Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-9

அலப்பறை கல்யாணம்-9

அத்தியாயம்-9

இரவு மூன்று மணியளவில் இயற்கை அழைப்பு ஏற்பட, உறக்கம் கலைந்து ரெஸ்ட் ரூம் சென்றான் தமிழரசன். அதன்பின் உறக்கம் வராமல் சதி செய்தது.

   டிவியில் ஏதேனும் படம் போட்டு பார்க்கலாமென்று அதனை ஆன் செய்தான்.

   மெல்லிசைப் பாடல்கள் வரிசையாக இனிமை சேர்க்க, அதனை கேட்டு ரசித்தான்.

    “ஏப்ரல் மாதத்தில் ஒரு அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா.. கண்ணை கசக்கி நான் துல்லி எழுந்தேன்.” என்று வாலி படப்பாடல் ஓட, நிஜமாகவே தமிழரசன் துல்லி எழுந்து கண்ணை கசக்கி தன் ஹாலை கவனித்தான். ஏதோ கல்யாண வீட்டில் ஆளாளுக்கு எழுந்து பல் விளக்குவதும் குளிக்க செல்வதும் என்று ஆயத்தமாவதை கண்டான்.

   “ஐந்து டூ ஆறு இல்லை வர்றிங்கன்னு நினைச்சேன். என்னங்கடா இது பிரம்ம முகூர்த்தமான நாலு மணிக்கே வர்றிங்க? இது என் கனவில்லை.‌… இது… கனவேயில்லை.
  
   இவங்க எல்லாம் யாரு? பேயுங்களா? ஆனா பேயுங்க இவ்ளோ அழகா இயல்பா நடமாட மாட்டாங்களே? ஏதோ கல்யாணத்துக்கு கிளம்பறாங்க” என்று ஜன்னலோடு ஒன்றி, திரைச்சீலையால் தன்னை மறைத்துக்கொண்டு எச்சி விழுங்கி வேடிக்கை பார்த்தான்.

  ‘என்னங்கடா நடக்கு இங்க?’ என்றவன் பரபரப்பாய் நார்மல் நைட்டியோடும் லுங்கி பனியன் என்று அணிந்தவர்கள் எல்லாம் பட்டு வேஷ்டி சட்டை, பட்டுபுடவை, பேண்ட் ஷர்ட் என்று வயதிற்கு ஏற்றது போல அணிந்தனர்.
  இதில் நகைப்பெட்டியை திறந்து நகைகள் கழுத்தில் அணிந்தனர்.

  சின்ன சின்ன குழந்தைகளை எல்லாம் எழுப்பி, “குட்டி பசங்களா, உங்க சித்தப்பா கல்யாணத்துக்கு எழுந்து தயாராகுங்க, ஏய் உங்க மாமா கல்யாணத்துக்கு புதுடிரஸ் போடணுமாறு சொன்ன” என்று எழுப்ப குழந்தைகள் கூட கண்ணை கசக்கி “மாமா மாதிரியே நானும் பட்டுவேஷ்டி கட்டிப்பேன்” என்றான்.

  “அதுக்கு முதல்ல குளிக்கணும்டா. பாரு… உங்க‌ மாமா இன்னமும் குளிக்காம இருக்கான்‌‌ மணமகன் அறைக்கதவை நானும் தட்டறேன். திறக்க மாட்டேங்குறான்.
போனை அட்டன் பண்ணினப்ப குளிச்சிட்டு கிளம்பறேனு சொன்னான். அவனை நம்ப முடியாது எப்பவும் கடைசி நிமிஷத்துல தான் ரெடியாவான். நீ வேண்டுமின்னா பாரு. தாலி கட்டறப்ப தான் டிரஸ் மாட்டிட்டு வர்றேன்னு சொல்வான்.” என்று நொடித்து கொண்டார்.

    ‘அம்மா’ என்று உச்சரித்து தமிழரசன் கண் கலங்க, ஆளாளுக்கு பேசுவதை ரசித்தான்.

  அப்பா அம்மா மாமா அத்தை பெரிப்பா சித்தி தாத்தா பாட்டி என்று மாப்பிள்ளையோட உறவென ஒருவருக்குள் ஒருவர் பேசி செல்வதை மறைந்திருந்து கவனித்தான். கூடவே ரசித்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தினான்.

‘இவங்க எல்லாம் ஏன் வர்றாங்க. எதுக்கு வர்றாங்கன்னு தெரியணுமே.’ என்று குழம்பியவன், நேரத்தை பார்வையிட, ஐந்து நாற்பத்தியைந்து தொட்டிருந்தது. ஆறுக்கு காணாம போயிடுவாங்களே.‌.. அச்சோ நான் காரணம் தெரிந்துக்கணும்’ என்று அவசரமாய் “ஹலோ ஹலோ ஹலோ… நீங்களாம் யாரு… தினமும் இந்த வீட்ல என் கல்யாண கோலத்தில் அங்கும் இங்கும் உலாத்தறிங்க? இன்னிக்கு காரணம் சொல்லுங்க” என்றான்.

  “மாமா நீயே இன்னும் குளிக்கலையா?” என்று ஒரு சிறுவன் கேட்க, ”என்னடா அரசு.. மாப்பிள்ளையா லட்சணமா குளிச்சு கல்யாண மேடையில் உட்காரம, இன்னும் உன் அக்கா பையன் கூட அவனை மாதிரியே டிரவுஸரை போட்டுட்டு சுத்தற. உங்கப்பா பார்த்தா திட்டப்போறார். அந்த மனுஷன் வேற படபடப்பா திரியறார்.” என்று கூறவும் “அம்மா..” என்று ஆசையாக உச்சரித்து தமிழரசன் கண்கள் கலங்கியது.

   தந்தையை கண்டவன், தன் அக்கா மகன் என்ற குழந்தையை அணைத்துக் கொண்டு நிற்க, “பச் எல்லாரும் சாப்பிட்டிங்களா… இல்லையா..‌ முதல்ல சாப்பிடுங்க. ஏழரை எட்டு கல்யாணம், அரசா… முதல்ல குளிக்க போடா” என்று கூற, அக்கா மகனை அள்ளிக்கொள்ள, காலிங் பெல் அழுத்தம் கேட்டது.

  பால் ஊத்தற பொண்ணு வந்திருக்கா, ‘ப்ளீஸ்… எல்லாரும் காணாம போகாதிங்க” என்று கூறியவன், கையில் அக்கா மகனை இறக்கி விடாமல், கதவை திறக்க, ஆளாளுக்கு குழப்பமாய் அரசனை கண்டு குழம்பினார்கள்.

  பால் ஊற்றிய மலரோ, இதென்ன வளர்ந்த எருமை மாதிரி இருக்கற இவனை தூக்கிட்டு இருக்கார். குழந்தைகளை தூக்கி கொஞ்சுவாங்கன்னு தெரியும்‌. அதுக்குன்னு இப்படியா?’ என்றவள் பால் ஊத்தினாள்.

     இந்த மாய மனிதர்கள் மறைந்திடுவார்களோ என்ற பதட்டத்தில் வேகமாய் உள்ளே வந்தான். வரும் போதே “எங்கயும் போகதிங்க. நீங்க எல்லாம் யாரு. ஏன் மறைந்து போறிங்க? ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க. அய்யோ காணாம போகாதிங்க. என் மண்டையே வெடிக்கும். சொல்லுங்க…” என்றவன் பாலை அங்கிருந்த ஸ்டூலில் வைத்துவிட்டு,  தூக்கியிருந்த பையனை இறக்கிவிட்டான். ஆனால் கையை விடாமல் இறுகினான்.

  ஒவ்வொருத்தராய் மறைய, தமிழ் அருகே இருந்தவனும் சிறு துகளாய்  மறைந்தவன், தமிழரசனின் கைகள் பிடியில் மீண்டும் துகள் ஒன்றினைந்து உருவமாக இணைந்தான்.

   “மாமா… எல்லாரும் எங்க? எங்க போனாங்க? கல்யாண வீட்லயிருந்து நாம எங்க வந்துட்டோம்” என்று அழ ஆரம்பித்தான்.

     ‘இத்தனை நாள் அனைவரும் மறைந்து தன்னை சோதித்தனர். இன்று சிறுவன் ஒருவன் தன்னுடன் இருக்க, “டேய்.. டேய்… அதேயிடத்துல தான் இருக்க. எல்லாரும் காணாம போயிட்டாங்க” என்றான்.
 
  “அதெப்படி காணாம போவாங்க? மாமா… எனக்கு பயமாயிருக்கு. அம்மாவிடம் விட்டுடு.” என்று அழுதான்.

  “முதல்ல அழாத.. ஆமா உன் பேரு என்ன?” என்றான்.‌

  ”மாமா விளையாடாத” என்றான் அச்சிறுவன்.

  “டேய்… நான் ஏன்டா விளையாட போறேன். நிஜமா எனக்கு உன் பேர் தெரியாது. பட் நீ இப்ப மட்டும் சொல்லு. என் உயிர் உள்ளவரை அந்த பெயரை மறக்க மாட்டேன்.” என்றதும் அந்த சிறுவன் தமிழரசனை வேடிக்கை பார்த்து, “நான் விக்கி மாமா. விக்னேஷ்னு எங்கப்பாவோட அப்பா பெயர் வைக்கணும்னு அப்பா வச்சதா நீ கூட எங்கப்பாவை கேலி செய்வியே” என்றான்.

   “விக்கி” என்று கட்டியணைத்து முத்தமழையிட்டான்.‌

  “மாமா… அம்மா அப்பா எங்க?” என்றான்.

  எட்டு வயது சிறுவன் அப்பா அம்மா திடீரென காணாமல் மறைந்தால் தேடதானே செய்வான்.
 
   “அவங்க… வருவாங்க… இன்னிக்கு நீ மாமா கூட இருனு சொன்னாங்க” என்று கூறி பாலை காய்ச்சினான்.

    தமிழரசனுக்கு விக்கியை கண்டு பயமில்லை. புதிதாக பழகுவதாக தோன்றினாலாவது அச்சப்படலாம்.

  பால் காய்ச்சி கொடுக்க வாங்கி பருகினான்.

   “மாமா… இந்த போட்டோ ரிசப்ஷனுக்கு முன்ன எடுத்தது தானே?” என்று அரசன் வரைந்த புகைப்படத்தை பார்த்து கேட்டான்.

   “ம்ம்ம்.. தெரியலையே.” என்று விக்கியிடம் தெரிவிக்க, “என்ன மாமா..‌ இங்க பாரு… அம்மா உன் பக்கத்துலயே இருக்கனும்னு என்னை உன் கால் கீழே உட்கார வச்சிட்டாங்க.” என்று சுட்டிக்காட்டினான்.

  தன்னை போல ஓரளவு இருந்தவனின் குடும்ப புகைப்படத்தில், விக்கி கீழே உட்கார்ந்திருந்தான். அவனோடு சில குழந்தைகள் இருந்தனர்.

   தன்னை போல… ஒரு ஆண்மகன் தன் சாயலில்… ஒரு வேளை மறுஜென்மமா? அல்லது நான் மட்டும் மனிதப்பிறவியாக பிறந்து அனாதையாக வளர்க்கின்றேனா? போன ஜென்மத்தில் இவர்கள் என் குடும்பமா?

  கடவுள் இவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்தது போதுமென இந்த ஜென்மத்தில் அனாதையாக மாற்றிவிட்டாரா? அப்படியென்றால் இந்த விக்கி யார்? பேயா? பார்த்தால் அழகான சிறுவன் அள்ளி கொஞ்சிட தூண்டுகிறது.
   குடும்பமாக வந்தவர்கள் கூட பேயாக கண்ணுக்கு தோன்றவில்லை.

  ஒவ்வொருத்தரை பற்றி கேட்க வாயெடுக்கும் முன் சிறுவனாகவே தாத்தா பாட்டி அத்தை மாமா, பெரிப்பா, சித்தப்பா, சித்தி, சித்தி குழந்தைகள் பெரியம்மா மாமா என்று கொள்ளு தாத்தா கொள்ளு பாட்டி, என்று விவரித்தான்.
 
   “ஆமா… ரிசப்ஷன் போட்டோனு சொல்லற. அப்பறம் எங்கடா எனக்கு பார்த்த பொண்ணை காணோம். ஆஹ்.. உங்கத்தை இதுல இல்லையே” என்று கேட்டான்.
 
   “நீ தானே மாமா இது நம்ம குடும்ப போட்டோ, அத்தை வர்றதுக்கு முன்ன தனியா ஒன்னு, அத்தை வந்தப்பிறகு ஒன்னுனு எடுத்த. இது… ஒருவேளை அத்தை கூட நிற்காம நம்ம பேமிலியோட எடுத்த பிக்கா இருக்கும்.” என்றதும், ‘எனக்கு நானே எமன். போட்டோவுல கூட எனக்கு நானே ஆப்பு வச்சியிருக்கேன்.’ என்று கவலை தோய்ந்த முகத்தோடு, “உங்கத்தை பார்க்க எப்படியிருப்பா டா?” என்று கேட்டான்.
  இதே அலுவலக நண்பர்கள் முன் கேட்டிருந்தால் தமிழரசனை பார்த்து கொல்லென சிரித்திருப்பார்கள். இங்கு தான் ஈ காக்கா என்ற சொந்தமும் நட்பும் இல்லையே.

   “அத்தை… அத்தை… அது வந்து எப்படியிருப்பாங்கன்னா?” என்று சிந்தித்த விக்கியிடம், போனில் சில புகைப்படம் எடுத்து வந்து, இந்த ஹீரோயின்ல யார் மாதிரியாவது இருப்பாங்களா?” என்று கேட்டான்.

  அந்த போனில் உள்ள புகைப்படத்தை எல்லாம் ஓரெட்டு பார்த்து, “அத்தையை நினைவில்லை மாமா. ஆனா அவங்க கூட வந்த அக்காவை நினைவிருக்கு. காலையில் பால் கொடுக்க வந்தாங்களே அந்தக்கா மாதிரி இருப்பாங்க.

  மத்தபடி அத்தை முகம் சரியா நினைவில்லை” என்றான்.

“டேய்… ஏன்டா… ஏன்..  உலகத்துல எனக்கு மட்டும் தான் இப்படி அமையும். பாரு… நிஜத்துல பொண்ணு கிடைக்காம திண்டாடுறேன்., கனவுலயாவது அவளை பார்க்க முடிந்ததா அவ வரலை. இதுல நீயாவது பார்த்தியான்னு கேட்டா நீயும் முகம் நினைவில்லைன்னு சொல்லற.
   பேஷ் பேஷ்… 90’பையனை நிலைமை விட என்‌ நிலைமை ரொம்ப மோசம் டா.” என்று நிறைய விக்கியிடம் பேசினான். பேசியதில் பாதி புலம்பல் இருக்கும், சிலதில் உறவுக்கார்களின் பழக்கவழக்கத்தை கேட்டுக்கொண்டான்.

முக்கியமாக தாய்தந்தையாக இருப்பவரை பற்றி அறிந்துக் கொண்டான்.‌
 
   என் வீட்ல இப்படி வித்தியாசமா நடக்குதுன்னு சொன்னா வெளியே எவன் நம்புவான்? ஆல்ரெடி நல்ல உத்தியோகத்தை விட்டுட்டு இங்க காட்டுல கிராமத்துல வந்து உட்காறதுக்கு பைத்தியம்னு சொல்லறாங்க. இதுல இது வேறயா? நான் யாரிடம் இதெல்லாம் பகிர?
  கடவுள் நல்ல நண்பர்களை தந்திருக்கலாம். ம்ம்ம் வேலையில் இருந்தவரை மச்சான் மச்சினு பேசினானுங்க. இப்ப இங்க வந்தப்பிறகு ஒரு காலும் இல்லை. நானா போன் போட்டப்ப, மச்சி மச்சி ஆபிஸ் மீட்டிங் டா. எனக்கு வேலையிருக்கு‌’ என்று கத்தரித்தார்கள். இதில் மற்றொரு நாள் உனக்கென்னடா வேலையா வெட்டியா?’ என்ற கிண்டலில் தமிழரசன் யாருக்குமே தற்போது அழைத்து பேசுவது இல்லை.

    “மாமா.. மாமா..” என்ற அழைப்பில் நிகழ்காலத்திற்கு வந்தான்.

  “சாரிடா.. எப்பவும் போல பழக்க தோஷத்துல எனக்கு நானே பேசிக்கிட்டேன். என் மருமக பிள்ளை நீ கூடயிருக்க உன்னிடம் நேரம் செலவழிக்கறேன்‌. உனக்கு என்னடா வேணும் சொல்லு வாங்கி தர்றேன்.” என்று கேட்க, “பலூன் மாமா” என்றான்.

டீக்கடைக்கு பக்கத்து கடையில் பலூன் கவரில் வைத்திருப்பதை தமிழரசன் கவனித்ததால் அழைத்து சென்றான்.

    விக்கியின் உருவம் யாருக்காவது கண்ணில் தெரிகின்றதா என்று அடிக்கடி பார்த்தான்.
  ஆனால் தானாக கேட்டு பல்பு வாங்க மனமின்றி யாராவது கேட்டால் ஒழிய கூறலாமென கைப்பிடித்து கூட்டி சென்றான்.

   விக்கி என்ற சிறுவன் வரும் சுவடு அங்கே மற்றவர் கண்களுக்கு புலப்படவில்லை. எல்லாரும் என்ன தம்பி இந்த நேரம்’ என்று விசாரித்தார்கள்.

  பேன்ஸிகடைக்காரரிடம் பலூன் கேட்க, ‘மாமா மாமா எனக்கு லாலி பாப் வேணும்” என்று நச்சரிக்க அதையும் வாங்கினான்.

  கடைக்காரர் மறுபக்கய் திரும்ப, டேய்…. வீட்டுக்கு போய் சாப்பிடணும் சரியா? ரோட்லயே திங்க கூடாது. வீட்டுக்கு போய் தான் தருவேன்.” என்றதும் சம்மதமாய் தலையாட்டினான்.

  பலூனை மட்டும் ஊதி முடிச்சு போட்டு தரக்கூறினான்.

  அதனால் கடையிலேயே பலூன் ஊதி முடிச்சிட்டான்.

   அங்கே சர்க்கரை கட்ட வைத்த சணலில் முடிச்சுப்போட்டுக் கொண்டான்.
  கடைக்காரர் தமிழரசனை வினோதமாய் பார்த்தார். “என்ன தம்பி சின்ன புள்ள மாதிரி” என்று கேலி செய்து கேட்க, “சின்ன சின்ன சந்தோஷம் அண்ணன்” என்றவன் பலூனை விக்கி கையில் திணித்தாலும், அவனுமே கொஞ்சம் பிடித்திருக்க, தமிழரசனை காண்போர் சிறுப்பிள்ளைத்தனமாக நடப்பது போல தோன்றியது.

இதை பேருந்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்ற மலரின் கண்களுக்கு தப்பவில்லை. தந்தையை கவனிக்க எப்பவும் போல விறுவிறுவென நடந்திட, ‘யாரிந்த குட்டி பையன் உரிமையா கைப்பிடிச்சு அழைச்சிட்டு போறார். யாரோ கூட இருக்காங்க போல, அதான் சார் இன்னிக்கு கால் பண்ணி பேசலை. என் ஞாபகம் சுத்தமாயில்லை.’ என்று நொடித்து கொண்டாள். அந்த நேரம் அவனுக்கு ஏன் உன் ஞாபகம் வரணும் மலரு’ என்று மனசாட்சி நக்கலடிக்க, மனசாட்சியிடம் போராடி ஜெயிக்க முடியாது, ‘அவரு நல்லா தான் இருக்கார். நல்ல குணமா தான் தெரியுது. என்ன பெரிய குடும்பம் என்று அதையே ரூல்ஸ் போட்டு கட்டிட்டு அழுவறார்.’ என்று வேகமாய் நடந்தாள்.

  தமிழரசன் விக்கி மீது அல்லவா  அதிசயமாக கண்பதித்து கைப்பிடித்து நடந்தான்.

-தொடரும்.

9 thoughts on “அலப்பறை கல்யாணம்-9”

  1. M. Sarathi Rio

    அலப்பறை கல்யாணம்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 9)

    அப்படின்னா அந்த உறவுகளின் உருவங்கள் மத்த கண்ணுங்களுக்கு தெரியலை. சம்பந்தப்பட்ட தமிழ் & மலர் கண்களுக்கு மட்டும் தான் தெரியுது. அப்படித்தானே..?
    ஆனா, ஏன், எதுக்கு…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Super sis nice epi 👌👍😍 appo evanga renduper kannuku mattum dhan theriyirangala ennava erukum oruvela Evan varaiyira oviyam ku ellam uyir varudho🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *