செல்லத்தாயி வசிக்கும் ஊர் காரப்பட்டியை விட்டு நான்கு ஐந்து ஊர் தள்ளி தான் உள்ளது… ஆகையால் திடீரென அழைப்பு வந்து, “இங்க ஒரு பிரச்சனை… அதனால உன் பேத்தி இயலினிய வந்து கையோட கூட்டிட்டு போ… அது தான் அவளுக்கு நல்லது…” என்று கூறப்பட்டதும் என்னமோ ஏதோ என்று அவர் பரிதவிப்பு உடனே தான் அவர் தங்கி இருந்த வீட்டின் பக்கத்து வீட்டு ஆள் ஒருவரின் உதவியுடன் காரப்பட்டிக்கு வந்து சேர்ந்தார்.
வந்தவர் நேராக தன் மகள் வீட்டுக்கு தான் சென்றார்… அங்கு சென்றதும், “அம்மாடி சாந்தா… என்னக்கு என்ன என்னம்மோ விஷயம் காதுக்கு வருது… இயலுக்கு என்னம்மா ஆச்சி? என்ன பிரச்சனை? இயலு… அம்மாடி இயலு…” என்று கேட்டுக் கொண்டே தான் வீட்டின் உள்ளே நுழைந்தார் இரவு பத்து மணிக்கு.
அவர் வாசலை தாண்டி உள்ளே அடி எடுத்து வைத்ததும்மே, “அங்கையே ஒரு நிமிஷம் நின்னு நான் சொல்லுறத காதுல வாங்கி முடிவெடுத்ததுக்கு அப்பறமாவே உள்ள வாங்க… நீங்க கேட்டு வந்த அப்படி ஒரு புள்ள எங்களுக்கு பொறக்கவே இல்ல… அவள நான் தலை முழுகிட்டேன்… நீங்களும் அவள தலைமுழுகி விட்டதா இருந்தால் மட்டும் வீட்டுக்குள்ள வாங்க… இல்லனா நீங்களும் வீட்டிற்கு வராதீங்க…” என்றே முகத்தில் அடித்தார் போல் சதாசிவம் கூறி விட செல்லத்தாயிக்கு சரியாக ஒன்றும் புரிய வில்லை.
ஆகையால், “சாந்தா… ஏன் டி அவரு இப்படி எல்லாம் பேசுறாரு? உங்க இரண்டு பேர்த்துக்குள்ள ஏதாவது சண்டையா? மாப்பிள்ளை என்ன ஆச்சி மாப்பிள்ளை? ஏன் இப்படி எல்லாம் பேசுறிங்க? யார தலை முழுகுனிங்க? என்ன சொல்லுறிங்க மாப்பிள்ளை(” என்றே செல்லத்தாயி பயந்து நடுங்கியே கேள்விகளாக கேட்டார்.
சதாசிவமும், “ம்… வேற யார எல்லாம் உங்க ஆசை பேத்திய தான் சொல்லுறேன்… உங்க பேத்தி எங்க குடும்பம் மானத்தையே வாங்கிட்டா… அதுவும் கீழ் ஜாதி பையன் ஒருத்தன் கூட பேசி பழகி என் மூஞ்சில கரிய பூசி என்னைய பஞ்சாயத்துல தலை குனிஞ்சி நிக்க வச்சிட்டா…” என்று எல்லாம் அவர் கூற கூற அவரின் முன் தன் வலது கரத்தை நீட்டி தடுத்த செல்லத்தாயி அடுத்து தன் மகளின் முகத்தை தான் பார்த்தார்.
அவர் அப்படியே நின்று இருந்தார் விழிகள் கலங்க… அதுவே கூறியது அவர் கூறும் அனைத்தையும் இவளும் ஏற்கின்றாள் என்று… அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு நிற்க வில்லை செல்லத்தாயி வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அதுவே கூறி இருக்கும் என்ன விஷயம் என்று கூட தெரியாமல் அவரின் பேத்தியின் மீது அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்று… ஆனால் அதையெல்லாம் காணும் நிலையில் தான் அங்கு யார் இருக்கிறார்கள்? அனைவருமே இயலினியின் மீது பழி போடும் நிலையில் தானே இருக்கிறார்கள்.
