Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-14

உன்னில் தொலைந்தேன்-14

     💟14
           ரவி லெட்டரால் நேரம் போக போக பிருத்வி தான் தவித்தான்.

                    ஜானகி எனும் ஜானு அருகே வந்து, ”என்ன லத்திகா நீ புவனா அக்கா வளைகாப்புக்கு வரலையா” என்று கேட்டதும் புறப்பட நேரத்தை கவனித்தாள் .
      ”ஒரே ஒரு டிரஸ் மாடல் தான் கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும். நீ கிளம்பு நான் ஸ்கூட்டில வந்துடறேன்”


       ”சரி சரி சீக்கரம் வா புவனா அக்கா உன்னை விசாரிப்பாங்க ” என சொல்லி சென்றிட , பிருத்வி மனத்திலோ வேறு எண்ணம் உதித்தது.
           காரை எடுத்து விட்டு கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போல் லத்திகா பதினைந்து நிமிடம் கழித்து வந்தாள். ஸ்கூட்டி எடுக்க போகும் போது, பிருத்வி குரல் தடுத்தது.


     ”கார்ல ஏறு” என்ற குரலில் சுற்றி முற்றி பார்த்து முழித்தவளை ,
    ”உன்னை தான் சொன்னேன். காரில் ஏறு புவனா பங்ஷன் தானே நானும் அங்க தான் போறேன் . தனியா வர ஒரு மாதிரி இருக்கு” என்றான். பாதி உண்மையும் கூட. 


      ”என் ஸ்கூட்டி …”
      ”அது என்ன பெரிய ஆடி காரா , சாதாரண tvs pep தானே நாளைக்கு எடுத்துக்கோ ” என்றான். இதே முன்பு கூறியிருந்தால் ‘ஆமா டா இது எனக்கு ஆடி காரு தான்’ என்று காட்டமாக பதில் உரைத்து இருப்பாள். தற்போது அமைதியாக வந்தாள்.


                               கூகுளில் வழியை பின்பற்றி போனான். சட்டென்று தோன்ற, ”கிப்ட் வாங்கணுமா ? என்ன வாங்கலாம் ” என்று நிறுத்தினான். 
      ”கிப்ட் ஆ அதெல்லாம் இப்ப தேவையில்லை. பேபி பிறந்தா பிறகு வாங்கிக்கலாம்” என்றாள்.
     ”யாருக்கு பேபி பிறந்த பிறகு” என்றான் உதட்டில் குறும்போடு, லத்திகா முறைக்க , சிரிப்பை கட்டுப்படுத்தினான். ‘ டேய் ப்ரஜன் உனக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா? ‘ என மனதினுள் வியப்புடன் கேட்டு கொண்டாள். மேலும் இவனோடு போய் இறங்கினால் மற்றவர்கள் பார்வை தன் மேல் பதியுமே என்ற யோசனை உதித்தது.  

    ”லத்திகா லத்திகா … ”

      ”ம் … ”
     ”என்ன காரில் இறங்குற டைம்ல எப்பவும் என்ன யோசிப்ப?”
    ”அ… அது ”
     ”கீழே இறங்கு” ஓ காட் என புலம்பி கீழ் இறங்க புவனா கணவன் சந்தீப் லத்திகாவை பார்த்து விட்டு நெருங்கினார். 


      ”என்ன லத்திகா நீயே லேட்டா?” என்று தெரிந்த பெண் என்று வரவேற்பு பலமாய் இருந்தது.
      ”சாரி அண்ணா கொஞ்சம் ஒர்க் முடிச்சுட்டு வர நினைச்சேன்” 
     ”இவர் …. ” என இழுக்க , லத்திகா வாய் திறப்பதற்குள்
     ”ஹாய் ஐ அம் பிருத்வி பிருத்விராஜன். லத்திகா உட்பி” என கை கொடுத்தான்.
      ”லத்திகா ரியலி , புவனா சொல்லவே இல்லை. உள்ளே வாங்க” என அழைத்து செல்ல அலுவலகத்தின் பணி செய்யும் ரவி ஜானகி மற்றும் சிலர் அங்கே அமர்ந்து இருக்க, லத்திகாவை ஒட்டியே பிருத்வி நடந்தான்.


      ”இங்கே உட்கார்” என உத்தரவிட அவளும் அப்படியே அமர்ந்தாள். அவளுக்கு அந்த நேரம் மறுக்கவும் தோன்றவில்லை…
                                       மனையில் அமர்ந்துயிருந்த புவனா கூட லத்திகா-பிருத்வி ஜோடியாக அமர்ந்து இருப்பதை கண்டு விழி பிதுங்கி இருந்தாள்.
      ”லத்திகா நீயும் போய் வளையல் போடு ” என சந்தீப் கூப்பிட ,
     ”அண்ணா கல்யாணம் ஆனவங்க தானே போடணும்” என்று மறுத்தாள். 
     ”அதான் உட்பி கூட இருக்கியே போய் போட்டுட்டு போட்டோ எடுத்துக்கலாம் வா” என அழைக்க , அவளோ பிருத்வியை பார்த்தாள்.


