அத்தியாயம்-22
சிதம்பரத்தினை கத்தி மேல் நிற்க வைத்து அவர் வாயால் தற்காலிக முதல்வராக ஆராவமுதனின் பெயரை கூற, மற்ற தொண்டர்களோ, ‘சிதம்பரம் அண்ணாவே சொல்லறார். அவர் தான் ஆதிக்காலத்தில் இருந்து கட்சில இருக்கார். அவரே ஆராவமுதனை சொல்லறார்னா, கட்சி இளைஞர்கள் கைக்கு போகணும்னு விரும்பறார்.
நாம சம்மதிச்சு ஒப்புதல் அளிப்பதில் தவறென்ன என்று மற்றவர்களும் தலையாட்டினார்கள்.
இலக்கியனினிடம் குறிப்பிட்ட இடைவெளியில் கையெழுத்து வாங்கி மேலிடமான ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மருத்துவமனையில் தற்காலிக முதல்வர் என்று பறைச்சாற்றாவிட்டாலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்தேறுவதை, முதல்வரின் உடல்நிலையை ஒளிப்பரப்பும் பொழுதெல்லாம், ஆராவமுதனை பற்றியும் செய்திகள் வெளியானது.
சுரபி மாபெரும் ஊஞ்சலில் அமர்ந்து, டிவியை தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.
அதில் தெரிந்த ஆராவமுதன் முகம், இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற ரீதியில், இவனுக்கு அரசியல் தாகம் உள்ளதா? என்று அப்பாவி முகத்தோடு வலம் வந்தான்.
ஆராவமுதனோ, விசிலயித்தபடி வீட்டுக்குள் நுழைந்தான். சுரபியோ எரிமலையை விழுங்கியவளாக காணவும் விசிலடிக்கும் சத்தத்தை கைவிட்டான்.
நேற்று திருமணம் முடித்த தம்பதிகள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
நேற்று இரவு சுரபியோ போனை எடுத்து ஆராவமுதனை அழைக்க, “கார் டிரைவரிடம் சொல்லிருக்கேன். நம்ம வீட்டுக்கு போ வந்து பேசறேன்” என்றான்.
சுரபியோ ”நம்ம வீடா?” என்று கத்த, “பின்ன… எங்க வீட்டுக்கு வான்னா நீ வருவியா? இல்லை உங்க வீட்டுக்கு தான் நிரந்தரமா நான் தங்க முடியுமா? முன்னயாவது ஆளுங்கட்சி இலக்கியனோட மகன். நீ எதிர்கட்சி தலைவரோட பெண்ணு. இப்ப அப்படியா? தமிழகத்தின் முதல்வர் ஆராவமுதனோட மனைவி. ராமன் இருக்கற இடம் தானே ஜானகிக்கு அயோத்தி.
இந்த ஆராவமுதன் இருக்கற இடம் தானே… என் தர்ம பத்தினி சுரபி இருக்கணும்.” என்று நக்கலாய் உரைத்தான்.
அவன் மூக்கை நறுக்கவே, “ஹலோ.. நீ முதல்வர் இல்லை…. தற்காலிக முதல்வர். எப்படி எப்படி… தற்காலிக முதல்வர். இந்த பெரியவங்க ஆட்டத்துல ஆள் குறையுதுன்னா, ஒப்புக்கு சப்பாவா ஒருத்தரை நிறுத்துவாங்கள்ல. அதுக்கு தான் உன்னை நிறுத்தியிருக்காங்க.” என்று கூறியதும் ஆராவமுதனுக்கு வந்த கோபத்தில், தனியாக வந்து, “ஏ ஆமா… இப்ப ஒப்புக்கு சப்பா தான். ஆனா வர்ற இடைதேர்தல்ல நான் நின்று முதலமைச்சரா நிற்பேன் பார்க்கறியா” என்று சாவலிடுட்டு பேசினான்.
“பைன்… கல்யாணம் ஆனா இந்த நாட்களிலேயே டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணறேன். டிவோர்ஸ் நோட்டீஸ்ல கையெழுத்து போட தயாராயிரு.” என்று போனை துண்டித்து தங்கள் வீட்டிற்கு புறப்பட்டாள்.
ஆராவமுதன் கார் என்றாலும் அதை அவன் தேர்தல் பணிக்காக பார்த்ததில்லை. அதனால் நோயாளி ஒருவரை பார்த்து செல்லும் கார் என்று மற்றவர்கள் பார்வைக்கு தெரிந்தது.
தனது வீட்டுக்கு தனியாக மணக்கோலத்தில் வரத்துணிந்தவளை “ஏன்டி வந்துட்ட. ஹாஸ்பிடலுக்குள்ள போகலாம்ல. ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று பல்லவி கேட்க கேட்க, ”கொஞ்சம் சும்மாயிரும்மா” என்று அதட்டினாள்.
பல்லவிக்கு என்னவோ போல வருத்தம் உண்டானது.
மகளிடம் எதுவும் பேசாமல் அமைதியடைந்தார்.
தங்கள் வீட்டுக்கு வந்ததும், ஆராவமுதனின் காரை விரட்டாத குறையாக அனுப்பி விட்டாள்.
“என்னடா இது கிளியை பிடிக்க குரங்கா போயிடுச்சு” என்று நட்ராஜன் வேகமாய் வந்து மகளிடம் கேட்டார்.
“அய்யோ அப்பா.. அமுதனுக்கு சிதம்பரம் அங்கிள் நம்ம ஆளுனு தெரிந்துடுச்சு. அதோட அவசர அவசரமா பிளான் போட்டு தற்காலிக முதல்வரா மாற எல்லா வேலையும் பண்ணிட்டு இருக்கான்.” என்று நகைகளை கழட்ட ஆரம்பித்தாள்.
பல்லவிக்கு மகளின் இந்த கோலம் பயத்தை உண்டாக்கியது.
திருமணமான பெண்ணாக ஒரு ஆரத்தி இல்லை, கணவனோடு கரம் பற்றி வீட்டில் வந்திருக்கலாம்.
இரண்டுமில்லாமல் கணவரோடு வரவில்லை என்ற வாட்டமிருந்தாலாவது பல்லவி மனம் சமாதானம் அடைந்திருக்கும்.
இப்படி ஏதோ ஒரு கல்யாணத்திற்கு சென்று வந்தவள் போல நகைகளை ஹாலிலேயே கழட்டியது நெருடியது.
“நீ அரசியலில் கால் பதிக்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டதாக சொன்னியேம்மா. அதை அமுதன் மீறுறானா?” என்று கேட்டார்.
“அய்யோ அப்பா… நாம சிதம்பரம் அங்கிள் மட்டும் மாட்டாம இருந்தா, இந்நேரம் அவன் முன்ன இந்த கேள்வி கேட்கலாம். இப்ப என் மேல நம்பிக்கை இல்லாம போக, அவன் என் பேச்சை என் கட்டளையை மதிப்பானா?! ஆனா எப்படியும் நேர்ல பேச வருவான்.” என்றவள் வயிற்றை தடவினாள்.
தந்தைக்கு தன் திட்டங்கள் அனைத்தையும் கூறிய சுரபி, ஆராவமுதனால் கருவுற்றதை கூறவில்லை மறைத்திருந்தாள்.
“இப்ப என்ன பண்ணறது?” என்று நட்ராஜ் மகளிடம் அடுத்து என்ன திட்டமென்று கேட்க, “ஒன்னு தற்காலிக முதல்வரா மாறுவதை அவன் முன்னயே போட்ட பிளானா இருக்கணும். அப்படி போட்டிருந்தா நாம எது செய்தாலும் முறியடிக்க எதாவது வலை பின்னி வச்சிருப்பான்.
இல்லை… சிதம்பரம் அங்கிள் நம்ம ஆளுனு தெரிந்து, நான் அவனை திட்டம் போட்டு என் வலையில் விழவைத்ததால, அதை ஏற்க முடியாம அவசரமா இந்த பிளானை கையில் எடுத்திருந்தா எங்கயாவது சொதப்புவான். அது எந்த சொதப்பல்னு தெரிந்தா நாம அந்த வழியை பின்பற்றலாம். இப்ப இதை தவிர வேற ஆப்ஷன் இல்லைப்பா.” என்றாள்.
நட்ராஜ் அமைதியாக நடந்து “அப்ப இலக்கியன் உடல்நிலை சரியில்லை என்பது நடிப்பா? அமுதன் உன்னை பார்க்க வருவானாம்மா?” என்று கேட்டார்.
“நிச்சயமா நடிப்பா தான் இருக்கும். அமுதன் வருவான் அதானே நம்ம திட்டம்.” என்றாள். நட்ராஜ் மகளை பெருமையாக உணர்ந்தார்.
பல்லவியோ ஏளனமாக “சபாஷ்… அப்பாவும் மகளும் அழகா அரசியல் பண்ணறிங்க. ஏன்டி…. அந்த தம்பியை உன் பின்னால சுற்ற வச்சி, காதலிச்சது, கல்யாணம் செய்தது, எல்லாமே திட்டம் போட்டது நிகழ்த்தியதா? உன்னால எப்படி டி இப்படி பேச முடியுது. ஆராவமுதனை காதலிக்கறேனு ஸ்கூல் கூட முடிக்காத நீ, அவனிடம் போய் வழிஞ்சு காதலை சொல்லிட்டு, என்னிடம் அடி வாங்கியது எல்லாம் மறந்து போச்சா?” என்று கேட்டார். நட்ராஜோ “பல்லவி என் மக சரியா தான் செய்யறா” என்று பரிந்துக்கொண்டு வர, “எப்படிங்க உங்களால் இப்படி பேச முடியுது. அவ நம்ம குழந்தைங்க. எல்லா பொண்ணை போல குடும்பம் கல்யாணம் மனைவின்னு வாழ வேண்டாமா? இப்படி அவளை ஏத்திவிடறிங்க. இலக்கியன் அண்ணா உங்க நண்பர் தானே? உடம்பு முடியலைன்னு வர்ற செய்தி வதந்தியா? திட்டமானு பேசிக்கறிங்க.
ஏன்டி… பதினெட்டு வயசுல இருந்து இப்ப வரை அரசியலை கரைச்சி குடிப்பதா மேதாவித்தனமா இருக்க. காதல் என்ன மாயம் நிகழ்த்தியிருக்குன்னு உன் புத்திக்கு தெரியலை? உன்னோட உயிரை அந்த ஆராவமுதன் தம்பி காப்பாத்தியதா சொன்னது எல்லாம் பொய்யா? அவன் கண்ணுல காதலை பார்த்தேன்னு பேசின.
அப்பறம் எப்படி? சரிடிம்மா.. அவரும் பிளான் போடறார் நீயுமா போடற. ரைட்டு விடு.
இந்த தாலிக்கு என்ன மரியாதை? உன் காதலுக்கு என்ன மரியாதை? உன் வயிற்றுல வளருதே… அவரோட குழந்தை அதுக்கு என்ன மரியாதை? என்றதும் சுரபி அதிர்ச்சியானாள்.
தன் வயிற்றில் குழந்தை வளர்வதை, தான் பகிராமல் அன்னைக்கு எவ்வாறு தெரிந்தது என்று அதிர, பல்லவியோ “எனக்கு அரசியல் வேண்டுமின்னா தெரியாம இருக்கலாம். ஆனா என் பொண்ணோட உடல்நிலை, மனநிலை இரண்டும் எப்படின்னு தெரியும்.
நீ கருவுண்டானது தெரிந்து கண்டிக்க நினைச்சேன். ஆனா அடிக்கடி ஆராவமுதனிடம் நீ பேசி தனியா சந்திப்பதா புரியவும், சரி பேசி முடிவெடுப்பிங்கன்னு நினைச்சேன்.
அதை போலவே கல்யாணம் செய்யலாம்னு நீ நின்றப்ப, சரியானவனிடம் உன்னை இழந்து, அமுதனும் கல்யாணம் செய்ய போவதால் உங்களை பெருமையா பார்த்தேன்.
இப்ப நீ ஒரு பக்கம் வந்துட்ட. அங்க அவர் ஒரு பக்கம்.
இதுல உங்க காதல் எந்த இடத்துல ஊஞ்சலாடுது. உங்க குழந்தையை எந்த மனநிலையில் தள்ளப் போறிங்க.
இங்க பாருடி… நான் சராசரி அம்மாவா சொல்லறேன். உன் காதல் உயர்ந்ததுனு நீ நினைச்சா, உன் வாழ்க்கையை தேடி போ. இல்லை… வெறும் புகழுக்காக ஒரு அடையாளத்துக்காக ஓடறேன்னா, அரசியலை மட்டும் கவனி. இந்த குழந்தையை கலைச்சிடு. பாவம் அப்பா அம்மானு பிரிந்து, தனிதனியா வாழ்ந்து, அதை தவிக்க விடாதிங்க.
இது உன்னோட அம்மாவா சொல்லறேன். உங்க அப்பாவுக்காக அரசியல்ல குதிச்சி இந்தளவு வந்துட்ட, அம்மாவுக்காக யோசிக்க முடிந்தா இதை பத்தி யோசி.” என்றார். ஏனோ இந்தளவு உணர்ச்சிவசப்பட்டு பவ்லவி பேசுவதை சுரபி இன்று தான் காண்கின்றாள்.
“உங்க அரசியல் விளையாட்டுல, கல்யாணம் என்ற கூத்தில் என்னை கோமாளியா மாத்திட்டியே” என்று வருத்தமாய் புடவை மாற்ற சென்றார் பல்லவி.
அவர் அவ்விடம் விட்டு நகரவும், சுரபி வருத்தமாய் சோபாவில் அமர, அவளருகே அவள் கழட்டி வைத்த நகைகள் கீழே சரிந்தது.
நட்ராஜனோ அதை எடுத்து வைத்து, “கர்ப்பமா இருக்கியா சுரபி?” என்று கேட்டார்.
தந்தையை ஏறெடுத்து பார்க்காமல் தலையை மட்டும் தாழ்த்தினாள்.
“அதில்லைப்பா… மழை குளிர்ல மாட்டிக்கிட்டோம். அந்த இக்கட்டுல… என்றவள் கூற தயங்கினாள்.
இதே பல்லவியாக இருந்தால் பச்சையாக கேட்டிருப்பார். சொல்வதற்கு கூட இலகுவாக இருந்திருக்குமோ என்னவோ தந்தையிடம் சங்கடமாக உணர, “என்னயிருந்தாலும் நீ அவனை விரும்பியதை மறந்துட்டேன். கல்யாணம் ஆனது இந்த காரணத்துக்காக தானா? கொஞ்சம் பயமா தான் இருக்கும்மா. அடுத்த முதல்வர் நீயா இருக்கணும். என் கனவு அது மட்டும் தான்.” என்று கூறிவிட்டு கடந்துவிட்டார்.
அதன்பின் நகையை எடுத்து தன் லாக்கரில் வைத்துவிட்டு உடை மாற்றினாள்.
குளித்து முடித்து ஆழ்ந்து மூச்சுவிட, ஆராவமுதனிடமிருந்து அழைப்பு வந்தது.
முதலில் அழைப்பை எடுக்க கூடாதென்று முடிவெடுத்தவளுக்கு, தாயின் பேச்சால், வயிற்றை தடவியபடி எடுத்தாள்.
“என்ன?” என்றாள்.
“எங்கயிருக்க?
” என்று ஆராவமுதன் கேட்டான்.
“நீ விட்டு சென்ற இடத்துலயே இருப்பேன்னு நினைக்கிறியா? இல்லை… இருக்கணும்னு எதிர்பார்க்கறியா? இரண்டும் முடியாது. எங்க வீட்டுக்கு வந்துட்டேன். உன் டிரைவர் சொல்லலையா?.” என்றாள்.
ஆராவமுதனோ, சிறிது மௌனமாகி, “சரி… நாளைக்கு நம்ம வீட்ல வந்துடு. நிறைய பேச வேண்டியது இருக்கு” என்றான்.
“என்ன பேசணும்?” என்று எரிச்சலாய் கேட்டதும், அவனோ “நம்மளை பத்தி… நம்ம குழந்தையை பத்தி” என்றான் அமுதன்.
ஏற்கனவே குழந்தையை என்ற பேச்சால் தான், சற்று ஆடி போயிருக்க அதுவே உரைத்திடவும் பேச்சிழந்தாள். இதே ‘நம்மளை பத்தி நான் அரசியலில் இருப்பதை பத்தி,” என்று உரைத்திருந்தால் அடுத்த நொடி ஆவேசமாக பேச்சு பறந்திருக்கும்.
சுரபி மெதுவாக, “ஐ வில் ட்ரை” என்று, அடுத்து எதுவும் பேசிடுவோமோ என்ற அச்சத்தில் துண்டித்து கொண்டாள்.
ஆராவமுதனின் வீட்டிற்கு தனக்கான காரிலா வந்து, இதோ ஊஞ்சலில் அமர்ந்தா டிவியை தான் காண ஆரம்பித்தாள்.
செய்தியில் ஆராவமுதன் முதல்வராக ஆவதை பற்றி செல்ல, விசிலடித்தபடி வந்தவனை முறைக்க, அவனும் விசிலடிப்பதை நிறுத்திவிட்டு, “ஜஸ்ட்… டென்மினிட்ஸ்… குளிச்சிட்டு வந்து பேசறேன். கோபப்படாத…” என்று முதலிலேயே உரைத்துவிட்டு அங்கிருந்த விவாகரத்து பத்திரத்தை பார்த்துவிட்டு அமுதன் செல்லவும், பல்லை கடித்தபடி ஊஞ்சலில் மீண்டும் அமர்ந்தாள்.
‘இன்னிக்கு என்னயென்ன பிரச்சனை வெடிக்கும்னு தலையில் எழுதியிருக்கோ’ என்று ஆராவமுதனுக்காக காத்திருந்தாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
Hello pratilipi readers,
நீங்க இங்கயும் இருந்தா ஒரு விஷயம் ம்டடும் கேட்டுக்கோங்க. Chat room la 372 members இருக்கிங்க. கதையை வாசிக்காதவங்க, என் கதைக்கு சம்பந்தமில்லாதவங்க தயவு செய்து நீங்களா நீங்கினால் நல்லது. கதை படிக்கும் என் வாசகர்கள் மட்டும் என் சாட் ரூமில் இணைந்து இருங்கள்.
எனக்கு கொஞ்சம் பேர் இருந்தா கூட போதும். பில்லர் எல்லாம் போங்கயா. உங்களுக்கு எல்லாம் எத்தனை பாலோவர்ஸ் கிடைச்சும் இங்குட்டு என்ன வேலையோ😒🥴
.

Sema twist. Super super fantastic narration sis.
Vera level 💥🔥👍
Vera level 💥🔥👍… Interesting 💥🥰😍
Na unga member thana sis?
Enada pana poringa rendu perum
Interesting 👌 👌 👌
Interesting
Paavam antha kulanthai than.. arasiyal yenna paadu paduthuthu
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 22)
அய்யய்யோ..! நமக்கே இப்ப குழப்பமா இருக்கே…? அரசியலா ? திருமண வாழ்க்கையா…? டிவோர்ஸா..? யாராவது ஒருத்தர் அரசியலுக்கு வர இருந்தா கூட பரவாயில்லை.
இப்படி ஒரேயொரு பதவி, ரெண்டு பேர்ன்னு போட்டி போட்டா ..இதுக்கு என்ன தான் சொல்யூஸன்னு தோணுது.
எப்படி, என்ன முடிவை கொண்டு வரப் போறாங்களோன்னு இப்பவே எக்ஸைட்மெண்ட்டா இருக்குது. இதுக்கு அப்புறம் என்னால யோசிக்க முடியலை. பட்.. பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
ரெண்டு பேருக்குமே அரசியல் தான் எய்ம்னா, ஏன் காதலை கையில எடுக்கணும்…?
அதுவும் பதினெட்டு வயசு காதல் ? அப்படின்னா சுரபியோட அம்மா சொன்ன மாதிரி காதலை அரசியலுக்கு பயன்படுத்திக்கிட்டாங்களோ..?
அப்ப காதல் சீப்பாயிடுச்சா, இல்லை அரசியல் உயர்ந்தது ஆகிடுச்சா ? புரியலையே…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Interesting😍😍
2perume thappu dan panuraga athuku avnga 2peru appa vum support
Pallavi avanga pesunathu ellamae correct than ivanga rendu perumae arasiyal sathurangathula kadhal kalyanam rendu ah yum gelli koothu ah aakitanga andha alavuku ah arasiyal uyarthathu ivangalukku
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 evanga renduperum pandra arasiyala la nadula endha kuzhandhai enna pannum paavam🙄
எப்பா…என்னமா பிளான் பன்றா இந்த சுரபி….marriage முடிஞ்ச அடுத்த நாள் divorce notice…😳😳
Surabi nee oru plan panna avan oru plan panitan ipo nee vacha aal therinji matikittan atha vache mirattu cm nu solla vachitan aduthu pesa vanthava divorce papers oda vanthu iruka rendu perum arasiyal venumna ethuku ippadi love vachi drama panai un life avan kaila koduthu vachitiye ma surabi