Skip to content
Home » இருளில் ஒளியானவன்-30 (முடிவுற்றது)

இருளில் ஒளியானவன்-30 (முடிவுற்றது)

இருளில் ஒளியானவன் 30

இன்று வைஷ்ணவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவிற்கு கேசவன் மற்றும் மாலாவையும் அழைத்து இருக்க, அவர்களும் வந்திருந்தார்கள்.

பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய வைஷ்ணவியுடன் சேர்ந்து விஷ்ணுவும் விழுந்து வணங்கினான்.

பெரியவர்களுக்கு அவர்களது வாழ்க்கை இனிமையாக தொடங்கியதைக் கண்டு, மகிழ்ச்சியாக அன்றைய விருந்து இனிமையாக இருந்தது.

கேசவன், மகேஷ் அனுப்பிய வாட்சை வைஷ்ணவிக்கு பரிசளித்தார்.
அன்பரசுவும் மகளுக்கு ஒரு தங்கச் சங்கிலி பரிசாக கொடுத்தார்.
சங்கீதா “நாங்கள் எல்லோரும் பரிசு கொடுத்து விட்டோம். உன் புருஷன் என்ன கொடுத்தான்?” என்று அவளை பார்த்தார்.
அவர் அப்படி கேட்டதும் விஷ்ணு, வைஷ்ணவியின் கண்கள் ஒரு நொடி சந்தித்துக் கொண்டது. விஷ்ணுவின் குறும்பான பார்வையில் வைஷ்ணவி முகம் சொங்கொழுந்தாக சிவந்தது.

“நிறைய கிப்ட் வாங்கி வைத்திருக்கிறார் அத்தை, ஆனால்” என்று முடிக்கும் முன்பு,
“ஆனால், கொடுப்பதற்கு நேரம் இல்லையோ?” என்று சங்கீதா கிண்டலாக பேச, வைஷ்ணவிக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது. என்ன செய்வது என்று தெரியாமல் தாயின் தோளில் சாய்ந்து தன் முகத்தை மறைக்க முயன்றாள்.

அவளின் செயல் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. இருவரது மகிழ்ச்சியை கண்ட பெரியவர்களுக்கு நிம்மதியாகியது. அவர்கள் இருவரது ரகசிய பார்வைப் பேச்சை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

தன் தாய் மனைவியை ஓட்டிக் கொண்டிருப்பதை கண்டு, “மாம் போதும். சும்மா தொனத்தொன என்று ஏதாவது கேட்டுகிட்டே இருக்காதீங்க” என்று அவரை செல்லமாக மிரட்டிவிட்டு, “எல்லோரும் எங்கேயாவது வெளியே போகலாமா? அல்லது சினிமாக்கு போலாமா?” என்றான் அனைவரையும் பார்த்து.

பிள்ளைகளுக்கு தனிமை கொடுக்க விரும்பிய அன்பரசு உடனே “அதெல்லாம் வேண்டாம் விஷ்ணு. நீங்கள் ரெண்டு பேரும் மட்டும் வேண்டுமானால் போயிட்டு வாங்க” என்றார்.
சங்கீதாவும் “ஆமாம், நாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். நீங்க போயிட்டு வாங்க” என்று அவர்களை மட்டும் போகும்படி கூறினார்.

உணவு உண்டு, சிறிது நேரம் அனைவருடனும் பேசிக் கொண்டு இருந்து விட்டு, சாயங்காலம் வெளியே கிளம்பினார்கள் வைஷ்ணவியும் விஷ்ணுவும்.
காரில் ஏறியதும் “எங்கே போகலாம்? சினிமாவிற்கா?” என்றான் விஷ்ணு மனைவியின் முகம் பார்த்து.

வேண்டாம் என்று மறுப்பாக தலையாட்டிய வைஷ்ணவி, “பீச்சுக்கு போயிட்டு வரலாம்” என்றாள் மென்மையாக.

அவளைப் பற்றி தெரிந்த விஷ்ணு, புன்னகையுடன் பெசன்ட் நகர் நோக்கி தன் வாகனத்தை செலுத்தினான். காரை பார்க் செய்துவிட்டு, கடற்கரைக்கு நோக்கி அவளின் கைபிடித்து நடந்தான். கடலில் அருகில் சென்று ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டனர் இருவரும்.

வைஷ்ணவி அமைதியாக கடலை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவள் வருத்தமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி அவளுக்கு கடலை பார்ப்பது பிடிக்கும்.
அதை உணர்ந்ததால்த்தான், அவள் சொன்னதும், எதுவும் சொல்லாமல் அழைத்து வந்து விட்டான் விஷ்ணு. சிறிது நேரம் அவள் அமைதியாக இருக்க, மென்மையாக அவள் கைப்பற்றி, “என்ன யோசனை?” என்றான் அவளைப் பார்த்து கொண்டே.

‘ஒன்றும் இல்லை’ என்று தலையாட்டிய மனைவியிடம், “கடலில் கால் நனைப்போமா?” என்றான் சிரித்துக் கொண்டு.

அவனின் புன்னகையை கண்டதும், அவளுக்கு முதன் முதலில் அவன் காதலை சொன்ன நாள் நினைவுக்கு, வர சிரித்துக் கொண்டு, “ஆனால்.. ஆனால் என்னை இழுத்துக் கொண்டு உள்ளே செல்லக்கூடாது, சரியா?” என்றாள் அன்றையதினம் நினைப்பில்.

அவனும் புன்னகையுடன் தலையாட்டி எழுந்து, அவள் எழுவதற்கு கையை நீட்டினான். அவளும் அவன் கைப்பற்றி எழுந்து, அவன் அருகிலேயே, பாதம் மட்டும் தண்ணீரில் படும்படி நின்று கொண்டாள். சிறிது நேரத்தில் “போலாமா?” என்று அவளிடம் கேட்டான்.

அவளும் சம்மதமாக தலையாட்டி, “அஷ்ட லட்சுமி கோயிலுக்கு போயிட்டு போவோம்” என்று கோயிலை பார்த்து நடந்தாள். அவனும் அவள் பின்னாலேயே செல்ல கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு அமர்ந்தார்கள்.

அவள் தயக்கமாக அமர்ந்திருப்பது போல் தெரிய, “என்ன வைஷு? வீட்டிற்கு போகலாமா? டயர்டா இருக்கா?” என்றான் மென்மையாக.

இல்லை என்று மறுப்பாக தலையாட்டிய வைஷ்ணவி “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களை காதலித்தேன் என்பது உணரக்கூட முடியாமல் வேறு ஒருவருடன் திருமணம் நடந்து, முறிந்தும் விட்டது.

அன்று நீங்கள் உங்கள் காதலை சொல்லும் பொழுது, எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா? அதுபோல தானே நானும் உங்களை காதலித்திருக்கிறேன். ஆனால் காதல் என்று தெரியாமலேயே இருந்தேன். அதுவே எனக்கு கஷ்டமாக இருந்தது. அப்படி என்றால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்திருக்கும் என்று நினைத்து வருத்தமாக இருந்தது.

அதனால் தான் உங்களை அப்பொழுது திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். இருந்தாலும் எனக்கு உங்களுக்கு நான் தகுதியானவளா? என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது” என்றாள்.

அவள் அப்படி சொல்லும் பொழுது அவள் கையை இறுக்கமாக பற்றிய விஷ்ணு, இல்லை என்று தலையாட்டி ஏதோ சொல்ல வர,
“இல்லை எனக்கு அப்பொழுது அப்படி தோன்றியது” என்றாள் அவனைப் பார்த்து.
உடனே அவனும் லேசாக புன்னகைக்க,
“என் வாழ்க்கை அப்படியே இருளாக இருந்து விடும், என்னை பார்த்து என் தாய் தந்தையரும் வாழ்நாள் முழுக்க கலங்குவார்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் என் வாழ்க்கையில் ஒளியேற்றி விட்டீர்கள்” என்று கூறி அவனது கையை மென்மையாக பற்றி கொண்டு, “ரொம்ப நன்றிங்க” என்றாள் கண்களில் காதலுடன்.

“அப்படியே போட்டனா!” என்று கோவமாக சொன்ன விஷ்ணு “புருஷனுக்கு தேங்க்ஸ் சொல்லுவியா நீ?” என்று முறைதான். பின்னர் “அப்படி பார்த்தால், நீயும் தான் இருண்ட என் வாழ்க்கைக்கு ஒளியாக வந்தாய்!” என்றான்.

அவள் குழப்பமாக அவனைப் பார்க்க,
“ஆமாம், நீ எனக்கு கிடைக்க மாட்டாய் என்று, என் வாழ்க்கை இருளில் மூழ்கி பொய் கிடந்தது. நீதானே இப்பொழுது ஒளியேற்றி வைத்திருக்கிறாய்!” என்று அவள் முகம் பார்த்து, அவள் கைகளை மென்மையாக பிடித்துக் கொண்டு, “இருவரின் வாழ்க்கையுமே, நம் திருமணம் நடக்காமல் போயிருந்தால், இருளாகி போயிருக்கும். இந்த திருமண பந்தத்தினால், உனக்கு நான் ஒளியானவன் ஆனேன். எனக்கு நீ ஒளியானவள் ஆனாய்” என்று அவளின் நெற்றியில் முட்டினான் விஷ்ணு.

“என்னங்க, இது கோயில்!” என்க,

“அப்போ வீட்டுக்கு போய்டலாமா?” என்று ஒற்றை கண்ணடித்து அவளை பார்க்க, அவனது செயலில் அவளுக்கு வெட்கமாக, தலை குனிந்து தன் வெட்கத்தை மறைத்துக் கொண்டாள் வைஷ்ணவி.

( விஷ்ணு – வைஷ்ணவி இல்வாழ்க்கை நலமாக வாழ, வாழ்த்தி விடைபொறுவோம். நன்றி, வணக்கம். )

  • சுபம்.

இருளில் ஒளியானவன் கதை முடிவுற்றது. நான் யார் என்று கண்டுபிடியுங்கள். எப்படி கண்டுபிடிச்சிங்கன்னு பெயர் கூறியதும் என்னிடம் தெரிவிக்கவும். ஆசையாக உள்ளது. 

 கதையை பற்றி ஓரிரு வரிகள் விமர்சனம் அளித்து என்னை மேலும் உற்சாகப்படுத்துங்கள். 

முகநூலில் ரிவ்யூ கிட்டினால் மகிழ்ச்சியடைவேன்.

நிறை குறைய சொல்லுங்க தெரிந்துக்கறேன்.

7 thoughts on “இருளில் ஒளியானவன்-30 (முடிவுற்றது)”

  1. Sweet ending….. Second mrg pandrathu thappu illa… Avanukku apdi oru noi illama erunthu erunthaaa rendu perukkumey erulana life thaa… Nice story…. Name therilainga sorry… May be jayalakshmi sis ah erukalam nu thonuthu…

  2. Kalidevi

    nice ending with wonderful love . oru unamiyana kadhal eppadi irunthalum apadiye ethukum athu tha inga irunthuchi rendu perum love sollama marachi vachalum kalam vaishu ku oru vera mari life koduthu athula irunthu veliya vara vachi ipo avanga kadhal la win pani serthutanga . congrats

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *