Skip to content
Home » அரளிப்பூ 4

அரளிப்பூ 4

கறி கடைகார நடேசன் இயலினியின் வண்டியில் இருந்த மருந்தை பார்த்ததும், “எதுக்கு மருந்து? எவனுக்காவது ஊத்தி விட போறியா என்ன?” என்று இயலினியிடம் விளையட்டாக கேட்க

இயலும் அவர் பார்த்த தனது வண்டியில் இருந்த மருந்து டப்பாவை பார்த்து விட்டே, “அண்ணா… அவன் அவன் அவன் அவன்னாவே இந்த மருந்த ஊத்திக்கிட்டு சாகுவான்… அவனுக்கு எதுக்கு அண்ணா நான் தனியா காசு போட்டு இந்த மருந்த வாங்கி ஊத்தி விட்டுட்டு அவன கொன்னேன்னு உள்ள வேற போகுணும்?” என்றே கேட்டாள்.

விளையாட்டாக தான் கேட்டதற்கு வில்லங்கமாகவே பதில் சொன்ன இயலினியை மேலும் கீழும் பார்த்தே, “என்னம்மா சொல்லுற? அவன் அவன் எப்படிம்மா இந்த மருந்த வாங்கி ஊத்திக்குவான்?” என்றே புரியாமல் கேட்டார்.

நடேசனுக்கு புரியவில்லை என்பதனை புரிந்து கொண்டு நக்கலான புன்னகையுடன், “பின்ன என்ன அண்ணா? பூச்சிகள எல்லாம் சாவடிக்கிற மருந்து… அடுத்து புல்லு பூண்டு எல்லாம் சாகடிக்கிற மருந்து… அப்பறம் நல்லா செடி வளற மருந்து… பூ வைக்க காய் காய்க்க அந்த மருந்து இந்த மருந்துன்னு ஒன்னு மாத்தி ஒன்னு நிலத்துல போட்டு கிட்டேடேடே இருந்து தான் பயிர் எல்லாத்தையுமே விதைக்கிறோம் அறுவடை பண்ணுறோம்… அப்படி விளையிறத எல்லாம் நம்ம தின்னோம்னா? அது விஷத்த திங்கிறதுக்கு சமம் தான்னே… என்ன? தின்ன உடனே சாக மாட்டோம்… இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு… நாளைக்கு இல்லனா ஸ்லோ பாய்சன் மாதிரி நோய் வாய் பட்டு சீக்கிரம் சாக வேண்டியது தான்…” என்றாள்.

அவள் கூறியதை கேட்டதும் அருகில் இருந்த ஒரு பெரியவர் இயலினியை ஒரு மார்க்கமாகவே பார்த்து, “இவ்வளவு சொல்லுற நீயும் இன்னைக்கு அந்த மருந்த தான வாங்கி கிட்டு போற…” என்று கூற

அவர் கேட்ட விதத்தை கண்டு இயலும் சிறு புன்னகையுடன்னே, “அய்யா… சரியோ தப்போ… ஊரோட ஒத்து வாழுறோம்மோ இல்லையோ… ஊரோட ஒன்னா ஓடி போயிடணும்… இல்லாட்டின்னு வைங்க நம்பள பார்ப்பாணுங்க பாருங்க ஒரு கேவலம்மான பார்வை அத மட்டும் தாங்க முடியாது அய்யா… தாங்கவே முடியாது… அதான்… நான் திங்கிறத உருவாக்க மட்டும் தனி நிலத்தை வச்சி கிட்டு இந்த மாதிரி மருந்துகள எல்லாம் காட்டாம சுய உரத்தையே தயாரித்து செய்றேன்… மத்தது எல்லாம் அதாவது விவசாயம் செய்து வருமானம் ஈட்டனும் என்றே பயிரிடுறோம் பாருங்க… அதுக்கு எல்லாம் இந்த மருந்த அடிக்கிறேன் அய்யா… ஊரே செருப்பு போடாம போகும் போது நான் மட்டும் சீவி சிங்காரிச்சி நல்ல செருப்பா போட்டு கிட்டு போனாலும் என்னைய அசிங்கம்மா தான் பார்ப்பாங்க… அதான் நாணும் அவங்களுக்கு ஏத்த மாதிரியே போகுறேன்…” என்று கூறியவள்

மீண்டும் நடேசன்னை பார்த்து, “ஆமாம்… உங்க கிட்ட நானே கேட்கணும்னு நினைச்சேன்… நீங்க எல்லாம் எப்படி? கோழி ஆடு மீனுக்கு எல்லாம் கறி நிக்கன்னு ஏதாவது ஊசி மருந்து கிருந்து போடுறீங்களா என்ன?” என்று விஷமம்மாக கேட்க

சட்டென நடேசன், “அம்மா… ஆத்தா… உனக்கு ஒரு கும்புடே போடுறேன் ஆத்தா… அப்படி யெல்லாம் இல்லம்மா… தயவு செய்து அத இத நினைச்சி கிட்டு என் பொழப்புல மண்ணை போட்டுடாத ம்மா… நீ தான் எந்த மாசம்மா இருந்தாலும் வாரத்துக்கு தொடர்ந்து ரெண்டையும் மூனு வாட்டி வந்து வாங்கி கிட்டு போற… உன்னால வாரத்துக்கு மூவாயிரம் சம்பாதிக்கிறேன் ம்மா… அத கெடுத்து விட்டுடாத… நீ பாட்டுக்கு நான் திங்கிற கறியவும் நானே வளர்ப்பேன்னு சொல்லி கிட்டு…” என்றே கூற

அவர் கூறிய விதத்தில் இயலினி மற்றும் அருகில் நின்ற பெயரியவரும் வாய் விட்டே சிரித்தாள்.

இயலினி சிரிப்பதை கண்டதும் நடேசனுக்கும் சிரிப்பாக தான் இருந்தது… கூடவே அவள் கூறியதும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளும் படியாகவும் அவருக்கு இருந்தது தான்… உண்மையில் இப்படி யெல்லாம் பேசுபவளை ஊரே எதிர்த்து தான் நிற்கும்… அப்படி தான் இயலினியையும் எதிர்த்து நிற்பர்… அதே நேரம் ஏதேனும் அவர்களுக்கு தேவை என்றால் அவளுக்கு ஆதரவாகவும் நிற்பார்கள்.

பேசிய படியே அவள் கேட்ட கறிகள் எல்லாம் நறுக்கி வந்து சேர அதை வாங்கி கொண்டு அதற்கான பணத்தினை நடேசனிடம் தந்து விட்டு, “சரிங்க ண்ணா… இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு வரேன்… வரேன் அய்யா…” என்று கூறியே கிளம்பி விட்டாள்.

இவ்வளவு நேரம் இவள் பேசிக் கொண்டு இருந்ததை இரண்டு விழிகள் எதர்ச்சியாக கண்டு ரசித்துக் கொண்டு இருந்தது… பாவம் இயலினி இதை அறியாமல் தனது பைக்கில் ஏறி சென்று கொண்டிருக்க சரியாக கடை தெருவை தாண்ட போகின்ற நேரம் அவளை பின் தொடர்ந்து வந்த இரண்டு விழிகள் அவளின் கழுத்தில் இருந்த செயினை ஒரே இழுவாக இழுத்து பறித்துக் கொண்டு பைக்கில் சென்றது.

தனது கழுத்தில் இருந்த செயின் பறித்து கொண்டு ஒருவன் செல்லுவதை கண்டதும்மே, “அடங்க **** **** ****” என்று சரம் வாரியாக கெட்ட வார்த்தைகளை பறக்க விட்டுக் கொண்டே ஓரத்தில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து அவனின் பைக் வீலினை நோக்கி எறிந்தே துரத்தினாள்.

அவள் பேசிய வார்த்தைகளுக்கு எல்லாம் அந்த ஒட்டு மொத்த கடை தெருவே இயலினியையும் திருடனையும் திரும்பி பார்த்து விட்டது… கூடவே அந்த தெருவில் உள்ளவர்களும் திருடனை கண்டதும் அவனின் மீது ஆளு ஆளுக்கு கட்டையையும் கல்லினையும் எறிய ஆரம்பிக்க அடுத்த நொடியே அவன் வண்டியில் இருந்து தரையில் விழுந்தான்… அவன் விழுந்ததும் அனைவரும் அவனை பிடிக்க செய்தனர்.

செயினை அறுத்ததும் இயலினி வாயில் இருந்து வந்த வார்த்தைகளை கேட்ட திருடிய திருடனுக்கும்மே ஒரு நிமிடம் ஜெர்க் அடித்தது போல் தான் ஆனான்… ஆனாலும் தப்பிக்க ஓடியும் கட்டையும் கல்லும் அவனின் உடலை சரியாக பதம் பார்க்க எளிதாக மாட்டி கொண்டான்.

பல நாட்களாக அந்த திருடன் இப்படி தான் இந்த கடை தெருவில் நைசாக திருடுவதும் வயதான அழகான பெண்களிடம் எல்லாம் இவ்வாறு திருடி கொண்டு சாகசம் செய்வதும் வழக்கமாக வைத்து இருந்த திருடன் இன்று இயலினியின் தயவில் மாட்டியும் கொண்டான்.

அவன் அகப்பட்டதும் இயலினி அவனின் முன் சென்று அவன் கரத்தில் இருந்து தனது செயினை பிடிங்கி கொண்டு பலார் என ஒரு அறையை விட்டு, “தடிமாடு… தடிமாடு… உழச்சி பொழைக்க வேண்டியது தான டா… அப்படியே உழைக்க முடியல திருடித்தான் பிழைக்கணும்னா… நல்லா கொழுத்து போயி பலாயிரம் கோடியா சுருட்டி எதுக்கு வச்சி இருக்கேன்னே தெரியாம வச்சி இருக்குறவன்னையா தேடி போயி உன் சாகச மயிற எல்லாம் காட்ட வேண்டியது தான்னே… அவன் கிட்ட எல்லாம் போயி திருடாம அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுற எங்க கிட்ட ஏன் டா வெண்ணெய் வந்து திருடுற?” என்று கேட்கும் போது அங்கு ஆறடியில் ஒரு இளைஞன் வந்து நின்று இயலினியின் கரத்தில் இருந்த செயினை பிடுங்கினான்.

அவன் பிடுங்கிய வேகத்தில் அந்த ஆண்மகனின் பின்னந் தலையிலையே சிறிது எக்கியே ஒரு தட்டு தட்டி அவள் கரத்தில் இருந்து பிடுங்கிய செயினை மீண்டும் அவள் பிடுங்கி கொண்டு விரல் நீட்டியே, “பிச்சிருவேன் ராஸ்கல்… ஏதாவது வேணும்னா உழைச்சி வாங்குங்க டா பொறுங்கி பையளுங்களா? அத விட்டுட்டு இப்படி போற வர பொம்பள பிள்ளைகள் கிட்ட திருடிட்டு பிடுங்கிட்டு போற நீங்க எல்லாம் ஒரு ஆம்பளைங்களா டா?” என்றே கேட்டாள்.

இயலினி பேச பேச அந்த ஆண்மகன்னோ முகம் இறுகி கரங்கள் எல்லாம் முறுக்கேற, “ஏய்… நாக்க அடக்கி பேசு… நான் போலீஸ்… அவன் திருடன்…” என்றான்.

அதைக் கேட்டதும் இயலினி இன்னும் கொதித்து போனவள் போல், “ஓஓஓ… அப்போ போலீஸ்சா இருந்தா நீ பாட்டுக்கு போற வர பொண்ணுங்க கைல இருக்குற செயின்ன எல்லாம் புடுங்கிடுவியா?” என்றே கேட்டாள்.

மப்ட்டியில் இருக்கும் போலீசை கண்டதும் அந்த திருடன் மக்கள் கையில் இருந்தே ஓட முயன்ற படியே, “அடிப்பாவி… ஒரு பொம்பள புள்ள பேசுற பேச்சாடி… திருடனையே பெரிய பெரிய ஆளுங்க கையில திருட போக சொல்லி அவனுங்க உள்ள கூட எங்கள தூக்க வைக்காம கொல்லுவானுங்க… அதுக்கு ஏற்பாடு பண்ணுற? இப்போ போலீஸ்ன்னு சொல்லியும் அவரையும் வாய்க்கு வந்தத எல்லாம் சொல்லி பேசுறியே டி… இப்ப இவர் வேற என்ன என்ன பண்ண போறாரோ?” என்று நினைத்து கொண்டு நின்றான்.

அந்த போலீஸ் அதிகாரிக்கோ விழிகள் இரண்டும் சிவந்து போயி விட்டது… பற்களை கடித்து கொண்டு, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் போலீஸ்ன்னு சொல்லியும் ஒரு திருடனுக்கு சரி சமம்மா வச்சி என்னைய பேசுற… உன்னைய…” என்றே அவனின் கோவத்தை காட்டினார்.

அதற்கு எல்லாம் அசந்தால் தினமும் நூறு வில்லங்கத்தை அக்கத்தில் வைத்து கொண்டு சொகுசாக சுத்த முடியும்மா என்ன? என்பது போல், “சார்… நீங்க போலீசாவே இருங்க… அவன் திருடன்னாவே இருக்கட்டும்… அவன் என் கழுத்துல இருந்து அடிச்ச செயின்ன நீங்க என் கையில இருந்து அடிச்சி இருக்கீங்க… இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? யாருக்கா இருந்தாலும் கோவம் பயம் வரும் தான்… எங்க மறுபடியும் திருடு போயிடும்மோ என்னம்மோன்னு…” என்றவள் அவளின் செயின்னை அவளின் கழுத்தில் மாட்டி கொள்ள போனாள்.

“ஒரு நிமிஷம்… உங்க செயின் திருடு போயி திருடன் கையில இருந்து மீட்டதா வழக்கு பதிந்து நாங்க தந்த பிறகு தான் நீங்க அந்த செயின போட முடியும்… குடுங்க…” என்றே கேட்டான் அந்த காவலன்.

அந்த அதிகாரியை மேல் இருந்து கீழ் வரைக்கும் ஒரு முறை பார்த்தே செயினை கழுத்தில் மாட்டி கொண்டே, “எப்படி? எப்படி? எங்க கிட்ட திருடுவானுங்களாம்… அவனுங்கள பிடிச்சி உங்க கிட்ட குடுத்து கம்ப்ளைன்ட் குடுத்தா நீங்க ஜீப்புல ஏத்தி கிட்டு போயி… தனியா வச்சி வாங்க வேண்டியத எல்லாம் வாங்கி கிட்டு குடுக்க வேண்டியத எல்லாம் குடுத்து பத்திரம்மா அனுப்பி வச்சிடுவீங்க… அப்பறம் அவங்க மேல கேஸ் குடுத்த நாங்க எப்போ அந்த திருட்டு நாயி வந்து எங்கள அடிக்கும் கொல்லும்ன்னு கம்ப்ளைன்ட் குடுத்த நாங்க பக்கு பக்குன்னு கிட்டு கெடக்கணும் அதான்னே…” என்ற இயலினி அடுத்து செய்த காரியத்தில் அந்த அதிகாரியே அதிர்ந்து போயி விட்டார்.

மக்களோ விழிகள் விரிய அவளின் செயலை கண்டு இரண்டடி விலகி சென்று நின்று கொண்டனர்.

6 thoughts on “அரளிப்பூ 4”

  1. CRVS 2797

    அட…. சூப்பர்மா இயல்..! என்னாம்மா…பிச்சு உதறுற நீ செல்லம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *