💟10
மாலை எப்பொழுது வரும் என்று காத்திருந்தது போல முதலிலே கிளம்பினாள் லத்திகா.
லத்திகா வீட்டை அடைந்து நுழையும் போதே சகுந்தலா எதிரில் சூடான தேனீரை கொண்டு வந்து கொடுத்து
”என்ன லத்திகா உங்க ஜெயராஜன் சார் பேசினாரா?” என்று விசாரித்தார்.
”ம்… நீங்க என்கிட்ட பேசணும் என்று சொன்னது அது தானா?”என்றாள்.
”ஆமா, எங்க காதுல வாங்கினியா, நீ பாட்டு போயிட்டே இருந்த அதான் சொல்ல முடில. என்ன முடிவு எடுத்த” என்றார்.
”அப்பா எங்க” என்று தந்தையை தேடினாள். அவரிடம் பேச வேண்டுமே .
”பக்கத்துல ஒரு கடைக்கு போய் இருக்கார் வர்ற நேரம் தான் நீ போய் முகம் அலம்பிட்டு வா” என்றதும் அவளும் முகம் அலம்பி கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவள் அங்கே பிருத்வி கண்கள் மட்டுமே தெரிந்தது. அந்த கண்களில் என்ன பார்த்தேன் என்று குழம்பி தவித்த நொடி ஜீவானந்தம் வந்து விட்டார். சகுந்தலா ஜீவானந்தம் உரையாடலில் கலயிந்தன.
”செல்லமா என்ன முடிவு எடுத்து இருக்கிங்க?” என மகளிடம் கேட்கும் தோரணையில் ஜீவானந்தம் முகத்தில் இருக்கும் புன்னகை அவளுக்கு உணர்த்தியது அப்பாவுக்கு பிருத்வியை பிடித்திருக்கிறது என்று .
”அப்பா … அ..அது”
”என்ன லத்திகா அந்த தம்பி பார்க்க நல்ல பையனா இருக்கான் . நீ தான் சிடுமூஞ்சி அப்படி இப்படி என்று சொல்ற, அப்பா ஹாஸ்பிடலில் ஒரு பையன் பிளட் கொடுத்து ஹெல்ப் பண்ணினான் என்று சொன்னார் இல்லை அது கூட அந்த தம்பி தான்” என இடையில் உணர்த்த,
”அம்மா நான் பிருத்வி கெட்டவன் என்று சொல்லவில்லையே.. கொஞ்சம் அவசர புத்திக்காரன் அவ்வளவு தான்” என்றாள்.
”அந்த தம்பி பேர் பிருத்வியா லத்திகா?” என சகுந்தலா வெகுளியாக கேட்க, உங்களுக்கு அதுவே தெரியாதா? என்றாள் மனதில்.
”அப்பா உங்க ரென்டு பேருக்கும் இந்த வரனை பிடிச்சிருக்கு போல”
”செல்லம்மா எங்களுக்கு பிடிக்குதுன்னு நீ பதில் சொல்லிடாதே. உனக்கு என்ன தோணுதோ அதை முடிவு பண்ணு. எங்களோடு வாழும் வாழ்கை இருபது வருஷம் மட்டும் தான். அதுக்கு பிறகு நாற்பது வருஷம் உன் துணை கூட அதனால் நீ தெளிவா யோசிச்சு பதில் சொல்லு. ஆனா காலையில் வரை தான் நேரம் உனக்கு” என்று முடித்து விட்டு,
”சகு சாப்பாடு எடுத்து வை” என்றதும் கிச்சனில் நுழைந்து எடுத்து வைக்க செய்தார் முனங்களோடு
‘இந்த மனுசனுக்கு என்னவாம் எங்களுக்கு பிடிசசிருக்கு நல்ல சம்பந்தம் கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்வதுக்கு என்ன. அவள் எடுக்கற முடிவு தான் பொண்ணு பார்க்க வந்தப்பவே பார்த்தேனே’ என உணவை பரிமாற,
”சகு உன் முனங்கல் காதுல விழுது, நம்ம காலம் மாதிரி இப்ப இல்லை. பெண் பிள்ளைகளுக்கு கட்டி கொடுக்கறதுக்கு முன்ன ஒரு தடவைக்கு பல தடவை தெளிவா கேட்டுக்கணும். அவங்களுக்கும் மனசு இருக்கு. வர போற துணையை பற்றி ஆசை எதிர்பார்ப்பு இருக்கு. நமக்கு பிடிச்சிருக்கு ஜாதகம் பொருந்தி இருக்கு என்று சட்டுனு கட்டிக் கொடுக்க கூடாது. அவ மனசுல என்ன இருக்குனு கேட்கணும். பல பேர் இப்படி கேட்காததுனால தான் சமுதாயம் பல இடர்களை கோர்ட்டில் சந்திக்குது. வாழ்கின்ற ஒரு வாழ்கை பிடிச்ச துணையோடு வாழுறது தான் நல்லது. லத்திகா எப்பவும் தெளிவா முடிவு எடுப்பா எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த கேரட் பொரியல் வை” என சுவைக்க, லத்திகா உண்பதே கண்ணும் கருத்துமாய் செய்து முடித்து அறைக்குள் உறங்க வந்தாள்.
‘அப்பா அம்மாக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அந்த சிடுமூஞ்சியை. ஏய் பிருத்வி ஒன்னும் சிடுமூஞ்சி இல்லை வந்த அன்னைக்கு திட்டிட்டான் அவ்ளோதான் என முதலில் பல்டி அடித்தது மனசாட்சி. பின்னர் அவனை பிடிக்காதவர் இருக்க முடியுமா? என்ன தான் படிச்சி ஒரு பொசிஷன்ல இருந்தாலும் தனக்கு என்று ஒரு எயிம்வோட இருக்கான். மற்றவர்களை மாதிரி இல்லை. நான் என்ன திட்டினாலும் என்னை வேலை விட்டு தூக்கி பணக்கார திமிராய் நடந்துக்கலை, முகம் தெரியாத ஒரு உயிருக்கு பிளட் டோனட் பண்ணி இருக்கான் அது எவ்வளவு பெரிய விஷயம், என்னை மாதிரியே அப்பா அம்மா என்றால் உயிர் அவனுக்கு, அதுக்கும் மேல அவன் பார்த்த பார்வை…. அது என்னவித பார்வை அத தான் யோசிக்க முடியல… ‘ ம் அப்ப ஓகே சொல்லிடலாமா என்றது மனசாட்சி அதுக்கு பதில் கொடுக்காது உதட்டில் மென்னகை மட்டும் வந்தது.
அங்கோ பிருத்வியோ ‘ப்ச் , நாளைக்கு என்ன ரிசல்ட் வருமோ, டேய் பிருத்வி உன் நிலைமையை பாரு டா உன்னை போய் ரிஜெக்ட் பண்ணிடுவாளோ என்று புலம்ப வச்சிட்டா ராட்சஸி.
இருவருக்கும் நெடு நேரம் மனதோடு பேசி போராடியே உறங்க செய்தார்கள்.
அதிகாலை எழுந்தவன் அலுவலகம் செல்ல வேண்டாம் என்ற முடிவு எடுத்து ஹாலில் அமர,
”பிருத்வி என்ன ஆபிஸ் போகலையா?” என்று பவானி வந்து கரிசணத்தோடு கேட்க,
”ம்மா, அங்க எப்படியும் அவ என்னை வந்து பிடிக்கலை என்று முகத்துக்கு நேரா வந்து சொல்வா, அவமானம் தான் மிஞ்சும். அதுக்கு இங்கயே இருக்கேன் இனிமேலும் ஆபிஸ் போகணுமா வேண்டாமா என்று யோசிக்கணும்” என சொல்லி முடிக்க,
”ஏன் டா அவ பதில் தெரியாம இப்படி ரியாக்ட் கொடுக்கற?”
”ம்மா உங்களுக்கு தெரியாது எனக்கும் அவளுக்கும் இதுவரை சண்டை வராத நிமிடமே இல்லை தெரியுமா”
அங்கே லத்திகாவோ அலுவலகம் கிளம்பி தயாரானாள். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில்,
”செல்லம்மா என்ன முடிவு எடுத்து இருக்க டா. ஜெயராஜன் வெயிட் பண்ணிட்டு இருப்பார் அவங்களை ரொம்ப நேரம் காக்க வைக்க கூடாது… பெரிய மனிதர்கள்” என்று குறிப்பிட்டு காட்டினார்.
”ப்பா என் கண்டிசன் ஓகேனா எனக்கு இதுல ஓகேப்பா ஏற்கனவே சொன்னேன்ல… அப்பறம் என்னப்பா” என கை அலம்பி வெளியேறிட,
”என்ன தான் சொல்ல வர்றா?”என்றார் சகுந்தலா
”சம்மதம் என்று சொல்றா எட்டாம் கிளாஸ் எட்டாம் கிளாஸ், இதுக்கு தான் படிச்சா பொண்ணா பார்த்து கட்டி இருக்கணும்”
”இப்ப கூட பண்ணிக்கோங்க யார் வேண்டாம் என்று சொன்னது” என சொல்லி முடிக்க ,
”என்ன பண்றது உன்ன அளவுக்கு அதிகமா விரும்பி தொலைச்சுட்டேனே சகு”
”உங்க வசனத்தை அப்பறம் பேசுங்க, அங்க அந்த தம்பி வீட்ல பேசி லத்திகா ஓகே சொன்னதை சொல்லிடுங்க”
”ஆமா ஆமா” என்று போனை சுழற்றியவர் ஜெயராஜனிடம் பேச துவங்கினர்.
”ஹலோ சம்மந்தி …”
” ஆஹா கேட்கவே சந்தோஷமா இருக்கு ஜீவா லத்திகா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா போல” என்றார்.
”ஆமா சம்மந்தி”
”ஜீவா இந்த சம்மந்தி ஓல்ட் பேஷன் நீங்க ஜெயன் இல்லனா ராஜன்னு கூப்பிடுங்க”
”சரிங்க ராஜன்” என்று கூறி தோழமை பகிர்ந்து பேசி வைத்தனர்.
போனை வைத்து விட்டு ஹாலில் பேசிக் கொண்டு இருந்த பவானி பிருத்வியை கண்டு பாவனியிடம்,
”பவானி இப்ப நம்ம வீட்டுக்கு கல்யாண களை வந்துடுச்சு”
”என்னங்க நிஜமா ”
”ம்…பிருத்வி தைரியமா ஆபிஸ் கிளம்பு” ஹாஹா என சிரிக்க,
”என்னது காளிஅவதாரம் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாளா? இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ?” என்று வாய்விட்டு புலம்பினான்.
”டேய் …”
”இல்லப்பா அவளா சொல்லி இருக்காளா என்று டவுட்?”
”ஜீவா அதான் டா உன் மாமனார் அவர் மகளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கற ரகம் இல்லை. சோ டவுட்டே வேண்டாம். நான் எப்படி உன் அம்மாகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறேனோ நீயும் இனி முழிக்க தான் ஓகே சொல்லிருப்பா” என மேலும் சிரிக்க ,
”ஆமா அவனே குழப்பத்துல இருக்கான் நீங்க வேற.. நீ ஆபிஸ் கிளம்பு டா செல்லம்”
”ஓகே மா பை” என கூறி அழுத்தமாக பவானி கன்னத்தில் முத்தம் பதித்து சென்றான்.
”நானும் தான் இருக்கேன் எனக்கு ஒரு பை சொன்னானா? எல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்” ஜெயராஜன் கூற சிரித்த படி மாத்திரையை விழுங்கினார் பவானி.
🎊🎊🎊🎊