Skip to content
Home » அபியும் நானும்-8

அபியும் நானும்-8

🍁8
                                      கீர்த்தனா மேடிட்ட வயிற்றோடு காரில் பரீட்சை மட்டும் வர பர்மிஷன் வாங்கி இருந்திட.. வீட்டிலே சொல்லி கொடுக்க ஆசிரியரை எல்லாம் வந்து நிறுத்தினான்.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


            திருமணம் கல்வி என்று இரண்டிலும் ஒரே நேரத்தில் தான் முடித்தாள்.


             பரீட்சை முடிவில் முதல் வகுப்பும் எடுத்தமையில் அபியை பெற்று எடுத்து மகிழ்விலும் அமுதமாக தான் வாழ்வு சென்றது. ஆறு மாதத்தில் அபிக்கு சோறுட்டும் நிக்ழ்வை கொண்டாடினார்கள்.


     பருப்பு செய்து சாதம் குழைத்து நெய் ஊற்றி வெள்ளம் வாழைப்பழம் பால் சாதம் தேன் என்று வைத்து வாழை இலையில் தங்க ஆபரணங்கள் அபிக்கு அணிவித்து ஊட்டி விட ராஜேஷ்-கீர்த்தனா மகள் ‘அபிநயா’ எச்சி ஒழுக பொக்கை வாயில் சிரித்து கன்னங்கள் கொழுகொழுவென பால் நிறத்தில் துள்ளி மகிழ்ந்து உண்ண செய்தாள்.


           ராஜேஷ் தான் தானே அவளுக்கு உணவு ஊட்டி விட ஆசை கொண்டு அபியை தூக்கி வைத்து கொஞ்சி அவளுக்கு ஊட்டி விட அபியோ அவனின் ஆடை முழுதும் சாதத்தினை கொஞ்சம் பூசி விளையாடினாள்.


         ராஜேஷ் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அபியிடம் தான் இருப்பான். அல்லது கீர்த்தனா இருக்கும் இடம் ராஜேஷ் இருப்பான்.


            இப்படி தான் நாட்கள் மிகவும் மகிழ்சியாக போனது.
                       நாட்கள்  மகிழ்வில் வேகமாக போனது. முதல் பிறந்த நாளுக்கு அபியின் மென் பாத நடையில் ராஜேஷ் தான் கையில் பிடித்து அழைத்து வந்தான் கீர்த்தனா சேலையில் தடுமாறும் என்றே அவள் அழகாக நடந்து வந்தாள்.


         கேக் எடுத்து ஊட்டும் பொழுது கீர்த்தனா துணயோடு தான் ராஜேஷ் ஊட்டி விட இனிமையாய் ராஜேஷ் கையில் அபி தவழ்ந்தாள்.


         ராஜேஷ் வாழ்வு அழகான மனைவி அன்பான குழந்தை என்றிருக்க பணியிலும் புதிதாக ஆரம்பித்த கம்பெனி வெற்றியை ஈட்டியது.


            வாரத்தில் ஒரு முறை அம்மா வீடு… மாதத்தில் ஒரு முறை ஹோட்டல்.. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு என்று அழைத்து சென்றான்.


        வருடத்திற்கு ஒரு முறை சிம்லா ஆக்ரா.. மும்பை கொல்கத்தா என்று அழைத்து சென்றான்.


         நதியாய் சீராய் ஓடிய கீர்த்தனா வாழ்வில் சுழலால் சிக்க செய்தது அபியின் ஐந்தாம் பிறந்த நாள் தான்.
           அபியின் பிறந்த நாளில் தான் அவள் இன்னும் அந்த வயதிற்கு உரிய வளர்ச்சி இல்லை என்பதையே கீர்த்தனா கண்டறிந்தாள்.


           எங்கும் கீழே விடாமல் வளர்த்து.. பல் முளைக்காமல் போக அதனால தானோ பேச்சு வரவில்லை என்றெண்ணி 3 வயது வரைவிடுத்து இருக்க அம்பிகை தான் பல் வந்தா தான் சொல் வரும் என்றே சொல்லி இருந்தார்கள். இன்று விழாவுக்கு வந்தவர்கள் சொன்ன பிறகே நாளைக்கு டாக்டர் சென்று பார்க்க வேண்டும் என்றே கீர்த்தனாவுக்கு தோன்றியது.


           கீர்த்தனாவிற்கு தெரிந்த டாக்டர் தான் முதலில் பார்க்கபோனாள். அங்கே கொஞ்ச நேரம் காத்திருந்து மருத்துவர் அழைக்க கீர்த்தனா ராஜேஷ் அபி என்று சென்றார்கள்.


       அந்த மருத்துவர் சில பல ரிபோர்ட் எடுக்க சொல்ல அவர்களும் எடுத்தார்கள். பதிலுக்காக மீண்டும் காத்திருக்க ராஜேஷ் தான்


      ”யார் இந்த டாக்டர் சரியான இடியட் எத்தனை டெஸ்ட் சின்ன குழந்தையை போயி… பாரு எல்லாம் பார்த்துட்டு ஒன்னுமில்லை சொல்ல போறான்.. நீ பணம் கொடுத்துட்டு சிரிச்சுக்கிட்டு வருவ..” என்று சொல்ல கீர்த்தனா அபியை பிஸ்கெட் கொடுத்தபடி புன்னகை செய்தே ஊட்டி விட்டாள்.


        அங்கே ஒரு பெண் இவர்களை தான் இமைக்காமல் பார்த்து இருந்தார்.
             நேரம் எடுக்க இவர்களை அழைத்த டாக்டர் சொல்ல சொல்ல ராஜேஷ் முகம் ரௌவுத்திரம் கொள்ள கீர்த்தனா முகமோ வெளிறி போனது. ராஜேஷ் அபியை தூக்கி கொண்டு வேகமாக வெளியே வந்து காரில் அமர அவனின் பின்னாலே கீர்த்தனா ஓடி வந்து அமர்ந்தாள்.


              வேகமாக கண்ணில் வெறியோடு ஓட்டினான். ”அவனுக்கு என்ன திமிர் என் பொண்ணுக்கு மூளை வளர்ச்சி குறைவு அது இது சொல்றதுக்கு… அவனோட ஹாஸ்பிடல் நாளைக்கே இழுத்து மூட வைக்கல என் பேர் ராஜேஷ் இல்லை” என்று காரினை கண் மண் தெரியாமல் ஓட்ட அது ஒரு பேருந்தில் மோத போனது.


    ”ராஜேஷ் கொஞ்சம் மெதுவா போ இடிக்க போகுது” என்று சொல்ல திருப்பி
     ”எனக்கே சொல்லி தருகின்றாயா? கார் ஓட்ட.. .வாயை மூடு” என்று கர்ஜீக்க கீர்த்தனா அவனின் முதல் கோவத்தை அன்று தான் கண்டாள்.


        வீட்டுக்கு வந்தவன் அபியை தூக்கி கொண்டு மாடிக்கு விரைந்தான். டிவியில் அன்று பார்த்து தெய்வ ம்கள் படம் ஓட அதில் விக்ரம் செய்கை போல அபி செய்ய முதலில் அன்று தான் அதனை கவனித்தான்.


         ஆனாலும் டாக்டர் சொன்னதை ஏற்று கொள்ள மறுத்து அவனின் உறவு முறையில் ஒரு டாக்டர் தெரிந்தவர் இருக்க அவரிடம் அபியின் ரிபோர்ட் எல்லாம் வாட்சப்இல் சென்ட் செய்து போனில் அவளுக்கு என்ன என்று கேட்டு அனுபீபினான்.


      இரவு பார்த்து சொல்வதாக சொல்லி அவரும் சொல்லிட ராஜேஷ் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி கொண்டான்.


      அதற்குள் கீர்த்தனா மூலமாக மகாலிங்கம் அபி பற்றி அந்த டாக்டர் கூறியது சொல்லி முடிக்க அவரோ ஏதோ யோசனையில் உழன்றவர் ”டாக்டர் சொன்னதுக்கு வாய்ப்பு இருக்கலாம் கீர்த்தனா என் அப்பவோட அண்ணா இப்படி இருந்து அப்போ ஒரு முறை கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என்று கேள்வி பட்டு இருக்கேன் அது மரபு வழியா இருக்கலாம் ஆனா அப்படி தான் ஊர்ஜிதமாக சொல்ல முடியலை.. ”என்று கண்ணீர் உகுக்க கீர்த்தனா மனதில் முதல் பயம் கவ்வியது.


                ராஜேஷ் அடுத்த நாள் அவன் அனுப்பி இருந்த ரிபோர்ட் பார்த்த டாக்டர் வர சொன்னார். அவனும் போனான் கீர்த்தி துணையோடு தான் அபியினை அழைத்தே..


    ”நீங்க காட்டிய ரிபோர்ட் எல்லாம் பார்த்தேன் உங்களிடம் ஏற்கனவே பார்த்த டாக்டர் சொன்னது தான்.. உண்மை கசக்கும் என்றாலும் ஏற்றுக்க தான் செய்யனும் ராஜேஷ்.. உங்கள் உறவு என்ற முறையில் சொல்றேன் இது போல உங்க தாத்தாவின் சைட்ல பார்த்து இருக்கேன் உங்க அப்பாவின் பெரிய தாத்தா இப்படி இறந்து போயி இருக்கார்.. இது ஜீன் குறைபாடா இருக்கலாம் இல்லை அபி கருவில் இருக்கும் பொழுது அவளுக்கு தேவயானா இஞ்செக்ட் செய்யாமல் போயி இருக்கலாம் கீர்த்தனா 4 மாதம் கற்பம் என்று அவளுக்கு தேவயான ஊசி மருந்து மாத்திரை எடுத்து கொள்ளாதது கூட இப்படி ஆகி இருக்கலாம்.. ஆனா இப்போ முடிந்ததை பற்றி பேசிட ஒன்னுமில்லை…


        அபியை இன்னும் அதிக கவனமா பார்த்துகிட்டாலே போதும்…” என்றதும் ராஜேஷ் மடியில் இருந்த அபி கீர்த்தனாவிடம் தாவ, என்றும் அபிய விட்டு கொடுக்க செய்யாத ராஜேஷ் தானாக விடுவித்து நிமிர்ந்தான்.


     பாதி பேசி கொண்டு இருக்கும் தருவாயில் தானாக கண்ணீர் சிந்தியவன் யார் முன்பும் அழ பிடிக்காமல் வெளியேறினான். போகும் அவனை டாக்டர் தடுத்தும் செல்ல கீர்த்தனா போகலாமா வேண்டாமா என யோசித்தாள்.


     ”நீங்களாவது கேட்டுட்டு போங்க மிஸ்ஸஸ் ராஜேஷ்” என்றதும் அமர்ந்தாள்.


        ”இங்க பாருங்க கீர்த்தனா குழந்தை பெற்றுக்க இந்த காலத்தில் எத்தனை பேர் தவம் இருக்காங்க தெரியுமா? உங்களுக்கு கடவுள் தானாக கொடுத்து இருக்கார்.. எதனாலையோ உங்களுக்கு மட்டும் கடவுளே அவதாரமா கிடைச்சு இருக்கார் என்று தான் சொல்வேன். சாதாரண மக்களுக்கு இப்படி இல்ல எந்த தாய் அதிக கேர் எடுத்து அன்பு செலுத்துவாங்களோ அந்த தாயின் அன்பிற்கு தான் கடவுள் சவால் விடுவது போல இப்படி கொடுப்பார். உங்களுக்கு அபியை வளர்க்க உங்களை போன்ற அம்மா தான் பெஸ்ட் என்று எண்ணி இருப்பார் கடவுள்”


      ”டாக்டர் எனக்கு அந்த அளவு பொறுமை எல்லாம் இல்லை ஏன் பக்குவம் கூட இல்லை.. என் வயசு 25 தான் எனக்கு எல்லாம் விளயாட்டு தான்.. அப்படி இருக்க இப்படி ஒரு குழந்தை? நிஜமா யோசிக்கலை டாக்டர்” என்று சொன்னாலும் அவளின் கைகள் அபியின் சிகையை வருடி விட்டது.


     ”இதுக்கு மேல என்ன பக்குவம் வேணும் கீர்த்தனா… ராஜேஷ் பாருங்க நான் சொல்ல வந்ததை கூட கேட்க பொறுமை இல்லாமல் போறார்.. ஆனா நீங்க பொறுமையா உட்கார்ந்து கேட்களிங்க இதுக்கே ஒரு பக்குவம் தான். அதுவும் அபியை இப்பவும் வெறுக்கமா வருடி கொடுக்கறீங்க… இதே அன்பை தான் வாழ் நாளில் முழுதும் தர சொல்றேன்”


   ”ஆனா மற்ற குழந்தைகள்…”
   ”என் கீர்த்தனா நீங்க குழந்தையா இருக்க தானே இப்பவும் ஆசைப்படுவீங்க? அப்படி இருக்க வாய்ப்பு அபிக்கு கிடைச்சு இருக்கு… சுற்றி இருக்கற கவலைகளை மனசில் போட்டுக்கொள்ளாமல்.. பணம் வீடு பகட்டு தேடாம எதையும் யோசிக்காமல் வாழற வாழ்வு தானே ஆனா என்ன நமக்கு தான் அதில் கொஞ்சம் இல்லை நிறைய வருத்தம் இருக்கு ஆனா அதுக்கு எல்லாம் உங்க மனதை தாயார் செய்து கொண்டாலே வருத்தம் கூட மகிழ்வா மாற்றலாம். இந்த அட்ரெஸ் போங்க அங்க பாருங்க எத்தனை குழந்தைகளை எப்படி பார்த்துக்க செய்யறாங்க பார்த்தாலே உங்களுக்கு புரியும்.. ஆனா கீர்த்தனா இது ஹோம்… அபி மாதிரி இருக்கறவங்களுக்கு தான் ஹோம் அவர்கள் சேர்க்க கூட செய்யலாம்.. ஆனா அன்பு எல்லாம் அம்மா காட்டும் அளவுக்கு இருக்காது… நாளைக்கே அபி வளரலாம் அவள் பெட்ல தான் யூரின் போகலாம்.. ஏன் சாப்பாடு கூட ஒரு ஒழுங்கு முறையா சாப்பிடாமல் போகலாம்.. மற்ற வயசு குழந்தைகள் செய்வதை விட இவ ரொம்ப கம்மியா தான் செய்வா.. நீங்க மற்ற குழந்தைகளோட ஒப்பிட்டு பார்த்து ஏங்க கூடாது… என்றே இன்னும் அபியின் வாழ்வு முறை எப்படி எல்லாம் இருக்கும் என்றே போதிக்க கீர்த்தனா மனதில் இறுக்கம் வந்தாலும் அதனை உள்வாங்கி கொண்டாள்.


          வெளியே வந்து ராஜேஷை தேட அவன் இல்லை என்றே புரிந்தது.
      முதல் முறை தன்னை பற்றி யோசிக்காமல் அவன் சென்றதை எண்ணி வருந்தினாள்.             
   ஆட்டோ பிடித்து இல்லம் வந்து சேர ராஜேஷ் வராமல் இருப்பதை உணர்ந்தாள்.


      மகாலிங்கம் எல்லாம் கேட்டு கொண்டு கசந்த முறுவளோடு எதுவும் பேசாமல் சென்றார்.
     ஒரு கணம் திரும்பி ”எது என்றாலும் அவ தான் நம்ம வீட்டின் வாரிசு மா” என்று அறைக்கு சென்றார்.


       ராஜேஷ் நேரம் கழித்து வந்தவன் அவனை தாங்கி ஒரு பெண் வந்தாள்.
     ”சாரி இவர் பப்ல ஓவர் ட்ரிங் பண்ணிட்டார்.. பக்கத்தில் தான் அட்ரெஸ் என்றே தெரிந்தது அதான் கூட்டிட்டு வந்தேன்.. நீங்க?”


     ”நான் அவரோட மனைவி கீர்த்தனா ராஜேஷ் ரொம்ப நன்றி” என்று சொல்லி ராஜேஷை ஆவலின் தோளில் மாற்றி அழைக்க
     ”நான் கேத்ரின்… இப்போ தான இந்தியா வந்தோம்…நாங்க…” என்று கேத்ரின் பேச்சில்,
    ”சாரி அவரை பார்க்கணும் இன்னொரு நாள் இண்ட்ரோ ஆகிக்கலாம்’ ‘என்று தவிர்க்க கேத்ரின் பார்வை அவளையும் ராஜேஷ் மற்றும் அந்த வீட்டின் அழகை பார்வையிட தவறவில்லை.

-தொடரும்.

2 thoughts on “அபியும் நானும்-8”

  1. Kalidevi

    Kastama tha irukum intha mari solrapo but atha ketu tha agunum oru kolanthai valarchi sari illa sonna vituda mudiuma apadiye konjam athigama care eduthu tha pathukanum atha ethukama udane drinks panita sari aeiduma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *