அந்த ஆர்மி கேம்ப் ல் அன்றைய தினத்தின் மாலை வேளையில் பார்ட்டி ஒன்று ஒழுங்கு செய்ய பட்டிருந்தது
அதற்கு நரேஷை அழைப்பதற்காக ஆதியும் அவனது நண்பர்களும் நரேஷ் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு சென்றனர்
“ஹாய் நரேஷ் “என ஆதி அழைக்கவும்
“நரேஷ் இல்ல நரேஷ் சார் னு கூப்பிடு நீ கமாண்டர் க்கு செல்லப்பிள்ளங்கிறதுனால எனக்கு சீனியர் ஆக முடியாது நாந்தான் உனக்கு எப்பவும் சீனியர் “என உள்ளிருந்த வன்மம் வார்த்தை யாக வெளிவர.,
ஓகே நரேஷ் சார் “இன்னைக்கு ஈவினிங் நம்ம கேம்ப் ல ஒரு சின்ன பார்ட்டி அரெஞ் பண்ணிருக்கோம் வந்துருங்க ” என அழைக்க..
நரேஷ் வார்த்தை எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும்.
என்ன நவின் சார் ரெம்ப சூடா இருக்கார் போலவே என சொல்லிக் கொண்டிருக்கும்போதே
நரேஷ் கைகளை மடக்கி ஆதியின் வயிற்றில் குத்த வர…
ஆதி லாவகமாக விலகி கைகளை பிளாக் பண்ணி மறு கை நரேஷ் முகத்தின் அருகே இருந்தது..
நரேஷின் முகம் பயத்தால் நடுக்கம் கொள்ள
கைகளை இறக்கிவிட்டு ஒன்றும் ஆதியும் அவனது நண்பர்களும் ஒன்றும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தனர்
அங்க இருந்த கமாண்டோ “சார் ஆர்மி மேன்க்கு புத்தியும் எண்ணமும் நேர்மையா இருக்கணும் ” என கூறவும்
“அவுட் “என கைகளை வாயிலை நோக்கி நரேஷ் நீட்டவும்
எஸ் சார் என வெளியேறினான்
அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை தலைக்கு மேல தலைக்கணத்த வச்சிட்டு அலையுறானுங்க என தலையில் அடித்த வாறு தனக்கு ஒதுக்கிய பணியை நோக்கி சென்றான்.
அடுத்த நாள்….
ஹலோ நித்தேஷ் “*””:;;;!! +! ;! ४++₹;;;;! ;;;! ;:;:+; என எதிர்தரப்பில் சீக்ரெட் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்து வெளியே வந்த அவர் பாய்ஸ் கெட் ரெடி என மேலும் சில தகவல்களை தெரிவிக்க அனைவரும் மக்களோட மக்களாக கலந்து அந்த கிராமத்தை முற்றுகை இட்டனர்
கமாண்டர் நித்தேஷ் கண் காட்டவும்
எஸ் சீஃப் ன அங்கிருந்து ஆதி நின்று அந்த கட்டிடத்தின் ஒலிப்பெருக்கி யை டிஸ்கனெக்ட் செய்தான்.
நித்தேஷ் நரேஷ் ஜ பார்த்து அதான் ஆதி என் கண் அசைவினை கண்டு அதை நிறைவேற்றுவான் அதான் எனக்கு எப்பவும் நம்பிக்கை யா இருக்கிறான் என கூறினார்…
அந்த கட்டடத்தை கமாண்டர் நித்தேஷ் தலைமையில் சுற்றி வளைத்தது
இரு டீம் க்கு பலத்த துப்பாக்கி சண்டை நடைபெற்றது இந்தியன் ஆர்மி ஒவ்வொரு தீவிர வாதிகளையும் சுட்டுத்தள்ளிக்கொண்டே முன்னேறினர்
தீவிரவாதிளில் முக்கிய நபரை வளைத்து பிடிக்கும் தருவாயில்
தீவிரவாதிகளில் ஒருவன் நரேஷின் நெற்றியில் துப்பாக்கி யை வைக்க வெட வெடத்துப்போனான்(நடுங்கி)அந்த கன நேரத்தில் துப்பாக்கி பிடித்திருந்தவன் அப்படியே சரிந்தான்
நரேஷ் சுற்றி முற்றி பார்க்க!
அடுத்தபக்கதிலிருந்து ஆதி தான் புல்லட் டை அவனது தலையில் இறக்கிருந்தான்.
கமாண்டர் ஆதியை அழைத்து பிடிபட்ட தீவிரவாதியைபோலிஸ் இல் ஒப்படைக்க கூறிவிட்டு அவரும் அவரது டீம் ம் அங்கிருந்து கலைந்து சென்றனர். தங்களது கேம்ப்ற்கு
இரண்டு நாள் கழித்து
அப்ளை பண்ணின லீவும் ஆதிக்கு கிடைக்க தன் தாய்க்கு அங்குள்ள ஸ்பெஷல் திண்பண்டங்கள் மற்றும் சில வற்றை வாங்கிக்கொண்டு இரவு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தான்.
மச்சான் எனக்கும் லீவு கிடைச்சுட்டு என ஓடிவர கிழே உள்ள மேட் தடுக்கி ஆதி மேல சரிந்து கட்டிலில் விழுந்தனர்
அந்த சமயம் வந்த செளத்ரி “என்ன கருமம் டா தலையில் அடித்துக்கொண்டு ஒழுங்கா வீட்ல சொல்லி கல்யாணத்த முடிங்கடா என கூறவும்
அந்த சமயம் நினைவு வந்தவனாக ஆதி பார்க்க தன்மீது நவின் கிடப்பதை தான் கிண்டலாக கூறுகிறார் என தன் மேல் கடந்த வனை தூக்கி எறிய தொப்பென தரையில் விழுந்தான்..
ஏண்டா தள்ளிவிட்ட “நீ கூட அழகா தான் இருக்க நாம கல்யாணம் பண்ணிப்போமா” என நவின் கண்ணடித்தான்
வாயில் வந்த நல்ல வார்த்தை களை பூ மாலை போல் தொடுக்க
காதை பொத்திக்கொண்டு விடு மச்சான் விடு சரி எத்தனை மணிக்கு நானும் வரேன் என கூறிவிட்டு அவனும் தயாராகினான்
இருவரும் ஸ்ரீ நகர் (ஜம்மு காஷ்மீர்) லிருந்து டெல்லி விமானம் மூலம் வந்தடைந்தனர்
அங்கிருந்து ட்ரெய்ன் மூலம் சென்னை செல்ல தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ட்ரெய்னில் தங்களுக்கான பெட்டியில் ஏறி உட்காரந்தனர்..
அந்த பெட்டி யில் பிற மாநிலத்தவர்களும் சில தமிழர்களும் இருந்தனர்..
அந்த பெட்டியில் கடைசி நிமிடத்தில் ஒரு ஐந்து கல்லூரி சுற்றுலா வந்த கேர்ள்ஸ் ஏறவும் ட்ரெய்ன் கிளம்பவும் தயாராக இருந்தது…
ஷ்ஷப்பா எப்படி யோ ட்ரெய்ன் பிடிச்சாச்சு என அவர்களுக்குள்ளே பேசி பெருமூச்சு யிட்டுக்கொண்டனர்..
ட்ரெய்ன் கிளம்பிய சிறிது நேரத்தில் இரவு டின்னர் முடித்து மேல் பர்த்தில் ஆதியும் நவினும் படுக்க சென்றார்கள் தூக்கம் கண்ணை சொருகும் அந்த வேலையில் அந்த பொண்ணுங்க ள்ள ஒருவள் அழுதுகொண்டே வர மத்தவங்க என்ன ஏது னெ விசாரிக்க பாத்ரூம் அருகே நாலு ரெளடி பசங்க மிஸ்பிகேவ் பண்ணவும் ஒரு வழியா தப்பித்து வந்திருக்கிறாள்.
ஆதி கிழே இறங்கி வந்து என்னமா என்னாச்சு என தமிழில் கேட்கவும் அவர்களுக்கு புது நம்பிக்கை யே வந்தது
(நம்மளும் அப்படித்தானே வெளி மாநிலங்களில் எவரும் தமிழில் பேசினால் அந்த அளவுக்கு சந்தோஷப்படுவோம் அல்லவா) அந்த பொண்ணு நடந்ததை விவரிக்க கூறவும்
டேய் மச்சான் வா என நவினை யும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு சென்றனர்
அங்கு நான்கு தடியர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர்
“டேய் யார் நீங்க இங்க என்ன பண்றீங்க ட்ரெயினில் குடிக்க கூடாதுனு தெரியாதா சரி டிக்கெட் காட்டுங்க எந்த கம்பார்ட்மென்ட் “என ஆதி கேட்கவும்
அவர்களில் ஒருவன் எங்களை கேள்வி கேட்கிற அளவுக்கு தைரியம் இருக்கா என கேட்டுக்கொண்டே
கைகளை ஓங்கி அடிக்க வரவும் ஆதி விலகி மூக்கில் ஒரு குத்து விட்டான் இரத்தம் பீறிட்டு வந்தது.. அது பார்த்த மற்றவர்களும் தாக்க வரவும் ஆதியும் நவீனும் அந்த தடியர்களை நையப்புடைத்தனர்…
அவர்களை சரியாக அடுத்த ஸ்டேஷனில் ரயில்வே போலீஸில் பிடித்து ஒப்படைத்தனர்.
அவர்கள் தடியர்களில் ஒருவன் இந்த ட்ரெயினிலிருந்த இறங்குறதுக்கு முன்னாடி உனக்கு என்ன ஆகுது பாரு என முனங்கிக்கொண்டே சென்றனர்…..
“போடா நாங்க இத விட பெருசா பாத்துட்டோம் பெருசா வந்துட்டான் டால்டா டப்பா ” என்ன மச்சான் என நவின் ஆதியை பார்த்து கூறவும்
மூடிட்டு உள்ள போடா என சைகை காமித்தான்.
அந்த பொண்ணுங்க ரொம்ப தேங்கஸ் அண்ணா என நவினைப்பாரத்து கூறவும்
ஆதி சிரித்துக்கொண்டே அவன் பர்த் ஏறி படுத்துக்கொண்டான்…
சரி தங்கச்சிங்களா என கூறி விட்டு அடக்க முடியாத சோகத்தை மறைத்து க்கொண்டு(எல்லாரும் அண்ணா னு சொன்னா என்னோட வம்சம் எப்படி தான் பெருகும்🤧🤧)படுக்கைக்கு ஏறி படுத்து கொண்டான்.
ஆதி கண்மூடி பழைய நினைவுகளை அசைப்போட அந்த நினைவுகள் கல்லூரி ஃபேர்வல்டே பங்சனுக்கு இழுத்து சென்றது…….
………..,…..
அந்த குடோனில்….
நாற்காலியில் கை கால்கள் கட்டப்பட்டு
மயக்க நிலையில் உட்கார்ந்திருந்தார் சிட்டி கமிஷனர் ஹரிஹரன்…
டேய் அவர எழுப்பி விடு என பிரதாப் கூறவும் விவேக் தண்ணீரை அவரது முகத்தில் தண்ணீரை தெளித்தான்..
அவர் மயக்கம் தெளிந்தவராய “டேய் **_-++ யார்டா நீங்க நா யார் தெரியுமா என்ன பகைக்கிறதும் கவர்மென்ட பகைக்கிறது ம் ஒன்னுதான் ஒருத்தனை யும் விடமாட்டேன் கட்ட அவுத்து விடுங்கடா என கூச்சல் போடவும்
சாரி சார் பசங்க தெரியாம தூக்கிட்டு வந்துட்டா ங்க , “ஆமா டேய் இது யாரு டா எதுக்கு கொண்டு வந்திங்க “என திரும்பி தன் நண்பர்களை கேட்டான் ஜீவா
நம்ம கமிஷனர் பங்கு என விவேக் கூறவும்
திரும்பிய வாறு கன்னத்தில் ஒரு அடி வைக்க மரத்தை வெட்டும் ஒரு நபர் எந்த அளவு பலம் கொண்டு வெட்டினால் அந்த மரம் சிதறுமோ அந்த அளவு க்கு வேகம் இருந்தது.
ஒரு நிமிஷம் தலை ஆடி நின்றது ஏன் உன்ன கடத்துனோம் தெரியல இல்ல
அந்த ஹோமியோபதி டாக்டர் நாராயணன் வீட்ல வேலை பாக்குற அந்த குட்டி பொண்ண அப்பனும் மகனும் சிதைச்சுருக்கானுங்க நீ அவங்க கிட்ட உனக்கு தேவையானதை வாங்கிகிட்டு ஒரு அப்பாவி பையன என்கவுண்டர் பண்ணி கமிஷனர் போஸ்டிங் வாங்கிருக்க என ஜீவா கூறவும்
பதட்டம் கொண்டவராக நா இல்ல என்ன விட்ருங்க மேலிடத்து உத்தரவு ப்ளீஸ் எவ்வளவு பணம் னாலும் தரேன் என்னை விட்டுருங்க என கதறினார்..
மேலிடத்தில இருந்து பிரஷர் என கெஞ்சத்தொடங்க
அந்த நேரத்தில் அவ்வளவு நேரம் மறைந்து இருந்து அந்த உருவம் வந்து பெத்த மக வயது உள்ள சின்ன சிறு பிஞ்சு கள் லாம் உனக்கு தெரியாம போயிருச்சுல்ல எத்தனை பேர நீ சிதைச்சிருப்ப என கண்ணில் கோபம் கொண்டு
“ஜீவா இந்த நாய அணு அணுவா சித்ரவதை பண்ணி சாவடி டா “என கத்த தொடங்கியதும்
கமிஷனர் உன் கூட உள்ளவங்க எல்லாம் சீக்கிரம் மே வரிசையா வருவாங்க நீ மொதல்ல போ என
சொல்ல முடியாத சித்ரவதை யெல்லாம் செய்து அந்த ஊரின் குப்பை கிடங்கில் போட்டுவிட்டு சென்றனர்…..
கதை எப்படி போகுது னு சொல்லிட்டு போங்கோ
Nice
சூப்பர்…. அன்ட் வெரி நைஸ்…!
ஆதி சூப்பர்!!… இன்னும் அடுத்து யாரைலாம் அனுப்பி வைக்க போறாங்களோ???
Interesting
Too bad eppadi torture pannga nu xplain panunga plsssee
இராணுவத்துலயும் பிரிவினை விதிவிலக்கில்லைனு தெரியுது…..நமக்காகப் போராடுற வீரர்கள் இப்படி அடிச்சிக்காம இருக்கலாம்னு தோணுது😌😌😌😌😌ஆனாலும் உண்மையான வீரனுக்கு அதைப் பற்றிய எண்ணம் இல்லாமல் எங்கிருந்தாலும் தன்னோட பணியைச் செய்வான்னு ரயில் சம்பவம் சொல்லுது👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼கமிஷ்னருக்கு அவரோட தப்பைச் சுட்டிக் காட்டுறதோட தண்டனையும் கொடுக்குறவங்கனு இந்தப் பக்கமாக வீரர்கள்👏👏👏👏👏எல்லாமே தனித் தனியாக வருது….ஏதோ ஒரு மையப் புள்ளியில இணையுமோ🤔🤔🤔🤔🤔