Skip to content
Home » இதயத்திருடா-29

இதயத்திருடா-29

இதயத்திருடா-29

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    மதிமாறன் அதிர்ந்தது ஒரு நிமிடமே. அடுத்த நொடி “கவலை வேண்டாம்ங்க. உங்க தங்கை மெயின் ஆளை பிடிச்சிடுவா.” என்று மகிழ்ச்சியாய் கூறினான்.

    “ஆர் யூ மேட். அவ தனியா இருக்கா. மாட்டிக்கிட்டு இருப்பா. உன்னால நீ கொடுத்த செயினை போட்டுட்டு போயிட்டா. இல்லை ஜிபிஆர்எஸ் மூலமா எங்க இருக்கானு சிக்னலாவது தெரியும். இப்ப எங்கனு கண்டுபிடிக்க.? கொஞ்சம் கூட கவலையில்லாம பேசற,” என்று கத்தினாள்.

     “நன்விழி கூல் டவுன்.” என்று தர்ஷன் குரலில், இது கான்பிரன்ஸ் காலென மாறன் அறிந்தவன், “சார்.. அவங்களுக்கு வேண்டுமின்னா அவங்க தங்கை மேல டவுட் இருக்கலாம், அவ தோற்றுடுவானு பயமிருக்கலாம். ஆனா எனக்கு என் பெட்டர் ஆப் மேல பயமோ சந்தேகமோ இல்லை. நிச்சயம் கைது பண்ணி கூட்டிட்டு வருவா.

     எப்ப அவ இரண்டு முறை உங்களிடம் கொட்டு வாங்கினாளோ அப்பவே அவ தேறிட்டா. அதனால தான் இளங்கோ அண்ட் வேலாயுதம் இரண்டு பேரையும் பட்டுபட்டுனு கண்டுபிடிச்சிருக்கா. சும்மா நன்விழி மாதிரி அவயில்லைனு நினைக்காம, அவ நற்பவி திரும்ப வருவானு நினையுங்க.

     மிஞ்சி மிஞ்சி போனா இப்ப இரண்டு விஷயம் நடக்கலாம். ஒன்னு சம்மந்தப்பட்டவங்களை பிடிச்சிட்டு கெத்தா வருவா. இல்லை பிணமா வருவா இது இரண்டு தான் நடக்கும். அவ கெத்தா வந்தா எங்க கல்யாணம் நடக்கும். இல்லைனா அவ இறந்தா அதுக்கு சம்மந்தமானவங்களை கொன்றுட்டு நானும் இறப்பேன்.” என்றான்.

    “என்ன புரியலையா… நான் எண்ணூர்ல ‘ரங்கன் கடல் உணவகம்’ என்ற குடோன்ல இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த இடத்தில தீ பத்த வச்சிட்டு கிளம்பிடுலாம்னு இருந்தேன்.

   பட் நற்பவி வரலைனா இங்கயே இருந்து அந்த ரங்குன் அவனோட குறுந்தாடி ரமணன் இரண்டு பேரையும் கொண்ணு இங்கயே சேர்த்து எரிச்சிட்டு வந்துடுவேன். ரமணன் யாருனு யோசிக்கறிங்களா? ரமணன்‌ சீ புட் இன்டஸ்ட்ரியோட முதலாளி. டிரக் மெயின் பிசினஸ். சீ புட் எக்ஸ்போர்ட் சைட் பிஸ்னஸ். இப்ப புரியுதா?” என்றான் தெனாவட்டாக.
  
      “மதிமாறன்… எதுவும் பண்ணாத, நாங்க எங்க டீமை அங்க வரவழைப்பேன்.” என்று தர்ஷன் கூறவும், “சாரி சார்… நான் இடத்தையும் பெயரையும் சொன்னது உங்களுக்கான தகவலுக்காக தான்.

    நீங்க வேண்டுமின்னா பிடிச்சி சட்டத்துல நிறுத்தி நற்பவிக்கு ஸ்டாரை தர விருப்பபடலாம். எனக்கு என் அக்கா மாமாவை கொன்றவனை கொன்னா தான் இதயத்துல இதம் வரும்.

      இதுக்காக நான் பெரிசா கஷ்டப்படலை. சின்னதா நற்பவியோட பைக்ல இரண்டு நாள் லைட்டுக்கு இருக்கற இடத்துல அவளுக்கு தெரியாம கேமிரா வச்சேன். அவளை தொடர்ந்து எந்த வண்டி வருதுனு. ரெகுலரா தொடர்ந்து வந்தவனை பிடிச்சா மேலிடம் தப்பிச்சிக்கும்னு விட்டு பிடிச்சது. இப்பவும் ரங்கன் பேர்ல தான் இந்த இடம் இருக்கு. ரமணன் மாட்ட மாட்டான். ஆனா என் கையில கிடைச்சா சங்கு ஊதிட்டு தான் வருவேன்.” என்று கத்தரித்தான்.

     “மிஸ்டர் மதிமாறன்” என்று நன்விழி கூப்பிட கூப்பிட கத்தரித்திடவும், “பாருங்க அங்கிள் இவரை. நற்பவி நிச்சயம் ஆபத்துல இருக்காளோனு பயமா இருக்கு அங்கிள். இதே நான் என்றால் இந்தளவு பயமிருக்காது. என்னால அவ இந்த ஜாபை தேர்ந்தெடுத்து மாட்டிக்கிட்டாளோனு பக்குபக்குனு இருக்கு. அப்பா ஏற்கனவே பேச்சு வாக்குல என் மகனு சொன்னார். மேபீ அது தெரியாம வந்துடுச்சு. எங்க தெரிந்தே ஏதாவது பேசி காயப்படுத்திடுவாரோனு பயமா இருக்கு. நற்பவிக்கு ஒன்னும் ஆகக்கூடாது அங்கிள்.” என்று பேசினாள்.

     “டோண்ட் ஒர்ரி சைல்ட். அவன் இருக்குற இடம் எண்ணூர்னு சொல்லிட்டான். நம்ம டீமை அனுப்பிடலாம்.

    அநேகமா நற்பவி இப்ப ரமணன் முன்ன இருந்தா, ஆபத்து தான். ஆனா மதிமாறன் சொன்னது போல அவ தன்னை காத்திப்பா டா. நன்விழியான உன்னை விட இதுல சாதிக்கணும்னு பெயர் வாங்கணுமென்ற வெறி நற்பவியிடமும் இருக்கு.
   
    நான் நம்பகமான டீமை மதிமாறன் இருக்கற இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன். நற்பவி போன் எங்க டிஆக்டிவேட் ஆச்சுனு பார்த்து அவளை ரீச் பண்ண பார்ப்போம். நீ பயப்படாதே மா. நான் பார்ததுப்பேன்” என்றதும், “ஓகே அங்கிள்” என்றவள் ப்ரணிதா விழியனை இருக்க, தங்கை புகைப்படம் கண்டு அதனை நெஞ்சோடு அணைத்து பூஜையறைக்கு சென்றாள்.

    குழந்தையை தந்தையிடம் பார்த்துக்கொள்ள கூறிவிட்டு, அவளும் பைக் எடுத்து கிளம்பினாள்.

—-

     நற்பவியின் போலீஸ் சட்டையை அந்த மீன் வெட்டும் கூரிய கத்தியால் கிழிக்கப்பட்டது.

     போலீஸ் உடை கிழிப்பட்டு அதனை ரமணன் முற்றிலும் கிழித்யெறிந்து கடலில் தூக்கியெறிய, மேலே இன்னவர் மற்றும் பெட்டிக்கோட், காக்கி பேண்ட் அணிந்த நற்பவி மூச்சு வாங்க கோபமாய் அவனை வெறித்தாள்.

       “ஹாட்டா இருக்க நற்பவி. அதுவும் நீ விடுற மூச்சு… அது கொழுந்துவிட்டு எரிந்து என்னை  எரிச்சிடும் போல… என்னை விட நீ தான் என்னை கொல்லுற. டூ ஹாட்” என்றவன் சுற்றி கடல் நீராய் இருக்க, “பச் ரொம்ப நிசப்தமா இருக்கு. கத்தி கூச்சல் போடுவனு பார்த்தா கோபத்துல சத்தமில்லாம இருக்க, ஆனா கண்ணீரோ கதறலோ வரமாட்டேங்குதே. அந்தளவு நெஞ்சழுத்தகாரியா நீ.” என்று கழுத்து வளைவில் கையை வைத்து கேட்கவும், இரண்டு பக்க கயிற்றின் பிடியில் இறுக கோபத்தை காட்டினாள்.

      “ஆமா… உன்னை இங்க தூக்கிட்டு வந்ததில யாருக்கும் தெரியாது. வந்ததும் செக் பண்ணியதுல எந்தவிதமான எலக்ட்ரிக் டிவெஸும் இல்லை. எந்த நம்பிக்கையில டி விரப்பா இருக்க… உன் காதலன் மதிமாறன் வருவான்னா?” என்றதும் நற்பவி கண்களை மூடி கோபமாய் முறைத்து கட்டுப்படுத்தியபடி வாய் திறந்தாள்.

      “இந்த டிரஸ் போட்டு உறுதிமொழி எடுத்தப்ப என்னை காப்பாத்த என் லவ்வர் வருவான் நினைச்சி போட்டதில்லை டா. உன்னை மாதிரி கபோதி எதிர்ல இருந்தாலும் அவனை அழிச்சிட்டு தான் சாகணுமென்ற வெறில போட்டது.

    அதனால என் காதலன் வந்து காப்பாத்துவாருனு கனவு காண மாட்டேன். அட் த சேம் என்னை நீ விட்டுடுனு கெஞ்ச மாட்டேன். உன்னிடம் கெஞ்சி தான் மானத்தை காப்பாத்தணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.

   கடல் நிசப்தமா இருக்கா… அதுக்கு தெரிந்திருக்கு. உன் மரணத்தை வேடிக்கை பார்க்க அலையா வந்து எட்டி பார்க்குது.

   என் உயிர் போறதுக்குள்ள உன்னை கொன்றுடுவேன்.

   அப்படி நான் உயிர் பிழைச்சா நீ தொழிலதிபர் என்ற போர்வையில இருந்து ஸ்மக்லிங் பண்ணறேனு உலகத்துக்கு தெரியப்படுத்துவேன்.” என்றாள் மூச்சு வாங்க அருவருப்பை முகத்தில் காட்டி.

    ரமணனின் கைகள் அவள் மேனியில் ஊர்ந்திட அது பிணத்தில் ஊரும் புழு தன் மேல் ஊர்வதாய் சகித்து கிடந்தாள்.
  
     “இவ்ளோ பேசறவள் உயிரோடவோ பிணமாவோ இருப்பனு சொல்லற. மானத்தோட இருப்பியா?” என்று கேட்டு அவள் இடையில் உள்ள போலீஸ் பேண்டில் உள்ள பெல்டில் கை வைக்கவும், உடலை முறுக்கி தடுக்க முயன்றாள்.

    பெல்டை எடுத்து கழுத்தில் அணிந்தவன். “இங்கயிருந்து மானத்தோடவே போக மாட்ட, உயிர் போனாலும் கடல்ல மீனுக்கு இரையா போட்டுட்டு உன்னை உருதெரியாம பண்ணிட்டு போவேன்.

   உன்னை தேடி உன் போலீஸ் கூட்டம் அலையும். எங்கயும் கிடைக்க மாட்ட. உனக்கு தெரிந்த விவரம் மற்றவருக்கு தெரியாததால, அவங்க என் நிழலை கூட தொட முடியாது.

     வேண்டுமின்னா கொஞ்ச நாள் உன்னை பரபரப்பா உன் டிபார்ட்மெண்ட் தேடும். சரத் என்பவன் காணாம போனது மாதிரி நீயும் காணாம போயிருப்ப?” என்று கூறவும் நற்பவி கண்கள் எத்தனை பேர் இங்கே இருக்கின்றார்கள், இது எந்த மாதிரியான போட் என்று நோட்டமிட்டாள்.

    அந்த நேரம் தனிப்பட்ட எண்ணிலிருந்து ரமணனுக்கு அழைப்பு வந்தது. போனை பேச சென்றதும் ரங்கனும், பரத்தும் நற்பவி உடலை கண்களால் மேய துவங்கியிருந்தனர். எப்படியும் ரமணன் உண்டு முடித்து  தங்களுக்கு விருந்து கிடைக்கும் என்ற மிதப்பில் அவளை பார்வையால் மேயத் துவங்கினார்கள்.

       நற்பவியோ மொத்தமே ஏழு பேர் ரமணனையும் சேர்த்து. ஒரு பெண்ணால் ஏழு பேரை சமாளிக்க முடியுமா முடியாதா என்று திடமாக யோசித்தாள்.

     நிச்சயம் முடியாது அதுவும் தன்னை சாமர்த்தியமாக கட்டி தூக்கியதால் இங்கு இருக்கும் ஆட்கள் கொலைக்காரனாக இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

     அதிலும் ஆயுதம் ஏதேனும் உள்ளதா என்று நோட்டமிட்டாள். கத்தியை தவிர எதுவும் இல்லையென்றது புரிந்தது.

     ரமணனோ “வாட் குடோன் எப்படி தீப்பிடிக்கும்? நீங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கிங்க? யாராவது ஒளிந்து இருக்காங்களா நல்லா பாருங்க. போலீஸ் நடமாட்டாம் தெரியுதா?” என்றான்.

    நற்பவி காதிற்கு ரமணன் பேச்சு கேட்டதும், காதை கூர்த்தீட்டினாள்.

    மறுபக்கம் என்ன கேட்டதோ, “போலீஸ் நடமாட்டம் இல்லையா..? வேற எதனாலனு நல்லா பாருங்க. நான் வந்துட்டே இருக்கேன்.” என்றான்.

   “மெர்மேட் இங்க வருவதற்கு முன்னயே ரங்கன் இடத்தை கண்டுபிடிச்சிட்டியா என்ன? ரொம்ப அசால்டா இருக்க.

     ஏன் ரங்கன் குடோன்ல யாராயாவது அனுப்பியிருக்கியா?” என்று அவள் தொடையில் காலை மிதித்து கேட்டான்.

    “எருமை மாடே… நானே இங்க எப்படி வந்தேன்னு தெரியலை. நீ யாருனு இப்ப தான் சொல்லியிருக்க. அதுக்குள்ள எப்படி டா குடோன் தீப்பிடிக்க வைக்க முடியும். இங்க வந்து கட்டி வச்சிருக்க, அப்படியே தெரிந்தாலும் உன் குடோன் இருக்குற இடத்துக்கு எங்க ஆட்கள் தனியா போக முடியுமா?” என்று பேசியவள் கட்டிருந்த காலை மடக்கி உதறவும் நிலை தடுமாறினான்.

     “எது என்ன ஆகுதோ… நீ மானத்தோட உயிரோ போகக்கூடாதுடி” என்று சட்டையை கழட்டி முன் வந்து அவள் மேனியில் படுத்து முடிக்க, கடல் அலை ஆர்ப்பரிக்க பெரிதாய் குரல் கொடுத்து இரண்டு பக்கமும் வெயிட் போட்டு அதனை பளு தூக்கும் இயந்திரமாக எண்ணி கண்கள் மூடி தன் முழு பலத்தை திரட்டினாள் நற்பவி.

    ஒரளவு மீன் வளையை மாட்டி வைக்கும் கொக்கியில் கட்டி முடித்திருக்க, உப்பு காற்றாலும் உப்பு நீராலும் துரு பிடித்து இருந்தது. அதனை நற்பவி பலத்தாலும் இழுக்க, இரும்பு கொக்கி படகு கட்டையிலிருந்து வெளிவந்தது.

    வலது கை விடுபடவும் அவன் மண்டை முடியை பிடித்து தன் மேலிருந்து அப்புறப்படுத்தி அந்த கொக்கியால் முகத்தில் கீறலிட்டு முடித்தாள். வலியில் ரமணன் அலறவும் ஆறு பேர் கொண்ட அடியாட்கள் திரும்பி நின்று இருக்க நற்பவியை பிடிக்க வந்தனர்.
   
    இடது கையை உருவ முயன்றபடி கால்களை கழட்டி விட்டு அந்த மீடியமான கொக்கியை கையில் வைத்து வருபவர்கறு எட்டி உதைத்து  பாதுகாத்தபடி, இடது கையின் கயிற்றை அறுக்க முயன்று பாதி முடித்தாள்.

  மீண்டும் மீண்டும் ஒருவர் மாற்றி ஒருவர் வரவும், அடிக்க ஆயத்தமானாள்.

     பாதி அறுந்த கயிறு அவளின் இழுப்பிற்கே அறுப்பட்டது.

     அங்கே ட்ரெயின் பீரியடில் கற்று கொடுத்தவையும், கராத்தேவில் வாங்கிய பிளாக் பெல்ட் மூலமாகவும் அடியாட்களுக்கு அடிகளை பரிசாய் வழங்கினாள்.

   ரமணனோ சுதாரித்து அவளை நெருங்கி வந்து கழுத்தில் கை வைத்துபிடிக்க, பரத் மற்றும் ரங்கன் கைகளை பிடித்தனர்.

     அதே நேரம் கடல் நீரை அடித்து கொண்டு காற்று கீழே வருவதை அறிந்து வானத்தை பார்க்க ஹெலிகாப்டர் ஒன்று அவர்களின் போட்டை வட்டமிட்டு கொண்டிருந்தது.

     “கமிஷனர் வந்தாச்சு டா. இனி நீயா உண்மை ஒத்துக்கொண்டு உள்ள போறது தான் வழி.” என்றதும் மேலிருந்து துப்பாக்கி முனைகள் அடியாட்களின் மேல் குறி வைத்திருப்பதாக ஒலிப்பானால் கூறவும் பாரத் அசட்டையாக எண்ணி நற்பவியின் கையை முறுக்க அவன் இதயத்தை துளைத்து சென்றது தோட்டாக்கள்.

   ரங்கன் அதை மீறியும் பிடித்திட, மற்றவர்களோ இனி உயிருக்கு உத்திரவாதம் குறைவு என்று நீச்சல் தெரிந்த காரணத்தால் கடலில் குதித்தனர்.

   கப்பலும் எண்ணூர் பகுதிக்கு சற்றே அருகே வந்திருக்க குதித்து தங்களை உயிரோடு காத்திட எண்ணினர்.
   
    ரங்கன் மற்றும் ரமணன் இருக்க, நற்பவி அவர்களை மிதித்து மீன் பிடிக்க வைத்த வலையால் அவர்களை போட்டு பொட்டலமாக கட்டினாள்.

     ஒரு குறிப்பிட்ட இடத்தில் போட் தட்டுபடவும் அவர்களை பிடித்து முன் வந்தாள்.

   ஏற்கனவே அங்கு இருந்த போலீஸும் தர்ஷன் அனுப்பிய டீம் மெம்பரும் சூழ்ந்து எஞ்சிய ஆட்களை பிடித்திருந்தனர்.

    தர்ஷன் மதிமாறனுக்கு லோகேஷன் அனுப்பவும் சில நிமிடத்தில் பைக்கில் வந்து சேர்ந்தான்.

     தன்னவள் நிலை கண்டு அவசரமாய் தன் உடையை கழட்டி அவளிடம் நீட்டினான்.

   அதனை வாங்கி அணிந்தவளாய் மதிமாறன் காண, அவனோ கையில் சில சிசிடிவியின் பதிவுகளை கொண்ட ஹார்ட் டிஸ்க் எடுத்து வந்து நற்பவியிடம் கொடுத்தான்.

    இதுல ரமணன் ரங்கன் டீலிங், டிரக் வந்து பாக்கெட் ஏற்றுமதி செய்யறது, யார் யார் அதர் கன்ட்ரிஸ் வந்து வாங்கறாங்கனு சில பல டீடெயில் இருக்கு.” என்று கூறியவன் ரமணனை ஏறிட்டான்.

    “உன்னை கொன்றுட்டு இங்கயே புதைக்கணும்னு தோணுது. ஆனா என் நற்பவி என்னால ஏற்கனவே ஒரு கேஸ்ல தோற்றதா மனதளவுல பீல் பண்ணலாம். இதுலயும் என் தலையீடல் இருந்தா நல்லாயிருக்காது.

   இந்த முறை என் நற்பவி பிடிச்ச குற்றவாளியை அவ நீதிபதி முன்ன நிறுத்துவா” என்று மதிமாறன் அவளுக்காக கை கட்டுப்பட்டவனாய் பேசினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
  

2 thoughts on “இதயத்திருடா-29”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!