Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-8

அலப்பறை கல்யாணம்-8

அத்தியாயம்-8

    முந்நூறு மிலி பால் வச்சி இவன் எப்படி எல்லாருக்கும் டீ போடுவான்‌? ஆமா இவன் என்ன அனாதை அதுயிதுனு சொல்லறவன், தினமும் காலையில் மட்டும் கல்யாண கூட்டம் மாதிரி ஆட்கள் இருக்காங்க. சாயந்திரம் பால் ஊத்த போறப்ப இவங்க யாரும் இருப்பதில்லை. காலையில் மட்டும் குளிச்சி முடிச்சி பூ போட்டு நகைன்னு இருக்காங்க. இதுல சம்பந்தமேயில்லாம அவன் தான் ஷார்ட்ஸ் டிராக் சூட்னு சுத்தறான்.
   இவன் எதுக்கு இங்க வந்து அல்லல்படணும்?’ என்ற எண்ணத்திலேயே பால் ஊற்றி முடித்து வீடு திரும்பினாள்.

   எப்பவும் போல அவளுக்கான நேரம் அவளது கடமையில் தள்ள, ஒரு மூலையில் தமிழரசனின் நினைவு தேங்கியது.

    தந்தையை இன்று குளிக்க வைத்து, பெட்டில் படுக்க வைத்து, ரேடியோவை போட்டுவிட்டு சாமி கும்பிட்டு தந்தையின் நெற்றியில் விபூதி வைத்து புறப்பட்டாள்.

   பேருந்தில் செல்லவும், தமிழரசன் அழைத்துவிட்டான்.‌

  லேசான புன்னகை கீற்று உதட்டில் வலம் வந்தாலும் அந்த அழைப்பை ஏற்று, “ஹலோ உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கிங்க. எனக்கு தினசரி போன் போடற வேலையா மாத்தறிங்க” என்று எகிறினாள்‌.
  
   தமிழரசனோ “கரெக்ட்ங்க. இனி தினமும் நேரத்துக்கு போன் போட்டு பேசுவேன். பிடிக்கலைன்னா கறுப்பி விடுங்க‌. அதாங்க பிளாக் பண்ணிடுங்க” என்றான்.‌

   அவனுக்குமே இந்த அணுகுமுறை எதுவரை செல்லும் என்ற ஆவல் தெளிக்க, பிடிக்கலைன்னா பிளாக் பண்ணிட்டா நாம நம்ம வேலையை பார்க்கலாம், ஆசையையும் அடக்கிடலாம் என்று முடிவெடுத்தான்.

   “நான் வேலைக்கு வந்துட்டேன். உங்களை பிறகு கவனிக்கறேன்” என்று துண்டித்துவிட்டாள்.

  தமிழரசன் பிளாக் பண்ணிட்டாளா இல்லையா என்று மதியம் வரை கவனித்தான். வாட்சப்பில் ஹாய் என்று மட்டும் அனுப்பி விட்டு காத்திருந்தான்.
 
   பிளாக் பண்ணினா இந்த ‘ஹாய்’ என்ற குறுஞ்செய்தியோட முடியுமென இருந்தான்.

  நித்யகல்யாணி பூவை டிபியாக கொண்ட வாட்சப் ட்ரு காலரில் மலரின் பெயரை அறிய சென்றான்.

  அதுவோ ‘செந்தில்’ என்ற பெயரில் இருக்கவும், நொந்துவிட்டான்.

  தமிழ்மலர் அவளது தந்தையின் எண்ணை தான் பல காலமாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றாள்‌.
 
   ‘சே… பொண்ணு பெயர் தெரிந்திடும். இது மூலமா அந்த கல்யாண வெப்சைட்ல அந்த பொண்ணு பெயர் போட்டு தேடினா போட்டோ கண்டுபிடிக்கலாம்னு பார்த்தேன். என் தேடுதல் பூஜ்ஜியத்தை நோக்கி தள்ளுது.

  சில பல நிமிடம் அதையும் தாண்டி அந்த கல்யாண வெப்சைட்டில் பெண்ணின் தந்தை பெயர் செந்தில் என்று யாருடையதாவது அகப்படுகின்றதா என்று ஆராய்ந்தான்.

  அது கிடந்தது. ரயில் வண்டி போல தொடர்ச்சியாக பெண்ணின் புகைப்படம்‌ ஒவ்வொன்றிலும் தந்தை பெயர் செந்தில் உள்ளதாயென ஆராய்ந்து முடித்து சலிப்பு உண்டானது.

அந்த வெப்சைட்டில் தமிழ் தன் பெயரை பதிவு செய்யாமலேயே தான் வரன் தேடினாள்.

  வேலை வெட்டி இல்லாமல் அவன் தேடி கிடைக்குமா?
  மதியம் சாப்பிட்டு வீட்டில் வரைய ஆரம்பிக்க, முன்பு வரைந்த ஓவியத்தில் நினைவு சென்றது.

  அவசரமாய் அதை காண சென்றான்.
  நேரில் அதிகாலையில் வரும் உருவங்கள் வரிசையாக வரைந்து வைத்திருந்தான் தமிழ்.

  இன்று உறவு முறை வைத்து அறிமுகப்படுத்தியிருக்க, தாய் தந்தை என்று இருந்த புகைப்படத்தை வருடினான்.

  “நீங்களாம் யாரு? ஏன் என் கனவுல வர்றிங்க? ஆமா அது கனவு தானா? நிஜமா? அந்த பால்கார பொண்ணிடம் சொல்ல வந்தப்ப காணாம போயிட்டிங்க. பேயா இருந்தா என்னை பயமுறுத்தி இந்நேரம் சாகடிச்சிருப்பிங்க‌. அப்ப இது கனவு தானா.? இல்லை அமானுஷ்யமா ஒன்னும் புரியலை.

   ஐந்து டூ ஆறு மட்டும் என்ன ஸ்பெஷல்? ஏன் இப்ப வரமாட்டேங்கறிங்க? என்று புகைப்பட சட்டத்தை வைத்து புலம்பினான். எனக்கு உங்களை மாதிரி பெரிய குடும்பம் வேண்டும்.” என்றவன் போன் ரிங் வரவும் ஆனந்தமாய் எடுத்தான்.

  “ஹலோ.. ஏய்… என்‌ நம்பரை பிளாக்ல போடலையா செந்தில்?” என்று கேட்டான்.
 
  தன் தந்தை பெயர் என்றதும் மலர் ஸ்தம்பிக்க, தமிழரசனே பேசினான்.

  “ஆசை ஆசையா ட்ரூ காலர்ல பெயர் பார்த்தா, செந்தில்?.. ஆம்பளை பெயரு. என்ன உங்க அப்பா போனை வச்சியிருக்கியா. எனக்கு உன் பெயர் கூட தெரிந்துக்க கொடுப்பினை இல்லை. சரி உன் பெயரையாவதே சொல்லேன்.” என்று கொஞ்சல் மொழியில் கேட்டான்.‌

‘அட பக்கி… முன்ன கால் பண்ணி நான் தமிழ் பேசறேன்னு சொன்னதுக்கு, நான் தமிழ்ல பேசறேன் இங்கிலிஷ்ல பேசறேன்னு என்னை கடிச்சி விடாத குறையா பேசினான்.‌
இப்ப திரும்பவுமா? மலர்னு சொன்னா எப்பவாது மாட்டுவேன். என் பெயரை டீக்கடைக்காரரிடம் கேட்டா சொல்லிடுவார். இங்க மலர் என்ற பெயர் தான் தெரியும். தமிழ்னு ஏற்கனவே இவனிடம் சொல்லியாச்சு. இப்ப என்னத்த சொல்ல?’ என்ற கடுப்புடன், பேச்சை திசைத்திருப்பும் நோக்கத்தோடு, “மிஸ்டர் தமிழ் உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா. உங்களை ஆல்ரெடி முடிந்தளவு டீசண்டா சொல்லிட்டேன்.
அப்பவும் எத்தனை கால்ஸ். நான் தெரியாத்தனமா கேட்கறேன். நீங்களே ஒரு அனாதை. அப்படியிருக்க ஒரு பெரிய குடும்பத்தோட ஒன்னா வாழ ஆசைப்படறிங்க. உங்களோட எதிர்பார்ப்பே பெருசா இருக்கறப்ப, பெரிய குடும்பத்துல இருக்கற பொண்ணை எப்படி சார் ஒரு அனாதைக்கு கட்டித்தருவாங்க. உங்களுக்கே நீங்க எதிர்பார்ப்பது பேராசையா தெரியலை?” என்று இகழ்ச்சியாக நக்கல் தெளிக்கும் விதமாக கேட்டாள்.

இந்த பேச்சுக்கு தமிழரசன் அடுத்த நிமிடமே போனை துண்டித்திருக்க வேண்டும். இல்லை கண்டமேனிக்கு மலரை திட்டியிருக்க வேண்டும்.

  ஆனால் அவனோ நிதானமாக, “ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க. நீ ஏழையா பிறக்கறது தப்பில்லை. ஆனா ஏழையாவே செத்தா அது உன் தப்புன்னு. ஏன்னா உழைக்கனும் முன்னேறணும்னு எண்ணமிருந்தா நாம ஏழை என்ற அடையாளத்தை உடைச்சிட்டு ஒரு குறிப்பிட்ட உயர்வான இடத்தையாவது பிடிப்போம்.

அது மாதிரி தான்…

  நான் அனாதை என்ற அடையாளத்தோட என் கல்யாண பயோடெட்டால போட்டாலும், சாகறதுக்குள் மனைவி குழந்தை குட்டி, மனைவியோட அப்பா அம்மா, அவளோட சொந்தம்னு ஒரு குடும்பத்தோட இணைந்திருக்கணும்.  எனக்குள் இருக்கற சாதாரண ஆசை. ஆனா பார்க்கறவங்களுக்கு பேராசையா தோணும். இதெல்லாம் உரிமையா செந்தில்னு உன் அப்பாவோட பெயரில் போனை யூஸ் பண்ணற உனக்கு… சொன்னா புரியாது.” என்று பேசவும் மலருக்கு வருத்தமாய் போனது. இந்த அனாதை என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம்.
 
  “சாரி தமிழ்… உன்னை காயப்படுத்துவது என் நோக்கமில்லை” என்றதும், “தெரியும் தெரியும் என்னை கட் பண்ண ஆசைப்பட்டு இப்படி எல்லாம் பேசற. இதுகூட புரியலைன்னா எப்படி?

  இப்பவும் சொல்லறேன் ஒரு பொண்ணுக்கு ஒரு ஆணோட பேச பிடிக்கலைன்னா அவ இப்படி திட்டிட்டு இருக்க மாட்டா. கமுக்கமா பிளாக் பண்ணிட்டு விட்டுடுவா. அதுவும் உன்னை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. அதனால நீ தாராளமா பிளாக் பண்ணிட்டா என்னால உன்னை அணுகி பேசவே முடியாது.
   உனக்கு என் மேல ஏதோவொரு பிடித்தம் இருக்கு. ஐ அம் ரைட்?” என்றான்.‌

  மலருக்கு ‘நெப்பந்தஸ்’ தாவரத்தில் சிக்கியது போல தமிழின் இந்த கேள்விக்குள் சிக்கிவிட்டாள்.

  இல்லை என்றோ ஆமென்றோ பதில் தராமல், “அப்பா கூப்பிடறார். நான் அப்பறமா பதில் தர்றேன்.” என்றாள்.

   “ஏய்.. இப்ப கூட இல்லைன்னு பதில் தராம, சமாளிச்சிட்டு ஓடப்பார்க்குற. இட்ஸ் ஓகே. இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? ஆமா என் மேல ஒரு சாப்ட்கார்னர் இருக்குன்னு சொல்லவும் முடியாம, இல்லைனு மறுத்து பொய் சொல்லவும் வழியில்லாம தவிக்கற.
   இருக்கட்டும்…‌ இந்த அனாதையோட வாழ்க்கையில் என்ன எழுதி வச்சியிருக்கோ? ஆனா காதல் வலி உள்ளுக்குள் புகுந்ததுனு இப்ப கடவுள் எழுதிட்டு இருக்கார். இந்த பீலிங் எனக்கு பிடிச்சிருக்கு. நான் அதை அனுபவிக்கறேன். ஆங் கடைசி வரை பெயரை சொல்லமாட்டேங்கற‌?!
   என் பெயரை வச்சியே கூப்பிடறேன் சரியா தமிழ்.” என்றதும், மலரோ ஆச்சரியமாய், பேசாமல் “தமிழ்… அது வந்து” என்று பேச முன்வர இடைவெட்டியவன், “இனி நீ தான் தமிழ். நான் அரசன் போதுமா? போ உன்னை கூப்பிடாத உங்கப்பாவை தேடி போ” என்று துண்டித்தான்.‌

  மலருக்குள் உவகை பூத்தது. தான் யார் என்ன என்று அறியாத போதும் தன் பெயரையே வைத்து அழைத்திடுகின்றான். அவனுக்கும் எனக்கும் ஏதோவொரு பந்தம் பிணைக்கின்றது.
   அந்த பிணைப்பு பாதியிலேயே துண்டிக்கப்படும் விதமாக செல்லுமா? அல்லது நீண்ட தூரம் பயணிக்கும் உறவாக அமையுமா என்று இந்த இடைப்பட்ட காலத்தில் பேசி அறிந்திட முடிவெடுத்தாள்.

  மனதில் தெளிவு பிறக்கவும், இயல்பானாள்.

   மாலை வேலைகள் மளமளவென பார்த்தாள்.

  பால் கறந்து ஊற்ற ஆர்வமாய் அரசனின் வீட்டுக்கு வந்தாள்.

   எப்பவும் போல ஷார்ட்ஸ் காலர் வைத்த பனியன் என்று வந்து நின்றான். அவன் முகமே வாட்டமாய் தெரிந்தது. இவனுக்கு ஏன் இந்த கஷ்டம். டீம் லீடராக பதவி உயர்வில் இருந்தவன், ஏன் வேலைவிட்டு வந்தான்.

  அவனோடு பேச்சு தொடுக்க,  “என்ன சார் முகம் வாடி கிடக்கு?” என்று கேட்டாள்.

  “கொஞ்சம மனசு சரியில்லைங்க” என்றான்.

  “ஏன் சார்… என்னாச்சு? நேத்து எல்லாம் மாப்பிள்ளை கணக்கா படுஜோரா இருந்திங்க. இன்னிக்கு நார்மலா இருக்கிங்க” என்றதும், “நேத்து என்னை ஒருத்தர் மாப்பிள்ளை பார்க்க வந்து, கண்காணிக்கற மாதிரி தெரிந்தது. அதனால் ஜம்முன்னு சுத்தினேன். ஆனா நம்ம இயல்பை தொலைத்து வேஷம் போடவேண்டாம்னு மதியத்துக்கு மேல தோண்றவும் எப்பவும் போல மாறிட்டேன்.

   மாப்பிள்ளை பார்க்க வந்தா கூட இந்த தோற்றத்தோட யார் அப்படியே ஏத்துக்கட்டும்.” என்று மென்னகைத்தான்.

   மலரும் “வாழ்த்துகள் சார்” என்று நடந்தாள்.

  கேட்வரை வந்தவள் ‘சார் வீட்டுக்கு வந்த ஆட்கள் எல்லாம் போயிட்டாங்களா’ என்று கேட்க நினைத்தாள்.

    தமிழரசனின் தோற்றம் வாடி வதங்கி இருக்க, யாராவது வந்து கஷ்டப்படுத்தி கூட சென்றிருக்கலாம். தன்னிடம் பேசும் போது லேசாக முறுவலோடு அல்லவா போனை துண்டித்தான்.

  நிச்சயம் இது காலையில் வந்தவரை பற்றியாக இருக்கும் என்று கேளாது சென்றாள். இந்த நொடி கேட்டிருந்தால் கூட, காலையில் என் வீட்ல இருந்த மனுஷங்க உன் கண்ணுக்கு தெரிந்தாங்களா என்று விசாரித்து தெளிவுப் பெற்றிருப்பான்.

   மலர் சென்றதும், டீ போட்டு மெதுவாக ருசித்தான்.

  மொட்டை மாடியில் பால்காரி வீடு தெரிய, “இந்த பொண்ணு வீடு இங்க தான் இருக்கா?” என்று பார்வையிட்டான்.

  அவளுக்கு தந்தை மட்டும் அதுவும் உடல்நிலை சரியில்லாதவர் என்று டீக்கடைக்காரர் மூலமாக அறிந்ததால் பாவமாய் அவ்வீட்டை பார்த்தான்.

   இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல ஆளுக்கு ஒரு கஷ்டம் இருக்கு. சும்மாவா… கடவுள் மனுஷனை படைச்சி ஜாலியா சுத்த விடுவான்.
  அவனுக்கு டைம்பாஸ் ஆகணும். அதுக்கு மனுஷனுங்க கஷ்டப்படணும். யோவ் கடவுளே… இருடி… செத்து ஆவியா வந்து உன்னை வச்சிக்கறேன். மேல வந்ததும் முதல்ல உன் கழுத்தை பிடிச்சி, நான் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் உன்னிடம் கேள்வி கேட்பேன். பதில் சொல்லலை… நீ எல்லார் தலையிலும், தலையெழுத்து எழுத வச்சியிருக்கற பேனாவாளையே உன்னை குத்து குத்து குத்துவேன்.’ என்று முனங்கி கீழே சென்றான்.

-தொடரும்.

10 thoughts on “அலப்பறை கல்யாணம்-8”

  1. Super sis nice epi 👌👍😍 evanuku unmai therinja enna pannuvan parpom 🧐 morning la mattum varavanga yaara erukum oru vela andha veetla edhuku munnadi nadandhadha erukumo🤨

  2. M. Sarathi Rio

    அலப்பறை கல்யாணம்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 8)

    அட.. இந்த தமிழ் என்னைய மாதிரியே திங்க் பண்றான்ப்பா. நான் கூட அடிக்கடி இப்படி பாடி அவனை திட்டிட்டிருப்பேன்.

    “அவனை அழைத்து வந்து
    ஆசையில் மிதக்கவிட்டு..
    ஆடடா ஆடு என்று ஆட
    வைத்து பார்த்திருப்பேன்..

    படுவான் துடித்திடுவான்..
    பட்டதே போதுமென்பான்…

    படுவான் துடித்திடுவான்..
    பட்டதே போதுமென்பான்…

    பாவி அவன் பெண் குலத்தை
    படைக்காமல் நிறுத்தி வைப்பான்….

    கடவுள் மனிதனாக
    பிறக்க வேண்டும்…
    அவன் காதலித்து வேதனையில்
    வாட வேண்டும்…
    பிரிவென்னும் கடலினிலே
    மூழ்க வேண்டும்…
    அவன் பந்த பாசம் என்றால்
    என்னவென்று உணர வேண்டும்..”

    தமிழ்த் இப்ப வருத்தப்படாத வாலிபி சங்கத்துல சேர்ந்துட்டாப் போல. ஆனா பாவம் தமிழ்…! மலர் இப்படி பண்ண வேணாம். அவனை நல்லா இழுத்தடிக்கிறா போங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Tamil ah ipadi aniya thuku polamba vittutaga ah avan oru joint family la iruku ah ponnu ah kalyanam pannika aasai pattathu kutham nu andha kadavul ivolo paduthuna enna than pannuvan avan um

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *