மழை -12
எழிலரசி, அவளுக்குள் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த கள்ளமற்ற கிராமத்துப் பெண் மறைந்து, இறுக்கமான நகரவாசி ஆகியிருந்தாள்.
தான் பயிற்றுவிக்கும் பிள்ளைகளோடும், ப்ரீத்தியோடும் இருக்கும் போது மட்டுமே மனம் விட்டுச் சிரிப்பாள். அப்பா மற்றும் அத்தையின் முன் முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொள்பவள், தனிமையிலும் , கூட்டத்திலும் இறுக்கத்தைத் தழுவிக் கொள்வாள்.
ஒப்புக்காகத் திருமணம் செய்யது, இரண்டு மணி நேரம் கூட அந்த தாலியும், பந்தமும், நிலைக்காமல் போனதில் திருமண சடங்குகள், வாழ்க்கை மீது பயமும், வெறுப்பும் வந்திருந்தது.
கந்தவேலுவின் மீது எந்த பிடிமானமும் இல்லாததால், அவன் தனக்கு இழைத்த கொடுமையை விட, அப்பாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு அவன் மீது கோபத்தை வரவழைத்து இருந்தது.
தன் வாழ்நாளில் குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைத்த மனிதர். இளம் விதவையாகத் தங்கை வந்த போது அவரையும், அவர் மகனையும் பேணி வளர்த்தவர். மூத்த மூன்று பிள்ளைகளுக்கும் சீரும், சிறப்புமாகத் திருமணம் நடத்தை வைத்து சொத்தையும் பிரித்துக் கொடுத்தவர். அவள் அம்மா மரகதம் மறைந்த போது கூட உடைந்து போகாமல் குடும்பத்துக்காக மீண்டு வந்தவர், அவள் திருமணத்தன்று மயங்கி விழுந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவே கந்தவேலுவை ஏற்க மறுத்ததுக்கான வலுவான காரணம் ஆனது.
அவளுடைய தாய்மாமன் , அண்ணன்கள், அண்ணிகள் சமாதானப் படுத்த முயன்றனர். ஏன் கந்தவேலுவின் பெற்றோரே வந்து மன்னிப்பு கேட்டனர்.
அன்பு, கந்தவேலுவுக்கு சிறைத் தண்டனை வாக்கித் தரவேண்டும், கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மென்டை ஏற்கக் கூடாது என்றான்.
ஆனாலும் அவனுக்குத் தண்டனை வேண்டாமா. பணப் பேயிக்கு அவனிடமிருந்து பணத்தைப் பிடுங்குதலே பெரிய தண்டனை என கேஸை வாபஸ் வாங்க, பதினைந்து லட்சம் நஷ்ட ஈடும், விவாகரத்தும் கோரினாள்.
ஏனெனில் கோவிலில் திருமணம் நடந்து இருந்ததால் சட்டப்படி திருமணம் பதியப்பட்டு இருந்தது. அதை ரத்து செய்யும் நடைமுறை இருந்தது.
ஏழுவருட சிறைத் தண்டனைக்குப் பயந்து, கந்தவேலுவின் பெற்றவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
“அந்த பொட்டச்சிக்கு என்ன திமிரு” எனக் குதித்தான். கோகிலாவை அழைத்துக் கண்டபடி பேச, “ அடப் போடா எடுபட்ட பயலே. உன்னால என் வாழ்க்கையும் பாழா போக இருந்தது. உன்னைய எவன் அவ, கழுத்துல இருக்கத் தாலியை அறுக்கச் சொன்னது. பொன் முட்டை இடுற வாத்து, வயித்தை அறுத்த கணக்கா, அம்புட்டையும் கெடுத்துப்புட்ட. என் மாமனார் நியாயஸ்தனா இருக்கிறதுனால புகுந்த வீட்டில் மணம் பெத்து போனேன். மறுபடியும் விக்கிரவாண்டி காரவுக கை ஓங்கிடுச்ச. நானே அந்த வீட்டில் அடிமையாட்டம் தான் இருக்கேன். கேஸு நடந்தாலும் இதுக்கு மேல அபராதம் போடுவாக. பேசாமல் பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ற வேலையை பாரு” என்றிருந்தாள்.
அவனுடைய முதலீடு எல்லாம் சேர்த்து, வீட்டை ஒத்தி வைத்து பணத்துக்கு ஏற்பாடு செய்தனர். எழில் யோசித்தது போல் பணம் கைவிட்டுச் செல்வதையே பெரிய அடியாக நினைத்தான். ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலும், ஊருக்குள் அடாவடிகாரன் என இமேஜை வைத்து மேலும் பண பண்ணிக் கொள்ளலாம் என நினைத்திருந்தான். அதில் மண் விழுந்தது. பஞ்சாயத்து செய்து இருவருக்கும் ஒன்றுமில்லை எனத் தீர்த்து வைத்தனர்.
இருக்கட்டும், எங்கே போயிடுவா, இவை வவுசி தெரிஞ்சவன் எவனும் கட்ட மாட்டான். ஒருநாள் மொத்தமா மாட்டுவா, அன்னைக்கு வசூல் பண்ணிக்கிறேன் என மனதில் குமைந்தான்.
எழிலரசி அன்று பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக விவாகரத்து பத்திரத்தைத் தான் வைத்துக் கொண்டு, பணத்தை அப்பாவிடம் கொடுத்தாள்.
“ எனக்கு எதுக்கு ஆத்தா. காசு பணத்தை வச்சு என்ன செய்ய, உனக்கு ஒரு நல்ல துணையைத் தேடி வைக்காமல் போயிடுச்சே” என அழுதார்.
“இருக்கட்டும்பா. நீங்க அனுபவிச்ச மன உளைச்சலுக்கு, மாரடைப்புக்கு அவன் கொடுக்கிற விலை. பணத்தால் தான் அந்தாளுக்குத் தண்டனை கொடுக்க முடியும்” என்றாள் .
“சரிதா, இந்த பணத்தை ஆஸ்பத்திரிக்கு செலவளிச்ச அன்புகிட்ட கொடு.” என்றார்.
“ உங்களுக்குச் செலவழிக்க எனக்கு உரிமை இல்லையா மாமா? அப்போ நீங்க எனக்கு செலவழிச்சதை எல்லாம் கணக்குப் போட்டுத் திருப்பி தந்திடவா. அப்படினாலும் தகப்பன் ஸ்தானத்தில் நின்னு பாசம் வச்சது, தோள் கொடுத்தது எல்லாம் எந்த கண்க்குல சேர்க்கிறது ” அவன் கோபப்பட,
“ அப்படி இல்லே சாமி. தொழிலுக்கு வாங்கின கடனையே நீ இன்னும் திருப்பி அடைக்காமல் இருக்கியே, ஆஸ்பத்திரி செலவு வேற சுமையா சேர்ந்துக்குமேன்னு பார்த்தேன்” என்றார்.
“ அதெல்லாம் நான் பார்த்துக்குவேன்.” என்றவன், இந்த சூழல் எழிலுக்குச் சரியில்லை என தன்னோடு வரச் சொல்ல, பாஷை தெரியாத ஊரில் நாங்க வந்து என்ன செய்வோம். நாலு செவுத்துக்குள்ள எங்களுக்கு மூச்சு முட்டும் ஐயா” என்றார்.
“ மும்பைக்கு வரச் இல்லை சென்னையில், தோட்டத்தோடு கூடின பண்ணை வீடு தான்” என அன்பு இல்லத்துக்கு அழைத்து வந்தான். அன்பு, ப்ரீத்தி எடுத்துச் செய்த எம் மென்சி கம்பெனியின் குடியிருப்பு பகுதியை ஒட்டிய பகுதியில் வீடும், தோட்டமுமாக வாங்கி இருந்தான். அண்ணனும், தங்கையும் வீட்டுக்குத் தேவையான, கீரை, காய், பூச்செடிகள் எனப் பயிரிட்டு பயனுள்ளதாக தங்கள் பொழுதைப் போக்கிக் கொண்டனர்.
எழிலரசி எதிலும் பிடிப்பற்றவளாக தனக்குள்ளே ஒடுங்கியவளை இழுத்துப் பிடித்து வைத்து அன்பு ஒரு முறை பேசினான்.
“ தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சு, உன் கழுத்துக்குச் சுறுக்கா வந்த கயிற்றை அவனே கழட்டிட்டு போயிட்டான். விட்டது சனின்னு சந்தோஷமா இரு. அதுக்கு எதுக்கு சோகத்தை கொண்டாடுற” எனக் கடுப்படிக்க, அவளுக்குக் கண்ணீர் ததும்பியது.
“ ம்ப்ச்” என அன்பு ஆட்சேபிக்க,
“ அவனை பிரிஞ்சதுக்கு ஒன்னும் அழுகலை.” என்றவள், “நான் சொன்னாலும் புரியாது. விடுங்க” என்றாள்.
“ சொல்லு, புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். நீ இப்படி இருக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்கு”
“ ப்ளீஸ், என் போக்குல விடுங்க. இந்த உலகத்தில இருக்கவே எனக்கு எரிச்சலா இருக்கு. அப்பாவுக்காகத் தான், எல்லாத்தையும் சகிச்சுகிட்டு இருக்கேன்” என்றாள்.
“ எல்லாரும் கந்தவேலு மாதிரியே இருக்கமாட்டாங்க. இதில இருந்து வெளியே வர முயற்சி பண்ணு” என்றான்.
“ எதுக்கு, யாருக்காக வரனும்.” எனக் கேட்க
“ இது என்ன கேள்வி, உனக்குன்னு ஒரு சுயம் இல்லையா. அதுக்காக வெளியே வா. ஒரு டீச்சரா நிறையச் சாதிக்கலாம்.” என்றான்.
“ டீச்சர் எழில் சாதிப்பா. அவளுக்குள்ள இருக்கப் பெண் எழில் என்ன பண்ணுவா. அவளை விட, அவள் மனசை விட , அவளோட ஜாதகமும், பணம் காசும் தானே பெரிசா போச்சு. எனக்காக, என் விருப்பத்துக்கான முக்கியத்துவத்தை யாருமே கொடுக்கலையே” என்றாள்.
“ அரசி, நீ என்னையும் சேர்த்து சொல்ற மாதிரி இருக்கு. நான் உன்னை நிராகரிக்கவே இல்லை. மாமா சொல்லுக்கு அடி பணிஞ்சேன். ப்ரியுவை கூட கேட்டுப்பாரு” அவன் தன்னிலை விளக்கம் கொடுக்க,
“ அது தான் செஞ்சோற்றுக் கடனுக்காக அப்பா சொன்னா, என்னைக் கல்யாணம் பண்ணிக்கவும் ரெடியா இருந்தீங்களாம். பிரீத்தி சொன்னா. வரதட்சணைக்காக அவன் சரின்னு சொன்னான். நன்றிக்காக நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற தியாகத்தைப் பண்ண ரெடியா இருந்திருக்கீங்க. அவன் வரப்போற காசுக்காகக் காத்திருந்தான். நீங்க வாங்கின. காசுக்காக நன்றியைச் செலுத்த இருந்தீங்க இரண்டும் ஒன்னு தான். “ என்றாள்.
“ என்னையும் அவனையும் கம்பேர் பண்ணாத.” என உருமியவன்
“நீ என்னமோ என்கிட்ட லவ்வை சொல்லி, நான் மறுத்த மாதிரி பேசாத” என்றான்.
“ சொல்லாதது உங்களுக்கு வசதியா தானே போச்சு. நான் எப்படியோ போறேன். சோழவந்தானிலிருந்து அப்பாவை கிளப்புறதுக்கு ஒரு சான்ஸ், அதுக்காக தான் இந்த ஆஃபரை ஒத்துக்கிட்டு வந்தேன். என்னைக் காரணம் காட்டி நீங்க உங்க கல்யாணத்தைத் தள்ளிப் போடாதீங்க. அந்த பாவத்துக்கு நான் ஆளாக விரும்பலை. ப்ரீத்தி சொல்ற மாதிரி பாவம் பார்த்து யாரும் எனக்கு வாழ்க்கை பிச்சையும் போட வேண்டாம்.”
“ரொம்பப் பேசுற”
“அன்பு, பாசம், நேசம் இதெல்லாம் அன்கண்டிசனல். அப்பா உங்க மேல வச்சிருக்கிறதும் அத்தை என் மேல வச்சிருக்கிறதும் அப்படித் தான். அவங்களுக்காக ஒரு கூட்டுக்குள்ள நின்னுக்குவோம். நீங்க என் பத்தி கவலைப் பட வேண்டாம். நானும் உங்க பர்சனலுக்குள்ள வரமாட்டேன். அப்படியே இருந்துக்குவோம்” என்றவள், கட்டுத் திட்டமாக அதைச் செயலிலும் காட்டினாள்.
அப்பா, அத்தை இருந்தாலும் , அடுத்த ஒரு பெண்ணுக்கு மணமகனாக வேண்டியவனோடு ஒரே வீட்டில் இருப்பதே அவளுக்கு மன அழுத்தத்தைத் தந்தது. எப்போதாவது தன்னை மீறி, அவனிடம் ஆசையையோ, அல்லது அவன் கிடைக்காததில் வெறுப்பையோ வெளிப்படுத்தி விடுவோமோ என்ற அச்சம். அதனால் ப்ரீத்தியை அந்த வீட்டுக்குள் வலிந்து அழைத்துக் கொண்டாள்.
பள்ளி வீடு, வேலை, வேலை எனச் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரம் பள்ளிக் கூட வேலையை இழுத்துப் போட்டுச் செய்தாள். அதன் காரணமாகப் பள்ளியில் அவளுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
தனக்கான வட்டத்தைப் போட்டுக் கொண்டு, அதன் உள்ளே ஒடுங்கி இருப்பவளை ப்ரீத்தி அவ்வப்போது வெளியே இழுத்து வர முயற்சிப்பாள். இன்றும், அன்புவிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் எழிலரசியை அழைத்துக் கொண்டு, புறநகரில் உள்ள ஷாப்பிங்க் மாலுக்கு வந்திருந்தாள்.
பள்ளிக்கூடத்துக்கு வாங்கவேண்டிய சில பொருட்கள், தமிழ், ஆங்கில நாவல்கள் என எழில் எடுக்க, ப்ரீத்தி டிரஸ், காஸ்மெடிக்ஸ், பேக் , உணவுப் பொருட்கள் என டிராலியை நிறைத்தாள் .
“ப்ரீத்தி, வீட்டில் ஏற்கனவே நிறைய சாக்லேட், ஐஸ்கிரீம் இருக்கு, இப்போ வேற எதுக்கு” என்றாள் .
“ டென்ஷன் பேபி, அதை கூல் பண்ணத் தான்.ஏகே கிட்ட மாட்டிகிட்டே நான் முழிக்கிறேன். வேலை, வேலைன்னு என்னைச் சாகடிக்கிறான். இப்போ என்னை டார்ச்சர் பண்ண இன்னொருத்தன் கிளம்பி இருக்கான். வாரத்தில் மூணு நாள் அவன் ஆபீஸ் ல போயி உட்காரனும். “ என பிரேம் ராதோட் பற்றிச் சொல்ல,
“ எனக்கு என்னமோ அவர் டேஞ்சரான ஆளா தெரியிறார்.” எழில் சொல்ல,
“எப்படி” என்றாள் .
“சில மனுசங்க, நம்மளை அவுங்களை பத்தியே நினைக்க வைக்கணும்னு இப்படி செய்வாங்க. “ என அவள் உதாரணங்களைச் சொல்ல,
“ஐஸா ஹை கியா, நான் மாட்ட மாட்டேன். எனக்குத் தான் ஏகே இருக்கானே” என்றாள்.
“அதே தான், நம்ம அந்தாளைப் பத்தி தானே பேசினோம். எதுக்கு இவரோட கம்பேர் பண்ற” எனவும்,
“ஹையாரப்பா, அப்போ நான் அவன்கிட்ட கவுந்துடுவேன்னு சொல்றியா”
பட்டுனு அவள் கன்னத்தில் அடித்தவள்,
“அத்தானுக்கு துரோம்கம் பண்ண கொன்னுடுவேன்” என்றாள் .
“நோ பேபி, ஏகே உன்னைச் சொல்லி என்னை கடுப்பேத்துறான்ல, நான் பிரேமை சொல்லி அவனை கடுப்பேத்துறேன்” என்றாள்.
“என்னை நடுவில் கொண்டுவராதிங்கன்னு நான் முன்னாடியே சொல்லி இருக்கேன். ஒழுங்கா உங்க வாழ்க்கையில செட்டில் ஆகுற வழியை பாருங்க. இல்லைனா, இந்த ஸ்கூலோட பிரென்ச் நிறைய ஊர்ல இருக்கு. வேற எங்கையாவது ட்ரான்ஸார் வாங்கிட்டு போயிடுவேன்” என மிரட்ட,
“நோ, பேபி. அப்படியெல்லாம் உன்னைத் தனியா விட மாட்டோம். நீ வேலை பார்க்கிற ஊர்ல ப்ராஜெக்ட் எடுத்துக்கிட்டு உன்னோடையே வந்து தங்குவோம்.” என்றாள்.
“சொல்லாமல், கொள்ளாமல் ஒரு நாள் ஓட போறேன் பாரு” எனப் பேசிக்கொண்டே , சாப்பிடும் இடத்துக்குச் செல்ல,
“மிஸ் கௌர். என்னை வாழ வைக்கிறதுக்காக இங்கையும் வந்துட்டீங்க போல” அவன் ஹிந்தியில் கேட்க,
“க்யா” என்றாள் .
“போர்ட் தேக்கி நஹி, பிஆர் மால்” என்றான்.
“இதுவும் உன்னோடது தானா”
“ஆமாம், நாளைக்கு உன்னை இங்க தான் கூட்டிட்டு வர்றதா இருந்தேன். நோட் தி இன்டெரியர் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்.” என எழில் என ஒருத்தி இருப்பதை , புறந்தள்ளி அவளை தன்னோடு அழைத்துச் சென்றான்.
‘அடப்பாவி, காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தள்ளிட்டு போயிடுவான் போல. இந்த அத்தான் ஒரு மண்ணாந்தை. பொழுதன்னைக்கும் வேலை, வேலைன்னு திரிஞ்சா, அவ வேற பக்கம் பார்க்காமல் என்ன பண்ணுவா. சொல்லிப் புரிய வைக்கணும்’ என மனதில் சொல்லிக் கொண்டாள் .
கடி சிப்பந்தி வந்து, “மேம் யுவர் ஆர்டர். அவங்க உங்களோட அப்புறம் வந்து ஜாயின் பண்ணிக்குங்க” என்றான்.
“அவுங்க வறட்டு எனக்கு ஸ்டார்ட்டர் மட்டும் விடுவாங்க. மஸ்ரூம் சூப்” என ஆர்டர் செய்தாள். அரை மணிநேரம் கழித்தே இருவரும் வந்து சேர்ந்தனர்,
“மிஸ்டர் பிரேம், ஷி இஸ் எழில். ஏகே வோட கசின். முகாரி பொண்ணு” என அறிமுகப்படுத்த, அவள் முறைத்தாள்.
“நைஸ் டு மீட் யு”என அவன் காய் நீட்ட, இரு கை குவித்து வணக்கம் சொல்லி விட்டு, “ப்ரீத்தி. நீ வேணா பேசிட்டு வா. எனக்கு நிறை வேலை இருக்கு. நான் கிளம்புறேன்” என்றாள்.
“மேம் சாப், இத்தனா குஸ்ஸா , டீச்சரா” என்றான்.
அவனுக்கும் ஒரு முறைப்பைத் தர, “சுப் கர் பாஸ். இன்னைக்கு வீட்டுல அடி வாங்கி கொடுக்காமல் விட மாட்டே. உன்னை பார்த்ததுல இருந்து எனக்கு ஏழரை தான்” என் பிரேமை திட்டி விட்டு,
“கோவிச்சுக்காத பேபி, நம்ம சாப்பிட்டுத் தான் வருவோம்னு ஏகே கிட்ட சொல்லிட்டேன். உன்னைப் பத்தினி போட்டேன்னு தெரிஞ்சா , முஜே மார் டாலேகா.” என எழிலைக் கொஞ்சியவள்,
“ஹலோ, பாஸ். எதையாவது சீக்கிரம் கொண்டு வர சொல்லுங்க” எனக் கட்டளையிட்டாள்.
“யாருக்கு யார் பாஸ் னு தெரியலை. யு கேரியான். சி யு டுமாரோவ்” என பிரேம் கிளம்பிச் செல்ல, எழில் ப்ரீத்தியை முறைத்தாள்.
“க்யா ரே” என்றாள் .
“ என்னைய மாதிரி அத்தானும் ஏமாற விட மாட்டேன். ஒன்னு இந்தாளோட டீலை கேன்சல் பண்ணுங்க. இல்லைனா, நீயும் அத்தானும் கல்யாணம் பண்ணிக்குங்க” எனவும் ப்ரீத்தி கலகலவென சிரித்தாள்.
Interesting😍
இவன் யாருடா பிரேம்…அப்போ..அந்த ரத்தொட்