இருளின் ஒளியானவன் கதை வாசகரின் போட்டிக்கு எழுதுகின்றேன்.
பெயர் மறைத்து எழுதுவதால் சைட் அட்மின் ஐடியில் பதிவிடப்படுகிறது. உங்கள் வாசிப்பும் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் எழுத்தாளர். கதையை வாசிங்க உங்க கருத்தை சொல்லுங்க.
இருளில் ஒளியானவன்
சென்னையின் மிகப்பெரிய மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவின் வாயிலை பார்த்தபடி, எதிரில் இருந்த நாற்காலியில் பதட்டமாக அமர்ந்திருந்தனர் அன்பரசு லட்சுமி தம்பதியினர்.
அன்பரசுக்கு ஐம்பத்தைந்து வயது ஆகிறது. லட்சுமிக்கு ஐம்பது வயது. இருவரது பதட்டத்திற்கு காரணம் அவர்களது ஒரே மகள் வைஷ்ணவிக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருக்கிறது.
என்ன ஆயிற்று? என்ன சிகிச்சை? எப்படி இருக்கிறாள்? என்று எதுவும் தெரியாமல், ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருவரும் கைப்பற்றி அமர்ந்திருந்தார்கள்.
அவர்களது ஆசைக்கும், பாசத்திற்கும், ஆஸ்திக்கும் ஒரே வாரிசான வைஷ்ணவிக்கு இருபத்தைந்து வயதாகிறது. அன்பான அழகான அமைதியான பண்பான பெண்தான் வைஷ்ணவி.
கல்லூரி படிப்பு முடிந்ததும் தந்தையின் தொழிலை கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி, அவருடனே அலுவலகத்திற்குச் சென்று வந்து கொண்டிருந்தவளை பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தார்கள்.
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள், இப்படி அவசர சிகிச்சை பிரிவில் குற்றுயிரும் குறையுமாக கிடப்பாள் என்று அவர்கள் நினைத்தா? பார்த்தார்கள்.
என்னதான் ஆயிற்று? எதுவும் புரியவில்லை அவர்களுக்கு. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. தெரியவில்லை என்று சொல்வதைவிட, இப்பொழுது அவர்களுக்கு மகள் கண் விழித்தால் போதும். பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
“என்னங்க, குட்டிமாக்கு எதுவும் ஆகிடாது இல்ல?” என்று கலங்கியபடி கேட்ட மனைவி லட்சுமியை தோளுடன் அணைத்துக் கொண்ட அன்பரசு,
“அதெல்லாம் எதுவும் ஆகாது லட்சுமி. தைரியமாக இரு” என்று தன் பயத்தை மறைத்துக் கொண்டு மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
சற்று நேரத்திற்கெல்லாம் அவசர சிகிச்சை அறையின் கதவு திறக்க பட, வெளியே வந்தார் மருத்துவர்.
மருத்துவரைக் கண்டதும் வேகமாக எழுந்தனர் தம்பதியர் அவரிடம் செல்ல, “என்ன ஆயிற்று அன்பு? எப்படி இது நடந்தது என்று விசாரித்தாயா?” என்று தன் நண்பனை பார்த்து கேட்டார் மருத்துவர்.
அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல் “வைசு எப்படி இருக்கிறாள்? அவளுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே?” என்று பதட்டமாக கேட்டார் அன்பரசு.
நடந்து கொண்டே அவர்கள், மருத்துவரது தனி அறைக்கு வந்துவிட்டனர்.
அவர் அவரது இருக்கையில் அமர்ந்ததும், லட்சுமி “அண்ணா, குட்டிமாக்கு எதுவும் ஆகலையே?” என்று கவலையாக மருத்துவரது முகத்தை பார்த்தார்.
அவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டு “உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்றார்.
அதில் நிம்மதி அடைந்தனர் பெற்றவர்கள். அதே நிம்மதியுடன் “அவளை நாங்க பார்க்கலாமா?” என்று ஆவலாக கேட்டனர்.
“இல்லை, இன்னும் சிகிச்சை முடியவில்லை. அவளது உடல் முழுவதும் காயங்கள். அவளும் மயக்கத்தில் தான் இருக்கிறாள். அவளாக மயக்கம் தெளிந்து எழுந்த பிறகு தான் நீங்கள் அவளை பார்க்க முடியும்” என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.
கவலையாக இருந்த தன் நண்பனை பார்த்து, “அவளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அப்சர்வேஷனில் தான் இருக்கிறாள். நிச்சயம் விரைவில் குணமடைந்து விடுவாள். நீங்க சொல்லுங்கள், என்னாயிற்று அவளுக்கு?” என்று இருவரது முகத்தையும் பார்த்தார்.
எப்படி சொல்வதென்று தெரியாமல் அவர்கள் அமைதியாக இருந்தனர்.
நண்பனது முகத்தை பார்த்து “அரசு, நீ என் நண்பன் என்பதற்காக தான் நான் காவல்துறைக்கு கூறவில்லை. இது சாதாரண கேஸ் கிடையாது. பலாத்காரம். இதை கண்டிப்பாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். என்ன நடந்தது என்று கூறு. நீ சொல்வதை பொருத்துதான் நான் காவல்துறையின் உதவியை நாட வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்வேன்” என்று அவரை அழுத்தமாகப் பார்த்தார்.
மருத்துவர் கூறியதை கேட்டதும் கதறி அழுதார் லட்சுமி. அவரை லேசாக அணைத்து முதுகை தடவி ஆறுதல் படுத்தியபடியே, “எங்களுக்குமே என்ன நடந்தது என்று தெரியவில்லை கேசவா” என்று கவலையாக மருத்துவரை பார்த்தார்.
“போன மாதம் தானே வைஷ்ணவிக்கு கல்யாணம் நடந்தது?” என்று கேள்வியாக அன்பரசுவை பார்த்தார் மருத்துவர் கேசவன்.
‘ஆமாம்’ என்று தலையாட்டிய அன்பரசு, “இன்று காலையில் அவளை பார்த்து விட்டு வரலாம் என்று தான் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். ஆனால் நாங்கள் அங்கு சென்று பார்க்கும் பொழுது, அங்கே எங்கள் குழந்தை..” என்று பேச முடியாமல் அழுதார்.
தண்ணீரை ஊற்றி அவரின் எதிரில் நகற்றி வைத்துவிட்டு, “ரிலாக்ஸா நடந்ததை சொல்லு” என்றார்.
“திருமணம் முடிந்ததிலிருந்தே அவள் எங்கள் வீட்டிற்கு வரவே இல்லை. தொலைபேசியில் தான் அப்பப்ப பேசுவாள். நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத்தான் கூறினாள்.
கடந்த ஒரு வாரமாக லட்சுமி தான் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தாள். நான் வைஷுக்கு ஃபோன் செய்து சொன்னேன். அவளே வீட்டிற்கு வருவதாக நாட்களை கடத்தினாள்.
இன்று காலையில் லட்சுமி தான் பிடிவாதமாக என்னை அழைத்துக் கொண்டு சென்றாள். நாங்கள் அங்கு செல்லும்பொழுது அங்கு வீட்டில் யாரும் இருப்பது போலவே தெரியவில்லை. சிறிது நேரத்தில் மாடியில் சத்தம் அதிகம் கேட்டது. நாங்கள் வேகமாக மாடிக்கு சென்றோம். எல்லோரும் பதட்டமாகத்தான் இருந்தார்கள். அப்பொழுது ஒரு அறையின் கதவை மாப்பிள்ளையின் தம்பி உடைத்துக் கொண்டு இருந்தான்.
நாங்கள் சென்றதும் அவர்கள் எல்லோருமே அதிர்ந்தார்கள். எங்களது பயத்தையும் பதட்டத்தையும் கண்ட சம்பந்தி அம்மா, “ஒன்றும் பிரச்சனை இல்லை. உள்ளே என் மகனும் உங்க மகளும் தான் இருக்காங்க. கதவை தட்டத்தட்ட திறக்கவில்லை. அதனால் தான் கதவை உடைக்கிறோம்” என்றார்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கணவன் மனைவி இருக்கும் அறையை ஏன் இப்படி உடைக்கிறார்கள் என்று? அதற்கு ஏன் கதவை உடைக்க வேண்டும், இருவருக்கும் ஃபோன் செய்யலாமே! என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, லட்சுமி என் மகளுக்கு ஃபோன் செய்தாள். உள்ளே ஃபோன் அடிக்கும் சத்தமும் கேட்டது. ஆனால் அவள் எடுக்க வில்லை.
அதற்குள் கதவு உடைபட, கதவை வேகமாக திறந்தான். அந்த அறையே அலங்கோலமாக கிடந்தது. கட்டிலில் மாப்பிள்ளை கிடந்தார்.
வைஷு எங்கே என்று நாங்கள் தேட, கட்டிலின் மறுபுறம் தரையில் ஒட்டு துணி இல்லாமல், அலங்கோலமாக என் மகள்.. என் மகள்.. ” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் அன்பரசு.
“யாரும் தன் மகளை பார்க்க கூடத கோலத்தில் நான் பார்த்தேன் டா” என்று கதறியவரை, தோளுடன் அணைத்துக் கொண்ட கேசவன், அவரது முதுகை தடவி “ரிலாக்ஸ்டா” என்று ஆறுதல் படுத்தினார்.
“என்ன நடந்திருக்கும் என்று தெரியலடா? அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டும் தான் இருந்தார்கள். அவன் தன் மனைவியிடமே இப்படி நடந்து கொள்ள காரணம் என்ன என்றுதான் தெரியவில்லை?” என்று அழுதபடியே அவருக்கு தெரிந்ததை சொல்லி முடித்தார்.
“அவர்களிடம் ஏதாவது கேட்டாயா?”
“இல்லை. என் மகளை பார்த்த உடனேயே, எனக்கு அவளை காக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. உடனே உனக்கு ஃபோன் செய்து விட்டேன். நீயும் ஆம்புலன்ஸ் அனுப்பி விட்டாய்.
அவர்கள் அவர்கள் குடும்ப மருத்துவரிடம் போகலாம் என்றுதான் சொன்னாங்க. நான் தான் பிடிவாதமாக இங்கு அழைத்து வந்து விட்டேன்” என்று அழுகையோடு கூறி முடித்தார்.
அவர்களது குடும்ப மருத்துவர் யார் என்று கேட்டு தெரிந்து கொண்டார் கேசவன்.
“வைஷ்ணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். கண்டிப்பாக காவல்துறைக்கு சொல்லப்பட வேண்டும். ஆகையால்..” என்றதும்,
“வேண்டாம் அண்ணா. என் மகளின் வாழ்க்கையை பத்திரிகையில் போட்டு அசிங்கப்படுத்திடுவாங்க” என்று கதறி அழுதார் லட்சுமி.
“இல்லைம்மா, தெரியப்படுத்தாமல் இருக்க முடியாது. முடியாது என்பதை விட இருக்க கூடாது. அது மட்டுமல்லாது நாம் மகளின் வாழ்க்கை என்று யோசிக்கிறோம். ஒருவேளை அவர்கள் தப்பிக்க, வைஷ்ணவியின் மீது ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுத்தால், என்ன செய்வது? அதனால் தான் சொல்கிறேன்” என்று கூறி,
“கவலைப்படாதே.. கமிஷனர் எனக்கு நண்பர் தான். வெளியே விஷயம் தெரியாதபடிக்கு விசாரிக்க சொல்லி வைக்கிறேன்” என்றார் கேசவன்.
- தொடரும்..
Starting ore kastama iruku iniku ponnungaluku athigama nadukura anithi ithu tha yarum sariya kekurathu illa keta kasu koduthu adakiduranga illana vera ethathu panranga . Ithula ena nadakuthunu papom