Skip to content
Home » அறன் வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தல்

                                                  திருக்குறள் 

                                                       அதிகாரம்-4

அறன் வலியுறுத்தல்

குறள் 31:

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

விளக்கம்:

அறம் சிறப்பையும் அளிக்கும், செல்வத்தையும் அளிக்கும், ஆகையால் உயிர்க்கு

அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

குறள் 32:

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

விளக்கம்:

ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை, அறத்தை

போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

குறள் 33:

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்

விளக்கம்:

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம்

அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

குறள் 34:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற

விளக்கம்:

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம்

அவ்வளவே மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

குறள் 35:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி

விளக்கம்:

பிறர் மேன்மை கண்டு பொறாமை , புலன்கள் போகும் வழிச்செல்லும் ஆசை ,

இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீயசொல் எனும்

இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

குறள் 36:

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

விளக்கம்:

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல்

அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா

துணையாகும்.

குறள் 37:

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தான் இடை

விளக்கம்:

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய

அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

குறள் 38:

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்

விளக்கம்:

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால்

அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும்

கல்லாகும்.

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்

புறத்த புகழும் இல

விளக்கம்:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு

பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை, புகழும் இல்லாதவை.

குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி

விளக்கம்:

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே.

செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *