Skip to content
Home » என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-5

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-5

ராகம் 5

மனோ, ஷாலினி வீட்டிற்கு வந்த நேரம், எப்பொழுதும் போல் சஞ்சய் டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்தான்.

“என்னடா இது? இவர் எப்போ பார்த்தாலும் டைனிங் டேபிளிலேயே உட்கார்ந்து இருக்காரு! நாம போனா ஆப் ஆயிடுவாரு. அவ பாக்குறதுக்கு முன்னாடி மாடி ஏறிடுவோம்.”

“மனோ, நீ போய் சாப்பிடு. நான் மேல போய் ரெஸ்ட் எடுக்கிறேன்,” என மெல்லிய குரலில் கூறி நகர, சஞ்சய் திரும்பி விட்டான்.

“மனோ! வந்துட்டியா? வா, சாப்பிடலாம்.”

‘என்ன அதிசயம்! என் அண்ணனா? அதுவும் என்னை சாப்பிட கூப்பிடறான்?” என அதிர்ச்சியுடன் டைனிங்கை நோக்கி செல்ல, சஞ்சய் உதிர்த்த அடுத்த வார்த்தைகளை கேட்டு, நெஞ்சில் கை வைத்து நின்று விட்டான்.

“என்ன அப்படியே நிக்கிற? ஷாலினியும் கூப்பிடு.”

‘நம்ம அண்ணன் தானா? என்னை கூப்பிட்டதே அதிசயம்னு பார்த்தா, அவன் ஷாலினியையும் கூப்பிடுறான். நான் கேட்காததை கேட்கிற மாதிரி இமேஜின் பண்றேனோ!’ என அதிசயத்து நின்று இருக்க, ஷாலினி படியில் ஏறிக் கொண்டிருந்தவளும் அதே நிலையில் தான் நின்று இருந்தாள்.

“ஷாலினி!” என்ற சஞ்சயின் குரலில், மலங்க மலங்க விழித்தாள்.

“ஷாலினி, டின்னர் சாப்பிட வாங்க.”

“இல்ல, டாக்டர் சஞ்சய். நான் ஆல்ரெடி சாப்பிட்டுட்டேன்.”

“பரவாயில்லை! எங்களுக்காக கொஞ்சம் கம்பெனி கொடுக்கலாமே?”

“என்னடா இது? அதிசயத்துக்கு மேல அதிசியமா நடக்குது! என் அண்ணன் ஷாலினிக்கிட்ட எல்லாம் பேசுகிறான்! அதுவும் டின்னருக்கு எல்லாம் கூப்பிடறான்! அவன் கூப்பிடறது அதிசயம், இந்த ஷாலு வேற பிகு பண்ணுதே!” என நினைத்தவன், ஷாலினி அருகே சென்று, மெல்லிய குரலில்,

“ஷாலு, அவன் கூப்பிடுறது உலக அதிசயம்! வயிறு ஃபுல்லா இருந்தாலும் பரவாயில்லை, பேருக்கு ஒரு இட்லியாவது சாப்பிடு ஷாலு,” என கூறினான்.

‘இவர நம்பி போலாம்மா,’என்ற தயக்கம் சிறிது இருந்தாலும், வயிறு குவா குவா சத்தமிட, டைனிங் அருகே சென்றாள்.

மனோ, அவள் அமர, நாற்காலியை நகட்டி வைக்க, அவனுக்கு ஒரு புன்னகையை தந்தவள், நாற்காலியில் அமர்ந்தாள்.

“இந்த ஆன்ட்டி பாத்தா லபா லபா கத்துவாங்களே! கேட்டா, ‘அவங்க பச்சை மண்ணு தான் உட்கார சொன்னாங்க’ன்னு சொல்லுவோம். சஞ்சய் இருக்க பயமேன்!” என தைரியத்தை வரவைத்துக்கொண்டு, ஒரு இட்லியை மட்டும் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

அதைப் பார்த்த சஞ்சய், மேலும் இரண்டு இட்லியை எடுத்து அவள் தட்டில் வைத்தான்.

‘என்னடா! இவன் அவளுக்கு இட்லி பரிமாறுறான். அவனுக்கு இட்லி எடுத்து சாப்பிட மாட்டான்! இப்ப என்னன்னா என்னென்னமோ நடக்குது! ஒரு வேலை, எல்லாம் கனவா இருக்குமோ?’ என ஷாலினியும் மனோவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘இந்த கனவு கலையறதுக்குள்ள, இட்லியை சாப்பிடு!’என கிசுகிசுக்க, அந்த இடத்தில் சஞ்சய் அசௌகரிமாக உணர்ந்தாலும், தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

அதே நேரத்தில், சமையல் அறையில் இருந்து பத்மா வந்தார்.

“ஏய்! நீ என்ன..” என ஆரம்பித்தவர், “ஷாலினி, அந்த சாம்பார் ஊத்து!” என சஞ்சய் கேட்க, சிலை என சமைந்தார்.

ஷாலினியும் மனோவும் சாப்பிடும் வரை, டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த சஞ்சய், அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் எழுந்து கொண்டான்.

சஞ்சய் கை கழுவிக்கொண்டிருக்க, அவன் பின்னே நின்று இருந்த ஷாலினி, “தேங்க்யூ, டாக்டர் சஞ்சய்,” என கூற அவளை பார்த்து சிரித்தவன் அங்கிருந்து கிளம்பினான்.

தானும் கைகழுவிய ஷாலினி சிலை என சமைந்து இருந்த பத்மா அருகே சென்று,

“ஆன்ட்டி…” என அழைக்க, நடந்ததை நம்ப முடியாமல் நின்றிருந்த பத்மா, ஷாலினியின் குரலைக் கேட்டு நிகழ்விற்கு வந்தார்.

“ஆன்ட்டி, உங்க பையன்… “

“முதல்ல, ஒரு பையன உன் வலையில விழ வைச்ச. இப்போ இன்னொரு பையனையும் வளைச்சு வச்சுட்ட! உன்னை கடைசியா எச்சரிக்கிறேன்! என்னோட ரெண்டு பசங்களும் என் உயிர்! இரண்டு பேர் கிட்ட இருந்தும், நீ தூரமாய் இரு. அதுதான் எல்லோருக்கும் நல்லது.

“என் வலையில விழுகுற அளவு, உங்க ரெண்டு பசங்களும் வீக் இல்ல ஆண்டி.

நீங்க உங்க மூத்த பிள்ளைய நினைச்சுத்தான் என்னை வெறுக்குறீங்கன்னு நினைச்சேன்.

அவ்ளோ இன்ட்ரோவெர்ட்டா இருக்குற உங்க பையன்னே என்கிட்ட பேசிட்ட போது, உங்களுக்கு என் மேல அப்ஜெக்ஷன் இருக்காதுன்னு நினைச்சுத்தான் உங்க கூட பேச வந்தேன்.

ஆனா, உங்களுக்கு ஏனோ என் மேல ஒரு வெறுப்பு இருக்கு.

நான் இங்க வந்தது, உங்க பசங்கள வளைச்சு போடவோ , உங்க சொத்தை அமிக்கிட்டு போகவே இல்லை.

என் அண்ணனுக்காக மட்டும்தான் வந்தேன், அதுவும் ரெண்டு மூணு மாசம் மட்டும்தான். அதுக்குள்ள அவன் சரியாகலைனா கூட, அதான்! எங்களோட விதின்னு நாங்க ஏன் ஊருக்கே போயிடுவோம்.

அதுவரை, உங்க பசங்களோட உதவி எனக்கு வேணும். அதுவும், என் அண்ணனை குணப்படுத்துற டாக்டரா மட்டும்! இந்த வீட்ல, உங்கள தவிர எல்லாரும் டாக்டர்ஸ் தான். அதனால் தான் மனோ கூப்பிட்ட உடனே, இங்க வந்தேன்! இல்லனா, வேண்டாத விருந்தாளியா நான் யார் வீட்டுக்கும் வந்திருக்க மாட்டேன்! ” என கூறியவள் மாடி ஏறிவிட்டாள். 

‘என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்காங்க.

நான் வாயை மூடிட்டு, அவங்க திட்டுறத வாங்கிட்டு இருந்ததால, இளிச்சவாச்சின்னு நினைச்சாங்களா? குட்ட குட்ட குனிச்சேன் தான் அதுக்காக, என் கேரக்ட்அ அசாசினேட் பண்ணுனா எப்படி? சும்மா இருக்க முடியுமா? 

இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் லெப்ட் ரைட் வாங்கினாதான் சரிப்பட்டு வருவாங்க.” என நடந்த படியே அறையை அளந்து கொண்டிருக்க… யாரோ, கதவை தட்டும் சத்தம் கேட்டு நடையை நிறுத்தினாள்.

‘அதானே பார்த்தேன். என்னடா! நம்ம பேச பேச அமைதியா இருக்காங்களேன்னு. டையலாக் ரெடி பண்ணி திட்ட வந்துட்டாங்க போல! நான் பயந்துருவேன்னு நினைச்சாங்கள? இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்தரலாம்! ‘என கதவை, வெளியே மனு நின்றிருந்தான். 

“மனோ! தூங்கலையா?இந்த நேரத்துல வந்து, என்ன பண்ற? 

“உங்க மம்மி பார்த்தா இரண்டு பேரும் காலி!”

“மம்மி தூங்க போயாச்சு! நீ முதல்ல தள்ளு.”என அவளை தள்ளியவன், அவள் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.

“மனோ, டைம் 11 ஆக போகுது. இந்த டைம் இதுக்கு வந்து…”

“அட! நீ என்ன, புதுசா இந்த டைம் வந்தன்னு சொல்லிட்டு இருக்க? என்ன ஆச்சு?” 

அதுவும் சரிதான். எவ்வளவு செல்லமாக வளர்க்கப்பட்டாலும், எந்த கட்டுப்பாடுகளும் அவளுக்கு இருந்ததில்லை. பெண் பிள்ளை என்று அவளை அடக்கி வைத்ததும் இல்லை.

பிடித்ததை படி. பிடித்ததை சாப்பிடு.பிடித்த உடை உடுத்து.பிடித்த நண்பர்களோடு சுற்று, ஆணோ பெண்ணோ என வளர்க்கப்பட்டவள்தான்.

அனைவருக்கும் செல்லமாக அவர்களை அண்டியே அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டாள்.

“டேய் பிரவி, மணி 2 ஆகுது. இந்த டைம்ல சுட சுட பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு!” என அண்ணனை நடுநிசி தூக்கத்திலிருந்து எழுப்பியது ஆகட்டும். 

“அப்பா, இந்த கிராப் டாப் ஓகே தானே? எனக்கு இந்த டிரஸ் எல்லாம் புடிச்சிருக்கு. நீங்களா நாலு அஞ்சு எடுத்துப் பில் பண்ணிடுங்க.”  என அவர் தலையில் கட்டி விட்டு நழுவுவது ஆகட்டும்.

“அம்மா, இந்த ஹரி ஏன் உனக்கு போன் பண்றான்? நேத்து வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டதுக்கு வரல. இன்னைக்கு உனக்கு போன் போட்டு தாஜா பண்றான்! அவனை ப்ளாக் ல போடுங்க! ”  என‌ அவர்களையும் தன் வட்டத்துக்குள் சேர்ப்பது என அவர்களே சுற்றி வந்தவள். அவர்கள் இல்லாத போது, யார் யாரிடமோ பேச்சு வாங்க வேண்டிய நிலை. தன்னையே நினைத்து கண்கள் கலங்கியது. 

