Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-97

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-97

அத்தியாயம் – 97

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தன் கவலையை மறைத்து புன்னகைத்தவனை தான் அனைவரும் பார்த்தபடி இருந்தனர்.
அனைவரது மனங்களும் கனத்து போய் இருந்தது.
அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றுதான் யாருக்குமே தெரியவில்லை.
அவனது அருகில் வந்த ஹர்ஷத்

“அவ உங்களவிட்டு விலகி தூரமா ஓடனும்னு தான் குறியா இருக்கா அவளுக்கு இருக்குற குறை உங்களுக்கு தெரியக்கூடாது தெரிஞ்சு கல்யாணம் செஞ்சுகிட்டா அது ஏதோ நீங்க குற்ற உணர்ச்சியில ஏத்துக்கிட்டா மாதிரி இருக்கும்னு நினைக்குறா அவளோட அந்த எண்ணத்தை நீங்கதான் மாத்தணும் அதுக்கு அவ உங்களோட ப்ரோபஸலை மறுக்கவோ தடுக்கவோ முடியாதபடி உங்க ப்ரபோஸ் இருக்கனும்.
அந்த மாதிரி என்ன செய்யலாம்னு யோசிங்க ஆராஷி சர்” என்று அவன் கூற சிறிது நேரம் யோசித்தவன்
தனது ப்ளானை எல்லோருக்கும் விளக்கினான்.
அனைவருக்கும் அவனது திட்டம் சரியென பட எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

ஆனால் யோசனையோடு அமர்ந்து இருந்த நிதினை பார்த்த ஆராஷி அவனிடம் திரும்பி
“நான் சொன்னது உங்களுக்கு பிடிக்கலையா? அதான் இப்படி யோசனையில இருக்கீங்களா?” என்று அவன் கேட்க.

“நீங்க சொல்றது ஓகேதான் ஆனா எதெல்லாம் வெளியே நடக்ககூடாதுனு மேதா இவ்ளோ கஷ்டப்பட்டாளோ அதெல்லாம் நடக்கும்னு நீங்க சொல்றீங்க அதை எப்படி மேதா ஏத்துக்கும்?
அந்படி செஞ்சா அது அவளை உங்கள விட்டு இன்னும் தூரம் ஆக்காதா? இதெல்லாம் நடந்தா அப்புறம் உங்களோட கெரியர் ஸ்பாயில் ஆகிடுமே இதை மேதா கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டா” என்று நிதின் கூற புன்னகைத்தவன்

“உங்களுக்கு உங்க சிஸ்டர்ர பத்தி சரியா தெரியல ஆனா நான் லவ் பண்ண என்னோட அஷ்ஷூவ பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.
நீங்க சொன்னது சரிதான் இதையெல்லாம் மேதா ஏத்துக்க மாட்டா ஆனா அதுதான் எனக்கு வேணும் அவ அதையெல்லாம் தடுக்கவாச்சும் என்னை தேடி வரணும்ல அதுக்காகதான் இந்த ஏற்பாடு.
என் கெரியர் கண்டிப்பா இஷ்யூ ஆகும் ஆனா அதை எப்படி காப்பாத்தனும்னு என்னோட ஸ்பான்சர்க்கு தெரியும் அவ
ஓ ஸாரி அவங்க அதை ஈஸியா ஹாண்டில் பண்ணிடுவாங்க” என்று நிதினுக்கு புரியும்படிகூற இப்போது தான் அவனுக்கு ஆராஷியின் திட்டம் முழுவதுமாக புரிந்தது.
சரியென மண்டையை ஆட்டியவன் அவன் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அவரவர் என்னென்ன செய்ய வேண்டும் என சொன்னவனை பார்த்து
“நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் ஆரா” என்று தேஜு சொல்ல
“கண்டிப்பா அண்ணி” என்றவன் பேசி முடிக்க ஹர்ஷத்

“சர் ஷூட்க்கு லேட் ஆகுது கிளம்பலாமா?” என்று கேட்க.

“ஆரானே கூப்பிடலாம் ஹர்ஷத்” என்று கூற
“நான் இப்போ என்னோட வேலையை துவங்கிட்டேன் சர் இன்னும் என்னோட வேலையில இருந்து விலகல சர் விலகின அப்புறம் அப்படி கூப்பிடுறேன்” என்று கூற

“ஆஸ் யுவர் விஷ்” என்றபடி அன்றைய ஷூட்டிங்க்கு சென்றவன் அதை அழகாக முடித்து கொடுத்துவிட்டு
அதே நாள் அவனது தமிழ் பாடல் ஒன்று ரெக்கார்டிங் இருந்ததால் அதை இரவோடு இரவாக அமர்ந்து அவர்கள் கேட்டபடி பாடி கொடுத்தவன் அந்த பாடலுக்கு முழு அர்த்தத்தையும் ஹர்ஷத்திடம் கேட்டு தெரிந்து கொண்டான்.

இதற்கிடையில் நிதின் மெயில் மூலமாகவும் ஹர்ஷத் ஷர்மாவின் மெஸேஜ் மூலமாகவும் மேதஷ்வினிக்கு ஆராஷி அவனது அனைத்து இரகசியங்களையும் மேடையில் சொல்லப்போவதாகவும் தங்களது பிஸினஸ் ஸ்டார்ட் பற்றி அறிவிப்பதாகவும் தாங்கள் தடுக்க முயன்றும் அவர் கேட்பதாக இல்லை எல்லாம் சொல்லப்போவதாகவும் தகவல் வர அதிர்ந்து போனாள் மேதா.

‘இவருக்கு என்ன ஆச்சு? இப்படி பர்சனல் லைஃப்ப பத்தி பப்ளிக்ல சொன்னா அவரோட இமேஜ் அண்ட் கெரியர் ரெண்டும் ஸ்பாயில் ஆகாதா? ஏன் இப்படிலாம் அவர் யோசிக்கிறார் யார் பேச்சையும் கேட்க கூடாதுனு இருக்காரா?’ என்று மனதில் அவனுக்கு வசைபாடியவள் அவன் முடிவெடுத்தபின் மாற்ற மாட்டான் என்று அறிந்தவள் மேடையில் அவனை பேசவிடாமல் தடுக்க வேண்டும் என்று எண்ணியபடி இருந்தவள்
கண்களல மூடி சேரிவ் சாய்ந்தாள்

‘நான் ஏன் திரும்ப திரும்ப இவர்கிட்டயே சுத்தி சுத்தி வர்றேன்?’ என்று அவளது உள்மனம் யோசிக்க

‘bcz u only loving me more than others’ (ஏன்னா மத்தவங்களவிட நீதான் என்னை ரொம்ப லவ் பன்ற) என்று அவனே சொல்லி அவளது நெற்றியில் முத்தமிடுவது போல தோன்ற அதிர்ந்து கண்களை திறந்தாள்.
‘மேதா நீ சரியில்லடி எப்படி இப்படிலாம் யோசிக்கிற நீ? அவரை பத்தி யோசிக்க சொன்னா ரொமான்டிக்கா யோசிக்கிற நீ?’ என்று அவளது மனசு அவளை துப்ப
தன் தலையில் தட்டிக்கொண்டவள் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டவள் அங்கிருந்த செக்யூரிட்டி சென்டருக்கு ஃபோன் செய்து ஏதேதோ பேசினாள் பின்பு அவளது மெயிலில் இருந்து அவர்களுக்கும் பிறகு அங்கு இருக்கும் ஹையர் ஃபோலீஸ் அலுவலகத்திற்கும் சில ஆதாரங்களோடு ஒரு லெட்டரையும் சேர்த்து அனுப்பி வைத்தவள் இது எல்லாம் ரகசியமாக பார்த்து கொள்ளும்படியும் கேட்டவள் இதில் எதுவும் சொதப்பிடகூடாது எனவும் கேட்டுக்கொண்டாள்.
அவள் யார் என்று சொல்லி கேட்டதால் அவர்களும் உடனே அதற்கு ஒத்துக்கொண்டனர்.
அன்றைய தினம் வீட்டுக்கு வந்தவளை பிடித்துக்கொண்டாள் மெடில்டா.

“வா வா ரொம்ப நாளா உன்கிட்டே ஒன்னி கேட்கினும்னு இருந்தே நீதான் பிஸி இன்னிக்கி ஒரு வீடியோ பார்த்தே அதா கேட்டே ஆகணும்னு வெயிட் பன்றேன்” என்றபடி பேசியவள் அவளை அமரவைத்து அவள் என்ன சொல்ல போகிறாள் என பார்த்தாள்.

“என்ன கேட்கணும் கேளு மெடி” என்று மேதா சொல்ல தன் மொபைலை எடுத்தவள் அதிலிருந்து ஒரு வீடியோவை ப்ளே செய்தாள்.

‘சினிமா செய்தி.
ஹாலிவுட் ஃபேமஸ் நடிகருக்கும்
அவரது மனைவிக்கும் விவாகரத்து நடைபெற உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு.
மற்ற பெண்களோடு இணைந்து நடிப்பதும் அந்த பெண்களோடு அவர் கிசுகிசுக்க படுவதும் அவரது சொந்தங்களே அவரை கேவலமாக பார்ப்பதாலும் இதெல்லாம் நடக்காமலா இருக்கும் என பலரின் பேச்சுகளாலும் மனம் உடைந்த அவரது மனைவி விவாகரத்து கேட்டுள்ளார்’ என்ற செய்தியை போட்டு காட்டியவள் உன்னிப்பாக மேதாவின் உணர்வுகளை படிக்க நினைத்தாள் அந்தோ பரிதாபம் அவளது முகத்தில் எந்த மாற்றமும் இன்றி அல்லவா இருந்தது.
அந்த செய்தியை பார்த்தவள்
“இது அவங்க பர்சனல் இதை ஏன் என்கிட்ட காட்டிட்டு இருக்க மெடி?” என்று மேதஷ்வினி கேட்க

“நீ லவ் பன்றே பையன்கூட ஃபேமஸ் ஆக்டர் அண்ட் சிங்கர்
அவிருகூட நிறையே பொண்ணுங்கே கூட லவ் ஃபிலிமா நடிக்குது.
அப்போ அவரோட சர்க்கிள் உன்னியோட ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஆல்சோ இப்படிதானே பேசும்.
அங்க எக்ஸ்பிரஸ் பன்ற அதே லவ்வதானே உன்கிட்டயும் செய்யும்? இதெல்லா தேவையா? அந்த பையன விட்டு வேற ஆள் பாரேன்?” என்று மெடில்டா கூற அத்தனை நேரம் இருந்த மனவருத்தம் நீங்கி பக்கென சிரித்துவிட்டாள் மேதஷ்வினி.
அவள் சிரிப்பது எதற்காக என புரியாமல் அவளை பார்த்தாள் மெடில்டா.
அவளது புரியாத பாவனையை கண்டு தன் சிரிப்பை அடக்கிய மேதா
“ஐயம் சாரி ஐ கேனாட் கன்ட்ரோல் மை லாஃப்(I am sorry I can’t control my laugh)” என்றபடி தொடர்ந்தாள் மேதா.

“உனக்கு இதை நான் எப்படி எக்ஸ்பிளைன் பன்றது?” என்றபடி யோசித்தவள்.

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய்-97”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!