ஆகையால் சதாசிவம் தன்னை நம்பாமல் தன் பக்கம் நில்லாமல் போகும் தன் மாமியாரையும் வெறுத்தே வேகமாக வந்து அந்த வீட்டின் கதவை அறைந்து சாத்தி விட்டார்… கதவை சாத்தும் சத்தம் கேட்டதும் இமைகளை இறுக மூடினார்… ஆனால் சிறிது கூட திரும்பி செல்லத்தாயி பார்க்க வில்லை.
அவர் ஊருக்குள்ளே வந்ததும் எப்படியும் இங்கு தான் வருவார் என்றே அறிந்து இருந்த விசாலம் அவரின் மகன்னை செல்லத்தாயியை அழைக்க அனுப்பினார்… செல்லத்தாயி வீட்டை விட்டு வந்ததும் அவரின் முன் பைக்கை நிறுத்தியவன், “ஆயா… வா… அங்க இயலினி இருக்கா…” என்று கூற அமைதியாக செல்லத்தாயி பைக்கில் ஏறி அமர்ந்து கொள்ள அவரை அழைத்து கொண்டு பஞ்சாயத்து நடந்த இடத்திற்கு வந்தான்.
வந்த செல்லத்தாயி தன் பேத்தியை கண்டதும் துடித்து போனார்… தரையில் அமர்ந்தவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்… விழிகளில் இருந்து வரும் கண்ணீர் எல்லாம் அப்படியே வத்தி போனதோ என்னம்மோ… கண்ணீர் இல்லாமல் அவை வந்த தடம் மட்டும்மே இருந்தது… முகம் எல்லாம் வெளுத்து போயி இருந்தது… பள்ளி சென்று வந்தவள் முடியெல்லாம் கலைந்து தரையையே வெறிக்க பார்த்த படி அமர்ந்து இருந்தாள்.
செல்லத்தாயோ தன் மார்பிலையே அடித்து கொண்டு, “ஆத்தே… என் சாமி… எந்த எடுப்பட்டவன் என்ன சொன்னா என்ன? என் சாமி… என் கிட்ட வர வேண்டியது தானே… அய்யோ… என் ஆத்தே…” என்றே ஓடி வந்து தன் பேத்தியை வாறி அணைத்து கொண்டவர் கண்களில் இருந்து கண்ணீராக வந்தது.
இயலினியோ அவரை தொட கூட இல்லை… பாட்டியை கண்டு விட்டால் போதும், “ஆயா… ஆயா… என் செல்லம்… என் ஆயா…” என்று எல்லாம் அவரின் கன்னத்தை பிடித்து கொஞ்சி கொண்டு இருக்க கூடியவள் இப்போது அப்படியே உட்கார்ந்து இருக்க விசாலம் தான் நடந்த அனைத்தையும் கூறினார்.
எதையும் விசாலம் மறைக்க வில்லை… அனைத்தையும் விசாலம் கூற கூற கண்ணீரோடு கேட்டு கொண்ட செல்லத்தாயி தன் பேத்தியின் முகத்தை நிமிர்த்தி அவளின் முகத்தை தன்னை பார்க்க செய்தே, “விடு ஆத்தா… எவனோ எதையோ சொல்லிட்டு போறான்… எனக்கு தெரியும் என் இயலு புள்ள எந்த தப்பும் பண்ணாதுன்னு… கண்டிப்பா என்னைக்காவது ஒரு நாளு எல்லா எடுப்பட்ட பயளுங்கலும் உன்னைய பத்தி உன் பெருமைய பத்தி எல்லாம் தெரிஞ்சிப்பானுங்க… இப்போ வா… நம்ப நம்ப ஊட்டுக்கு போலாம்…” என்று அழைத்தார்.
அமர்ந்தே சட்டென அவரை விட்டு விலகி அமர்ந்த இயலினி அவரை விட்டு முகத்தை திருப்பி கொண்டாள்… அதுவே அவருக்கு தன்னையும் தன் பேத்தி ஒதுக்குகிறாள் என்பதை புரிந்து கொண்டு தனது மார்பிலையே அடித்து கொண்டு, “இயலு… என் புள்ள… நீ என் சாமி டி… நான் உன்னைய நம்புறேன் டி ஆத்தா… என்னைய ஒதுக்காத டி… உன்னைய வேணாம்ன்னு சொன்ன நான் பெத்த அந்த சிறிக்கியவும் ஒதுக்கிட்டேன்… அந்த ஆளையும் ஒதுக்கிட்டேன் டி… நீ தான் டி ஆத்தா எனக்கு எல்லாம்… உன் ஆயாவ ஒதுக்கிடாத டி…” என்றே கெஞ்சினார்.
அவர் அழுது கரைந்தார்… அவர் பெத்த மகளையே அவருக்கு பிடிக்காமல் போனது… தன் பேத்தியை எப்படியாவது தன்னுடன் அழைத்து கொண்டு போயிவிட வேண்டும் என்றே தான் அவரின் மனம் அடித்து கொண்டது… இனி தன் பேத்தியை ஆளாக்குவது தான் தன் வேலையே என்றே தன் பேத்தி இயலினியின் கரத்தை பிடிக்க போக அவளோ அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டாள்.
“இயலு…” என்று செல்லத்தாயி கூறும் போதே அவளின் பூ போன்ற பாதம் எங்கோ வேகம்மாக சென்று கொண்டு இருக்க விசாலமும் இயலு என்றே அவளின் பின்னாடியே ஓடி வந்தார்.
ஆனால் இயலினியோ பெரிதாக எதையும் காதில் வாங்காதவளாக வேகம்மாக நடந்தவளின் நடை அவளின் மீது பழியை போட்டு பஞ்சாயத்தில் நிறுத்திய வீட்டின் முன் சென்று நின்று கதவை தட்டியது.
இரண்டாவது தட்டிலே கதவு திறக்கப்பட்டது… கதவை திறந்த பேச்சியப்பன் தன் வீட்டு வாசலில் நின்ற இயலினியை பார்த்து சிறிது அதிர்ந்தே நின்றார்… அதன் பின் தன்னை சமன் செய்து கொண்டு, “இங்க என்ன பண்ணுற?” என்றே கேட்க
எந்த வித உணர்வும்மின்றி, “எனக்கும் அந்த பையனுக்கும் இடையில எதுவும் இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்… அதுக்கான ஆதாரம் கடவுள்ன்னு ஒருத்தன் இருந்தால் அவன் கிட்ட இருக்கும்… சந்தர்ப்பம்ன்னு ஒன்னு கிடைக்கும் போது அவன் ஒரு நாள் உன் வீட்டுல வந்து சாட்சி சொல்லுவான்… அப்போ என் நிலமை உன் புள்ளைக்கு அதாவது… ஓ பொம்பள பிள்ளை பெக்கல இல்ல நீ… பரவாயில்ல… பையன்ன பெத்து வச்சிருக்கல நீ… அவன் ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்து இந்த வீட்டுல வைப்பீங்கல… அப்போ… கடவுள் உங்களுக்கு எனக்காக சாட்சி சொல்லி தர தண்டனைய நான் இதே ஊர்ல இருந்து பார்ப்பேன்… என்னைய யார் எல்லாம் அவமான படுத்தி காயப்படுத்துனாங்களோ அவங்க எல்லாரும் என்னால… என்னால மட்டும்மே ஆயுசுக்கும் பயந்து காயப்பட்டு வாழுவீங்க… பாருங்க…” என்று கூறியே அங்கு இருந்து அவள் செல்ல
வேகம்மாக ஒரு பெண்மணி ஓடி வந்து இயலினியின் கரத்தை பிடிக்க வர அவரின் கரம் தன் கரத்தை தீண்ட விடாமலே ஒதுங்க சட்டென இயலினியின் முன் மண்டியிட்டு, “இப்படி மட்டும் சொல்லாதம்மா… அந்த ஆளு பண்ணுன பாவத்துக்கு என் வம்சம் என்ன பண்ணுச்சி?” என்றே கேட்க பேச்சியப்பன்னோ தன் மனைவியின் கரத்தை பிடித்து இழுத்த படியே, “ஏய்… அவளே ஒரு தராதாரம் தெரியாதவ… அவள் கால்ல போயி விழுந்துக்கிட்டு… ச்சி… வா…” என்றே கூறி இழுத்து கொண்டு சென்றார்.
இயலினியோ அதற்கு மேல் அங்கு இருக்க வில்லை… அவள் பாட்டுக்கும் நடந்து கொண்டு இருக்க செல்லத்தாயி தன் பேத்தியின் கரத்தை பிடித்து நிறுத்தி, “இயலு… விடு ஆத்தா… இங்க எல்லாம் இந்த கேடுக்கெட்டவனுங்க மத்தியில இருக்க வேணாம்… வா ஆத்தா உன் ஆயா ஊருக்கு…” என்று அழைத்தார்.
எப்போது செல்லத்தாயி ஊருக்கு வந்தாலும், “ஆயா… நானும் ஊருக்கு வருவேன்… நானும் ஊருக்கு வருவேன்…” என்றே அடம் செய்து கொண்டு அவருடன் ஊருக்கு மூட்டையை கட்டி கொண்டு போகும் இயலினி இப்போது தெளிவாகவே, “இல்ல… இந்த உலகத்துல உள்ள எல்லா இடத்திலும் இந்த மாதிரி கேடுக்கெட்டவனுங்க இருக்க தான் செய்றாங்க… அப்படி இருக்கும் போது எங்க போனாலும் பொண்ணுங்களுக்கு இந்த நிலைமை தான்… அதுக்கு நான் இங்கேயே இருந்து என்னைய அவமானப்படுத்தின என்னை அசிங்கப்படுத்தின இவனுங்க முன்னாடியே இருந்து வாழ்ந்து காட்டுறேன்…” என்ற பதினைந்து வயது பெண்ணின் கரத்தில் ஒன்றும்மில்லை.
ஆனால் இந்த ஊரை விட்டு போக மாட்டேன் என்று தெளிவாக முடிவெடுத்து இயலினி கூற அந்த நேரம் செல்லத்தாயும் விசாலமும் தான் அந்த ஊரிலையே ஒருவரிடம் வாடகைக்கு வீடு பேச நினைத்தனர்.
ஆனால் இயலினி, “இல்ல… எனக்கு வீடு எல்லாம் ஒன்னும் வேணாம்… அதுக்கு வாடகை குடுக்குற அளவுக்கு எல்லாம் என் கிட்ட இப்போ காசு இல்லை… அதனால காலியா இருக்குற ஒரு இடத்தை மட்டும் பார்த்து கொடுங்க… நான் அந்த இடத்துல ஒரு சின்ன டென்ட் போட்டு தங்கிக்கிறேன்…” என்று கூற செல்லத்தாயியே, “இங்க ஒரு சென்ட் இடம் எனக்கு இருக்கு… அது போதும் நம்ப தங்கிக்க…” என்று கூற இயலினி சாதாரணம்மாக செல்லத்தாயியை பார்த்து விட்டு தனது பள்ளி பையுடன் சென்றாள்.
அன்றில் இருந்து தனியே காரப்பட்டியில் தங்க ஆரம்பித்தாள் இயலினி.
Sariyana mudivu iyal thairiyama irunthu vazha palagi iruka super
thank you sis
இயலினி சொன்னாப்லயே, யாரெல்லாம் அவ மேல வீண் பழியை சுமத்தினாங்களோ, அவங்க எல்லாரும் அவ முன்னாடி தலைகுனிஞ்சு
நிக்கணும்.
Good epi
Arumai sis