Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் -98

வேண்டும் நீ எந்தன் நிழலாய் -98

அத்தியாயம் – 98

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

“உன்னோட டவுட் சரிதான் மெடி. நான் அவருக்கு அசிஸ்டெண்ட்டா வேலை செய்யும்போது அவர் வேற ஒரு ஹீரோயின் கூட ஜோடியா நடிக்கிறதை பார்த்து எனக்கும் ஒரு மாதிரியா தான் இருந்தது. ஆனா அப்புறம் அவர் மத்தவங்ககிட்ட காட்டுற நெருக்கத்துக்கும் என்கிட்ட காட்டின நெருக்கத்துக்கும் வித்தியாசம் புரிய ஆரம்பிச்சது.
உரிமை இல்லாதவங்கள தொடுறதுக்கும் உரிமையோட ஒருத்தரை தொடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு மெடி” என்றவள்
அவளுக்கு புரியும்படி எப்படி சொல்வது என்று யோசித்த மேதா கண்களில் பக்கத்து வீட்டு மாடியில் ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்த புறாக்கள் தென்பட்டது.
அதை பார்த்தவள்
“அந்த புறாலாம் பார்த்தா உனக்கு ஏதாவது வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுதா? எது எதோட ஜோடினு உன்னால கரெக்டா கெஸ் பண்ண முடியுமா?” என்றாள் மேதா.

“அது நமக்கு கஷ்டம் ஆனா அதுக்கு அதோட ஃபேர் பத்தி கரெக்டா தெரியும்” என்றாள் மெடில்டா.
“ம்ம் கரெக்ட் அதேதான் எனக்கும் அவரோட உண்மையான லவ் எது? நடிப்பு லவ் எதுனு நான் ஈஸியா கண்டுபிடிச்சுடுவேன்.
அவரோட ஒரு கண் பார்வை போதும் அவரோட மொத்த காதலையும் சொல்ல.
இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுங்களோட நடிச்சு இருக்காரு ஆனா யாரோடயும் ரொம்ப டீப் க்ளோஸ்ஸா நடிக்க மாட்டார் அதேபோல லிப் கிஸ் சீன் நடிக்கவே மாட்டாரு அது எவ்ளோ பெரிய ஹீரோயின் எவ்ளோ லாபம் வர்ற படமா இருந்தாலும் செய்ய மாட்டார்” என்று பேசும்போதே குறுக்கிட்ட மெடில்டா

“பட் உன்னை டீப்பா கட்டி புடிச்சு நடிச்சு லிப் கிஸ் வேற செஞ்சாரே? அப்போ நீ யாருனே அவருக்கு தெரியாது தானே அப்புறம் எப்படி?”
என்று அவள் கேள்வி கேட்க
“ம்ம் ஆனா அதை நான்னு தெரிஞ்சு அவர் செய்யலதான் ஆனாலும் என்னை தவிர வேற யார்கிட்டயுமே அப்படி செய்யல அவருக்கு என்மேல லவ் இருந்து இருக்கு அதேசமயம் கோவமும் இருந்து இருக்கு கோவத்தையும் லவ்வையும் எப்படியெல்லாம் காட்டணும்னு தெரியாம அப்படி செஞ்சுட்டாரு ஆனா அதை எதுவும் நடிக்க அவர் செய்யலையே அவரோட ரியல் லைஃப்ல தானே செஞ்சாரு.
அப்பவும் அவர் கிஸ் பண்ணனும்னு நினைச்ச ஒரே பொண்ணு நான்தானே.
வேறே ஏதோ ஒரு பொண்ணை கிஸ் பண்ணி அவர் மனசுல இருந்த பொண்ணுக்கு துரோகம் செஞ்சுட்டதா எண்ணி எவ்ளோ வருத்தப்பட்டுட்டு இருந்தாரு ஆனா அப்புறம் அவர் நான்தான் மேதானு தெரிஞ்சு அவர் ரொம்ப சந்தோஷப்பட்டாரே.
அந்த ஒரு ரியாக்ஷன் போதாதா அவரோட லவ்க்கு அவர் எவ்ளோ மதிப்பு கொடுத்து இருந்தாருனு?
அப்படியே அவர் வேற பொண்ணை லவ் பண்ணாலும் பிரச்சினை இல்லை ஏன்னா அது அவரோட தனிப்பட்ட விருப்பம் அதுல தேவையில்லாம தலையிட மாட்டேன் எனக்கு அவரோட சந்தோஷமும் சேஃப்டியும்தான் முக்கியம்.
எல்லா லவ்வும் ஒன்னா சேர்ந்தே ஆகணும்னு இல்லையே? வானத்துல இருக்குற நிலாவை யார் வேணாலும் சொந்தம் கொண்டாடலாம் ஆனா அந்த நிலா வானத்துக்கு மட்டும் தான் சொந்தம்.
என்னைபோல எத்தனை பேர் அவர்மேல ஆசை வெச்சுட்டு இருக்கலாம் ஆனா அவரோட வாழ்க்கையில வர்ற பொண்ணுக்குத்தான் அவர் சொந்தம் இப்போ அவர் மனசுல நான் இருந்தாலும் அவர் வாழ்க்கையில நான் இருக்கமுடியாது அவர் வாழ்க்கையில வேற பொண்ணு யாராவது வந்தா அவர் சந்தோஷமா இருக்கணும் அதுதான் என்னோட ஆசை.
என்னைக்குமே அவர் எனக்கு தூரத்து நிலாதான் ” என்றாள் கண்கள் கலங்க பேசியவள் கண்ணீரை துடைத்தபடி அவளை பார்த்து புன்னகைத்து
“இனிமேல் இதை பத்தி எதுவும் கேட்காதே மெடில்டா” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் மேதா.
அவள் பேசியதை அதுவரை அவளுக்கே தெரியாமல் வீடியோ ரெக்கார்ட் செய்திருந்தாள் மெடில்டா அதை ஹர்ஷத்துக்கு அனுப்பினாள்.
அனுப்பியவள் அவனுக்கு ஃபோன் செய்தாள்
அந்த நேரம் ஆராஷியோடு ப்ரோக்ராம் டீடெயில்ஸ் பத்தி பேசிக்கொண்டு இருந்த ஹர்ஷத் ஃபோனை எடுத்து பார்க்க மெடில்டா எனவும் மேதாவிற்கு என்னவோ ஏதோ என பதறி உடனே அட்டென் செய்தவன்
“சொல்லு மெடில்டா மேதாக்கு எதுவும் இல்லல? அவ நல்லா இருக்காள?” என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க அருகில் இருந்த ஆராஷிக்கு திக்கென்று ஆனது.
“என்ன ஹர்ஷத் அஷ்ஷூக்கு என்ன ஆச்சு?” என்று அவன் பதறி கேட்க
அப்போது தான் அவன் பக்கத்தில் இருப்பதை உணராது ஃபோன் பேசிய தவறை உணர்ந்தவன்
“ஒரு நிமிஷம் சர்” என்றபடி ஃபோனை ஸ்பீக்கரில் போட்டான்.
அந்த பக்கத்தில் மெடில்டா அவனை கழுவி ஊத்த ஆரம்பித்து விட்டாள்.

“ஏன்டா நான் ஃபோன் பண்ணாலே அவளுக்கு ஏதாவது ஆனா தான் பண்ணனுமா? இதுல நீ பக்கத்திலே யாரையோ சேர்த்து வேற பயம் பன்ற நீ ப்ரைன்லெஸ் ஃபெல்லோ” என்று அவள் திட்ட அப்போதும் ஆரா தவித்தபடி என்னவென்று கேட்க
“ஏய் முதல்ல மேதா எப்படி இருக்கானு சொல்லுமா?” என்று ஹர்ஷத் கத்த
“அவளுக்கு உடம்புக்குலாம் எதுவும் இல்லடா நல்லா இருக்கா ஆனா அந்த ஆக்டரால தான் அவ ரொம்ப கஷ்டப்படுறா?” என்று அவள் பீடிகை போட அதிர்ந்து ஆராவை பார்த்தான் ஹர்ஷத்.
தான் எதுவும் செய்யவில்லை என்று ஆரா சைகை செய்ய
“வாட் யூ மீன் அவர் என்ன செஞ்சாரு?” என்று ஹர்ஷத் கேட்க
“அவர் அவளை லவ் பண்ணலையே அது போதாதா அவ கஷ்டப்பட? அவ மட்டும் அவர்மேல உயிரே வெச்சு இருக்கா ஆனா அந்த ஆக்டரு வேற பொண்ணுங்க கூட நடிச்சுட்டு ஹாப்பியா இருக்காரு” என்று அவள் சொல்ல இது என்னடா வம்பா போச்சு என்று நினைத்தவன் ஸ்பீக்கரை மூடியபடி தனியாக போய் பேசுவோம் என எண்ணி
“சர் நான் பேசிட்டு வந்துடுறேன்” என்றபடி ஸ்பீக்கரை ஆஃப் செய்ய போனவனை தடுத்த ஆராஷி
“என்ன சொல்றாங்கனு எனக்கு தெரியணும்” என்று இரகசியமாக சொன்னவன் பேசுமாறு சைகை செய்தான்.

ரைட்டு என்றபடி
“புரியுறமாதிரி சொல்லு மெடி அவர் அவளை லவ் பண்ணாம ஜாலியா இருக்காருனு உனக்கு தெரியுமா? உனக்கும் எனக்கும் நம்ம வேலை எப்படியோ அதேபோல அவருக்கு நடிக்கிறது வேலை அதை செஞ்சா அவருக்கு மேதா மேல லவ் இல்லனு அர்த்தமா?” என்று அவன் கேட்க
“அது இல்ல மேன் நான் இன்னைக்கு மேதாகிட்ட ஒரு கொஸ்டின் கேட்டேன்.
அதுக்கு அவ ஆன்ஸர் பண்ணது எனக்கு தெரிஞ்சவரை அவளுக்கு அவரு வேற பொண்ணுங்களோட நெருக்கமா நடிக்கிறது புடிக்கலை போல ஆனா அதை அவ நியாயம் போல பேசுறா அதே சமயம் அவரோட அவளால சேர்ந்து வாழ முடியாதுனு சொல்லி பேசுறா அவளுக்கு என்னதான் பிரச்சனை ஏன் இப்படி பேசுறா அந்த ஆக்டர் மட்டும் அவளை உண்மையா லவ் பண்ணி இருந்தா அவளோட மனசை கஷ்டப்படுத்துற அந்த ஆக்டிங் வேலையை செய்வாரா? எத்தனை பொண்ணுங்க அவரை லவ் பண்றேன்னும் அவர்தான் என் ஹஸ்பண்ட்னும் ரீல்ஸ் போஸ்ட்டுனு போடுறாங்க அதெல்லாம் பார்த்தா அவ மனசு எப்படி கஷ்டப்படும்?
அவ மனசு கஷ்டப்பட்டு பேசினா அது எனக்கு தெரியக்கூடாதுனு சிரிச்சுட்டு இனி இதை பத்தி பேசாதேனு சொல்லிட்டு போறா அந்த ரெக்கார்டிங்க உனக்கு சென்ட் பண்ணி இருக்கேன் நீயே கேட்டு தெரிஞ்சுக்க எனக்கு அந்தே ஆக்டர் மேல கோவமா வருது என் மேதா கஷ்டப்படுறத பார்த்தா?” என்றுவிட்டு வைத்துவிட்டாள்.

‘பையித்தியமா இவ?’ என்றபடி மொபைலை பார்த்தவன் கால் கட் ஆகி விட்டதால் ஆராஷியிடம் திரும்பி
“சாரி சர் அவ ஏதோ கோவத்துல ஒலறுரா” என்று அவன் சமாளிக்க
“அவங்க சொல்றதும் உண்மைதானே ஹர்ஷத். எனக்கும் தெரியும் மேதாக்கு நான் வேற ஆளுகூட க்ளோஸ்ஸா நடிக்கும்போது அவளுக்கு கஷ்டமா இருக்கும்னு இதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும்” என்று அவன் கூற அவனை ஆச்சர்யமாய் பார்த்தான்.

“ம்ம்… என் பி.ஏ வா அவ இருந்தப்பவே அவளுக்கு இது புடிக்கலைனு தெரிஞ்சுக்கிட்டேன் அதனாலதான் அவளோட ரொம்ப க்ளோஸ்ஸா நடிச்சு அவளை வேலையை விட்டு துரத்துறேன்னு நானே எனக்கு சூனியம் வெச்சுக்கிட்டேன்
ஆனா அவளை தவிர வேற யார்க்கிட்டயும் நான் அவ்ளோ க்ளோஸ்ஸா நடிச்சது இல்ல ஹர்ஷத்.
அவகிட்ட நடிச்சேனானும் எனக்கு இன்னும் புரியாத நிலமைதான்.
இதுக்கு நான் வேற வழி வெச்சு இருக்கேன்
சரி அந்த ரெக்கார்டிங் ப்ளே பண்ணுங்க” என்று அவன் கேட்க
ஒரு பெருமூச்சை விட்டவன்
சரியென வீடியோவை டவுன்லோட் செய்து ப்ளே செய்தான்.
அது வீடியோ ரெக்கார்ட் என்று உணர்ந்தவுடன் ஹர்ஷத்திடமிருந்து உடனே மொபைலை வாங்கினான் ஆரா.
அவளது மேதா எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அன்று அணிந்திருந்த அதே பர்ப்பிள் வண்ண புடவையை கட்டி இருந்தாள்.
சந்தோஷத்தை தொலைத்த முகம் வாடிப்போய் இருந்தது.
கலங்கி இருந்த கண்கள் அவளுக்கு யாருமே இல்லை என்பது போல ஒரு தோற்றத்தை கொடுத்தது ஆராஷிக்கு உடனே ஓடிச்சென்று அவளை அணைத்து உனக்கு நான் இருப்பேன் எப்பவும்னு சொல்லி அவளை முத்தமிட வேண்டும் என்று தோன்ற எல்லாவற்றையும் கன்ட்ரோல் செய்து அமைதியாக அவள் பேசுவதை கேட்டான்.
அவளது பேச்சு ஒருபுறம் பெருமையும் ஒருபுறம் வருத்தத்தையும் தர ஹர்ஷத்திடம் மொபைலை நீட்டியவன் அங்கிருந்து வேகமாக சென்று அறைக்குள் புகுந்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!