அத்தியாயம்….6
லட்சுமி பிஸியோதெரப்பிஸடை வரவழைத்து ராஜேந்தருக்கு சிகிச்சை ஆரம்பித்தாள்.
அவருக்கு மூணு வேளையும் தன் வீட்டில் சமைத்து உணவு கொண்டு போய் கொடுத்தாள்.
அவரை பார்த்துக் கொள்ள ஒரு ஆண் நர்ஸ் அமர்த்தப்பட, அந்த நபர் காலை ஏழு மணிக்கு
வந்து இரவு எட்டு மணிக்குச் சென்றான். ராஜேந்தரின் மூத்த மகன் குமார் அவளிடம்
பேசினான்.
“ஆன்ட்டி……அந்த நர்ஸ் அப்பாவை சரியா பார்த்துக்கிறாரான்னு செக் பண்ண முடியுமா?
பிளீஸ். உங்களுக்கும் ஒரு பேமெண்ட் கொடுத்திடறேன்.” என்றான். அதெல்லாம் வேண்டாம்
என்று சொல்லிவிட்டாள் லட்சுமி. எல்லாவற்றையும் பணம் தீர்மானிக்கும் என்று நினைக்கிற
காலம் இது.
இரவு நேரம் அந்த நர்ஸ் குமார் இருக்க மாட்டான்.. ஆகையால் லட்சுமி இரவு உணவை
அளித்துவிட்டு, அங்கேயே அவன் காலை வரும்வரை தங்கினாள். இரவு அவர் டாய்லெட்
உபயோகிக்க உதவி தேவைபட்டது.
“லட்சுமி……வேண்டாம். நான் மேனேஜ்….”
“பேசாதீங்க. பல்லைக் காட்டி பேசுவது மட்டும் தானா நட்பு.? இந்த மாதிரி சமயங்களில்
உதவுவது தான் நட்பு.”
அவர் கண்ணில் நீர் வந்தது. கழிவறை அருகே வீல்சேரை உருட்டி வந்துவிடுவாள். உள்ளே
செல்ல கை தூக்கி விடுவாள். பிறகு அதே போல் உருட்டி வந்து படுக்க வைத்து விடுவாள்.
“பயந்துக்கிட்டோ, வெட்டக்கப்பட்டோ யூரின் அடக்க வேண்டாம்.”
“சங்கடமா இருக்கு லட்சுமி. ஏதாவது பேசுவார்கள். நீ இரவு வரவேண்டாம்.”
லட்சுமி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஒரு மாதத்தில் அவரால் நடக்க
முடிந்தது. நர்ஸ் அசோக் வருவதும் நின்றது.
இருவரும் அதிக நெருக்கமாகி விட்டார்கள். சேர்ந்தே கடைக்குப் போனார்கள். சினிமாவுக்கு
போனார்கள். லைப்ரரி போனார்கள்.
“இப்ப தான் நான் நானா இருக்கேன். மகன்கள் கூட இருப்பது ஏதோ அந்நியன் வீட்டில்
இருப்பது போல இருந்துச்சு லட்சுமி. பல் தேக்காமல் சாப்பிடுவார்கள். குளிக்காமல் ரெண்டு
நாள் கூட இருப்பார்கள். விளக்கை ஏத்துவது கூட விசேஷ நாட்களில் தான்.”
“சார்……நம்ம தலைமுறை வழக்கங்களை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
அருணா….மாமியார் சொல்வதால், கோலம் போடுவது, காலை மாலை விளக்கு ஏற்றுவது
என்று கடைபிடிக்கிறாள். அமெரிக்காவில் எந்த மாமியார் இருக்கா.? அதான் டிமிக்கி
கொடுக்கும் மருமகள் ராஜ்யம்.”
“நான் காலை அஞ்சு மணிக்கு எழுந்து சுப்ரபாதம் போடுவேன். அப்பா நிறுத்துங்க. பக்கத்து
வீட்டு ஆட்கள் நாயிஸ் நியூசென்ஸ் என்று புகார் பண்ணிவிடுவார்கள்…என்று தடை
போட்டுவிட்டான். அவர்கள் வேலைக்கு போனதும் இன்டர்நெட்டை ஆப்
பண்ணிவிடுவார்கள். எங்கே போக வேண்டுமென்றாலும் அவர்களைத் தான்
எதிர்பார்க்கும்படி இருக்கும்.”
“சார்….இதுக்கெல்லாம் பழகிடுவோம். எப்ப தெரியுமா? ரத்தம் சுண்டின பிறகு. என்னைக்கு
இருந்தாலும் முதுமை என்பது சார்ந்து இருக்க வேண்டிய நிலமையா தான் இருக்கும். இப்ப
நான் இன்டிபென்டெட்டா இருக்கேன். என்பது வயதானால் உதவி தேவைப்படலாம். அப்ப
மகளுடன் போய் தான் இருக்கணும். பார்க்கலாம் அதுவரை உங்களுக்கு நான் எனக்கு நீங்கள்.
எதிர்காலம் பத்தி யோசித்து குழம்பாம, ரைட் நௌ நம்ம நட்பை நம்பி வாழுவோம். சரி தானே
சார்.?” என்றாள் லட்சுமி.
அவர்கள் பேசு பொருளாக இருந்தார்கள்.
“பேசாம கல்யாணம் பன்னிக்க வேண்டியது தானே.? எதுக்கு இந்த அரைகுறை வாழ்க்கை.”
என்று கேள்விக் கணைகள் தொடுத்தனர்.
“அப்பா…. உங்களுக்கு ஆண்டியைப் பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கங்க. நாங்க தடை சொல்ல
மாட்டோம்.” என்றனர் மகன்கள்.
“லட்சுமி இது சமுதாயம் நமக்கு கொடுக்கும் அழுத்தம். கல்யாணம் தான் தீர்வா? இப்படியே
இருந்தா என்ன.? குற்றமா.?”
மொட்டை மாடியில் இருந்தார்கள். நிலவொளியை ரசிக்கும் மனசு, கல்யாணம் கட்டிக்கோ
என்ற வற்புறுத்தலை ரசிக்க முடியவில்லை.
“உடல் தேவைகள் எல்லாம் மறந்து போச்சு சார். இப்போ தேவை அன்பா அக்கரையா ஒரு
ஆத்மார்த்தமான துணை. அதுக்கு தாலி எல்லாம் எதுக்குன்னு தோணுது. அப்ப தான் பிரீயா
பழக முடியும். பிள்ளைகள் ஊன்றுகோலா தான் இருக்க முடியும். கைத்தடி மாதிரி.
உணர்வுபூர்வமான சங்கமம் சாத்தியமில்லை. அவர்களுக்கு நிறைய சவால்கள் இருக்கு.
குழந்தைகளை ஆளாக்கும் பொறுப்பு இந்த தலைமுறைக்கு ஒரு சவால். உங்க கூட
பேசிக்கிட்டு இருக்க எனக்கு பிடிச்சிருக்கு. இது போதுமே.”
அவரும் ஆமோதித்தார். அருகருகே வீடுகள். அருகருகே மனங்கள். சேர்ந்த சந்தோஷங்கள்.,
சேர்ந்த கவலைகள்., சேர்ந்த உதவிகள்…..இதை விட வேறு என்ன வேண்டும்.?
சினேகாவும் இவர்களை கல்யாணம் பண்ணிக் கொள்ள சொன்னாள்.
“இந்த சமுதாயத்துக்காக ஒரு போலி கணவன் மனைவி வாழ்க்கை வாழ முடியாது சினேகா.
எங்களை இப்படியே ஏத்துக்கோங்க. அவர் மகன்களை என் மகன்களாகவும். என் மகளை
அவர் மகளாகவும் நினைக்கிறோம். உதவுவோம். ஆனாலும் நாங்கள் வேறு வேறு தான். கிரீன்
காரட் கிடைத்தால், நான் அவரோடு போய் இருக்க முடியாது. எனக்கு ரொம்ப ரொம்ப
முடியாமல் போய்விட்டால் நான் உன்னோடு தான் வந்து இருப்பேன். அவர் கூட போய்
இருக்க முடியாது. அல்லது ஒரு ஹோமில் இருப்பேன். அவர் அமெரிக்கா போய்விடுவார்.
அப்புறம் என்ன கணவன் மனைவி? வீ ஆர் ஜஸ்ட் லிவிங் டுகெதர்.” என்றுவிட்டாள். அக்கம்
பக்கத்தாருக்கும் இதே பதில் தான். கிண்டல் பண்ணியவர்கள் கிண்டல் அடித்தார்கள்.
வாஸ்தவம் தான் என்று சொன்னவர்கள் அநேகம்.
ராகினி அவளைப் பார்க்க வந்தாள். அவள் லட்சுமி சொல்வதே சரி என்று சொன்னாள்.
மாசமாக இருந்தாள்.
“பிரசவம் நான் பார்ப்பேன் ராகினி. ஓ. கே வா.?”
“சார் அனுமதி கொடுத்தால்….”
“கண்டிப்பா. என்னை கேட்க வேண்டியதே இல்லை.” என்றார் ராஜேந்தர்.
“மனமொத்த நட்பு. ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். இது அந்தி நேர உதயம் இல்லயா?
பிள்ளைகளை துறந்து நாம் வாழப் போவதில்லை. அந்த லிங்க் இருந்திட்டே தான் இருக்கும்.
மேல்நாட்டு பாணியில் முதியவர்கள் தனித்தே தான் வாழணும். அதனால் ஜோடி சேரும் போது
பிரச்சனை இல்லை. ஆனால் இங்கு அப்படியில்லை. பிள்ளைகள் தொடர்பு காலம் முழுக்க
இருக்கும். உங்க நட்புடன் கூடிய சேர்ந்து வாழ்தலை நான் வரேவேற்கிறேன்.” என்றாள்
ராகினி. நல்ல விருந்து சாப்பித்துவிட்டு தான் சென்றாள்.
“வளைகாப்பு நடத்துவோம். அருணாவும் வருவாள். உடம்பை பார்த்துக்கோ.” என்று விடை
கொடுத்தனர்.
இந்த சமுதாயம் இதை மெள்ள மெள்ள ஏற்றுக் கொண்டது.
“நான் என்றும் சிவகுமாரின் மணவி தான். அவர் என்றும் மங்கையின் கணவர் தான். தனிமை
என்னும் வலியோடு நாங்க ஏன் வாழணும்.? சேர்ந்து வாழும் இளைய தலைமுறைக்கு சிக்கல்
இருக்கு. ஆனால் சேர்ந்து வாழும் மூத்த தலைமுறைக்கு எந்த சிக்கலும் இல்லே. பெற்றறோரா
எங்க கடமை முடிந்துவிட்டது. முளச்ச செடிக்கு தண்ணி ஊத்தியாச்சு. அது இப்ப மரமா
இருக்கு. மர நிழலுக்கு வருவோம் போவோம். ஆனா எங்கள் பாதை வேறு வேறு.”
எல்லோருக்கும் இந்த பதிலைத் தான் சொன்னாள் லட்சுமி.
அவர்கள் சேர்ந்தே டூர் போனார்கள். அவருக்கு குளிர் என்றால் போர்த்தி விடுபவள் லட்சுமி.
இவள் இருமினால் மருந்துடன் நிற்பவர் ராஜேந்தர்.
‘அப்பாவை பத்தி கவலையில்லை.”— ராஜேந்தரின் மகன்கள்.
“அம்மாவின் தனிமை. டிப்ரஷன் இப்ப இல்லை” .. சினேகா.
அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது. லட்சுமி பார்த்துக் கொண்டாள். மகன்கள் வர
முடியவில்லை. அவளுக்கு மஞ்சள் காமாலை வந்தது. அவர் கவனித்துக் கொண்டார். சினேகா
வர முடியவில்லை. போனில் விசாரித்துக் கொண்டார்கள்.
“கிரீன் கார்ட் கிடைக்க பத்து வருஷம் ஆகலாம். அதுவரை நாம் சேர்ந்தே வாழ்க்கையில்
பயணிப்போம். ரயில் சிநேகம் மாதிரி. யார் முதலில் இறக்கிப் போவார்கள் என்று தெரியாத
பயணம். பிரிவில் வருத்தம் இருக்கும். உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு
பொருள் இருக்கும்….அதுவரை தொடரட்டும் இந்த பிரிந்தாவனம்.” லட்சுமி.
முற்றும்.
சங்கரி அப்பன்
குறுநாவல் குவிகம் போட்டிக்கு எழுதியது. முதல் பரிசும் வென்றது. வசகர்களான உங்கள் மனதை கவர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன். உங்கள் கருத்தை கருத்து பகுதியிலும், முகநூல் விமர்சனம் மூலமாகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றி!
Really a wonderful story. In old age days we need companion for everything but not for sex. Truly deserves this story for prize. Keep rocking sis.
Vayothigathil thaan thunai migavum thevai…. Crt ahhh solli erukinga…. Just sex mattumey yeppavum nama vaalura kalathuku thevai padathu… Anbana naalu varthai.. Kastathula unnaku thunaia erukken…. Apdi solra uravu kooda eruntha yaru yenna sokrathaium nama kandukka vendiathu illa… Solravangalum pesuravangalum yarum namma kooda vara porathu kedaithu… Kandukkama poittey erukanum… Semmaia elamai kala vaalakaia sollitanga…
நானும் கணவரை இழந்தவள்தான். இந்த தொடரை படிக்கும் தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் இருக்க கற்றுக்கொள்கிறேன்.
வரும் காலங்களில் இது போல் சவாலான நிகழ்வுகளை சந்திக்க நேரும்
மிக்க நன்றி.