      ”சரி வா ” என்றான். அலுவலகத்து ஆட்கள் எல்லோரும் ஒன்று கூடி போட்டோ எடுத்தனர். புவனா அருகே வந்ததும்,
       ”வாங்க சார். நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்” என்றாள். அப்பொழுது சந்தீப் புவனாவை பார்த்து,
      ”புவனா சார் என்று சொல்ற, என்கிட்ட லத்திகா அவரோட உட்பி என்று சொன்னார்” என்றதும் புவனா புரியாமல் குழம்பினாள்.
       ”ரெண்டும் உண்மை தான் சந்தீப் . விரைவில் லத்திகாவை கல்யாணம் பண்ண போறேன். வீட்ல நாள் பார்த்துகிட்டு இருக்காங்க” என புன்னகைக்க,
ரவி ஜானு மற்றவர் முழிக்க புவனாவும் விழித்தாள். லத்திகாவை பார்த்து ”அப்படியா?” என்ற பார்வை வீச லத்திகாவும் ”ஹ்ம்” என்ற மவுனத்தை தந்தாள்.


       ”சார் சாப்பிட்டு தான் போகணும்” ”சூர் புவனா.” என்று சொன்னவன் லத்திகாவை அழைத்து கீழே இறங்க ஆபிஸ் வட்டம் எல்லோரும் கங்கிராஸ் லத்திகா கங்கிராஸ் சார் என்று வாழ்த்து சொன்னார்கள் .
        ரவியும் சேர்ந்தே வாழ்த்து தெரிவித்தான் வேறு என்ன பண்ண முடியும் அவனால். அப்பொழுது தான் பிருத்வி நிம்மதி அடைந்தான்.
                                      வாழ்த்து தெரிவித்த கும்பலில் சிலர் கிசுகிசுக்க செய்தனர். லத்திகாவிற்கு தான் ஒரு மாதிரி இருந்தன. பிருத்வி கண்டு கொண்டதாக படவில்லை. சாப்பிட்டு புவனாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.


      ”கை நிறைய வளையல் முகத்துல தாய்மை பொங்க  பெண்கள் நிக்கறது செம அழகுல” என்றான் பிருத்வி..
      ”ம்ம் …” என்றாள் லத்திகா. 
      ”எனக்கு இது தான் நான் கலந்துக்கற வெளி பங்க்ஷன். அதுவும் தனியா உன்கூட …” என்றான்.
      ”ம் ” என திரும்பியவள் அவனின் பேச்சில் சாதாரணமாக இருக்க, மீண்டும் சாலையை கவனித்தாள்.
       ”உனக்கு ப்ரெண்ட்ஸ் கொஞ்சம் தானா?” என்று இவன் தான் பேசினான்.
      ”இல்லை நிறைய ஆன இது ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் ஸ்கூல் காலேஜ்னு இருக்காளுங்க அது தவிர வீட்டுக்கு பக்கத்துல நிறைய குட்டி குட்டி ப்ரெண்ட்ஸ் கிரிஷ், ரோஷன், பரத் சௌமியா அக்ஷயா வினித்னு உங்களுக்கு?.” என்று அவளும் தயக்கம் உடைத்து பேசினாள். 
      ”எனக்கு ஓரளவு தான் . மும்பாய்ல தான் ப்ரெண்ட்ஸ் . ஆனா சொல்லி கொல்ற மாதிரி யாருமில்லை” என்றான்.
      ” வீடு வந்துடுச்சு”
      ” ம் தேங்க்ஸ் ” என இறங்கி வேகமாக உள்ளே சென்றாள். 

”அம்மா அம்மா … ” கத்தி கொண்டே வந்தவளிடம் ,
      ”என்ன இன்னிக்கு ஸ்கூட்டி சத்தமே கேட்கலை ”
     ”நான் அவர் கூட வந்தேன் ” என்றாள். 
     ”யார் கூட மாப்பிள்ளை கூடவா ?”
     ”எங்க…’ என கேட்க ,
     ”இங்க தானே ” என ரோட்டை இடம் வலம் பார்க்க, அது வெறிச்சோடி இருந்தன.
      ”இப்ப தான் ம்மா உங்களை கூப்பிடலாம் என்று வந்தேன் அதுக்குள்ள கிளாம்பிட்டார் போல ”
      ”லத்திகா ஏதாவது சண்டை போட்டியா”
     ”அய்யோ ம்மா அப்படி எல்லாம் இல்லை” என்ற போதே,
     ”பின்ன ஏன் நீ கூப்பிடட்டும் உள்ள வரலை” அதன் பின்னரே தான் அவனை உள்ளே வர அழைக்கவில்லை என்பது நினைவு வர,


     ”ம்மா நான் கூப்பிட மறந்துட்டேன்”
     ”என்ன லத்திகா இவ்ளோ லேசா சொல்லிட்ட” என ஜீவானந்தம் கேள்வி கேட்க,
     ”சாரி ப்பா”
    ”சாரி எங்ககிட்ட கேட்காதே மாப்பிள்ளைகிட்ட கேளு .” என்றதும் திருதிரு என விழித்தாள்.
      ”என்ன அப்படியே நிக்கற?”
      ”அது உங்க போன் தாங்கப்பா”
      ”ஏன் உன் போன்க்கு என்ன ஆச்சு ”
      ”அது அது சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு ப்பா ” என்றாள்.
     ”இந்தா இதுல மாப்பிள்ளை என்று ஸ்டோர் பண்ணி இருக்கேன்” என போனை தர வேகமாக வந்தவள் கதவை மூடி முதல் வேலையாக அவனது நம்பரை அவளின் செல்லில் பதிவு செய்தாள். பின்னர் அதில் இருந்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள் .


    ரிங் போனதும் எடுத்து ”சொல்லு லத்திகா” என்றான். என் நம்பர் கூட அவனுக்கு தெரிந்து இருக்கு எனக்கு தான் அவன் நம்பர் கூட தெரிலை சே லத்திகா நீ பேட் ‘ என மனச்சாட்சி அவளை பழித்தது.   

   ”ஹலோ ஹலோ லத்திகா ”
     ”ஆஹ் சாரி , உங்களை வீட்டுக்குள்ள கூப்பிடமா வந்துட்டேன். அம்மா கூப்பிட்டு உங்களை அழைக்க நினைச்சேன் நீங்க அதுக்குள்ள கிளம்பிடீங்க” என்று மன்னிப்பு வேண்டினாள்.
      ” ஓஹ் இட்ஸ் ஓகே . டைம் வேற ஆகிடுச்சு . வாணி எனக்காக சாப்பிடாம இருப்பா”
       ” யாரது வாணி ?” என்றதும் பிருத்வி மெல்ல புன்னகை புரிந்து , ”வேற யாரு என் டார்லிங் உன் அத்தை தான்” என்றான்.
      ” ஓஹ் ” இவன் டார்லிங் என்று யாரை சொல்கின்றான் . என்னையா ? இல்லை அத்தையா ? என குழம்ப,
      ”என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான்


      ” டிரஸ் மாற்றிக்கிட்டு இருக்கேன்” என சொல்லிய பிறகே நாக்கை கடிக்க,
அங்கு அவனோ சப்தமின்றி சிரித்தான்.
      ”சரி நான் வீட்டுக்கு போனதும் மெசேஜ் பண்றேன் லத்திகா ” என தூண்டித்தான்.
                            ஹலோ ஹலோ என கேட்டது அவனுக்கு கேட்காது கட் செய்தான். என்ன இவன் இவனா உட்பி என்று அறிமுகம் படுத்திட்டான் என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலை . இப்ப என்னடா என்றால் அவனா கட் செய்துட்டான். எல்லாம் அவன் முடிவு தானா ? என்று வாதிட மனசாட்சியோ ஏய் லத்திகா காரில் ஏறு என்றதும் பேசாம ஏறிட்டு சந்தீப் அண்ணாகிட்ட உட்பி என்று சொல்லும் போதும் அமைதியா இருந்துவிட்டு இப்ப வீட்ல வந்து குதிக்கற, எங்க ப்ரஜன் முன்னாடி இதெல்லாம் கேளு பார்க்கலாம் என்றது . இப்ப எல்லாம் நீ அவனுக்கு நோஸ் கட் பண்ற மாதிரி நிகழ்வு நடந்தாலும் அமைதியா இருக்க இது சரியில்லை… என்றது மனசாட்சி.


             கதவு தட்டும் சப்தம் கேட்க , ”என்ன டி மாப்பிள்ளை கிட்ட சாரி கேட்டியா”
       ” அதெல்லாம் கேட்டுட்டேன் சகு ”
       ” எவ்ளோ ஈஸியா பேசற. தப்பா எடுத்துக்கிட்டா என்ன பண்றது”
       ” அப்ப்பா போதும் அட்வைஸ் நிறுத்து. தூக்கம் வருது” என உறங்க சென்றாள்.
                                       ஆனால் உறங்குவதற்கு பதிலாக அவனது வாட்சப் போட்டோ பார்த்தபடி இருந்தாள்.


      ”ரீசுடு ஹோம்” என மெசேஜ் அனுப்பினான் உடனே லத்திகா  
      ”ஓகே ” என அனுப்பி விட்டு அதன் பிறகு இருவருமே ஏதும் அனுப்பாமல் போனின் போட்டோ பார்த்தபடியே உறங்கினர்.

தொடரும்.

3 thoughts on “உன்னில் தொலைந்தேன்-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *