அத்தியாயம்-17
எபிலாக்
தன் மனைவியான உரிமையில் மலர் அணைக்க, அவளிடம் தன்னையே மறந்திட, அவளிடம் தொலைந்தான்.
சாந்தி முகூர்த்தம் நிலா வரும் இரவில் தான் வைக்க வேண்டுமென்று எந்த ஜோதிடன் உரைத்தது. இங்கே பகலில் சூரியன் உதிக்கும் பொழுது நடந்தேறியது.
தமிழ்மலருக்கு நன்றாக தெரியும், தனக்கும் தமிழரசனுக்கும் மணமானது என்று இங்கிருக்கும் சுவரை தாண்டி யாரும் சாட்சிக்கு இல்லை.
ஆனாலும் தன்னை தந்திட மறுக்கவில்லை. அவளுக்கு தமிழரசன் மீது நம்பிக்கை வலுத்திருந்தது. பேய்கள் மீதே அன்பு செலுத்தி அழுது கரைக்கின்றான். கைப்பிடித்தவளை அழ வைப்பானா?!
மதியம் உணவருந்த கூறி பசி வயிற்றை கிள்ளவும் எழுந்தான்.
“நான் வெளியே சாப்பாடு வாங்கிட்டு வந்துடறேன்.” என்று குளித்து சட்டையை மாற்றினான்.
மலர் தலையாட்டி முடிக்க, கதவை சும்மாவே சாற்றிவிட்டு சென்றான்.
சிறு குளியலை முடித்து தலைதுவட்டியபடி, ஹாலிலிருந்த போட்டோவை எடுத்து அதையே பார்த்தாள் மலர்.
‘பெரிய குடும்பத்தை எதிர்பார்த்திருந்த தமிழரசனுக்கு, அவனை போலவே தானும் அனாதையாக அமைந்ததில் சிறு வலி. தமிழரசனின் உயர்வான மனதிற்கு அவனுக்கு தன்னை விட நல்ல பெண் கிடைத்திருக்க வேண்டும்.
இப்படியொருத்தனுக்கு குடும்பத்தையே அழித்தவனின் பெண்ணாக அமைந்ததில் சிறு குற்றவுணர்வு இன்னமும் தலை தூக்கியது. இத்தனை காலமாக படுத்த படுக்கையில் இருந்த தந்தைக்கு சேவகம் செய்ததில் வெட்கி போனாள். முன்பு தந்தைக்கு சேவகம் செய்தது புண்ணியம் என்று முகம் சுழித்ததேயில்லை. இன்று தன் பிறப்பை உருவாக்கியவர் என்ற சுழிப்பு அதிகமாகவே இருந்தது.
இதை தமிழரசனிடம் பகிரவும் முடியவில்லை. நிறைய பேச வேண்டுமா? புரிய வைக்க வேண்டுமா என்று சுணக்கத்தில் தவித்திருக்க, “சாம்பார் சாதமும் தயிர் சாதமும் வாங்கிட்டு வந்திருக்கேன். சாப்பாடு வாங்கறப்ப அந்தண்ணன் என்னை தினுசா பார்த்தார். இரண்டு பொட்டலம் வாங்கறதால” என்று பேச்சு கொடுத்து வந்தான்.
அவசரமாய் போட்டோ பிரேம்மை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு, தலை துவட்டி வந்தாள்.
மணி ஒன்றாக, குளித்து முடித்து தமிழ் வந்திருக்க, தட்டில் வைத்து முடித்தான்.
இருவரும் ஒருவரை அறியாது ஒருவர் பார்த்து முடிக்க, கடைசி வில்லை விழுங்கும் பொழுது, “என்னால உடனே ஊர் அறிய கல்யாணம் செய்ய முடியாது. ஒரு மாசம் வெயிட் பண்ணு.” என்றான்.
ஏன் எதுக்கு என்று கேட்க நா துடித்தது. ஆனால் கேட்க தயங்கி சரியென்று அமைதியானாள்.
உள்ளுக்குள் ஊர் அறிய கல்யாணம் செய்யறதுக்கு ஒரு மாசமாகும்னா காலையில எதுக்கு…? என்றவளுக்குள் லேசாக சினம் பொங்கியது.
ஒரு மாசம் தொடாம இருக்கலாம்ல, நல்லா காஞ்ச மாடு கம்புல பாய்ந்த மாதிரியே பாய்ந்துட்டு பேச்சை பாரு’ என்றவள், அவன் எது பேசினாலும் சம்மதம் என்ற பாணியில் முகத்தை வைத்திருந்தாள்.
அதன்பின் மாலை டீ போட்டு தந்தாள்.
இரவு அவளே சமைத்து கொடுத்தாள்.
இரவு உங்க வீட்டுக்கு போ’ என்றது தான் பேச்சு, எல்லாரும் உறங்கும் சமயம் பேயை போல நடந்து சென்றிடும் முடிவிலிருக்க, “நைட்டு… போகணுமா? பேசாம காலையில போலாமே?” என்று வழிமறைத்து நின்றான்.
“காலையிலையா?” என்று கேட்க, ”ம்ம்.. ஐந்து மணிக்கு கிளம்பி போ” என்று கூற, வாசல் பக்கம் காலை எடுத்து வைத்தவள் ஹாலில் செல்ல, அவளை அழகாக கையில் தூக்கி கொண்டு படுக்கையறைக்கு சென்றான்.
புதுமண தம்பதிகளின் இன்னிசை கச்சேரி ஆரம்பமானது.
தனக்கு திருமணம் நடக்குமா நடக்காதா என்று கனவில் தனக்கு வரப்போகும் பெண்ணவளை நினைத்து நினைத்து ஏங்கியவனுக்கு, காதல் மனைவியாக அமைந்ததில் பேரானந்தம் உருவானது.
அதை வார்த்தையால் செல்லாமல் செயலில் வல்லவனாய் வீரம் பறைச்சாற்ற, இரவெல்லாம் சிவராத்திரியாக கழிந்தது.
அடுத்த நாள் காலையில், “தமிழ்… தமிழ்…” என்று உலுக்க, “என்ன தமிழ்?” என்று கேட்டாள்.
“ம்ம்ம் மலர் தமிழ். எந்திரிடி.. இப்ப மட்டும் நீ போகலை.. அப்பறம் மறுபடியும் மூனு ஷோ வீட்லயே கொண்டாடணும்” என்று உலுக்க, “என்ன ஷோ டா” என்று கண்ணை கசக்கி எழுந்தாள்.
“ஏன் எழுப்பற? எல்லாரும் திரும்ப வந்துட்டாங்களா? அப்ப உனக்கு ஜாலி தானே” என்று கேட்க, “ம்ம்ம் யாரும் வரலை… எல்லாம் பைபை சொல்லியாச்சு. இப்ப நீ கிளம்பு” என்றான்.
மணி நாலரை ஆகவும் மெதுவாக கடிகாரத்தை பார்த்து அவனையும் பார்த்து நடந்தாள்.
சேலை அங்கங்கே விலகி இருக்க சரியாக உடுத்த சிறிது நேரமெடுத்தாள். தமிழரசன் இமைக்க மறந்து நிற்க, என் போன் எங்க?” என்றாள்.
“இப்ப யாருக்கு கால் பண்ண போற?” என்றான்.
“செத்து போன எங்கப்பனுக்கு… லூசு… வீட்டுக்கு போக டார்ச்லைட் ஆன் பண்ண வேண்டும்.” என்றாள்.
“ஹலோ…. நான் புருஷன்.” என்றான்.
“அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு தானே.” என்று கூற, பழைய மலரின் துடுக்கு பேச்சில் அரசன் மென்னகைத்தான்.
அவள் கதவை திறந்து அவள் வீட்டுக்கு செல்லும் வரை வாசலில் நின்று கவனித்தான். அதன்பின் நிம்மதியாக உறங்க முயன்றான்.
காலையில் ஆறுமணிக்கு நீ மட்டும் எப்படி தூங்கலாமென மலர் காலிங்பெல்லை இடைவிடாமல் அழுத்த, காதை தேய்த்துக் கொண்டு, “கொழுப்பு பிடிச்சவளே.. அந்த பாத்திரத்தில் ஊத்தலாம்ல. செமயா கல்யாண கனவு கண்டேன்” என்று பேச, “உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுடா. எப்ப பாரு கனவுல வாழாத.” என்று ம்கூம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
வீடு வீடாக பால் ஊற்றி வேலைக்கும் சென்றாள்.
இது போல ஒரு மாசம் கழிந்தது. நடுவில் அடிக்கடி தமிழரசன் அவனது வீட்டுக்கு ரகசியமாக அழைத்துக்கொள்ள பேயை போல வந்து நிற்பாள் மலர்.
ஒரு நாள் டீக்கடையில, “ஏன் அண்ணாச்சி.. இந்த பொண்ணுக்கு யாருமில்லையா?” என்று கேட்டான்.
“யாரும் இல்லைங்க தம்பி நல்லப்பொண்ணு. இந்த காலத்துல படுத்தபடுக்கையில் விழுந்தா எவ பார்ப்பா? இந்த பொண்ணு பத்து வருஷத்துக்கு மேல அவங்க அப்பாவை பிள்ளை போல பார்ததுக்கிச்சுனு சொல்லறாங்க. கட்டிக்க போறவன் கொடுத்து வச்சவன்.” என்றார்.
“ஏன் அண்ணாச்சி… அந்த புள்ளைய நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். உங்க அபிப்ராயம் என்ன?” என்று கேட்டான்.
ஆளாளுக்கு மனதார பாராட்டி கட்டிக்க கூறினார்கள்.
அந்த ஊரில் பழகிய சிலரை பொண்ணு பார்க்க அழைத்து சென்று கல்யாணத்திற்கு நாள் பார்த்தான்.
பங்கஜம் டீக்கடைக்காரர் டிபன்கடைக்காரர், என்று சிலரின் துணையால் கல்யாண தேதி முடிவானது.
மலரும் கல்யாணம் செய்வதாக பங்கஜம் எல்லாம் மலரிடம் இனிமேலாவது நல்லா வாழுடி கொழுந்த” என்றார்.
தமிழரசன் தமிழ்மலர் இருவரும் அதன்பின் முதியோர் ஆசிரமம் சென்று தாத்தா பாட்டி அப்பா அம்மா என்று ஜோடியாக இருக்கும் வயோதிகரை சந்தித்தனர்.
தான் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்து, தங்களோடு தாத்தா பாட்டி அப்பா அம்மா என்ற உறவுகளாக நீங்கள் வருகின்றீர்களா என்று அனுமதி வேண்டி நின்றான்.
சொந்தங்கள் உறவுகள் என்றவர்கள் எல்லாம் இரத்த பந்தமாக இருக்க வேண்டுமா என்ன? அனைவரையும் ஒன்று திரட்டி வாழும் போது குடும்பமாக அமையாதா?!
மலருக்கும் அரசனுக்கும் இந்த யோசனை உதிக்க செயல்படுத்த அனுமதி கேட்டு நின்றார்கள்.
முதலில் யாரும் இருக்கும் இடத்தை விட்டு வர தயங்கினார்கள். ஆனால் கடவுள் அருளால் தாத்தா பாட்டி அப்பா அம்மா என்ற உறவுகள் அமைந்தது.
முறையாக தங்கள் உறவென பத்திரம் மூலமாக மாற்றி கொண்டான்.
அதே போல பதினெட்டு வயது பூர்த்தி அடைந்த ஆணை தம்பியாக ஏற்று அவனுக்கு படிக்க வசதியோட ஏற்றான்.
ஊரறிய திருமண செய்ய நினைத்த நாளும் வந்தது. அங்கே சபையில் தன்னுடய தந்தை, தன்னுடைய தாய், தன்னுடைய தாத்தா, தன்னுடைய பாட்டி, தன்னுடைய தம்பி என்று சபையில் நிற்க வைத்தான்.
மலரும் அத்தை மாமா ஆச்சி தாத்தா தம்பியை அவளுமே தம்பியாக பாவித்தாள்.
இவ்வாறாக தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டான். தனது வீட்டிலேயே வாழைமரம் கட்டி, சாமினர் பந்தலிட்டு, ஒலிப்பெருக்கியில் பாடலை இசைக்கவிட்டு, அலங்கார விளக்குகள் வீடெங்கும் தொங்கவிட்டு, நளபாகத்தை ஆர்டர் செய்து மாடியில் கேட்டரிங் சர்வீஸ் ஆட்களை நியமித்தான்.
ஊரை கூப்பிட்டு தான் தத்தெடுத்த உறவுகளின் முன்னிலையில் மீண்டும் மலருக்கு தாலி அணிவித்தான்.
ஏற்கனவே இந்த இடைப்பட்ட நாட்களில், நல்ல மகனாக பேரனாக அண்ணனாக பழகியிருந்தான். அதே போல மலரையும் பழகவிட்டான். அன்பை விதைத்தால் யார் தான் அன்பை தரமாட்டார்கள். அவர்களிடமும் அதே பாசம் நேசம் பகிரப்பட்டது.
இன்றிலிருந்து தன் திருமணம் முடிய அவர்களோடு குடும்பமாக வாழும் அமைப்பை ஏற்படுத்திக் கெண்டான்.
அவர்களுமே தாத்தா பாட்டியாக தங்களை பேத்தியும் பேரனும் பார்த்துக்கொள்ள கனிவாக காலம் தள்ள ஆசைக்கொண்டனர்.
தந்தை தாயாக வந்தவர்களுமே, இனிமையாக பழக ஆரம்பித்தார்கள். தமிழரசன் திருமணத்திற்கு அவன் முன்பு வேலை செய்த ஆட்களுக்கும் பத்திரிக்கை வைத்திருந்தான்.
‘பாவம்ப்பா அனாதை. கல்யாணத்துக்கு தலை காட்டிட்டு வருவோம்’ என்று வந்தவர்கள் அவனது வீட்டின் அமைப்பையும் சுற்றி செடி கொடியை கண்டவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அதோடு தத்தெடுத்த உறவுகளை அறிமுகப்படுத்தினான்.
கேசவன் எல்லாம் ‘வாழ்வுதான்’ என்று மனதில் பொருமினான்.
சதிஷோ நல்ல நண்பனாய், “வேலையை விட்டதும் கொஞ்சம் எப்படி வாழப்போறனு நினைச்சேன் டா.
எப்படி வாழ்ந்தாலும் நாலு பேரோட உறவுகள் சொந்தங்கள் கூட்டம் வேண்டும்னு வாழற பாரு. மனிதனா ஜெயிச்சிட்ட… அப்பறம் பொண்ணு அம்சமா இருக்காங்க. ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வாடா அம்மா கையால் விருந்து வச்சி ஜாமாய்ச்சிடலாம்.” என்றான்.
‘கண்டிப்பா…” என்ற தமிழரசனோ மலரிடம் மனதை பறிக்கொடுத்து நின்றான்.
முன்பை விட மெருக்கேறிய முகம் அவளது வதனத்தை கூட்டியது.
இனி வாழ்வில் பையன் பொண்ணு என்று அரை டஜன் பெற்றுக்கொள்ளும் மும்முரம் அவனிடம் இருக்க, மலரோ, அவனது ஆசை கனவை அறிந்தவளாக இருந்தாள்.
பின்னே… முன்பு கல்யாண கனவு, வீட்டில் கல்யாண ஆட்கள் வலம் வருவதாக கூறி திரிந்தவன், கொஞ்ச நாட்களாய், “வீடு முழுக்க நமக்கு பொறந்த குழந்தைங்க, டயப்பர் மாட்டிட்டு சுத்தணும். நீ வாயும் வயிறுமா இடுப்பை தாங்கி பிடிச்சிட்டு நடக்கணும். இந்த கனவை நனவாக்கறேன் பாரு” என்று வீரப்புலி சபதம் கட்டி சொல்வதை எத்தனை விதமாக கேட்டிருக்கின்றாள்.
ஆனால் இந்த கனவில் தமிழரசன் போல இந்த தமிழ்மலருக்கும் ஆசை மீது ஆவல் உண்டானது.
அதில் அவளது பங்கும் இருக்க
ப்ரியப்பட்டாள்.
அவர்கள் கனவை கலைக்க வேண்டாம். கனவு கண்டுக்கொண்டே இருந்தால் ஒரு நாள் நனவாகும் தானே?!
-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.
இந்த கதை ‘கான்சப்ட் என்னுடையது கதை எழுத்தாளரின் கற்பனை’ என்ற ரீதியில் JJ-2024 என்ற போட்டிக்கு ஒரு எழுத்தாளருக்கான கதைக்கான்சப்ட்.
பெயர் கொடுத்த நிறைய எழுத்தாளர்கள் கதையை தொடரலை. காரணம் வேற வேற சைட்ல எழுத போயிட்டாங்க.
நமக்கு ஆதரவு குறைவு தான். அதுவும் புக் போடறேன்னு பரிசு என்று விளம்பரம் வரும் தளத்திற்கு எழுத்தாளர்கள் முன்னுரிமை தந்து விடுகின்றார்கள். தவறில்லை….
ஆனா போட்டிக்கு பெயர் கொடுத்துட்டு பிறகு எழுத தயங்கும் போது, உள்ளே சிறு எரிச்சல் உண்டானது.
சரி எழுத வந்தா நல்லது எழுத வரலையா ரொம்ப நல்லதுன்னு விட்டாச்சு.
அதன் பொருட்டு கான்சப்ட் கொடுத்த கதைகள் எல்லாம் வரிசையா நானே எழுதிட்டு வந்தேன்.
தென்றல் நீ தானே…
காதல் இயமானி…
உயிரில் உறைந்தவள் நீயடி,
கண்ணிலே மதுச்சாரலாய்
தேநீர் மிடறும் இடைவெளியில்
அலப்பறை கல்யாணம்
இத்தனையும் முடித்துவிட்டேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் இதில் மூன்றை புத்தகமாக பார்த்துட்டேன்.
தென்றல் நீ தானே பூமகள்ல வந்துடுச்சு.
உயிரில் உறைந்தவள் நீயடி அருணோதயம்ல வெளியிடப்பட்டது.
காதல் இயமானி பூமகளில் கொடுத்திருக்கேன்.
கண்ணிலே மதுச்சாரலே ஒரு மேகஸினுக்கு அனுப்பியிருக்கேன். வெயிடிங் லிஸ்ட்.
தேநீர் மிடறும்(த்ரில்லர்) கதை அலப்பறை(நகைச்சுவை+பேண்டஸி) கதை இரண்டும் எண்டர்டெயின்மெண்ட் பர்பஸ் ஒன்லி. அதனால் பெரிதா எந்த கருத்தும் கலவையும் இல்லை. குட்டி மெஸேஜ் மட்டும் தான். உறவுகள் சொந்தங்கள் என்ற தேவை இருக்கறவனை விட இல்லாதவனுக்கு ஏக்கம் உண்டாக்கும்.
இருக்கற உறவுகளோட அன்பா பேசுங்க. அட்லீஸ்ட் போன் பண்ணி நலம் விசாரிங்க. முடிஞ்சா அடிக்கடி சந்திக்கற வாய்ப்பு கிடைச்சா தாராளமா மனதார சந்திச்சிடுங்க.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
இதெல்லாம் நீ பண்ணறியா? கேட்டிங்கன்னா. எஸ்… கதை எழுதிட்டே இருக்கா, எங்கயும் போகமாட்டா போலனு நினைக்காதிங்க. அத்தை வழி உறவு , அப்பா வீட்டு உறவுகள் எப்படியும் சந்திக்கற வாய்ப்பை அடிக்கடி எங்க ஜெனரேஷன் போடறாங்க. என்ன… நீ பெரியவனா நான் பெரியவனா பணக்காரனா எந்த பொறாமையும் இல்லாம பழகணும். நான் எதையும் யோசிக்காம அன்பை நாடறேன். எதிர்தரப்பும் அப்படி தான். வாழற காலம் அன்பான உறவை சம்பாதிக்கணும். அதுக்காக சங்கடங்கள் தர்ற உறவுகளையும் ஏற்று மனதை குப்பையா மாத்தக்கூடாது. எந்த நெகட்டிவ் வைப்ஸ் என்றாலும் விலகி நிறுத்திடணும்.
உனக்கென்ன நீ பைத்தியம்னு நெகட்டிவ் வைப்ஸை கடந்திடணும்.
எந்தபக்கம் என்றாலும் நாலு அன்பான உறவுகள் உண்மையான உறவுகளை சம்பாதித்து வையுங்கள்.
அந்த வகையில் நான் தமிழரசனை போல பாக்கியசாலியே.
நன்றி.
வாசகர்களே உங்க கமெண்ட்ஸ் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
நன்றிகள் பல. தொடர்ந்து சைட்ல வாசிங்க. ரெஜிஸ்டர் செய்யாதவங்க கஷ்டம் பாராமல் செய்யுங்க. அதுவும் ஒரு அன்பின் அடையாளமே. ஐ நம்ம கதை படிக்க நம்ம ரீடர்ஸ் இருக்காங்கன்னு ஒரு சந்தோஷம். அன்பானவர்கள் தானாக வருவார்கள்.
மனமெனும் ஊஞ்சலில் கைரேகை தாலி பத்தி போட்டிருந்தேன்
ஒரு சில ரைட்டர் முதுகுக்கு பின் கிண்டல் செய்வதாக இருந்தது. அதுவும் நல்லா எழுதற எழுத்தாளர்களே. ஏன்… இல்லை ஏன்னு கேட்கறேன். அவரவருக்கு என்ன கற்பனையோ அதை கதைக்குள் பார்ப்பதை கேட்பதை வைக்கின்றோம். இதே உங்க கதையில் வைத்து அதை மற்றவர் கேலி செய்தா சந்தோஷப்படுவிங்களா? இதுல மாதநாவல் எழுதறதை வேற கேலி செய்து போஸ்ட். பேசப்படுவோர் அங்கேயே நின்று பேசுங்க. நான் என் இலக்கை நோக்கி அடியெடுத்து வைப்பேன். எனக்கு கடவுள் தருவதை யாராலும் தடுக்க முடியாது.
Super super super😍😍😍😍 Fantastic story and alaparai story🤩🤩
வாழ்த்துக்கள் மேடம் உங்களுடைய லட்சியத்தில் மேலும் மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்
👌👌👌👌💐💐🎊
Superrrrrrrrr sis
Differentana story, konjam ud la bayanthutten pei story nu ninachu, aana nalla asnmaakkal thaan avunga laam. Marriage mudinja vudane ellam disappear aagittanga. Tamil athoda vidama, niraya pera adopt panni avanukku nu oru family ah ready pannittan, semmmmmmmaaaaa
Tamil n Tamil superrrrrrrrr jodi
Super sis arumaiyana mudivu 👌👍😍 azhaga soneenga uravugal elladhavanga dhan athoda arumai therinjavanga nu super pa namma kooda positive ah na vibe la erukuravangaluku naama enna venumnalum seyyalam but negative thoughts erukuravangala thalli vechidanum pa unga words padichi Naanum sila uravugal kooda pesanum nu nenaikiren sis thank you 🥰❤️ ennum neraiya story yezhudhunga menmelum uyara ennudaiya manamarndha vazthukkal keep rocking sis 😘😍🥰❤️❤️❤️💐💐💐🌹🌹🥰❤️
கதை அருமையாக இருந்தது உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியது
You rock sis. Fantastic story. Intresting sis.
Peyei kathaia ivlooo entertainment ah solla mudiuma ah naaa.. Yes… Its entertainment…. Jolly ahh erunthau read pandrathuku…. Muthugula kuthuravanga yella yedathulaium erukathaa seivanga… So thatti vittu poittey erukanum… All tje best for ur upcoming stories…
And pls book ah publish pandrathuku munnadi yengala maari unga thalathil mattumey read lanna koodiya readers ku inga antha story ah update pannalam.. This is my small request… Consider sis…
Super sister..
Begining to ending very interesting 🤔
Thank you 👍
We are always support
கதை அருமையாக இருந்தது உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியது
👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌💛💛💛💛💛💛💜💜💜💜🎁🎁🎁🎁🎁
Title ku etha maathiri nama tamilu romba alaparai pannitaru….. spr story sis…..👌👌👌👌💕💕💕💕💕💕
Super praveena. Ending nalla twist. Epdi adopt panrathu romba rare aana vushayam. Keep rocking 😀
சகி, நல்ல ஒரு பேண்டஸியான கதை அதிலும் சின்ன கருத்து அன்பை யார் விதைத்தாலும் அன்பே அறுவடை செய்யலாம் என்று. உங்கள் கதைக்கு என்று ஒரு சில நியாயமான வரைமுறைகள் வைத்திருப்பீர்கள் அதை ஒவ்வொரு கதையிலும் கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது உங்கள் அனைத்து கதையும் தவறாமல் வாசித்து விடுவேன். வேலைப்பளு குடும்பச் சுமை காரணமாக எல்லா இடத்திலும் கருத்து தெரிவிக்க முடியவில்லை. சிறிது இடைவெளி கிடைத்தாலும் உங்களது கதை தான் உற்சாகம் தருகிறது. மென்மேலும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்
♥️♥️👍👍👍♥️
Super story…..
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
கதை சூப்பர் 👌👌👌👏👏👏💐💐💐
அலப்பறை கல்யாணம்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 17 Final)
அதானே பார்த்தேன்… ஒரு மாசம் கழிச்சு கல்யாணம், அதுக்குள்ள ஏன்டா சாந்தி முகூர்த்தத்தை பகல்லயே நடத்தி முடிச்சேன்னு வாயைத் திறந்தேன். அதுக்குள்ள மலரோட மைண்ட் வாய்ஸே கேட்டுடுச்சு. போகட்டும், ஊரறிய கல்யாணம் பண்ணவும், பெரியவங்களை அடாப்ஷன் பண்ணவும் தான் டைமிங் கேப் கேட்டிருக்கான்னவுடனே
வந்த கோபமெல்லாம் சட்டுன்னு
போயிடுச்சு.
உண்மையிலேயே, தமிழரசனுக்கு ரொம்ப பெரிய உயர்ந்த மனசு. தன் குடும்பத்தை அழிச்சவனோட
பொண்ணையே கட்டிக்கிட்டு, தன் கல்யாண கனவுகளையும் நனவாக்கிட்டு, உறவுகளையும் உடன் சேர்த்துக்கிட்டு…. குடும்பத்தை இன்னும் பெருசாக்க தன்னோட வாரிசுகளுக்கும் பலமான அஸ்திவாரம் போட ஆரம்பிச்சிட்டான்.
வாழ்க வளமுடன் தமிழும் மலரும் தமிழரசனுமாக…!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super story sis.
Tamil avan oda kanavu padiya kalyanam mudinchithu athuvum azhaga oru love and kutty suspense twist nu super ah kuduthiga athuvum konjam kooda salikama really super sis
wow superb very interesting and lovly ending . oru mari pei kathaiya kondu vanthu athula entertainment plus comedy kalanthu interesting ah koduthu irukinga . superb sisy. intha mari family ah thathu eduka yosipanga but tamil apadi la yosikama elaraium thathu eduthu mrg ku nika vachi avanga kitta asirvatham vangi irukan good enada drama nu mrg panni 1mth wait pana solrane ninacha paravala ithukaga tha soli irukan . nalla entertainment story .
continue panunga sisy unga stories vasika na iruken epovum . congratulations sisy
As always…very very super
Super😋