“ஷாலுமா, என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”

அவன் தாய் பற்றிய புகாரை அவனிடமே எப்படி அளிக்க முடியும்? 

“ஒன்னும் இல்ல மனோ. சும்மாதான். திடீர்னு நைட் டைம் டோர் லாக் பண்ணவும் கேட்டேன்.” 

“அதுவா? நானும் என்னோட பிரெயின கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்றேன். ஆனா, என்னால முடியல.

இத்தனை வருஷம் என் அண்ணன் கிட்ட வராத மாற்றம், இன்னைக்கு எப்படி வந்ததுன்னு யோசிச்சு யோசிச்சு தலை வெடிக்குது.

கனவா இருக்குமோன்னு டவுட்டு! இவ்ளோ பெரிய கனவு வருமான்னும் டவுட்டு!

அதான்…

என்னவா இருக்கும்ன்னு டிஸ்கஸ் பண்ண வந்தேன்.

திடீர்னு எப்படி இப்படி ஒரு ஞான உதயம் வந்திருக்கும்? எந்த போதி மரத்துக்கு கீழ உட்கார்ந்திருப்பான்?” 

“ஏன், நீயும் போய் உட்கார போறியா?” 

“நக்கலா?” 

“இல்ல, விக்கலு. ஒரு ஞான உதயமும் இல்ல. நான்தான் போய் உன் அண்ணன்கிட்ட கால்ல விழாத குறையா கெஞ்சிக்கூத்தாடி! இந்த நிலைமைக்கு கொண்டு வந்தேன்.” 

“நம்ப முடியலையே! இத்தனை வருஷமா நானும் அம்மாவும் சொல்லாததையா நீ சொல்லி இருக்க போற?

ஆமா! அப்படி என்ன சொன்ன? இதெல்லாம் எப்படி நடந்தது?” 

“இன்னைக்கு பிரவீன் நார்மல் வார்டுக்கு மாற்றியதுக்கு அப்புறம், தண்ணி குடுக்கலாம்னு பாட்டில் எடுத்தா, தண்ணி காலி! சரி, தண்ணி பிடிக்கலாம்னு காரிடார் போனா, அங்க ரெண்டு சிஸ்டர் பேசிட்டு இருந்தாங்க.” 

“இந்த சாமியார் ரூம்க்கு போனா மட்டும் மூச்சு முட்டிடும்! எப்படித்தான் அவருக்கு மட்டும் இவ்வளவு கூட்டம் வருதோ?” 

“பின்ன வராதா? எவ்வளவு ராசியான சாமியார்! அவர் கை பட்டால் எல்லாம் சரியாகும். அப்போ கூட்டம் கூடாம என்ன செய்ய வேண்டும்?”

‘அதுவும் சரிதான்! ரொம்ப ராசியான சாமியாரோ! ஹாஸ்பிடல் கூட பாக்காம இவ்வளவு கூட்டம்னா எப்பேர்பட்ட சாமியாரா இருப்பாரு?

பேசாம நாமளும் போய் ஆசீர்வாதம் வாங்கி, பிரவிக்கும் ஆசீர்வாதம் பண்ண சொல்லலாம். வரிசையா உயிர் பலி நடந்ததாவ கஷ்டமான பரிகாரம் ஏதாவது செய்ய சொன்னா கூட பண்ணிடலாம்!” 

பிரவி, சீக்கிரமா குணமானா போதும்!”

என நினைத்தவள், அந்த செவிலி பெண்களின் அருகே சென்று, ” சிஸ்டர்! அவங்க ரூம் எங்க இருக்கு?”

“யாரோட ரூம்?”

“இப்போ நீங்க சொன்னீங்களே… ராசியானவர்னு அவர் ரூம்.”

“ஓ, அவங்க ரூம் நேராபோயி, லெஃப்ட்ல ஃபர்ஸ்ட் ரூம்.”

ஷாலினியும் செவிலி சொன்ன அறையை நோக்கி சென்று, கதவை தட்டி விட்டு கதவை திறந்து, எட்டி பார்த்தவள் அதிர்ந்தாள். 

“சாமியார் ரூம்னு தானே சொன்னாங்க?”

என கதவினை பார்க்க, அதில் “டாக்டர் சஞ்சய் குமார், MBBS, MD (General Medicine), MRCP (UK), CCST (Neurology, UK), FRCP (London)”என்று எழுதியிருந்தது. 

“இது… டாக்டர் ரூபா? சாமியார் ரூமா?

யோசிக்க… 

“ஓபி, முடிஞ்சது தானே? கேஸ் பைல்னா வச்சுட்டு போங்க!”என, குனிந்த தலை நிமிராது, ஏதோ பைலில் கிறுக்கிக் கொண்டிருந்தவனை பார்த்தவுடன், அந்த செவிலி பெண் பேசியது புரிந்தது. 

புரிந்ததும்… சிரிப்பு வர வாய்விட்டு சிரித்தாள். 

அவள் சிரிப்பு சத்தத்தில் நிமிர்ந்தவன், ஷாலினியை கேள்வியாக பார்த்தான். 

வாய் மூடிக்கொண்டவள், “ஐயோ! எப்படி சமாளிக்க?” என திணறியவள், ஏற்கனவே பேச வேண்டும் என நினைத்திருந்ததை பேச ஆரம்பித்தாள். 

“சாரி டாக்டர் சஞ்சய்! உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு! நான் உங்க வீட்ல ஸ்டே பண்ணினது உங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும். நானும் இப்படி எதையும் யோசிக்காமல் வந்திருக்க கூடாது!

ஆனா எனக்கு வேற வழி தெரியல. அன்னைக்கும் அப்படித்தான்! பிரவீன் நிலைமை சீரியஸா இருந்தது. சரியான டிரீட்மென்ட் இல்லன்னு மனோ சொன்னதால தான் எனக்கும் தெரிஞ்சது.

எனக்கு உங்களோட மெடிக்கல் டெர்ம்ஸ் எல்லாம் தெரியாது. ஆனா, மெடிக்கல் டெர்ம்ஸ் தெரிஞ்ச ஒருத்தர் துணையாய் இருக்கும்போது, தைரியமா இருந்ததால தான், மனோ சொன்னதும் யோசிக்காம வந்துட்டேன்.”

“நீங்களே இன்னைக்கு அவனோட சிச்சுவேஷன பாத்தீங்க தானே? என்னால தனியா ஹாண்டில் பண்ண முடியாது. அதுதான் மனோ இருக்குற தைரியத்துல வந்தேன். அதனால தான் நான் எவ்வளவு ஃப்ரீயா இருக்கேன்!”

“பிரவி, கண்ணா முழிச்சா… அடுத்த நிமிஷமே நான் போயிடுவேன். ப்ளீஸ், அதுவரை என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! நான் உங்க பக்கமே வரமாட்டேன். ப்ளீஸ்!”

அவனிடமிருந்து பதில் எதுவும் வராதிருந்தது. 

“சாரி! உங்க டியூட்டி நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.”என, அங்கிருந்து கிளம்பினாள். 

இதுதான் மனோ நடந்தது. 

“இந்த டயலாக்கை கேட்டா, என் சஞ்சய் மாறினான். நம்ப முடியலையே! இதைவிட வித்தியாசமா, இன்னும் எமோஷனலா எத்தனை டிராமா போட்டோம்னு தெரியுமா? எதற்கும் சரிபட்டு வரல அவன். 

“எப்படி மாறினால் என்ன? மாறிட்டாருதானே! சந்தோஷப்படுவியா, ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கா?”

“அதுவும் சரி, சஞ்சய் மாறுன வரைக்கும் சந்தோஷம்! சரி, நீ படு, நான் கிளம்புறேன். குட் நைட்!” 

என தூங்கச் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *