Skip to content
Home » என் கல்லூரி

என் கல்லூரி

கல்லூரி நுழைவில் ஓர் மிரட்சி
வகுப்பறை தேடலில் ஓர் பதற்றம்
நல்லதொரு தோழியின் தேடல்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

புகட்டவரும் ஆசிரியரை பற்றிய எதிர்பார்ப்பு 
படிப்பில் வரும் ஆர்வம் சிறிது அரட்டை பெரிது

மிதிவண்டி நிறுத்தும் குட்டிசுவர்
உண்ணுவதற்கு ஏற்ற இதமான மரநிழல்

நினைத்ததை கிறுக்க மரமேஜை
நிஜங்களை பகிர்ந்து கொள்ளும் நெஞ்சங்கள்

தாமதமாக சென்றால் பரிசாக திட்டுக்கள்
ஆசிரியருக்கு பெயர் சூட்டும்  அறியாமை
சக தோழியருடன் கொண்டாடும் விழா குறும்பு

இன்ப துன்பத்தினை ஏற்க சில தோள்களும் 
திறமை வளர்த்து களிப்பூட்டும் தோழிகள்
தனிப்பட்ட திறமைக்கென  ஏற்படும் போட்டிகள்

அதிரடி தேர்வில் எழுது கோல்  தலை கவிழ
தலை நிமிரும் என் கண்கள் நேர்க்கொண்டு

அலட்சிய தருணங்களை அனுபவம் ஆக்கி
சான்றோனாக உலக அவைக்கு தந்தாய் !

பிரிவின் இறுதி நாளாம் கல்லூரி வாழ்விற்கு
கண்ணீருடன் கண்கள் விடைகொடுக்கும் நேரமாம்
உதட்டளவில் பிரிகின்றோம்
மனதில் ஞாபக சின்னத்தோடு !

                 —  பிரவீணா  தங்கராஜ் .

   *ஜூலை 2008 -இல் “யூத் ரிப்போர்ட்டர் ” எனும் இதழில் சுருக்க பிரசுரிக்கபட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!