இதயத்திருடா-18
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மஹா தன் வயிற்றை பிடித்து கொண்டு பற்றி எரியும் வீட்டை கண்டாள்.
குருவோ “நல்ல வேளை நாம வெளிய இருக்கோம்” என்றவன் கைகளும் தன்னவளின் வயிற்றை தாங்கி அணைத்தது.
“அந்த நற்பவி பொண்ணுக்கு போனை போடுயா… அது உசிருக்கு ஆபத்து வந்துடப்போகுது.” என்று அவசரம் காட்டினாள்.
“இருபுள்ள… நம்ம வீடு எரியுது. அணைக்க வேண்டாமா?” என்றதற்கு, “யோவ்… முதல்ல போனை போடுயா. பெரிய வூடு. நாலு செங்கலும் மேல கூரையும் இருக்கு. அடுத்து செங்கல் சிமெண்ட் ஓடு போட்டுப்பேன். முதல்ல அந்த பொண்ணுக்கு போனை போடுயா.” என்று அவனின் போனை பிடுங்கினாள்.
ரிங் போய் கொண்டேயிருக்க, எடுக்கவில்லையென்றதும் மஹா ரொம்பவே பயந்தாள்.
நற்பவியோ நெடுநேரம் போன் அடிக்கவும் கண் கசக்கி பார்க்க மஹா என்ற எண் என்றதும் எடுத்து காதில் வைத்தாள்.
“மஹா.. அங்க ஒன்னும் பிரச்சனையில்லையே. இந்நேரம் கால் பண்ணிருக்க?” என்று கேட்டாள் நற்பவி.
“பவி… உனக்கொன்னும் பிரச்சனையில்லையே. நல்லா தானே கீற?” என்றாள் மஹா.
“யா… பைன். வீட்ல இருக்கேன். ஏன் கேட்கற.. நீ நல்லாயிருக்க தானே?” என்று கேட்டாள்.
“கொஞ்சம் வுட்டா செத்துயிருப்போம் மே. குடிசையில தீப்பற்றி எரியுது. நாங்க வெளியே இருந்ததால பிழைச்சோம்.” என்றதும் நற்பவி எழுந்து நின்றாள்.
“மஹா… நீங்க இப்பவும் சேப் தானே?” என்று கேட்டாள் ஊர்ஜிதப்படுத்த.
“வீடு எரிஞ்சிடுச்சா..? குப்பத்து ஜனம் தண்ணி ஊத்தி அணைக்குது. ஃபயர் ஆபிஸ் ஆளுங்களுக்கு போன் பண்ணி கீறேன். எங்களை சுத்தி எங்க ஆளுங்க தான். பயமில்லை.. ஆனா வூடு தான் போச்சு.” என்றதும் “ஓகே நான் உடனே வர்றேன்.” என்று நைட் சூட் மாற்றி டாப் ஜீன் என போட்டு வெளியே வந்து ஹாலில் ஒளிவிளக்கை போட்டாள்.
நன்விழி வந்து “என்னாச்சு… எங்கப்போற?” என்றதும் நற்பவியோ போனை எடுத்து மாறனுக்கு கால் செய்தாள்.
அவனும் சட்டென எடுத்து விட, “ஏய் பவி இப்ப தான் தூக்கம் வந்துச்சு. எழுப்பிட்ட” என்றவனிடம், “மாறா… நீ சேப்பா இருக்கியா.?” என்றாள்.
“ஆமா… ஏன்.” என்று கேட்டான்.
“மஹா வீடு தீபிடிச்சிருக்காம். நல்ல வேளை அவங்க இரண்டு பேரும் வெளியே இருந்துயிருக்காங்க. அதனால உயிருக்கு ஆபத்துயில்லை. நான் இப்ப அங்க போக போறேன். எதுக்கோ உன் சேப்டி செக் பண்ணினேன். அப்பா அம்மாவை பார்த்துக்கோ.” என்றாள்.
“ஏய் நானும் வர்றேன்” என்றதற்குள் துண்டித்தாள்.
கதவை திறந்து பார்க்க, யாருமில்லை என்பதாக தோன்றியது. அக்கா மாமாவை கண்டு அறைக்குள் உறங்கவும் வெளிபக்கம் பூட்டு போட்டு சென்றான்.
நன்விழியோ நற்பவி பேசியதை கேட்டு, “என்னாச்சு. பைக் எப்படி ஓட்டுவ? சகாதேவன் அண்ணா வர்றாரா?” என்றதும் தான் கை வெட்டு விழுந்தமையால் ஓட்ட கடினமென்றதை உணர்ந்தாள்.
“ரொம்ப யோசிக்காதே. நான் பைக் ஓட்டறேன். நீ உட்காரு” என்று அழைக்க, “குழந்தை அழுதா?” என்று கேட்க, “அப்பா இருக்கார் என்று எதிரே சுட்டி காட்டினாள். அங்கே நித்திஷ் நின்றிருந்தார்.
நன்விழி நற்பவி இருவரும் பைக்கில் பயணம் மேற்கொண்டனர்.
நற்பவி வழியை சொல்ல நன்விழி கண்ணாடி அணிந்து வண்டியை செலுத்தினாள்.
பட்டினப்பாக்கம் வந்ததும் குடிசை எரிந்து அணைந்தாலும் புகையோட்டம் காட்சி தர வந்து சேர்ந்தாள்.
“எப்ப ஆச்சு. எப்படி தெரியும்?” என்று மஹாவிடம் கேட்டாள்.
“நாங்க எப்பவும் சில நேரம் படகுகிட்ட கடலுக்கு அருகாமையில் போர்வை விரிச்சி தூங்குவோம். சில நேரம் சந்தோஷத்துல சில நேரம் கஷ்டத்துல. இன்னிக்கு பேசிட்டே நடந்து அங்கயே உட்கார்ந்தோம். நேரமாகறது தெரியாம குழந்தை ஆணா பிறந்தா இன்னா பெயரு, பெண் பிறந்தா என்ன பெயரு வைக்கனு போகவும் சுவாரசியமா இங்கே குந்திட்டோம். சட்டுனு பார்த்தா வூடு திபுதிபுனு எரியுது. ஜனம் வந்து அணைக்கறதுக்குள்ள வூடே போச்சு. நல்ல வேளை நாங்க பிழைச்சோம்.” என்று பேசினாள் மஹா.
அதே நேரம் மாறன் வரவும் “இவர்களை இனி இங்க தங்க வைக்க முடியாது மாறா. ஆபத்து தான்.” என்று கூறவும், “முதல்ல எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன். மத்ததை நாளைக்கு பார்க்கலாம்'” என்று அழைத்து சென்றனர்.
மாறன் வீடு வரை நன்விழி நற்பவியும் வந்தனர்.
“அக்கா மாமா உள்ள தூங்கறாங்க. நீங்க என் ரூம்ல தங்குங்க. மாடிலயும் இரண்டு ரூம் இருக்கு.” என்று மஹாவை குருவை அழைத்து சென்றான்.
மாறனோ தயங்கியபடி, “நீங்க வர்றிங்களா” என்று நன்விழியை கேட்டான்.
” பவி வீட்டுக்கு போகணும். அப்பா தனியா இருப்பார்.” என்று கூறி “நாங்க இன்னோர் நாள் வர்றோம்” என்று கழண்டுக் கொண்டாள்.
நான் வேண்டுமின்னா அக்கா மாமாவை எழுப்பவா? எப்பவும் சின்ன சத்தம் கேட்டாலே எழுந்துப்பாங்க. இன்னிக்கு ரொம்ப நாள் கழிச்சு நற்பவி கூட பேசியதுல சந்தோஷத்துல தூங்கறாங்க” என்று பேசவும் நன்விழி அவ்விடம் நின்றாள்.
“மாறன் கதவை திறந்து அக்கா மாமாவை போய் பாருங்க.” என்றாள் முன்னாள் எக்ஸ் போலீஸ் அதிகாரியாக.
நற்பவியும் சற்று புரியாது மாறனை திறக்க கூற, கதவின் பூட்டை திறந்து அக்கா மாமா அறைக்கு சென்றான்.
நற்பவியும் மாறனும் எழுப்ப அருகே சென்று உலுக்க உடல் சில்லிட்டு இருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்தனர்.
அதற்குள் நன்விழி அறையை சுற்றி பார்த்தவள் கிச்சனிலிருந்த பாத்திரத்தை கவனித்தாள்.
“அக்கா… மாமா..” என்ற மாறனின் அலறலில் நன்விழி மஹா குரு என்று சூழ்ந்தனர்.
நற்பவியோ சில பல நேரத்துக்கு முன் பேசியவர்கள் தன்னை கண்டு மகிழ்ந்து பூரித்தவர்கள் சடலமாக இருக்க பிரம்மை பிடித்தவளாய் நின்றாள்.
நன்விழி தான் இருவரையும் அழைத்து வெளியே நிறுத்தி “தர்ஷன் அங்கிளுக்கு போன் பண்ணு.” என்றாள்.
நற்பவி தடுமாறி அதிர்வில் இருக்க நன்விழியே போனை போட்டாள்.
“சாரி அங்கிள் இட்ஸ் எமர்ஜன்ஸி. நற்பவி டிரக் கேஸ் விஷயமா…” என்று மஹாகுரு வீடு எரிந்ததை, மதிமாறனோட அக்கா மாமா இறந்து இருக்காங்க.” என்று கூறினாள்.
தர்ஷன் அதன் பின்னே மாறன் கதறும் சத்தம் கேட்டார்.
“கொலையா?” என்று மட்டும் கேட்டார் தர்ஷன்.
“எஸ் அங்கிள் இது திட்டமிட்ட கொலை தான். பட் அகோரமா எந்த இன்சிடென்டும் நடக்கலை. கிச்சன்ல பால் பாத்திரத்துல ஏதோ மெடிஷன் அடில தேங்கியிருக்கு. ஐ திங் பால்ல ஐன்னல் வழியா கலந்திருக்கணும்.
இறந்த நேரத்தை கணக்கிட்டா கொலையாளி வந்து போன டைம் தெரிந்துடும்.
அங்கிள் நீங்க வர்றப்ப அப்பாவையும் அழைச்சிட்டு வந்துடுங்க.” என்று கூறினாள்.
“யா… வந்துட்டே இருக்கேன் மா” என்றவன் கத்தரித்தான்.
“பாலை நான் தான் சூடுப்படுத்த அடுப்புல வச்சேன். சுட்டதும் ஆப் பண்ணிட்டு அக்கா மாமாவோட பேசினேன்.
நான் பவிக்கு குடிக்கிறதுக்காக ஆறட்டும் இருந்தேன். பட் அங்கிள் பவி பேசிட்டே அப்படியே போனதுல நானும் பவியோட கிளம்பிட்டேன். பால் கட் பண்ணில காய்ச்சியது.” என்று மதிமாறன் நன்விழியிடம் கேட்டு நின்றான்.
“ஐ திங்க் அருவாளோட வந்திருக்கணும். லுக்… தட்டை அந்த அருவாளாள எடுத்துட்டு ஜன்னல் வழியா கலந்திருக்காங்க. எப்படியும் நீங்க ரெண்டு பேரும் குடிப்பிங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணியிருப்பாங்க. அன்பார்சனலிட்டி உங்க அக்கா மாமா குடிச்சிட்டு படுத்துட்டாங்க.
நீங்க நற்பவி இங்க வந்ததை கவனிச்சி பாலோவ் பண்ணிருக்காங்க.” என்று நன்விழி அனைவரையும் ஓரமாய் அமர கூறினாள்.
மதிமாறன் மட்டும் அக்கா மாமா அருகே நன்விழியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தொடாமல் பார்த்து அழுதான்.
நற்பவியோ சிலையாக ஸ்தம்பித்து போனாள். ‘என்னால… என்னால இறந்துட்டாங்க. நான் இங்க வராம இவங்கறோட பழகாம இருந்தா உயிரோட இருந்துயிருப்பாங்க. என் மாறாவை அனாதையாக்கிட்டேன்.” என்று முகத்திலடித்து அழுதாள்.
நன்விழியோ, “ஷட்அப் வாயை மூடறியா… போலீஸாடி நீ. இங்க பாரு வாயும் வயிறுமா ஒருத்தி நிற்கறா. அவளுக்கு ஆறுதல் சொல்லு. நீ வந்ததால தப்பு நடந்துடுச்சு அழுவுற. ஹோட்டல்ல சரத் வேலைக்கு இருந்திருக்கான். அவன் ஒரு டிரக் சேலர். அப்படியிருக்க மாறனுக்கு சம்மந்தமில்லையா. சும்மா பழியை தலைமேல போட்டு உள்ள உடைஞ்சிடாதே.
லுக்… அகோரமான இறப்பு இல்லாம நிம்மதியா வலியில்லாம உறக்கத்துல இறந்தததுக்கு நன்றி சொல்லு. யோசித்து பாரு… வீடு இரத்த வெள்ளத்துல கிடந்து ஆங்காங்கே வெட்டு வாங்கி துடிச்சி சாகலை.” என்று கூறவும் மஹாவோ என்ன பெண்ணிவள் என்ற பார்வையை வீசினாள்.
முதல்ல போலீஸா அடுத்து என்ன பண்ணலாம்னு யோசி.” என்றதும் நற்பவிக்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கால் வந்தது.
“மேடம் சரத் செத்துட்டான். சேரோட சாய்ந்து இருந்தான். தூங்கிட்டான்னு பார்த்தா.. தலை தொங்கியிருக்கு இதயப்பகுதியில கன் ஃபயர் ஆகியிருக்கு.” என்று கூறவும், நற்பவி எழுந்து நின்றாள்.
“போலீஸ் ஸ்டேஷன்ல தானே இருந்திங்க. எப்படி ஆச்சு.” என்றாள்.
“மேடம் நாங்க தூங்கிட்டு இருந்தோம். இது எப்ப நடந்ததுனு தெரியலை.” என்றதும் அமைதியாக இருந்த இடத்தில் நன்விழி காதிலும் இந்த வார்த்தைகள் விழுந்தது.
“ஷிட்… லாக்கப் டெத் வேற.. என்ன பவி கேர்லஸா இருந்துட்ட. டிரக் கேஸ் என்றதும் அலார்ட் ஆகியிருக்க கூடாது.” என்றவள் தர்ஷனுக்கு போனை போட, வாசலில் சத்தம் கேட்டது.
“சார் லாக்கப்ல சரத் இறந்துட்டான்.” என்று நன்விழி கூறவும், “யா.. இப்ப தான் சரத் பத்தி போன் போட்டு கேட்டு தெரிந்துக்கிட்டேன்.
நற்பவி மாறனை பார்த்தவர் நேராக கணேசன் செவ்வந்தியை பார்வையிட வந்தார். தலையிலிருந்த கேப்பை கழட்டி கையில் வைத்தவர், ‘நேற்று மகிழ்ச்சியாய் பேசிய ஆன்மாக்கள்’ என்று சிறிது நேரம் அமைதியாய் அஞ்சலி செலுத்தினார்.
நற்பவி மாறன் அருகே நின்றிருந்தாள். நன்விழி தான் பாத்திரத்தை சுட்டி காட்டினாள்.
ஜன்னல் வழியில் சிறிது சிதறியதை சுட்டி காட்டி பேசினாள்.
பின் பக்கம் வழியிருக்கா?” என்று கேட்டதும் மாறன் அழைத்து சென்றான்.
ஒரு ஆள் நடந்து செல்லும் அளவிற்கு வழியிருந்தது. வீட்டுக்கு பின்னால் அருவாள் கீறிய அடையாளமும், இரண்டு ஷூ தடமும் இருந்தது.
“அங்கிள்.. நற்பவியால லாக்கப்ல டெத் நடந்திருக்கு. அவளுக்கு பிரச்சனை வந்திடுமா. ஹூமன் ரைட்ஸ், மேலதிகாரி கேள்விகள் நிறைய பேஸ் பண்ண வேண்டியிருக்குமே” என்று கேட்டாள்.
“வரும்மா… முதல்ல சரத்தை யார் கொன்றானு தெரியணும். அப்படியே தெரிந்தாலும் பேஸ் பண்ணணும். இதுல மாறன் அக்கா மாமா கொலை வேற. நல்லவேளை பிள்ளத்தாச்சி பொண்ணு மஹா அந்த பையன் குரு உயிர் பிழைச்சிருக்காங்க. இங்க இருப்பதும் சேப் இல்லை.” என்றதும் பாரஸீக் ஆட்கள் வரவும் வீட்டுக்குள் சென்றனர்.
நித்திஷ்வாசுதேவ் வந்து நின்றவர், மாறனின் கையை பிடித்து நன்விழியிடம் “போலாமா மா. அங்க குழந்தை உன்னை தேடறாங்க” என்றதும் தர்ஷன் “நீ போ… நற்பவியை நான் பார்த்துப்பேன்” என்று அனுப்பியவர் “நன்விழி… மஹா குரு உன் வீட்ல இருக்கட்டும். நான் அப்பறமா வந்து பேசறேன்.” என்றவர் மஹாவையும் குருவையும் நன்விழியோடு போக கூறினார்.
மஹா தயங்க குருவோ “ஏ வாமே.. இருக்கற வூடும் போச்சு. உன்னை தேடி எவனாவது வந்து கழுத்துல கத்தி வச்சா இன்னா பண்ணுவேன். அந்த ஆபீசரு சொல்லறதை கேளு.” என்று இழுக்க நித்திஷின் காரில் நன்விழி முன்னே அமர பின்னிருக்கையில் மஹா குரு அமர்ந்தனர்.
“லுக் நற்பவி… உடைஞ்சி இருக்கறது நீ மட்டும் இல்லை. மாறனும் தான். நீயே அழுதுட்டு இப்படியிருந்தா என்னாகறது. அங்கபாரு.. நன்விழி வந்தா எப்படி ஹாண்டில் பண்ணினா பார்த்தலே, அவனை கொஞ்சம் கூட்டிட்டு போய் பேசு. பாடி இப்ப தானே கொண்டு போயிருக்காங்க. வர நேரமெடுக்கும். வீடு சீல் வைக்கணும். அவனை அழைச்சிட்டு வீட்டுக்கு போ” என்றார்.
“வீட்டுக்கா..?” வருவாரா?” என்று மாறனை பார்த்தாள்.
அவனோ கட்டிலருகே தீண்டாமல் ஒரு சிலைபோல அமர்ந்திருந்தான்.
மனைவி இறந்துவிட்டால், இருந்த மாமா அக்காவும் இறந்து விட்டார்கள். தற்போது வந்த காதலை, துறந்துவிட்டு மீண்டும் இதற்கு காரணமானவர்களை கொல்ல முடிவெடுப்பானா என்ற அச்சம் சூழ அவனின் தோளை தீண்டினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Then who is the culprit? Sema twist. Intresting
Police ah pakanum nalum apo tha rendu peraium pathu pesitu poi irukanga konja nerathula eranthutanga therinja avaluku kastama irukume ithula mathi ipo ena yosipanu bayapadura vera but konjam kavanama irunthu irukalam
Interesting 👌👌👌👌👌👌👌