இருளில் ஒளியானவன் 29
இவ்வளவு நாட்கள் அம்மா, அப்பாவை பார்க்க, அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் பொழுதெல்லாம் வெங்கட் ஏன் தட்டி கழித்தான் என்று இப்பொழுதுதான் புரிந்தது வைஷ்ணவிக்கு.
தாய் ஃபோன் செய்யும் பொழுதெல்லாம், இன்று வருகிறோம், நாளை வருகிறோம் என்று, ஏதாவது காரணம் சொல்லியே இதுவரை தப்பித்துக் கொண்டு இருந்து விட்டாள்.
இனிமேல் ஒரு கட்டத்தில், நிரந்தரமாக தன் தாய் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டிய நிலைமை வரும். அப்பொழுது அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ? என்ற பயமும் அவளுக்குள் தோன்ற ஆரம்பித்தது.
இப்படியாக பல சிந்தனைகள் அவளின் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க, அவளின் முகத்தில் இருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அதன் பிறகு அவனுடன் பேசவும் அவளால் முடியவில்லை. அவனும் அவளுடன் பேசுவதை தவிர்த்தான்.
இப்படியே வாரம் கடக்க, ஒரு திருமணத்திற்கு குடும்பத்துடன் அனைவரும் செல்ல வேண்டிய கட்டாயம்.
வெங்கட் “நான் எங்கும் வர முடியாது” என்று முடிவாக சொல்லிவிட்டு அறைக்கு வந்து விட்டான்.
அவன் இல்லாமல் வைஷ்ணவியையும் அழைத்துச் செல்ல முடியாது.
அவளை “இரவு அவனுக்கு சமைத்துக் கொடு. நாங்கள் வருவதற்கு தாமதமாகிவிடும்” என்று கட்டளையாக சொல்லிவிட்டு, தன் கணவன் மற்றும் இளைய மகனுடன் திருமணத்திற்கு சென்று விட்டார்.
வைஷ்ணவியும் சமையல் முடித்து அவனுக்கு இரவு உணவு கொடுத்தாள். இருவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு மாடிக்கு சென்றார்கள்.
அவன் வழக்கம் போல வேலை செய்ய உட்கார, அவனின் அருகில் சாதாரணமாக அமர்ந்து, அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் தன்னைத்தான் பார்க்கிறாள் என்று உணர்ந்த வெங்கட், “ஏதாவது கேட்கணுமா?” என்றான் அவளை பார்க்காமலேயே.
“அன்று மாமா எல்லாவற்றையும் சொன்னாங்க” என்றாள் தயங்கி தயங்கி.
அவனும் “ம்ம்” என்று மட்டும் சொன்னான் நிமிராமல்.
“நீங்கள் அதற்கு எந்த சிகிச்சையும் எடுக்கவில்லையா?” என்றாள் தயக்கமாக.
“அதைப் பற்றி எல்லாம் உனக்கு எதற்கு?” என்றான் அதட்டலாக.
“இல்லை, ஏதாவது சிகிச்சை எடுத்துக் கொண்டு, அதிலிருந்து வெளியே வரலாம் அல்லவா?” என்று அவனது அதட்டலில் உண்டான பயத்தை மறைத்துக் கொண்டே பேசினாள்.
அவளைப் பார்த்து முழுமையாக திரும்பி அமர்ந்த வெங்கட், “இங்கே பார், இன்னும் கொஞ்ச நாள்ல உன்னை பத்திரமா உன் வீட்டிற்கு அனுப்பி விடுவேன். அதன் பிறகு கொஞ்ச நாள்ல டைவர்ஸ் கிடைச்சுடும். அதுக்கப்புறம் உன் வாழ்க்கையை பார்த்துட்டு நீ போயிடு. இப்படி எனக்கு அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காத” என்றான் கோபமாக.
அவனின் கோபமான முகத்தைக் கண்டு, பயந்து இருக்கையில் இருந்து எழுந்து விட்டாள். அவள் எழுந்து நிற்கவும் அவர்கள் அறையின் விளக்குகள் அணையவும் சரியாக இருந்தது. இவர்கள் அறையின் கரண்ட் ஏதோ ட்ரிப் ஆகிவிட்டது போல. அதனால் விளக்குகள் அணைந்து விட, ஏற்கனவே அவள் அவன் அருகில் இருந்து, தொனதொனத்து கொண்டதில் எரிச்சலாக இருந்தவனுக்கு, அந்த இருட்டும் அவனை வெறிகொள்ள வைத்தது.
“ஏய்” என்று கத்தி அவன் இருக்கையை தள்ளிவிட்டு எழுந்தான்.
அவனது கோபத்தில் பயந்து நின்றவள், விளக்கு அதில் அணைந்ததில் அதிர்ந்து, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும் பொழுது, அவன் உக்கிரமாக “ஏய்” என்று கத்தியதில் அவள் உடல் நடுங்கவே தொடங்கிவிட்டது.
“நான் எதுவும் பண்ணலைங்க” என்று அவள் சொன்ன வார்த்தை அவன் காதுகளில் விழவே இல்லை. அதற்குள் அவள் முடியை கொத்தாக பிடித்து விட்டான். ஒரு நொடி என்ன நடக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை. வெறித்தனமாக அவளை அடிக்க ஆரம்பித்து விட்டான். அதில் அவள் தன்னிலை மறந்து மயங்கி தொடங்கினாள். சிறிது நேரம் அவளை அடித்தவன், பின்னர் அவளை வெறித்தனமாக ஆட்கொள்ளவும் தொடங்கி விட்டான்
வழக்கமாக அவர்களது வீட்டில் மின்சாரம் தடை படாத படிக்கு தான் ஏற்பாடு செய்திருந்தது. அப்படியே போனாலும் உடனே ஜெனரேட்டர் ஆணாகி மாடியில் முழுவதும் வெளிச்சம் எப்பொழுதும் நிரந்தரமாக இருந்து கொண்டே தான் இருக்கும். இன்று ஏனோ ட்ரிப் ஆகிவிட்டதில் அவர்களது அறைக்கு மின்சாரம் தடைபட அதை கவனிக்க வீட்டில் யாரும் இல்லாமல் போய்விட்டனர். அந்த நாள் வைஷ்ணவியின் வாழ்க்கையிலும் இருட்டாகி விட்டது.
தாமதமாக வீட்டிற்கு வந்தவர்களுக்கு மாடியின் இருள் ஏதோ அசம்பாவிதமாக தோன்ற, உடனே என்ன என்று பார்த்தான் அவனது தம்பி. மாடிக்குச் செல்லும் மின்சாரம் ட்ரிப் ஆகி இருப்பதைக் கண்டு, உடனே அதை சரிப்படுத்தினான். மாடி முழுவதும் விளக்குகள் மீண்டும் ஒளிந்தது. அதில் என்ன புண்ணியம்? அவளது வாழ்க்கை தான் இருண்டு போய்விட்டதே!
அவனின் தாக்குதலில் மயங்கி கிடந்தாள் வைஷ்ணவி. அவளை தாக்கி விட்டு மயங்கி கிடந்தான் வெங்கட். இரவு மேலே விளக்கு அணைந்ததால், என்ன ஆயிருக்குமோ என்று தெரியாமல் பதட்டத்திலேயே இருந்தனர் மூவரும்.
விடிந்து வெகு நேரமாகியும், கதவு திறக்கப்படாததால் கதவை தட்ட, இருவருமே மயக்கம் தெளியாமல் இருந்ததால், கதவு திறக்கப்படவில்லை. இதற்கு மேலும் காலம் கடத்த கூடாது என்றுதான் அறைக் கதவை உடைக்க முயன்றான் அவனது தம்பி.
“அந்த நேரம்தான் என் அப்பாவும் அம்மாவும் அங்கு வந்திருக்கிறார்கள். அதன்பிறகு நடந்தது அனைத்தையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்று அவன் மார்பில் அவளது முகத்தை மறைத்துக் கொண்டே பேசி முடித்தாள் வைஷ்ணவி.
இவ்வளவும் பேசும் பொழுது, அவள் உடலில் ஏற்பட்ட ஒவ்வொரு அதிர்வையும் உணர்ந்த விஷ்ணு, அவளை மேலும் இறுக்கமாக அணைத்து அவள் உச்சியில் இதழ் பதித்தான். அவனின் அணைப்பில் அவனுக்குள் ஒடுங்கிய வைஷ்ணவியின் கண்ணீர், அவன் மார்பை நினைக்க, மென்மையாக அவளது நாடி பிடித்து அவளைப் பார்க்க செய்த விஷ்ணு, “ப்ளீஸ்மா! எல்லாத்தையும் மறந்திடு” என்று அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.
“சாரிங்க” என்று அவள் மீண்டும் ஏதோ சொல்ல வர, தன் இதழ் கொண்டு அவள் இதழ் அடைத்து, அவளை பேச விடாமல் செய்தான். அதன் பிறகு அங்கு மௌனமே ஆட்சி செய்ய, மென்மையாக அவளை தன்னவளாக ஆக்கிக் கொண்டான் விஷ்ணு. அவனது அணைப்பில் அவளும் வெண்ணையாக உருகி அவனுக்குள் புதைந்து விட்டாள்.
வைஷ்ணவி வந்ததும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று இரு தாய்மார்களும் காத்திருக்க, மேலிருந்து இருவரும் வந்தபாடு இல்லை.
நேரம் ஓடியதால் லட்சுமி தான், “நாம் இருவரும் இப்பொழுது கோயிலுக்கு போயிட்டு வந்து விடுவோம் சங்கீதா. சாயங்காலம் வேண்டுமானால் அவளை அழைத்துச் செல்லலாம்” என்றார்.?
அவரும் மாடியை பார்த்துக் கொண்டு, “அப்படிதான் போல் இருக்கு. இரண்டும் கீழே இன்னும் வரலையே!” என்று சோகமாக சொல்லிக் கொண்டு இருவரும் கோவிலுக்கு கிளம்பி விட்டார்கள். ஆண்கள் இருவரும் அலுவலகம் செல்ல, இளையவர்கள் இருவரையும் தொந்தரவு பண்ண ஆள் இல்லாமல் போனது.
தங்கள் இல்லறத்தை இனிமையாக தொடங்கிய தம்பதியர்கள், உறங்கி விழிக்கும் பொழுது மதிய நேரம் ஆகிவிட்டது. பதறி எழுந்த வைஷ்ணவியை, இழுத்து தன்மேல் போட்டுக்கொண்ட விஷ்ணு, “இப்ப எதற்கு இவ்வளவு பதட்டமாக இருக்கிற” என்றான்.
“மணியை பாருங்க, ஒரு மணி ஆயிடுச்சு. அத்தை காலையிலேயே கோயிலுக்கு போகணும்னு சொன்னாங்க. ஒருவேளை கீழே எல்லோரும் நமக்காக காத்திருக்கலாம்” என்று கூறி வேகமாக எழுந்து, மீண்டும் குளித்து சங்கீதா கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு, விஷ்ணுவிடம் “சீக்கிரம் வாங்க” என்று கூறி வெளியே செல்லப் போனாள்.
அவளை இழுத்து இறுக்கமாக அணைத்த விஷ்ணு, “ஒரு பைவ் மினிட்ஸ் இருடி. நானும் உன் கூடவே வந்துடுறேன்” என்றான். அவனுக்கும் இருவரும் தனித்தனியாக போக சங்கடமாக இருந்தது.
அவளும் “சரி” என்று காத்திருக்க, வேகமாக தயாராகினான் விஷ்ணு. இருவரும் கீழே வந்தனர். ஜோடியாக வரும் இருவரையும் தாய்மார் இருவரும் பார்த்தனர். இருவரது முகமும் பளிச்சென்று இருந்தது. அதில் தாய்மார் இருவரது மனமும் மகிழ்ந்து, ஒருவரை ஒருவர் புன்னகையாக பார்த்து கொண்டனர்.
அவர்கள் வந்ததும், இவ்வளவு நேரமா? என்று திட்ட வேண்டும் என்று நினைத்திருந்தவர், மகனின் முகத்தில் தெரிந்த மகிழ்வை கண்டு, எதுவும் சொல்லாமல் “காலையிலிருந்து சாப்பிடாமல் இருக்கீங்க! வாங்க சாப்பிடலாம்” என்று புன்னகையாக உணவு மேஜைக்கு அழைத்துச் சென்றார் சங்கீதா.
- தொடரும்..
💛💛💛💛💛
Venkat oda issue ku avan ethuvum solla mudiyathu than aana atha marachi ipadi Vaishu oda life ah ivolo problem ah create pannathu endha vagai la yum seri illayae
Nice epi
ellam theliva iruka venkat current cut aana ava mela ippadi kova pattu intha alavuku abuse pani iruka kudathu nadanthathuku avan divorce koduthutan irunthalum atha marakurathu konjam kastam tha ipo atha vishnu maraka vaikura alavuku avala pathukitta ellam marakum . and nall padiya life start panitanga