Skip to content
Home » அபியும் நானும்-4

அபியும் நானும்-4

🍁4
               அபிமன்யு பரிசு கொடுத்து முடிக்க, கண்களோ அபிநயாவையும் கீர்த்தனாவும் செல்லும் இடமே கண்கள் சென்றன… அங்கே மல்லிகா மிஸ்ஸிடம் கீர்த்தனா என்னவோ சொல்ல அவர்களும் தன்னை பார்த்து சங்கடத்துடன் பேசி கொண்டு இருக்க கண்டான்.
          மற்றொரு ஆசிரியர் பேச சொல்லி மைக் கொடுக்க வாங்கியவன்… பேச நினைத்தது எல்லாம் மறந்து போக தன்னையே மனதில் திட்டி கொண்டான்.

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


     ”ஐ அம் சாரி… நான் நிறைய பேசயெண்ணி தான் வந்தேன் ஆனா எல்லாம் பேச முடியாது போயிடுச்சு… ஐ மீன் வேற இடம் போகணும் அது இப்ப தான் நினைவு வந்துச்சு… இங்க அப்பா இவ்வளவு நாள் இந்த ஸ்கூல் பற்றி நீ எடுத்து நடத்து, என்னை விட சிறப்பா செய்வ, என்று எல்லாம் சொன்னார்.. அப்போ நம்பலை ஆனா இப்போ இனி கண்டிப்பா இந்த ஸ்கூல் என்னோட கண் பார்வையில் தான் இருக்கும்.

தென் இங்க கொஞ்சம் விளையாட கிரவுண்ட் இல்லை என்று ரொம்ப வருத்தமா சொல்லி இருந்தாங்க… இருக்கற இடம் போதவில்லை என்று நேற்று இங்க இருக்கற பக்கத்து இடம் விலை பேசி வாங்கியச்சு அந்த பழைய கட்டிட்டம் இடித்துவிட்டு அங்க விளயாட்டுக்கு தேவையானது ஏற்பாடு பண்ணப்படும்’ என்று சொல்ல கரவோசை அதிர கீர்த்தனா முகமோ அதே தோரணையில் இருக்க கண்டான்.


       ”நிறை குறை இருந்தா தெரிவிங்கள். நான் இங்க நிர்வாகத்துக்கு புதுசு நன்றி..” என முடிக்க எல்லோரும் ஜனகன பாடி அவ்விடம் களைய… கீர்த்தனா மெல்ல தனது அருகே வர கண்டான்.


          தானாக போய் பேச எண்ணி இருந்தவன், ஆவலாக… அவளே வருவதை கண்டு, மற்றவர்கள் கை கொடுக்க அவனும் கை கொடுத்தவாறே வந்தவன். அவள் அருகே வந்து நிற்க அவனும் முறுவலுடன் பேசினான்.


      ”ஹாய்.. எப்படி இருக்கீங்க?” என்று நாயகன் அபி கேட்க
      ”ஹ்ம… சாரி அன்னிக்கு நீங்க… மன்னிச்சிடுங்க…” என தயங்கினாள்.


      ”அன்னிக்கே சாரி கேட்டிங்களே” என்றான் அபி மாறாத புன்னகையோடு
     ”சொன்னேன் ஆனா அது உணர்ந்து கேட்கலை… இப்ப நான் செய்த தவறு புரியுது அதான்.. கிளம்பறேங்க பை” என்று சொன்னாள்.


       ”சோ கியூட்.. பேர் அபி…?” என்று நிறுத்தாமால்… இழுக்க
       ”அபிநயா….”
      ”ஹ்ம் நான் அபிமன்யு… நீங்க அபி சொன்னதும் எனக்கு என்னை கூப்பிட்டது போல இருந்துச்சு” என்றான்.
       ”நான் போறேங்க” என்று கீர்த்தனா செல்வதில் குறியாக இருந்தாள்.


     ”குழந்தையோட அம்மா அப்பா வராலையா? நீங்க குழந்தைக்கு என்ன உறவு?” என்று பேச்சை வளர்க்க,
      ”நான் குழந்தையோட அம்மா…. திருமதி.கீர்த்தனா ராஜேஷ்…” என்று அறிமுகம் செய்து கொண்டாள்.

அவனின் பார்வை அவளின் கழுத்திலே மேய.. ”குழந்தைக்கு நான் தான் சார் அம்மா. சில பெர்சன ரீஸன் தாலி பிடிக்கலை கழட்டிட்டேன்… வர்றேன்” என விடுவிடுவென்று கிளம்பி விட்டாள்.


                  ஆனால் அபிமன்யுவிற்கு தான் உலகமே தலைக்கீழாக சுற்றியது போல உணர்ந்தான். ஒரே நொடியில் அவனின் மொத்த புன்னகையும் காணாமல் போனது. இடியே தலையில் விழுந்த அளவு நொறுங்கி போனான்.


           பள்ளி நிர்வாகம் பற்றி அதிகநேரம் பேச வந்தவன் உடனடியாக வேலை இருக்கு… அடிக்கடி வருவேன் பேசலாம் என கிளம்பிவிட்டான்.


        காரினை எடுத்து வேகமாக வந்தவன் தனது அறையில் ஏ‌சி ஆன் செய்தவன் மெத்தையில் விழுந்தான்.
       கண்கள் அழுத்த மூடினான். அவனின் கருவிழிக்குள் அவளின் பிம்பம் ஓயாது வந்து சென்றன. அபிநயாவுக்கு வயது பத்து இருக்கும்.. அப்படி என்றால் கீர்த்தனவுக்கு திருமணமாகி பத்து வருடம் இருக்கும். அவள் மேல் எப்படி எனக்கு காதல் மலர்ந்தது. அவள் தான் மாங்கல்யம் அணியவில்லையே… என்றது ஒரு மனம், ஒரு மனமோ ‘என்ன அவளை விரும்பினியா? எப்பொழுது இருந்து’ என்று கேட்க விதிர்த்து எழுந்தான்.


             அறையெங்கும் சிதறிய பொருட்கள் கண்டு ‘நானா நானா இப்படி எல்லா பொருட்களையும் களைத்து உடைத்து வைத்து இருக்கின்றேன்.’ என்று பார்த்தான் உடைத்த பொருட்களில் கூட ஒரு பக்கம் சிவப்பு கார், சின்ன சின்னதாக தான் வாங்கி வைத்த டாய் கார் எல்லாம் கிடந்தது.

எதுக்குடா சிவப்பு கார் சிவப்பு வண்ண கார் கீ செயின்… சிவப்பு கார் வண்ணத்தில் ஷார்பனர் மொபைல் ஸ்டண்ட் என்று வாங்கி குவித்தாய்.. பற்றாதற்கு சுவற்றில் பள்ளி மாணவன் போல சிவப்பு கார் கொண்ட சீனரி எதற்கு? என பார்த்தவன் தன்னை அறியாமல் அவள் மீது கொண்ட காதலில் வாங்கி இருக்கின்றோம் என புரிந்தது.


             இதுநாள் வரை தனது 33 வயது வரை பெண்ணிடம் சலனம் இல்லாமல் இல்லை ஆனால் இந்த அளவு அதுவும் காதலில் விழுந்தது இதுவே முதல் முறை… கடைசி முறையும் இதுவே என ஒரு எண்ணம் ஓட அவளின் மாங்கல்யம் இல்லாத சங்கு கழுத்தே அவனுள் என்னவோ பிசைந்தது.


        அபியின் முகமும் அவனுக்குள் என்னவோ செய்தாலும் இன்று அவனுக்கு கீர்த்தனா பற்றி எண்ணத்தில் பெருத்த ஏமாற்றமே….


           கீர்த்தனா கீர்த்தி…. கீர்த்தி… உன்னவன் நான் இல்லையா? என்று தலயனையை தனது கையால் அதீத கோவத்தில் குத்தி எடுத்தான்.


             அதே தலையணை தான் அடுத்த நிமிடம் கட்டி கொண்டு அவனின் கண்ணீர் துளியினை யாருக்கும் அறியாமல் தன்னுள் இழுத்து அவனை அழாமல் இருக்கின்றான் என சொல்ல வைத்தது. நேரம் போக தன்னை மறந்து உறங்கினான்.
               மாலையில் முகம் அலம்பி கண்ணாடியில் பார்த்தான். ஏதோ தெளிந்தவன் போல இருந்தும் அதில் அதீத ஏமாந்து போன சாயல்… கீர்த்தனா ஏமாற்றவில்லை அவனாக தான் ஏமாந்து இருக்கின்றான் இருந்தும் என்னவோ சொல்ல இயலா வேதனை அவனுள்.


             படிகளில் இருக்கும் ரெட் கர்ப்ட் கூட கண்டதும் அவனுள் ஒரு கசந்த முறுவல் சலிபோடு நடந்து வர
     ”என்ன அபி இன்று ஒரு நாளுக்கே இப்படி ஆகிட்ட இன்னும் வருஷங்கள் கடந்து பார்த்துக்கணும் என்ன பிளான்? பக்கத்தில இடம் வாங்கி கிரவுண்ட் எல்லாம் ரெடி பண்ணி இருக்க?” என்று ரகுவரன் கேட்க அதன் பின்னரே அவர் பள்ளியை பற்றி கேட்கின்றார் என்பதை உணர்ந்தான். மனதில் ஒரு நாளைக்கே இப்படி துவண்டுவிட்டேன் நான் மாறனும் என்று அங்கிருந்த வாட்டர் பாட்டிலில் நீரை பருகினான்.


      அபிமன்யுவுக்கு அம்மா இல்லை இவன் கல்லூரி படிக்கும் வயதில் இறந்து விட்டார். அப்பா மட்டுமே ரகுவரன் அதிகமாக கண்டிக்கும் வழக்கம் இல்லை. அதனாலே என்னவோ 31 வரை இன்னும் திருமணம் வேண்டாம் என்று சொல்ல அவன் போக்கில் விட்டுவிட்டார். ஆனால் இதற்கு மேல் வயதின் ஏற்றம் கண்டு அடிக்கடி பேச்சு எடுப்பார். இன்றும் அப்படியே எடுத்தார்.


      ”பள்ளிக்கூடம் இனி உன் பார்வயில் பெரிய அளவில் வரும் எனக்கு அதுல கவலை இல்லை அபி… ஆனா உனக்கு கல்யாணம் பண்ணனும் அதோட கவலை அதிகமாகுது… இன்னிக்கு பார்த்தியே கீர்த்தி அந்த பொண்ணு எப்படி?” என்று கேட்க மகனின் முகம் பூவாய் மலர்ந்து ”அப்பா அது.. அவள்…” என்று சந்தோஷமாக ஆரம்பித்தவன் அவள் திருமணம் ஆகி குழந்தை இருக்கே என்பதையும் யோசித்தவன்
    ”யாரை சொல்லறீங்க?” என குழம்பி கேட்டான்.


    ”அதான் பா கீர்த்திகா ‘கதை சொல்லி’ ஒரு பொண்ணு லண்டன்…”
    ”ப்பா… அவங்க ஒன் ஆஃப் தே கெஸ்ட் எதுக்கு இப்படி பேசறிங்க?” என்று சொன்னவன் மனதில் இதே நேரம் அவளுக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் குழந்தை இல்லாமல் வெறும் கீர்த்தனா இருந்தா நான் இப்பவே உங்களிடம் கல்யாணத்தை விரைவில் செய்ய சொல்லி கேட்டு இருப்பேன்.


     ”கீர்த்திகா தான் அவளுக்கு மணமகன் பார்க்க செய்தார்களாம் அவள் இன்று உன்னை பார்த்து வீட்ல பேசிட்டு இருந்து இருக்காங்க.. அவங்க அப்பா உடனே உன்னை கல்யாணம் செய்துகொள்ள அவளிடம் கேட்டு இருக்கார்… அந்த பொண்ணும் உனக்கு சம்மதமா கேட்க சொல்லி இருக்கா” என்று பேசினார்.

அவன் இருந்த மனநிலை.. காதலித்ததையே உணர்ந்த நேரம், காதல் தோல்வியும் அதே நேரம் உணர்ந்தவன், அடுத்த சில மணி நேரத்திலே, இன்னொரு பெண்ணின் நுழைவை ஏற்க முடியாது வருந்தினான்.


     ”அப்பா ப்ளீஸ்… எனக்கு இந்த நிமிஷம் அந்த ஸ்கூல் இன்னும் வளரனும் அவ்ளோ தான் தோணுது.. கல்யாணம் இன்னும் கொஞ்ச..” என்று இழுத்தான்.
      ”உங்க அம்மா இருந்தா எப்பவோ பண்ணி வச்சி இருப்பா நீ இப்படி கொஞ்சம் கொஞ்சம் இழுக்க விடமாட்டா” என்றார்.
     ”கொஞ்சம் மாதமாவது தாங்க எனக்கு கொஞ்சம்…. சிலது மறக்கணும்” என்று சொன்னவன் கவலையோடு செல்ல அவனை புரியாமல் விழித்தார்.
            காலையில் ரொம்ப சந்தோஷமா போனான்… இப்போ என்ன ஏதோ பெருத்த காதல் தோல்வி மாதிரி பேசிட்டு போறான்… என்ன தான் இவனுக்கு… என்றெண்ணியவர் மாதம் தானே கேட்டு இருக்கான்… பார்போம் என பணியில் நுழைந்து கொண்டார்.


           காலையில் அபிநயா பாடிய குறளை தனது தாய் அம்பிகை மற்றும் அப்பா சுதாகருக்கு அனுப்பினாள் கீர்த்தனா.


           அடுத்த கொஞ்ச நேரத்திலே அவளுக்கு அழைப்பு வந்தது.
      ”ஹலோ அம்மா..” என கீர்த்தி பேச
       ”மாப்பிள்ளை காலையில் பேசினார்…. நீ உன் மகளை கூட்டிட்டு போனதை.. உங்களை போட்டோ கூட எடுத்தார் போல எனக்கு அனுப்பி இருந்தார்..” என அம்பிகை சொன்னதும் தனக்கு தெரியாமல் ராஜேஷ் போட்டோ எடுத்தானா? அதுவும் அபி குட்டியை என்று பரவசம் அடைந்தாள்.
       ”உனக்கு எதுக்கு கீர்த்தனா கஷ்டம் அவளை ஏதாவது ஒரு ஹோம்ல விடு கேட்கற காசை விட அதிகமா கொடுத்து பார்த்துக்க சொல்லலாம்..”
        ”ம்மா நிறுத்தறியா… ஆசையா வீடியோ உனக்கு அனுப்பினேன் பாரு…வை போனை”  என தூண்டித்தாள்.


           அதே நேரம் ராஜேஷ் நுழைந்து இருந்தான். கார் கீ போன் என வைத்து ஷர்டை கழட்டி அவள் மீதே வீசி எறிந்தான்.
      குளியல் அறை சென்றான். அம்மா அப்பா தான் இப்படி இவனாவது அவன் மனதில் மூலையில் அபி இருக்கின்றாளே என எண்ணியவள் அவன் காலையில் அம்மாவுக்கு என்ன அனுப்பினான் என்று பார்க்க, அந்த போட்டோ அபி இவளும் சேலையில் பால் கொட்டி இருக்கும் போட்டோ தான் ஆனால் இருவரும் அழகாக அருகே நின்று இருந்தார்கள். மெல்லியே இதம் கீர்த்தனா மனதில் பரவ கேலரியில் வேற என்ன போட்டோ இருக்கு என்று ஓபன் செய்தாள்.
        ஓபன் செய்து பார்க்க அதிலே சில படம் கண்டதும் முகம் சுழித்தாள். சே கடைசியில் ராஜேஷ் போட்டோ எடுத்தது.’ என்று நிமிர ராஜேஷ் கீர்த்தனா அருகே வந்தவன்.
     சைட் போசில் நீ ரொம்ப அழகா இருக்க…. தென் சேலை இல்லாமல் ரவிக்கையோட டூ ப்யூடிஃபுல்.” என்று சொல்ல போன் சுக்கள் சுக்கலாக சிதறி கிடந்தன அடுத்த நொடி.. ராஜேஷ் கரம் கீர்த்தனா கன்னத்தில் விழுந்தன.


    ”ஆப்பிள் போன் டி… என்ன அசால்டா தூக்கி எறிஞ்சுட்ட… உன்னை அப்படி எடுத்த போட்டோ தானே அப்படி பண்ணியது அதை நான் என்னோட ஆபீஸ் லேப்டாப்ல எப்பவோ சேவ் பண்ணிட்டேன்.. என்னடி செய்வ?” என்றான்.


     ”நீ மனுஷனே இல்லை… என் அப்பா அம்மா கைக்குள் வச்சிக்கிட்ட, என்னால என்ன செய்ய முடியும்… நல்லவன் போல ரொம்ப நாள் நாடகம் ஆட முடியாது” என்றாள்.


      ”நான் நல்லவனா தான் இருந்தேன்.. இப்பவும் நல்லவனா மாறிடறேன்… அவ மட்டும் வேணாம்.. நாம நியூ லைஃப்… நியூ சைல்ட்… அவளை ஹோம்ல எங்கயாவது தள்ளி விட்டுட்டு வேற கண்ட்ரி கூட போயிடலாம்…” என்று சொல்ல இதுவரை எல்லாம் தினமும் கேட்டே பழகிய வார்த்தை என்று அபிக்கு சுற்றி போட்டு விட்டு உறங்க போனாள்.


       உறக்கம் வர மறுத்தது. அங்கே ராஜேஷ் புலம்புவது கேட்டது.


      ”என்ன மாதிரி லைஃப் டி வாழ்ந்தோம்… இப்படி புலம்பி நீ ஒரு அறை நான் ஒரு அறை எதுக்கு டி… ” என்று அவளின் அறை கதவை வெளியில் இருந்தே உதைத்தான்.


     ராஜேஷின் முதல் அறிமுகம் ஏற்பட்ட பொழுது இவன் இப்படி மாறுவான் என்று கீர்த்தனா அறிந்தது இல்லை.. அவனும் இவளும் நூறாண்டு வாழும் தம்பதி போல தான் இருந்தார்கள் சந்தித்தார்கள்… கீர்த்தனா அவளையும் அறியாமல் அதனை நினைவு கூர்ந்து சென்றாள்.

பத்து வருடம் முன்… பின்னோக்கி சென்றாள். 

1 thought on “அபியும் நானும்-4”

  1. Kalidevi

    mrg pana puthusul iruka ariye epovum iruka mudiyathu than sila matram varalam aana athukaga kolanthai spl child na valarka kudatha home la vitudanumnu solrathu manasatchiye illama pesuran . antha time ena nadakunu yarukum theriyathe therinja ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *