மழை-18
மதுரையில் அழகர் ஐயாவுக்கும் அவரது மகளுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு. இரண்டு வருடம் கழித்து அப்பா, சொந்த மண்ணில், சொந்த வீட்டில் தங்க வருகிறார் எனவும் மகன்கள் தாம் ஆக்கிரமித்திருந்ததை அகற்றி, வீட்டை சுத்தப் படுத்தி வைத்தனர். மருமகள்கள் ஆளுக்கு ஒன்றாக தடபுடலான விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இரண்டு வருடமாக எழிலரசியும், இந்திராணியம்மாவும் ஊர் பக்கம் வரவே இல்லை. அழகர் மட்டுமே சில முறை வந்து சென்றார். போனில் பேசி இந்திராணி எல்லா விவரமும் அறிந்து வைத்திருப்பார். மாமியார் இல்லாத குறைக்கு, அவரை பார்த்தால் அழகரின் மருமகள்களுக்கு கொஞ்சம் பயம். சலுகையாக பேசினாலும் அச்சப்படுவார்கள். ஆகவே அவர்கள் வரவை எதிர்பார்த்து வேலைகள் வேகமாக நடந்தது.
அதிலும் சின்ன மருமகள் கோகிலா, நாத்தனாரின் இந்த நிலைக்கு காரணம் தான் தான் என்பதால் கொஞ்சம் அட்க்கியே வாசித்தாள். இரண்டு வருடங்களுக்கு முன் அன்பு அழகருக்கு செய்த மருத்துவசெலவு இவர்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்களும் சம்பாத்தியம் இல்லாத மாமனாரை அவன் தான் வைத்து பராமரிக்கின்றான்.
அழகரின் வங்கிக் கண்க்கில் கந்தவேலு குடும்பம் ஈடாக கொடுத்த பதினைந்து லட்சம் சமத்தாக தூங்கிக் கொண்டிருந்தது. அதனால் அவர் மதிப்பும் மகன், மருமகள்களிடம் உயர்ந்தே இருந்தது. அன்பு, தன்னுடையது, மற்றும் எழில் பங்குக்கான அழகரின் நிலம் எல்லாமே இரண்டு வருடத்தில் ஈடு பணத்தை தொடாமலே மீட்டும் விட்டான். நாகுவும், தாமுவும் அந்த நிலத்தில் விவசாயம் செய்கின்றனர்.
அழகரை ஊருக்கு அனுப்பும் முன்பே, அன்பு மாமன் மகன்கள் இருவரிடமும், அழகருக்கு எந்த குறையும் வரக்கூடாது. நேரத்துக்கு முறையாய் சாப்பாடு வந்து விடவேண்டும் . முக்கியமாக மனம் நோக எதுவும் பேசி விடக் கூடாது என நிபந்தனை இட்டான். அதற்கு பதில் அவன் நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்து கொள்ளலாம் என ஏற்பாடு செய்திருந்தான்.
மொத்தத்தில் அழகர், இந்திராணி, எழிலின் வரவை ஆவலாகவே எதிர்பார்த்திருந்தனர். இரண்டு வருடத்தில் எழிலின் மாற்றம், மேல் தட்டு ஆசிரியையாக நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாம் மாறியிருக்க,
“ ஆத்தி, சென்னைக்கு போயிட்டு வந்ததுக்கே இம்புட்டு மாற்றமுண்டா, சிங்கப்பூர் போயிட்டு வந்தா என் தங்கச்சி இன்னும் கெத்தா மாறிடுமே. உன்னையை போயி இந்த ஊர்ல அடைக்க பார்த்தோம் பாரு” என பெரியவன் நாகு சொல்லுவும்,
“ நான் எப்பவுமே உங்க தங்கச்சி தான் அண்ணன். உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணேன். “ என அவர்கள் கையை பிடித்துக் கொண்டு அண்ணன் மக்களை கொஞ்சி எல்லோருக்கும் துணி மணி ,பரிசு பொருட்கள் என சென்னையில் வாங்கிய பரிசுகளை கொடுக்க,
“ எதுக்குததா” என்ற போதும் சந்தோஷமாகவே வாங்கிக் கொண்டனர். அதுவும் அழகரின் கையாலேயே பேரப் பிள்ளைகளுக்கு விளையாட்டு சாமானிலிருந்து, பேனா, பென்சில் ஆக்ட்டிவிட்டி கலரிங் என வயதுக்கு தக்கன பரிசளிக்க, பிள்ளைகள் அத்தை, அத்தை என அவள் பின்பே சுத்தினர்.
தாமு, “ காசு பணமுண்டு சேர்த்து பொண்டாட்டுக்கு தான குடுப்பான். உன்னை கட்டினா, உன்கிட்ட இருக்கிற புதிவிசும் அவனுக்கு வந்திரும்னு தான் ஆத்தா, கந்தவேலுவுக்கு பேசினோம்” சமாதானம் சொல்ல,
“ பழசை கிளற வேண்டாம் விடுங்கண்ணேன். நான் நல்லா தான் இருக்கேன்.” என அண்ணன் மனைவியிடமும் நன்றாகவே பழக
“ பேரும் கெட்டு போயி,காசு பணமும் போயி, பூமிக்கு பாரமா திரியிறான். ஆவேசத்தில தாலியை அறுப்பாண்டு நானுமே நினைக்கலை எழிலு. என்னை மன்னிச்சிடு” என கண்ணீர் விட,
“ அந்த பேச்சையே விடுங்க அத்தாச்சி. அந்த நாளையே மறக்கனும்னு நினைக்கிறேன். அப்பா இங்க தான் இருப்பாரு. அவரை நல்லா கவனிச்சுக்குங்க போதும்” என அவர்களோடும் ஒரு பந்தத்தை வளர்த்தாள்.
அழகர் இந்திராணி இருவருக்கும் சோழவந்தான் வரவுமே முகத்தில் தெளிச்சியும் சநதோஷமும் வந்திருந்தது.
“ சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா” என வீட்டை சுற்றி வந்து ஆட்களை இழுத்து வைத்து பேசிக் கொண்டு இருந்தனர்.
விக்கிரவாண்டியிலிருந்து கலையரசியும் அவர்கள் குடும்பம் தாய்மாமனும் அழகரை பார்க்க வந்தனர். எழில் தாய்மாமனுக்கு முதற் கொண்டு துணி எடுத்து வந்திருக்க,
“ எதுக்குத்தா இதெல்லாம்” என்ற போதும் சந்தோஷமாகவே வாங்கிக் கொண்டனர்.
கலையரசி,” நீ ஓஞ்சு உட்கார்ந்துடுவியோன்னு பயந்தேன்டி. ஊண்டி நிண்டுட்ட” என மகிழ்ச்சியை வெளிப்படுத்த,
“ அத்தை, அத்தான் ப்ரீத்தி, இவங்க மூணு பேரும் இல்லாமல் இது சாத்தியமில்லைக்கா” என பேசிக் கொண்டு இருந்தாள்.
“ நீ பெரிய வேலைக்கு, வெளிநாடு போறதெல்லாம் சந்தோஷம் தான். ஆனால் உன்க்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா. இளமை இருக்கும் போதே துணையையும் தேடிக்கனும்” என சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையை சொல்ல,
“ கொஞ்ச நாள், என்னை என் போக்கில விடுங்க. கட்டாயம் செட்டில் ஆவேன். அப்பாவுக்கும் வாக்கு கொடுத்திருக்கேன்” என அக்காவின் வாயையும் அடைத்தாள்.
இநதிராணியிடம் அன்புவை பற்றி விசாரித்தனர். “ இவ இப்படி ஒத்தையில நிக்கிறாண்டு அதுகளும், கல்யாணத்தை தள்ளி போட்டுச்சுக. எழிலு கிளம்பவும், ஏதோ ஒத்து வந்திருக்குதுங்க பார்ப்போம்” என்றார்.
எழிலின் தாய்மாமன் அழகரை தனியே அழைத்துச் சென்று, “நம்ம ஜோசியரை சமீபமா பார்த்தேன். எழிலுக்கு மாங்கல்ய தோஷம் இருக்குண்டு தான், அன்புவுக்கு கட்டிக் குடுக்க வேண்டாம்னு சொன்னாராம். எழிலு கழுத்தில தாலி ஏறின கையோட அத்ததுல தோஷமும் போயிடுச்சுண்டு சொல்றாரு. அன்புவுக்கே கூட எழிலை கட்டிக் கொடுக்கலாமாம். நீ என்னப்பா சொல்ற. அன்புண்டா நம்ம பையன்” என சாதகமான விசயங்களை அடுக்கிக் கொண்டே போக…
“நம்ம புள்ளை வாழனுமுண்டு, அடுத்த வீட்டு புள்ளை வாழ்க்கையை கெடுக்க கூடாது மச்சான். அந்த ப்ரீத்தி, நம்ம மாப்பிள்ளைக்காக மூணு வருஷமா காத்துக்கிட்டு இருக்கு. எனக்கு அதுவும் பெறாத மகள் தான். அதுவும் போக, படிக்க வச்சதுக்காக தங்கச்சி மகனை கட்டாயப்படுத்தி , மகளுக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சிட்டேன்னு, ஒரு வார்த்தை வந்துடக் கூடாது. என் மகளுக்காகவே , அதை ஏத்துக்குற ஒருத்தன் தான் எனக்கு மருமகனா வரனும்கிறதுல நான் உறுதியா இருக்கேன். புதிசா யாரையாவது சந்திச்சு நேசிச்சு கட்டிக்கிறேண்டு சொல்லுச்சுனாலும் எனக்கு சம்மதம் தான்” எனவும் அவர் விக்கித்து பார்க்க,
“ இதை ஏன் உம்மகிட்ட சொல்றேண்டு கேளும். இரண்டு தடவை மாரடைப்பு வந்துடுச்சு. அந்த ஆத்தா எம்புட்டு காலத்துக்கு எனக்கு ஆயுசு கணக்கு போட்டு வச்சிருக்காண்டு தெரியலை” எனவும்,
“ வாயை கழுவுய்யா, அதெல்லாம் நூறாயிசுக்கு நல்லா இருப்பீரு” என்றார் மச்சினன்.
“ உன் வாக்கு பொன்னாகட்டும். ஆயுசு இருந்தா, அது விருப்பபடி நானே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன். இல்லையிண்டா நீ தான் என் ஸ்தானத்திலிருந்து என் மகளுக்கு நல்லது செஞ்சு வைக்கனும்” என்றார்.
உணர்ச்சி வயப்பட்டு போன மச்சினன் “ உன்னை மாதிரி அப்பன் கிடைக்க, எழிலு கொடுத்து வச்சிருக்கனும்” எனவும்
“ அப்பன் அமைஞ்சு என்ன பண்ண, பொம்பளை புள்ளைக்கு புருஷன்ல அமையனும். அதுக்குத் தான் இந்த வருஷம் பெருமாளுக்கு தண்ணீர் பீச்சுறமுண்டு வேண்டியிருக்கேன். நீரும் வாரும்” என்றார்.
“ மச்சான் வயசுக்கு தக்கன வேலையை பார்க்கனும். வயசு திரும்புதா என்ன?, அந்த வெயிலு ,கூட்டத்தில் சாமியை கும்புட்டுட்டு வர்றதே பெரிய பாடு. உமக்கு பதிலா, உம்ம மகனுங்க தண்ணீர் பீச்சட்டும்” என்றார்.
இவர்கள் பேச்சை கேட்டு நின்ற இந்திராணிக்கு அண்ணனின் உயர்ந்த குணத்தை எண்ணி கண்ணீர் வந்தது. “ ஒரு வார்த்தை சொன்னா, அன்புவே உன் மகளை கட்டுவானே அண்ணேன். அடுத்த வீட்டு புள்ளையும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற பார்த்தியா. இதுக்கே உன் மகள் வாழ்க்கை நல்லா அமையும்” என மனதார வாழ்த்தினார்.
முற்காலத்தில் கள்ளழகர் மண்டூக மாமுனிக்கு மோட்சம் கொடுக்க வைகையாற்றில் எழுந்தளுருளும் வைபவம், சோழவந்தான், தேனூர் வைகையாற்றில் தான் நிகழ்ந்தது. திருமலை நாயகர் காலத்தில், சைவ வைணவ ஒற்றுமைக்காக, மீனாட்சி, திருக்கல்யாணம், கள்ளழகர் வைபவம் இரண்டையும் தொடர் திருவிழாவாக மாற்றி, அழகர் இறங்கும் இடத்தையும், மதுரை தல்லாகுளத்துக்கு மாற்றி விட்டார். ஆனாலும் முற்கால நிகழ்வின்படி, இன்றும் சோழவந்தானில் அந்த திருவிழா நடந்து கொண்டு தான் இருக்கிறது.
சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில் அருகில் இருக்கும் ஜனகை நாராயண பெருமாள் , கள்ளழகர் வேஷம் தரித்து வெள்ளை குதிரையில், பச்சை பட்டுடுத்தி,சித்திரை பௌர்ணமி நாளில் அதிகாலையில் வைகையாற்றில் எழுந்தருளுகிறார்.
பக்தர்கள் இதற்கு விரதமிருந்து, சாமி தூக்கி, வெப்பம் தணிக்க பெருமாளுக்கும், அவரை சேவிக்க வரும் மக்களுக்கும் தண்ணீர் பீய்ச்சி அடித்து சேவை செய்வார். அந்த சேவையை தான் செய்ய போவதாக அழகர் சொல்ல, அவர் மச்சினன் மறுத்தார்.
அழகரின் வேண்டுதலை, அவர் மகன்கள் இருவரும் நிறைவேற்ற விரதம் இருந்தனர். வீடே திருவிழாவுக்காக சுத்தபத்தமாக காப்பு கட்டி விரதம் இருந்தது.
எழிலரசி , சிறுவயது முதல் பார்த்த நிகழ்வு, இரண்டு வருடமும் சென்னையில் இருக்கும் பொழுது, அந்த நாளில் சொல்லி புலம்புவாள், அதனால் ப்ரீத்திக்கும் பரிச்சயம் உண்டு. எழில் பத்து நாளும் ஊருக்கு வந்ததிலிருந்து அவளுக்கு அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்க, அன்புவை அழைத்துக் கொண்டு, திருவிழாவுக்கு முதல் நாள் ஊருக்கு வந்து விட்டாள்.
எழிலுக்கு அவனை நேருக்கு நேர் சந்திக்க சங்கடமாக இருந்தது. அடுத்து அவனை சமீபத்தில் பார்க்க மாட்டோம் என்றே , அவன் மீது உள்ள ஈர்ப்பை சொல்லி, நொடி நேரம் கன்னத்தில் முத்தமிட்டு வந்திருந்தாள். அவன் நேரே வந்து விட, முகம் பார்க்க முடியாமல் அவனிடமிருந்து தப்பித்து அண்ணன் வீடுகளிலேயே அடைக்கலமாகி இருக்க, அவனும் அவளை கவனித்துக் கொண்டே தான் இருந்தான்.
இதை கவனித்த ப்ரீத்தி, “ ஏய் ஏகே, க்யா மேன். அவளுக்கு ரூட் விடுற. மார்டாலூங்கி. டீல் இஸ் எ டீல். நீ என் மங்கேத்தர். மறந்துடாதே” என்றாள்.
“ நான் மறந்தாலும், என் குடும்பம் மறக்காது. போதுமா” என்றான்.
“ அது. பாப்பாஜி இஸ் எ கிரேட் மேன்” என்றவள் போன் சிணுங்க ப்ரேம் அழைத்திருந்தான்.
“ இவனுக்கு என்னவாம். இவன் பில்டிங்கை முடிச்சு அதுக்கெ இவறை ஷாதி பண்ணி வைக்கனும். டார்ச்சர் பண்றான். நல்லா கோர்த்து விடுடுருக்க மேன்” என கடுப்படித்தவள்
“ க்யாஜி, பந்தர்ஜி” என பேசச் சென்றாள்.
சித்திரா பௌர்ணமி அன்று நாகு, தாமு போல் அன்புவும் தார்பாச்சா கட்டி, மார்பில் குறுக்காக மாலை போட்டு, திருநாமம் இட்டு கள்ளழகராக வேடமிட்டு செல்லும், ஜனகை நாராயணரோடு தண்ணீர் பீச்சிக் கொண்டு செல்ல, பெண்கள் சற்று தொலைவில் நின்றே வேடிக்கை பார்த்தனர். எழிலும், ப்ரீத்தியும் எல்லா நிகழ்வுகளையும் தங்கள் அலைபேசிகளில் காட்சியாக பதிந்து கொண்டனர்.
வைகையாற்றுக்குள் திருவிழா கலைக்கட்ட, மகிழ்ச்சியாக அனுபவித்தனர். அன்றைய இரவில், அழகர் ஆற்றிலிருந்து கருட வாகனத்தில் அக்ரஹாரத்தில் உள்ள சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் மண்டபத்துக்கு எழுந்தருள தசாவதாரம் நடந்தேறியது.
எல்லா வைபவங்களிலும் , எழிலும், ப்ரீத்தியும் ஒட்டி பிறந்த இரட்டையர் போல் திரிய, “ஏண்டி, ரெண்டு பெரும் இப்படி திரியிறீங்களே, கல்யாணம் எப்புடி ஒருத்தனையே கட்டிக்குவிங்களோ” என்று கேட்க, எழில் பாட்டியை முறைத்தாள். ப்ரீத்தி, “அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா , நான் யோசிச்சதே இல்லை. எனக்கு ஓகே, எழில் உனக்கு ஓகேயா. ஏகே வாட் அபவுட் யூ “ எனவும், அவன் ப்ரீத்தியை முறைத்தான்.
எழில் அவள் வாயில் ஒரு அடி போட்டு, “இத்தனை நாள் அவரை படுத்தினது போதும், நான் கிளம்பின பிறகு மரியாதையா அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு குழந்தையை பெத்து கொடு. நீ எவ்வளவு சீக்கிரம் குழந்தை பெத்துக்கிறியோ, அவ்வளவு சீக்கிரம் நான் இந்தியா வருவேன்” என்றாள்.
“பக்கா” என வாக்குறுதி எல்லாம் வாங்கி கொண்டு, தன்னுடைய கல்யாண தேதியை அறிவித்தாள் ப்ரீத்தி. சரியாக எழில் சிங்கப்பூர் கிளம்பிய பத்தாம் நாள் இருந்தது. ஒருபக்கம் திருமணத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், மறுபக்கம் தன் மனதுக்கு உகந்தவன் மற்றொருத்திக்கு மாலை இடுவதை பார்க்கும் கஷ்டத்திலிருந்து தப்பித்தோம். என்னுடை சிறு வருத்தம் கூட ப்ரீத்தியின் வாழ்வில் எதிரொலிக்க கூடாது என்று நினைத்தாள்.
கோவிலில் தசாவதார நிகழ்வு நடத்துக் கொண்டிருந்தது. எழில் தன்னில் உழன்று ஏதோ சிந்தனையோடு முன்னே நடக்க, அவளை கூட்டத்தோடு கூட்டமாக ஒரு உருவம் தள்ளிக்கொண்டு போனது.
(பிழை திருத்தம் செய்ய நேரம் இல்லை. பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளவும். கதையை முடிக்கும் வேகத்தில் இருக்கிறேன்)
Who.is that? What happened to ezhil? Sema twist. Intresting.
Yar adu
Interesting😍
Yevan daaa athu ezhil ah thallitu porathu???
Yaarudaa née?