தூரமாகவே நின்றாள் அதை பார்த்து மனம் நொந்தவனை சமாதானம் செய்த மேனேஜர் அவரே ஜிம்மியை ரெடி செய்தார்.
உணவு அருந்தியபின் சாஹித்யனிடம் நிதினிடம் பேச வேண்டும் என்று கூற “இல்ல சார் சேட்டா..சாரி அவர் இங்க இல்ல நேத்து நைட்டே லண்டன் போய்ட்டாரு மேதாவை தேடி” என்றுவிட்டு முன்னே சென்றான்.

‘ஒரு வேலைக்காரிக்காக இப்படி அவ பின்னாடியே ஓடுறாரா?’ என்று எண்ணியவன் கிளம்பினான்
அவர்களை ப்ளைட்டில் ஏற்றும் முன்
“உங்களோட வேலை செஞ்சது ரொம்ப சந்தோஷம் சர். பாடிகார்ட்ஸ் உங்கள உங்க ஊர் பாடிகார்ட்ஸ்கிட்ட பத்திரமா ஒப்படைச்சுட்டு திரும்பிடுவாங்க…சீக்கிரமே நம்ம கான்ட்ராக்ட் முடிஞ்சுடும் நீங்க உங்க வேலையில மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் பத்திரமா போய்ட்டு வாங்க”என்று வாழ்த்து சொல்லி விடை கொடுத்தான் எதுவும் பேசாமல் சிறு புன்னகையை உதிர்த்தவன் ப்ளைட்டில் ஏறி அமர்ந்தான் சாஹித்யனிடம் பேசிவிட்டு ஏறிய மேனேஜர் அவன் எதிரில் ஜிம்மியோடு அமர்ந்தார்.
அவனது பின் சீட்டில் பாடிகார்ட்ஸ் அமர்ந்தனர்.
உடனே கிளம்ப ஆயத்தமானது
எதையோ இழந்தவன் போல அமர்ந்திருக்கும் ஆராஷி அவருக்கு புதிது. அவனது நடிப்பு தொழில் வளர ஆரம்பிக்க நேரத்தில் தான் அவர் அவனுக்கு மேனேஜராக வந்து சேர்ந்தார். அதனால் அவனது கடந்தகால வலிகள் அவருக்கு முழுமையாக தெரியாது. அதனால் அவர் பிரச்சினை என்ன என்று தெரியாமல் பேசிவிடகூடாது என்று எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ஏதோ மனம் பாரமாக உணர்ந்தவன் என்ன இது நமக்கு இப்படி ஏதோ இனம்புரியாத வலி தோன்றுகிறதே என்று கண்மூடி அமர்ந்து இருந்தவன் ஏதோ தோன்ற மேனேஜரை பார்த்தான். அவரும் அவனைதான் பார்த்திருந்தார்.
அவரை பார்த்து புன்னகைத்தவன்
“எனக்கு தூக்கம் வருது யாரும் எழுப்பவேணாம்” என்றுவிட்டு கண்களை மூடிக்கொண்டு படுத்தான் ஐ மாஸ்க் போடாமலே அவன் காதுகளில் மட்டும் ஹெட்ஃபோன் மாட்டி இருந்தான் அதனால் அவரும் எதுவும் பேசாமலே அவனை பார்த்து யோசனையாய் இருந்தார்.
சிறிது நேரத்தில் அவரும் டையர்டில் உறங்கிவிட மெதுவாக பாடிகார்ட்டும் ஹேர்ஹோஸ்டர்ஸ்ஸும் பேசும் சப்தம் கேட்டு கண்களை திறவாமலே வைத்து இருந்தான் ஆராஷி.

“ரிட்டர்ன் ஆனதும் எங்கேமா அம்மா வீட்டுக்கா இல்ல மாமியார் வீட்டுக்கா?” என்று அந்த பாடிகார்ட் கேட்க அவருக்கு நன்கு பரிச்சயம் ஆன அந்த விமான பணிப்பெண்.

“அச்சன்ட வீட்டுக்கு சேட்டா, அச்சன்ட இல்லத்திலே ஒரு பங்ஷன் இருக்கு அது அட்டென்ட் செய்ய போவாம். அப்புறம் தான் மாமியார் ஹோம்” என்று கூற சேட்டா என்ற வார்த்தையில் அதிர்ந்து எழுந்தவன் அவர்களின் இருக்கை அருகில் வந்தான் அவன் அதிர்ந்து எழுந்ததை பார்த்து மேனேஜரும் அதிர்ந்து எழுந்தார்.
அவனை பார்த்து முதலில் அதிர்ந்த அந்த பணிப்பெண் வேலை நேரத்தில் சொந்த விஷயம் பேசுகிறோம் என போட்டு கொடுத்துவிடுவானோ என பயந்தவள்

“ச..சாரி சர் சாரி ட்டூ டிஸ்டர்ப் யூ. ஹியர் ஆஃப்டர் வீ வில் நாட் டாக்” (மன்னிச்சிடுங்க சர் உங்கள தொந்தரவு செய்ததுக்கு இனிமேல் நாங்க பேசமாட்டோம்)என்று மன்னிப்பு வேண்ட

“நோ..நோ. ஐ ஜஸ்ட் ஹியர் சம் வேர்ட் யூ ஸ்பீக் ஐ நீட் ட்டூ க்நோ தட் மீனிங்”(இல்ல இல்ல நான் வந்தது இப்போ ஒரு வார்த்தை கேட்டேன் அதோட அர்த்தம் தெரியனும்) என்று கூற
அந்த பெண் புரியாத பார்வை பார்த்தாள் அவனை

“தட்..தட் வேர்ட் ஈஸ் ஷே.. ஷேட்டா”(அது..அது அந்த வார்த்தை என்று கூற அவன் கூற வருவது புரியாமல் அந்த பெண்ணும் பாடிகார்ட்டும் திருதிருவென முழிக்க மேனேஜர் அவர்கள் அருகில் வந்தார் அவர் என்னவென கேட்க ஆராஷி அவரிடமும் அந்த வார்த்தையையே சொல்ல அவரும் புரியாமல் அவர்கள் அதற்கு முன் பேசியது என்ன என்று கேட்க அந்த பெண்
இருவரும் பேசியதை சொல்ல
“யாஹ் தட் வேர்ட்” (அந்த வார்த்தைதான்) என்று இடைநிறுத்த அவர் அந்த வார்த்தையை கேட்டு அது என்ன மொழி என்று கேட்டார் ஏனெனில் அவர் தமிழ் மட்டுமே கற்று கொண்டார்
அதனால் அந்த பெண் “இட்ஸ் மலையாளம் லேங்குவேஜ் சர். சேட்டா னா அண்ணா இல்லனா வயசுல பெரியவங்களை கூப்பிடுறது”(its malayalam language sir. Cheta means elder brother or eldest peoples called with respect) என்று விளக்க அதிர்ந்து போனான் ஆரா.
தடுமாறி விழப்போனவனை தாங்கி பிடித்தனர் பாடிகார்ட்டும் மேனேஜரும்

“ஷே..ஷேட்டா மீன்ஸ் பிரதரா?” (ஷேட்டானா அண்ணாவா?)
என்று கேட்க அந்த பெண் ஆமாம் என்று கூற இதயமே வெடித்துவிடும் போலானது அவனுக்கு ஆனால் மேலும் தெளிவு பெற வேண்டுமே என்று
அந்த அதிர்வு மாறாமலே மேலும் அவன் இன்னொரு கேள்வியும் கேட்டான்.

“தென் எ..என்டே மோளே மீன்ஸ்?” (அப்போ என்ட மோளேனா) என நடுக்கத்தோடு கேட்க

அந்த பெண் இப்பொழுது
“என்ட மோளேனா மை டியர் டாட்டர்னு அர்த்தம் தட் வேர்ட் டாட் யூஸிங் ஃபார் ஹிஸ் டாட்டர் லவ்விங்லி”(அந்த வார்த்தை அப்பா மகளை பாசமாக கூப்பிடும் வார்த்தை) என கூற அவ்வளவு தான் இதயத்தை பிடித்துக்கொண்டு ப்ளைட்டின் தரைதளத்திலேயே அமர்ந்து விட்டான்.
உடனே பதறிய அனைவரும்
“சர்.. சர்.. ஆரா” என்று ஒருசேர அவனை நோக்கி வர அவர்களை கைநீட்டி தடுத்தவன் கண்கள் கலங்கி நீர் வழிய ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *