Skip to content
Home » இதயனின் ஹிருதயம் அவள் -5

இதயனின் ஹிருதயம் அவள் -5

ம்மா…ஆஆஆஆஆ வலிக்குது மாஆஆஆஆ‌.. முடியல மாஆஆஆ…. என்ற ஒரு பெண்ணின் அலறலை தாண்டி ஒழித்தது அந்த சிறு மொட்டின் குரல் ங்காஆஆ ங்காஆஆ….

                 புதிதாக பூமிக்கு வந்த தேவதையை கையில் ஏந்திய டாக்டர் வென் பட்டின் மென்மை ஒத்த அந்த குழந்தை காதில் வெல்கம் பிரின்சஸ் என்று கூறி அருகில் இருந்த நர்ஸிடம் குழந்தை குடுத்து சுத்தம் செய்யது  அவர்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கும் படி சொல்லி விட்டு அந்த ஆப்ரேஷன் தியேட்டர் விட்டு வெளியேற.....

              தவிப்புடன் நின்றிருந்தவர்கள் வெளியே வந்த டாக்டரைப் பார்க்க அந்த பெண்ணின் கணவன் டாக்டர் என் மனைவி அப்புறம் குழந்தை நல்லா இருக்காங்களா ......

              உங்க மனைவி மயக்கத்துல இருக்காங்க அப்புறம் உங்க பிரின்ஸ் இப்போ வந்துடுவாங்க பாருங்கள் , இரண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல நல்லா இருக்காங்க......

                நன்றி டாக்டர்.....

                 இட்ஸ் ஓகே அது என் கடமை என கூறிவிட்டு செல்ல எதிரில் வந்தவர்கள் எல்லாம் வணக்கம் சொல்ல  பதில் வணக்கத்தை ஒரு புன்னகையுடன் தலையசைத்து விட்டு தன்னுடைய அறைக் கதவைத் திறந்து உள்ளே செல்ல அங்கிருந்த டேபிளின் மேல் கம்பீரமாக வீற்றிருந்தது அவன் பெயர் .... 

அவன் இதயன் ( மகப்பேறு மருத்துவன்)…..

        கழிவறை சென்று தன்னை சுத்தம் செய்து வந்தவனை வரவேற்று என்னவோ கையில் டீயுடன் நின்றிருந்தான்....

       அவன் நண்பன் சரத் அவனும் மருத்துவன் இங்கு ( நரம்பியல் மருத்துவன் ) .......

        வாடா எப்போ வந்த கேட்டுக் கொண்டே தன் இருக்கையில் அமர....

                    எதிர் இருக்கையில் அமர்ந்தவன் அவனுக்கொரு டீயை கொடுத்து விட்டு தன்னுடையதை பருகியப் படி இப்போ தான் டா வந்தேன் எனக்கு இப்போ ஃப்ரீ டைம் டா நீயும் இப்போ தான் வந்தேன் சொன்னாங்க அதான் உன்னோடையே குடுக்கலாம்ன்னு வந்தேன் டா....

                ஓ..சரி கேக்கலாம் இருந்தேன் காலைலேயே பாத்தேன் மூஞ்ச ஏன் அவ்வளவு நல்ல வச்சு இருந்த ........

                   எல்லாம் எங்க வீட்டுல இருக்க லவ் பேட்ஸ் நாளா தான்.....

                    சிரித்தவன் ஏன்டா என்ன பண்ணாங்க இன்னைக்கு அவன் கேள்வியை கவனித்தாலே தெரிந்து இருக்கும் இது எப்போதும் நடப்பது தான் என்று.....

                     அவங்க என்னடா பண்ணல  வீட்ல ஒரு வயசு  பையன் இருக்கான்னு பொருப்பு இல்லமா ஒரே  ரொமான்ஸ் தான் சலிப்பாக கூறினாலும் கொஞ்சம் அதில் பெருமையும் இருந்தது இன்னும் கூட தன் பொற்றோரின் காதலைக் கண்டு.....

                       ஹா..ஹா.ஆஆஆ என்னடா என்னமோ அவங்க இப்போ தான் இப்படி இருக்க மாதிரி பேசுற அவங்க எப்பவும் அப்படி தான ........

                    ஆன் அது முன்னாடினா பரவால்ல இப்போ கொஞ்சம்மாச்சி பொறுப்பு இருக்க வேணாம்......

                  ஏன் இப்போ லவ் பண்ண கூடாதுன்னு எங்களுக்கு தெரியாம சட்டம் ஏதும் வந்திருக்க என்ன, அப்புறம் அந்த பொறுப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் புரியலையே ராசா .....

                       அதெல்லாம் அப்போ இப்போ  தான் நம்ம பையன் வளந்துட்டானே , அவனுக்கு கல்யாண வயசு வந்துருச்சே காலக்காலத்துல ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு எண்ணம் இருக்க , இவங்க போற போக்க பாத்த எனக்கு தம்பி தான் வருவான் போல் நீ என்ன நினைக்குற என நக்கல் பண்ண.....

                         இதயனோ தன் டேபிளில் இருந்த பென்னை சரத்தை நோக்கி எறிய அதை கேச் பிடித்து மீண்டும் அதே இடத்தில் வைத்து ஏன்டா இந்த கொலவெறி மீ பாவம்.....

                     யாரு நீ பாவம் எருமை என்ன பேச்சு பேசுற , இதுல நான் என்ன நினைக்குறனாவா நான் தானா நைட் வீட்டல இதைப் பத்தி அப்பாக்கிட்ட டீடைலா கேட்டு சொல்லலாம்னு நினைக்குறேன் இப்போ நீ என்ன நினைக்குற.......

                     ஏதே ஏன் டா ஏன் இல்ல ஏன்னு  கேக்குறேன் அந்த மனுசன் சோத்துல விஷம் வைக்கவா....

                       தெரியுது இல்ல அப்போ வாயை மூடும் படி சைகை செய்ய....

                       சரிடா எப்பா மூடிட்டேன் ஆனா சாமி உன்னை எல்லாம் நல்லவேனு இந்த ஊரு நம்புது பாரேன்....

                          அவன் புலம்பலை கேட்டு சிரித்த இதயனைப் பார்த்து டேய் எப்பா சாமி புன்னகை மன்னா இந்த புன்னகை எல்லாம் வெளியப் போய் பண்ணி தொலையாத டா , பேசித்தொல உனக்கு எல்லாம் பேசத் தெரியாதுன்னு இந்த ஊரு சொல்லுது டா ஆனா எனக்கும் , சாரதி மாமாக்கு மட்டும் தான் தெரியும் நீ பேசுனா கூவமே நாரும்னு சை சத்திய சோதனை டா சரத்து உனக்கு அவனே பேசி உள்ளங்கையை கொண்டு நெற்றியில் அடித்து கொள்ள.....

                   இது என்னடா வம்பா போச்சு நானா பேச மாட்டேன்னு சொன்னேன் அவங்களா நினைச்சா நான் என்னடா பண்ண என தோலைக் குழுக்க ......

                    ஏன்டா சொல்ல மாட்ட எப்ப பார்த்தாலும் பேசாம யாரும் எதுவும் கேட்டாலும் ஒத்த வார்த்தைலை பதில் சொல்றது  , இல்லையா சிரிச்சுட்டு போறது  இவரு பெரிய புன்னகை மன்னன் கமலு அப்படியே யார பாத்தாலும் நல்ல பல் புடி விளம்பரத்துக்கு ஃபோட்டோ எடுக்குற மாதிரி புன்னகை வேற இதுல வெளிய போய் தான் சிரிக்கிறது அதுவும் நல்ல அந்த கன்னக்குழி விழுற மாதிரி சிரிக்குறது அதை வேற அந்த நர்ஸ் புள்ளைங்க எல்லாம் பாத்துட்டு அப்படியே உறைஞ்சு போய் நிக்குதுங்க அதுக்குள தெளிய வைக்குறதே பெரும் வேலையா இருக்கு......

                 டேய் உன்னையும் , மாமாவையும் தவிர வேற யார்கிட்டேயும் இப்படி ஃப்ரெண்ட்லியா பேச பிடிக்கல உனக்கு தெரியும் தானா ஏன் நான் வீட்டுல கூட இப்புடி தான்னு , அப்புறம் சார்க்கு பொண்ணுங்க அப்படி நிக்கறது பிரச்சனை இல்லை உன்ன பாக்காம என்ன மட்டும் பாத்து நிக்கறதுல ரொம்ப பொறாமை போலையே மச்சான் அப்படியா .....

                 அதைக் கேட்டு ஒரு நொடி திரு திரு என  முழுத்தவன் பின் சமாளிப்பாக உன் பாத்து பொறாமை அதுவும் நானு போங்க தம்பி போய் எதுவும் வேலை இருந்த பாருங்க , வந்துட்டான் பொறாமை , கொழத்து ஆமைன்னுட்டு என கூறி அங்கிருந்து ஓடிவிட்டான்‌‌.‌....

         சரத் ஓடியதைப் பார்த்து இருபுறமும் தலையசைத்து சிரித்தவனுக்கு தெரியும் சரி சொல்லியது அனைத்தும் இவனை சரிக்க வைக்க மட்டும் தான் என்று .....

       அதன் பின் அவன் நேரத்தை வேலை இழுத்து கொண்டது....

         காலையில் இருந்து மாலை வரை மக்களை தன் உஷ்ணத்தால் படுத்தியது போதும் என்று விடைப் பெற்ற சூரியன் அவர்களை இதம் அளிக்கும் விதமாக தன் நிலவு காதலியை அனுப்பு விட்டு விடைப் பெற்றான்....

            தன் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு தன் அறையில் இருந்த வெளியே வந்த இதயனைக் கண்டவர்கள் விடைக் கொடுக்க அதனை ஏற்றுக் கொண்டது போல் தலையசைத்து விட்டு வெளியேறியவனின் உடன் எங்கிருந்தோ வந்த இணைந்து கொண்டான் சரத்.......

                      அதானே என்னடா எப்பவும் வர வேதாளம் இன்னை வர போல இன்னைக்காச்சும் விடுதலைன்னு நினைச்சேன் அது நினைச்சு முடிக்கும் முன்னாடி எப்படி மச்சான் இப்படி.....

                     என்னடா நக்கலா அதுவும் எனக்கே வா , என்கிட்ட இருந்து விடுதலை அதுவும் உனக்கு நெவர் எவர் மச்சான் வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பே இல்ல....

                    அப்போ அந்த விக்கிரமாதித்தியனுக்கு  கூட அந்த வேதாளம் கிட்ட இருந்து விடுதலை கிடைக்கும் ஆனா உன்கிட்ட இருந்து எனக்கு என்னைக்கும் இல்ல சொல்ற அப்படி தானா.....

                    கற்பூரம் புத்தி மச்சான் உனக்கு என் தங்கம் என் கண்ணே பட்டுறும் அவனை நெட்டி முறிக்க  அவனை முறைத்து விட்டு வண்டி எடுக்க வேகமாக அவன் அருகில் சென்றவன் பின்புறம் அமர்ந்து கொண்டான்.....

                 இருவரும் பேசிக் கொண்டே அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் வர வண்டியை நிறுத்தி விட்டு படியில் ஏற போன சரத் எதர்ச்சியாக திரும்பி பார்க்க அங்கிருந்தவர்களைப் பார்த்து கோவமாக அங்கே செல்ல அவன் போவதை பார்த்த இதயனும் அவனைப் பின் தொடர்ந்தான்...

       தங்கள் முன்னே நிழல் ஆடவும் நிமிர்ந்தவர்கள் பார்த்து கோவமாக நின்ற சரத்தை தான் ......

    அவர்கள் சரத்தின் பெற்றோர் திருமூர்த்தி மற்றும் ருக்மணி.....

         என்னடா மகனே ரொம்ப பாசமா பாக்குற , அப்போ ரொம்ப சந்தோஷமா இருக்க போல அப்படியா ....

         வேணா அப்பான்னு கூட பாக்க மாட்டேன் சொல்லிட்டேன்....

          ஆமாடா இல்லைனா மட்டும் அப்படியே மரியாதை குடுத்து கிழிச்சுருவ...

            அவ்வளவு தான் பொங்கியே விட்டான் இல்லை தெரியாம கேக்குறேன்...

              தெரியாம ஏன் டா கேக்குற போ போய் தெருஞ்சுட்டு வந்து கேளு என்று சரத்தின் தாய் கூற்றில் சரத்தை தவிர மற்ற இருவரும் சிரித்து விட அதில் ஏக கடுப்பாய் முறைத்தவன்...

                பெத்த தாயா நீ எல்லாம் கொஞ்சமாச்சு எம்மேல பாசம் இருக்க உங்க இரண்டு பேருக்கும்....

                  என்னடா பிரச்சனை உனக்கு வந்ததுல இருந்து புரியாத மாதிரி பேசுற வர வழியில எதுவும் தலையில அடிப்பட்டுருச்சா , அவன் பின் நின்ற இதயனைப் பார்த்தவர் நீ சொல்லு இதயா என்னவாம் உன் ஃபிரண்டுக்கு ......

            தெரியல பா பாவம் லூசு ஆயிட்டான் போல பேசிய படி எதிரே இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான்....

               ஏதே லூசா என்னடா நக்கலா அவனை முறைத்து கொண்டே அவன் அருகில் அமர.....

                 ம்ம்ம் நிக்கலு ஆமா நீ ஏன்டா சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுற .....

                  அய்யோ ஆமால மை டியர் பெத்தவங்களா பெத்த புள்ள நான் நானே சிங்கிளா சுத்துக்கிட்டு இருக்கேன் நீ என்னடானா ஜோடி புறாவா சுத்திட்டு இருக்கிங்க மனசாட்சி இருக்க உங்க இரண்டு பேருக்கும் .....

                  அதில் இரண்டு பேரும் அவனை கேவலமாகப் பார்க்க எதுக்கு இப்படி பார்க்குறாங்க என்று என்னியவன் இதயனை திரும்பி பார்க்க அவனும் அப்படியே பார்க்க இப்போ எதுக்கு மூணு பேரும் இப்படி பாக்குறீங்க....

                ஏண்டா மகனே இப்போ நான் கேக்குறேன் உனக்கு வெட்கமாக இல்ல அப்பா , அம்மாக்கிட்ட வந்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்க.....

               சே..சே இதுக்கு எல்லாம் வெட்கப்பட்டா கல்யாணம் நடக்குமா தகப்பா...

                தூஉஉஉஉ...மூவரும் சேர்ந்து துப்ப ....

                   துப்ப தொடச்சுப்பேன்  அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா அசால்டாக தோலைக் குழுக்கியவன் மாஆஆஆ வா வா போலாம் பசிக்குது அவரின் கையைப் பிடித்து இழுத்து செல்ல....

                    டேய் எம்பொண்டாட்டிய விடுடா நாங்களே வருவோம் இல்ல....

                     நோ லவ் பேட்ஸ் இப்போ எனக்கும் எங்க அம்மாக்கும் ஆனா நேரம் சோ உங்களுக்கு நோ என்ட்ரி ஓகே  நீ வாமா நம்ம போலாம் என அவரின் தோளில் கை போட்டு அவரைக் கொஞ்சிய படி செல்ல அவனைப் பார்த்து தலையில் அடித்து கொண்டவர் இதயனைப் பார்க்க அவனோ அனைத்தையும் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான்.....

               நீ வா இதயா போலாம் இல்லைனா அவன் நமக்கு எதையும் வைக்க மாட்டான்....

                போலாம் பா  என இருவரும் இணைந்து நடக்க அப்பறம் வேலை எல்லாம் எப்படி டா போகுது....

           எப்பவும் போல தான் பா ஆல் ஓகே .....

            அடுத்து என்ன இதயா வீட்ல எதுவும் அலையன்ஸ் பாக்கலையா டா இன்னேரம் தேவி தங்கச்சி இந்த பேச்சை எடுத்து இருக்குமே டா....

           தெரியல பா நான் இரண்டு வருசம் போகட்டும் சொன்னேன் அதுவும் முடிஞ்சு மாசம் போய்டுச்சு எதுவும் வீட்ல கேக்கவும் இல்ல நானும் எதும் சொல்லவும் இல்ல பா.....

                     ஆமா டா அவங்க கேக்கலைனா நீயேன் சொல்ல போற உனக்கு இன்னும் வசதின்னு அமைதியா இருந்துப்ப...

                   பா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல .....

                       போடா உன்ன பத்தி தெரியாது பாரு இப்படி விட்டுட்டா நீ இன்னும் பிரியா சுத்தலாம்னு இருப்ப நீயேன்டா இப்படி இருக்க , யாரையாவது லவ் பண்றீயானா அதுவும் இல்ல அப்பறம் என்னடா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானா.....

                     பா யாரையும் பாத்து எனக்கு தோணலப்பா , ஒரு வேலை வீட்ல பாக்குற யாரையாச்ச பாத்த உடனே எனக்கு அப்படி தோணுச்சுனா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன் பா....

                      சரிடா அப்புறம் இருவரும் பேசிப் படியே இரண்டாவது மாடியில்  ஃபிளாட் E என்ற தளத்தில் வீட்டின் எண் 301 என்ற வீட்டிற்குள் வர இவர்ஙள வருகையை எதிர்பார்த்த படி அமர்ந்திருந்தனர் சரத்தும் அவன் தாய் ருக்குமணியும்.....

                    இவ்வளவு நேரம் அப்படியே என்ன எங்களை விட்டுட்டு இரகசியம் பேசிட்டு வரீங்க....

                      டேய் நாங்க என்ன வேணா பேசுவோம் உனக்கு என்னடா சாப்பிட தானா வந்த போ போய் கொட்டிக்கோ....

                       கிரேட்  இன்சல்ட் டா சரத் என் உள்ளங்கையை வைத்து நெற்றியில் குத்தியவன் போங்க நான் கோவமா சாப்பிட போறேன் யாரையும் கண்டுக்கொள்ளாமல் டைனிங் டேபிளுக்கு போக ....

          அப்ப கூட சாப்பிடாம போறேன்னு சொல்றானா பாரு ....

          அட போதும் போங்க எப்ப பாரு அவன் கூடவே வம்பு பண்ண வேண்டியது , இதயா போ போய் சீக்கிரம் பிரஷ் ஆயிட்டு வா சாப்பிடலாம் லேட் ஆகுது பாரு.....

         5 மினிட்ஸ் மா வந்துடறேன் கூறியவன் தன்னுடைய F பிளாட்டான எதிர் வீட்டிற்கு சென்றான் அது  ஃபிளாட் எண் 304 .....

         அது ஒரு மூன்று அடுக்கு கொண்ட அபார்ட்மெண்ட் கீழ் தளத்தில் நான்கு பிளாட் , மேலே மூன்றாவது தலத்தில் நான்கு பிளாட் என இரண்டு மற்றும் மூன்று அறைகளைக் கொண்டது .....

          அபார்ட்மெண்ட் கீழே ஜிம் மற்றும் குழந்தை விளையாட்டு திடல்  , நடைப்பாதை என அழகாக அமைப்பட்டு இருந்தது.....


              இதயனுதோ இரண்டு படுக்கை அறை ,  கிச்சன் , சிறிய ஹால் மற்றும் அதை ஒட்டிய குட்டி பால்கனி என அளவான அழகான அமைப்பு கொண்டது....

                    சிறிது நேரத்தில் வந்தவன் மற்ற மூவருடனும் இணைந்து கொள்ள ஒருவரை ஒருவர் வரிக் கொண்டு சாப்பிட்டதில் மனமும் வயிறும் நிறைந்து என்றே சொல்லலாம் ....

           இன்னும் சற்று நேரம் அவர்களுடன் நேரத்தை கடத்தியவன் அனைவருக்கும் இரவு வணக்கத்தை சொல்லி விட்டு வந்தவன் தன் மெத்தையில் விழுக அடுத்த நொடி அருகே மேஜையில் இருந்த போன் தன் இருப்பைக் காட்டியது.....

           யார் அழைத்தது என்று பார்க்காமலே தெரிந்தது அழைப்பது யார் என்று .......

         முகம் முழுவதும் புன்னகை சிந்தியதில் அவன் கன்னத்தில் விழுந்த குழி இன்னும் அவனுக்கு அழகு சேர்த்தது சரத் சொன்னது போல் பெண்கள் யாரேனும் பார்த்து இருந்தால் அங்கேயே புதைந்து இருப்பார்கள் அத்தனை அழகு .......

3 thoughts on “இதயனின் ஹிருதயம் அவள் -5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *