அத்தியாயம் – 99
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஆரா வேகமாக சென்று அவனது அறைக்குள் புகுந்து கொள்ள அவன் பின்னே சென்ற ஹர்ஷத் சர் சர் என்று அழைத்தபடியே சென்றான்.
ரூமிற்குள் சென்ற ஆரா நேராக சென்று அங்கிருந்த ஜன்னலின் ஓரம் நின்றுவிட்டான்.
தூரத்து நிலவை பார்த்தவனுக்கு அந்த தேய்ந்த நிலா
தன்னையே வதைத்துக்கொண்டு இருக்கும் மேதாவையே நினைவூட்ட கண்கள் கலங்கியது அவனுக்கு.
அவன் பின்னே வந்த ஹர்ஷத் அமைதியாக வந்து நின்றுவிட்டான்.
“ஏன் ஹர்ஷத் அவ இப்படி இருக்கா? மத்தவங்களுக்காக யோசிக்கிறவ அவளுக்காக கொஞ்சம்கூட யோசிக்க மாட்டாளா? அவளாள ஒரு குழந்தை பெத்துக்க முடியாதுனு ஏதோ ஒரு டாக்டர் சொன்னதுக்காக என்னைவெறுத்துட்டு போய்டுவாளா?
ச்சே அவளால என்னை வெறுக்கவே முடியாது ஹர்ஷத் என்மேல வெச்ச காதலுக்காக அவ அவளையே கஷ்டப்படுத்திக்கிறது என்னால முடியல ஹர்ஷத் பார்த்தீங்களா அவளை எப்படி இருக்கானு?” என்று அவன் புலம்ப
“அவ டிபிக்கள் இண்டியன் கேர்ள் சர் அப்படித்தான் இருப்பா” என்று ஹர்ஷத் சாதாரணமாய் சொல்ல புரியாமல் பார்த்தான் ஆரா.
“என்ன சொல்றீங்க ஹர்ஷத்? அது என்ன டிபிக்கள் இண்டியன் கேர்ள்?”என்று அவன் கேட்க
லேசாக சிரித்த ஹர்ஷத்
“நீங்க இன்னும் முழுசா இண்டியன் கல்ச்சர் அண்ட் இண்டியன் கேர்ள் திங்க் பத்தி புரிஞ்சுக்கலை சர்.
எங்க பொண்ணுங்க எப்படி தெரியுமா? அவங்களுக்கு புடிச்சவங்க அவங்களை எவ்ளோ தப்பா பேசினாலும் எவ்ளோ கொடுமை பண்ணாலும் அவங்கமேல இருக்குற லவ்ல அதையெல்லாம் தாங்கிப்பாங்க அதே சமயம் அவங்க லவ் பண்ணவங்களுக்கு ஏதாவது ஒன்னுனா துடிச்சு போய்டுவாங்க ஆனா இதே அவங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லாம் ஏதோ பெரிய வியாதி இல்ல மேதா மாதிரி ஆகிட்டா உடனே அவங்க லவ் பண்ணவங்களை விட்டு பிரிஞ்சு போய்டுவாங்க ஏன்னா அவங்க லைஃப் நல்லா இருக்கணும்னு இவங்க அந்த லவ் பண்ணவங்களையே நினைச்சுட்டு வாழுவாங்க அவங்க கஷ்டப்பட்டுக்கலாம் ஆனா அவங்க லவ் பண்ணவங்க சந்தோஷமா இருக்கணும் இதுதான் சர் டிபிக்கள் இண்டியன் திங்க்ஸ் அதைதான் உங்க ஆளும் செய்யுறா” என்று அவன் விளக்க
ஆவென பார்த்தான் ஆராஷி
“என்ன லாஜிக் இது? இப்படி கூடவா இருப்பாங்க? அப்போ அந்த பையனுக்கு ப்ராப்ளம் இல்ல ஏதாவது வியாதி இருந்தா?” என்று ஆராஷி வினவ
“அதெல்லாம் அவங்களுக்கு ஒரு ரீசனே இல்ல சர் அவரை குழந்தைபோல பார்த்துக்குவாங்க அவரை சரிசெய்யுற வரை அவ்ளோ சாமியை கும்பிட்டு வேண்டுதல்லாம் வெச்சு அதெல்லாம் செஞ்சு அவரை சரி செய்வாங்க” என்று கூற
“வேண்டுதலா? அப்படினா?” என்றான் ஆரா
“Prayers sir” என்று ஹர்ஷத் விளக்க
“அப்போ அவங்களுக்கு ப்ராப்ளம்னா அதையே அவங்களோ இல்ல அவங்க லவ்வரோ செஞ்சு அவங்களை சரி பண்ணலாம்ல?”
“அது அவங்க ரூல்ஸ் புக் ஒத்துக்காது அவங்க ஹஸ்பண்ட் இல்ல லவ்வர்க்கு ப்ராப்ளம்னா அவங்க வேண்டுதல்னால அது கண்டிப்பா சரி ஆகிடும் ஆனா அதே ப்ராப்ளம் அவங்களுக்குனா அது சரி பண்ணவே முடியாத பெரிய ப்ராப்ளமா தான் பார்ப்பாங்க அதனால தான் அதை சரி பன்ற வேலையை விட்டுட்டு பிரிஞ்சு போறதுதான் சரினு போவாங்க அவங்களுக்கு அவங்க லவ் பண்ணவங்க அவங்களால கஷ்டப்படகூடாது” என்று விளக்க
“வாட் த ஃபக் ரூல்ஸ்புக்” என்றபடி நிறுத்தியவன்
“வலி ரெண்டுபேருக்கும் ஒன்னுதானே அது என்ன அவங்க மட்டும் வலியை அனுபவிக்கிறது அவங்க லவ் பண்ணவங்க மட்டும் வலியை அனுபவிக்காம சந்தோஷமா இருக்கனுமா?” என்று கேட்க
“இங்க பொண்ணுங்க அப்படித்தான் சர் அவங்களுக்கு குழந்தை பிறக்காதுனு ஊர்க்காரங்க சொல்லிட்டா போதும் பிரச்சனை யாருக்குனு கூட செக் செய்ய மாட்டாங்க உடனே புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைப்பாங்க இது அவங்களோட இன்னொரு வகையான sacrifice” என்று அவன் சொல்ல
“இல்ல எனக்கு புரியல என்ன மைண்ட்செட் இது?” என்று ஆரா கேட்க
“தட்ஸ் டிபிக்கள் இண்டியன் கேர்ள் திங்க் சர்” என்றான் அவன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் ஆரா.
‘என்னங்க சர் உங்க சட்டம்?’ என்பதுதான் அவனது மைண்ட்வாய்ஸ்ஸாக இருந்தது அப்போதைக்கு
நிமிர்ந்து ஹர்ஷத்தை பார்த்தவன்
“இதெல்லாம் படிக்காத பொண்ணுங்க செஞ்சாகூட ஓரளவுக்கு ஓகேனு விடலாம் நல்லா படிச்சு இவ்ளோ பெரிய சாம்ராஜ்யம்க்கு ஹெட்டா இருக்குற மேதா கூடவா இப்படி இருக்கா?”
“இந்த விஷயம்ல படிச்ச படிக்காத பொண்ணுங்க எல்லாம் ஒரே போல தான் சர் யோசிப்பாங்க எங்க பொண்ணுங்களுக்கு அவங்க ஹஸ்பண்ட் மாமியார் வீட்ல இருக்குறது கூட ப்ரஸ்டீஜ் இஸ்யூ சர் ஆம்பளை அவங்க கெத்தா இருக்கணும் இவங்க அவங்களை அவங்களே தாழ்த்திக்குவாங்க” என்று கூற இதையெல்லாம் கேட்டவனுக்கு
‘அடப்போங்கடா நீங்களும் உங்க ரூல்ஸ்ஸூம்’ என்று தான் எண்ண தோன்றியது.
“ரிடிக்குலஸ்”என்று பற்களை கடித்தவன்
“முதல்ல இவள மாத்தணும் எப்படி வாடிப்போய் இருக்கா பாரு” என்று பேசியபடி அடுத்து அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்தான்.
அங்கு மெடில்டாவிடம் பேசிவிட்டு வந்த மேதாவிற்கோ ஆராஷியின் நினைவு அதிகமாக இருந்தது.
அவனது நினைவு அதிகமாகவே அன்று அவன் அவளை முத்தமிட்ட நாளில் அணிந்திருந்த புடவையை அணிந்திருந்தாள்.
அன்றைய தினம் நடந்தது எல்லாம் வரிசையாக நினைவு வர கண்கள் கலங்கியது கடைசியில் அவனைவிட்டு அவள் உடனே செல்லவேண்டும் அவனது அவள்மீதான வெறுப்பு அப்படியே இருக்கவேண்டும் என எண்ணி உடனே கிளம்பி ஹர்ஷத்துடன் வந்துவிட்டாள்.
ஆனால் கிளம்பும்தருவாயில் மற்றவர்கள் அவன்மேல் அல்லவா கோபப்படுவார்கள் என்று எண்ணியவளுக்கு அவளது டைரியும் நியாபகம் வர நிதினுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் டைரிய எடுக்கலாம் என கடிதம் எழுத அவள் கிளம்பிவிட்டாளா என பார்க்க வந்த ஹர்ஷத் அவளை திட்ட கடிதத்தையும் லாக்கர் சாவியையும் அங்கே டேபிளில் வைத்துவிட்டு சென்றாள்.
அந்த டைரியை எங்கு தூக்கி எறிந்தனரோ என எண்ணியவளுக்கு அதில் இந்தியாவில் அவனோடு அவள் பயணம் துவங்கிய தருணத்திலிருந்து அவளை அவன் முத்தமிட்டு பேசியது வரையும் மறுநாள் ஹாஸ்பிடலில் இருந்து வருவதற்கு முன்பு வரை எழுதி இருந்தாள்.
அவனின் நினைவு வாட்ட தூரத்து நிலவை பார்த்தவள்
அந்த நிலாவும் அவளது வாழ்வில் அவனும் அவளுக்கு எட்டாக்கனியாகி விட்டனர் என்று எண்ணியபடி கலங்கிய விழியோடு பார்த்திருந்தாள்.
இங்கோ ஹர்ஷத்திடம் இந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம் என்றவன் அவன் சென்றதும் பால்கனியில் வந்து நின்றவனுக்கு அந்த தூரத்து நிலா அவளையே நினைவு படுத்த அதையே பார்த்தபடி நின்றவன் அங்கு அலமாரியில் வைத்திருந்த அவளது டைரியை எடுத்து அவள் விட்டதிலிருந்து அவன் எழுத துவங்கிய பக்ககங்களை புரட்டினான்.
‘எதையுமே மறக்காமல் எழுதி இருக்கா ஆனா இதெல்லாம் என்கிட்ட சொல்லணும்னு அவளுக்கு தோணலையே? நான்தான் உன்ன பேசவே விடலையே அப்புறம் எங்க இருந்து லவ்வ சொல்றது விலகி இருந்து என்னைவிட்டு ஒரேடியா விலக பார்க்கிறியே மேதா.
இவனை மாதிரி ஒருத்தன் உனக்கு வேணாம்னு போய்ட்டியா? இல்ல எனக்கு நீ வேணாம்னு நீயா முடகவு பண்ணி போய்ட்டியா அஷ்ஷூ?
உயிரை கொடுத்தவளும் நீதான் இப்போ உயிர்போற அளவுக்கு வலியை கொடுத்துட்டு இருக்குறவளும் நீதான்.
உன்னை காயப்படுத்திட்டு மன்னிப்பே இல்லாம நடைபிணமா நடந்துட்டு இருக்கேன்.
உன் காயத்துக்கு மருந்தும் நான்தான்னு உனக்கு எப்போ மேதா புரியும்?
எனக்கு தேவையானவ நீ மட்டும் தான் மேதா உன் கற்போ பிள்ளையோ பணமோ இல்ல மேதா அதை எப்படி மேதா உனக்கு நான் புரியவைப்பேன்.
மேதா’ என்று எண்ணியபடி நிலவை பார்த்தவனுக்கு ஏக்கமாய் ஒரு பெரு மூச்சு வந்தது.
அவனது அந்த சூடான ஏக்கமூச்சு அவளை தாக்கியதோ? எண்ணவோ?
‘தூரத்தில இருந்தாவது உங்கள பார்த்து உங்கள பாதுகாப்பேன் உங்க அம்மா உங்களை எங்கள நம்பி ஒப்படைச்சுட்டு போனாங்க அந்த நம்பிக்கையை எப்பவும் காப்பாத்துவேன் ராஷி’ என்று எண்ணியபடி அவளும் பெருமூச்சு விட ம்ம்ம் இவங்கள இப்படியே விட்டா பெருமூச்சுதான் விட்டுட்டு இருப்பாங்க நாமதான் சூடாவோம் இதுக்கு ஒரு வழியை உண்டு பண்ணாதான் நல்லது என நிலவே தன்னை அவர்களிடமிருந்து மறைத்தபடி ஒளிந்து கொண்டாள்.
இன்னும் மூன்று நாட்களில் ஆராஷியின் மிகப்பெரிய கான்செர்ட் மற்றும் அவனது பிஸினஸ் பாட்னர் அறிமுகம் அவனது அவார்ட் வாங்கும் நிகழ்வு என பெரிய விழாவாக ஆர்பாட்டமாக ரெடியானது ஜப்பானின் நகரம்.
நிதினிடம் அனுமதி வாங்கியபின் அனைவரும் ஜப்பான் செல்ல ஏற்பாடு செய்து இருந்தான் ஆராஷி.
அங்கு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தவன் கான்செர்ட்க்கு முந்தின நாள்தான் ஜப்பான் வந்து சேர்ந்தான்.
ரியோட்டோ மனைவி மகளோடு வர அதை பார்த்த ஆராஷியின் தந்தைக்கு கண்கள் கலங்கி விட்டது.
தன் மகன்கள் வாழ்வில் சந்தோஷம் வராதா என ஏங்கியவர் ஆயிற்றே அவரால் தன் மகன்கள் வாழ்வு எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை அறிவாரே.
ஒருவன் வாழ்வு சரியாகிவிட்டது இன்னொருவன் வாழ்வும் சரியாகிவிட்டால் தன் வாழ்வு முழுமை அடைந்துவிடும் என்றே எண்ணினார்.
தன் சோகங்களை எல்லாம் அந்த மழலையை பார்த்ததும் மறந்து போனார் அவர்.
வந்ததும் வராததுமாய் கான்செர்ட்டில் சிறிய சேஞ்ச் செய்தான் ஆரா அதை கடைசி நேரத்தில் தான் செயல்படுத்த வேண்டும் எனவும் கூறிவிட்டான்.
தனது பாடல்களை மியூஸிக் டீமிடம் கொடுத்து அந்த பாடல்களுக்கு தயாராகும்படி சொன்னான்.
மறுபுறம் தனது சித்தியை கண்காணிக்கும் வேலையையும் செவ்வனே செய்தான்.
அவனைவிட அவனை கண்காணிக்கும் வேலையையும் அவனது உயிருக்கு ஆபத்து என்பதையும் உணர்ந்த மேதா அவனை காத்தே ஆகவேண்டும் என்று அவனுக்கும் அனைவருக்கும் டைட் செக்யூரிட்டி அரேஞ்ச் செய்தாள்.
தன்னவளின் செயலை எண்ணி மெச்சியவன்
‘இன்னைக்கு நீ வருவியா மேதா?’ என்று தான் எண்ணினான்.
ஹர்ஷத் கூடவே ஜப்பானிய மேனேஜரும் சேர்ந்து விழா ஏற்பாடுகளை செய்ய எண்ணிலடங்கா மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது கான்செர்ட் க்கு.