அத்தியாயம்-5
“ஏன்டி ஒரு காபி ஓழுங்கா போடத்தெரியுதா எத்தனை வருஷமாச்சு இப்பதான் புதுசா கல்யாண ம் ஆனமாதிரி போட்டுட்டுருக்க , பாயாசமாதிரி இருக்கு டெய்லி ஒரு அளவா போடத்தெரியாதா ” என கார்த்திக் தனது மனைவியுடன் வம்பளந்துக்கொண்டிருந்தார்.
“அப்பா நா சிம்லா டூர் போறேன் எனக்கு ஒரு இருபதாயிரம் வேணும் ப்பா” என விஷ்ணு கேட்க
“என்னடா இன்ஸ்சூரன்ஸ் பணம் கண்ண உறுத்துதா, உனக்கும் உங்க அம்மா க்கும் அவ என்னடானா காபி ல சுகர் அள்ளிப் போட்டு கொல்றா நீ சுற்றுலா போகணும்னு கொல்ற” என கூறவும்
என்னங்க !என்ன இது வெள்ளிகிழமை அதுவுமா என்ன பேச்சு என கடிந்துக்கொண்டார்
அந்த சமயம்
மாடியிலிருந்து இறங்கி வந்த கலெக்டர் சேலை கட்டும் நடையும் அவளை அனைவரையும் வியந்து பாக்க வைத்தது…
என் கண்ணே பட்டுவிடும் போல கண்ணா இரு உனக்கு சுத்திபோடுறேன் என சஞ்சனா நெகிழ்ச்சியடையவும்
ம்மா நானும் உன் புள்ள தான் னு விஷ்ணு குறுக்கே வந்தான்…
நீயும் தான் டா என் செல்லம் என நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு
வாடா சாப்பிடலாம் என இழுத்துக் கொண்டு சென்றாள்
டைனிங் டேபிளில் அமர்ந்துக்கொண்டு இருக்கும்போது அந்த சாம்பார் வாசனை அவளை துளைத்தது..
அம்மா சீக்கிரம் வா வாசனையிலே பசி அடங்கிரும் போல…
வந்துட்டேன் டா என கூறிக்கொண்டே அந்த இட்லி சாம்பார் மல்லி சட்னி தக்காளி சட்னி என பரிமாறவும்
அவள் ரசித்துக் கொண்டே சாப்பிட்டாள்..
அம்மா உன் சமையலுக்கு ஊரே அடிமை எப்படி இவ்ளோ டேஸ்டியா சமைக்கிற என.. உன்ன வச்சு ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சோம் அடுத்த கோடீஸ்வரர் கள்ள நாம தான் முதலிடம் என ப்ரியா கூறவும்
அதை கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்”பாப்பா உன் அம்மா க்கு சமையல் கத்துக்குடுத்ததே நா தான் என குரல் கொடுத்தார்
“ஆமா சொல்லிக்குடுத்தார் சுரக்காய்க்கு உப்பு இல்லனு டேய் உங்க அப்பா கல்யாணத்துக்கு முன்னாடி ஒல்லியா முருங்கை க்காய் க்கு சட்ட போட்ட மாதிரி இருப்பார் டா நா தான் இப்படி வளத்துவிட்ருக்கேன்” என சஞ்சனா பதிலுரைக்கவும்
சரி சரி நா கிளம்புறேன் அப்பா இட்லி நல்லா இருக்கு திருப்தி யா சாப்டுங்க என ஒரு குட்டி ஹக் பண்ணிவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் கிளம்பினாள்.
பை மம்மி பை டேட் என விஷ்ணு வும் கூறிக்கொண்டு தனது பைக் எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான்…
வீட்டிலிருந்து கிளம்பிய அவள் நேராக சென்றது அந்த கிராமத்திற்கு தான், செல்லும் வழி எங்கும் கருவேலமரங்களால் ரோட்டின் இருபக்கங்களால் சூழ பட்டிருந்தது.
குடிதண்ணீர் பிடிக்க வந்தவர்களில் சிலர் வியந்து பார்க்க காரிலிருந்து இறங்கினாள் ப்ரியா…
“என்னடி இன்னைக்கு கலெக்டர் வண்டி இங்க வந்திருக்கு வந்திருக்கிறது தெரிஞ்சா அந்த கொலகாரபாவி கொன்னே புடுவானடி என் இந்த அம்மா இங்க வந்துச்சு” என காளியம்மாள் லட்சுமி காதில் ஹஸ்கி வாய்ஸ் ல் ஒதினார்
“இரு க்கா பாப்போம் “என அவர்களுக்கு ள்ளே முனுமுனுத்துக்கொண்டனர்
டிரைவர்”ஏம்மா இங்க குமாரசாமி வாத்தியார் வீடு எங்க இருக்கு என கேட்க
அவரத்தான் நேத்து பெரியவரோட ஆளுங்க அடிச்சு போட்டுட்டானுங்களே. அவர பெரிய ஆஸ்பத்திரி ல சேத்துருக்காங்க.. பாவம் வெள்ளந்தியான மனுஷன் என உச்சு கொட்டினார் காளியம்மாள்.
ப்ரியா பேசத் தொடங்கினாள்….
இந்த ஊர் ஏன் அமைதியா இருக்கு ஊர்ல யாரும் இல்லை யா ?ஏன் இந்த ஸ்கூல் இடிஞ்சுகிடக்கு பசங்க எல்லாம் பக்கத்தூரில் படிக்கிறாங்களா?
பஸ் வசதி எல்லா இருக்கு தானே எதும் குறை யிருந்தால் சொல்லுங்க என அவர்களைபார்த்து வினவினாள்
அந்த நேரம் பார்த்து… யம்மோவ் இங்க பெரியவர் வச்சது தான் சட்டம் அவர மீறி எதுவும் பண்ண முடியாது நீங்க உங்க ஆபிஸ்ல குளு குளு னு காத்து வாங்கிட்டு சம்பளம் வாங்கிட்டு போறவுக, எங்க வலி தெரியாது போங்க உங்க சோலியபாத்துட்டு என விரக்தி யாக முருகன் கூறினான்.
கோபப்படாதிங்க உங்கள்ல ஒருத்தியா என்ன நினைச்சுக்கோங்க என்னனு சொல்லுங்க நா ஆக்ஷன் எடுக்கிறேன் னு பிரியா கூறினாள்
அவர்கள் அமைதியாக இருக்கவும்
சரி உங்க கோபம் புரியுது சொல்லுங்க
எனக்கு முன்னாடி இருந்தவங்க எப்படி னு எனக்கு தெரியாது முடிஞ்ச வரை என்ன பிரச்சனை எதா இருந்தாலும் நா சரி பண்ணி முயற்சிக்கிறேன் என ப்ரியா கேட்கவும்
இங்க…… என கூறும் முன்பே சதாசிவ த்தின் அல்லக்கைகள் , ஏய் கலெக்டர் உனக்கு இது தேவையில்லாத வேலை உன் வேலைய மட்டும் பாத்துட்டு போ என கூறினார்கள்..
டேய் யார்டா நீ என்ன ஆர்டர் போடுற கன்னம் பழுத்துரும் என பதிலுரைக்க
அவன்தான் இவ்ளோ சொல்றான்ல, பொட்டச்சிக்கு என்னடி இவ்ளோ தைரியம் நான்கு பேர் அவளை தாக்கும் விதமாக வந்தார்கள்
இவளை நெருங்குமுன் பளார் பளாரென அடி வந்து விழுந்தது.
யார் அடிக்கிறா என பார்ப்பதற்குள் அடித்து துவம்சம் செய்தார்கள்.
கார்த்திக் ஏற்பாடு பண்ணின கார்ட்ஸ்
தடியர்களில் ஒருவன் யார்டா நம்மல அடிச்சது என்னடா இது இடி மாதிரி விழுது யார்டா இவ நம்ம ஐயாவ விட அடியாள் நிறைய வச்சிருப்பா போலவே என அருகில் இருந்த வனிடம் கூறி வாடா ஆஸ்பத்திரி போவோம் கால்லே போட்டானுங்கடா என கிளம்பினர்.
டிரைவர் அண்ணே வாங்க போகலாம் என அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் க்கு குமாரசாமி அவரை பார்க்க சென்றாள்.
……..
இங்கு
ஏட்டு காஜா” சார் அது கமிஷனர் ஹரிகரன் சார் இப்பதான் அவருனு உஉறுதிபடுத்துனாங்க”*என கூறினார்.
இருவரும் கமிஷனர் ஆபிஸ் க்கு விரைந்தனர்….
அங்கு கான்ப்ரன்ஸ் ஹாலில் மீட்டிங் நடைபெற ஏற்பாடு பண்ணப்பட்டு இருந்தது…
“முத்து யார் இப்படி பண்ணிருப்பாங்க உங்களுக்கு யார் மேலயாச்சும் சந்தேகம் வருதா , கொலை க்கான மோட்டிவ் என்ன எதும் துப்பு துலங்குச்சா “என எஸ் பி வேலுமணி கேட்கவும்
இல்ல சார் ,இப்பதான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட் வந்துச்சு அதுல உள்ளத வச்சி பாத்தா அக்யூஸ்ட் ஒரு சைகோ னு நினைக்கிறேன்… விசாரணை ய தூரிதப்படுத்துறேன் சார் இரண்டு நாள்ல அக்யூஸ்ட் ட புடிச்சிருவேன்னு முத்தையன் கூறினார்..
சீக்கிரம் இந்த நியூஸ் பரவுறதுக்கு முன்னாடி அக்யூஸ்ட் லாக்கப்ல இருக்கணும்.
இது நம்ம டிப்பார்மன்ட்க்கு பெரிய அவமானம் , சீக்கிரம் தூக்குங்க என எஸ் பி கூறவும் அவர்கள் தேடுதல் பணிக்காக விடைபெற்று கிளம்ப எத்தணிக்கும் போது ஒரு கால் எஸ்பிக்கு வந்தது.
ஆள் அரவமற்ற அந்த பழைய இடிந்த பாலத்தின் கிழ் ஒரு டெட் பாடி இருப்பதாக, விறகு வெட்ட போனவர்கள்ள ஒருத்தர் தகவல் கூறவும்
முத்தையன் அந்த இடத்திற்கு புறப்பட்டார்…
வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை பொக்லைன் உதவியுடன் அகற்றி வைக்கப்பட்டு இருந்தது அதில் உள்ள கிளைகளை விறகு க்காக ஓடித்துவருவது வழக்கம் அப்படி செல்லும்போது தான் இந்த பாடியை பார்த்ததாக கூறப்பட்டது
காஜா” என்னையா இது தலைவலிக்கு மேல தலைவலி என் ஸ்டேஷன்லதான் கொண்டு போடணுமா என நொந்துக்கொண்டார் முத்தையன்.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாடி அப்புறப்படுத்த பட்டது.
சரி காஜா கமிஷனர் வீட்டுக்கு வண்டிய விடு என்னனு பாப்போம் கூறவும்
ஒருமணி நேர பயணத்தின் பின்பு கமிஷனர் வீட்டை யடைந்தனர்.
ஈவினிங்க நாலு மணியளவில்
இறுதி ஊர்வலத்திற்காக ஐஜி, எஸ் பி என அனைவரும் வருகை தந்திருந்தனர்
கமிஷனர் உடல் சவப்பெட்டி யில் வைக்கப்பட்டிருந்தது அஞ்சலி செலுத்திய பின் குண்டுகள் முழங்க காவல் துறையினரால் மரியாதை செய்யபட்டு அடக்கம் செய்யப்பட்டது.
ஐஜி இன்னும் 24 மணி நேரத்தில அக்யூஸ்ட் எனக்கு தெரிஞ்சாகணும் இல்ல உங்கள தொலைச்சிருவேன் என கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
எஸ் பி முத்தையனைப்பார்த்து “பாத்தியா என்ன பண்ண சொல்ற சீக்கிரம் விசாரணை ஆரம்பி என அவரும் சென்றுவிட
முத்தையணும் இரண்டாவது பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வாங்க மருத்துவமனை சென்றார்..
இரவு 11 மணி ட்ரெயின் திருநெல்வேலி ஸ்டேஷனை வந்தடைந்தது.. ஆதி அவனது லக்கேஜ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வர ஊரே மயான அமைதியாக இருந்தது…
அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் போய் விசாரித்தால் ஆட்டோ ஓடாது என ட்ரைவர் கூறவும்
ஏன் என்னாச்சு என ஆதி வினவினான்.
அந்த சாதிக்காரங்க இரண்டு பேர இந்த சாதிக் காரங்க வெட்டி ட்டாங்க வண்ணாரப்பேட்டை பக்கமெல்லாம் போக முடியாது என கூறவும்.
சரி பக்கத்தில் ஹோட்டல் எதேச்சும் இருக்குதான் பாப்போம் என அவன் பார்த்துக்கொண்டே நடக்க தொடங்கினான்
அந்த நேரத்தில் ஒரு பெண் ஒடிவர தூரத்தில் ஐந்து தடியர்கள் அந்த பெண்ணை துரத்தி வருவதைக்கணடு அந்த பெண் அருகில் வந்ததும் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.
அந்த பெண்ணுக்கு பயத்தில் கிழ் மூச்சு மேல் மூச்சு வாங்க
வந்த தடியர்களில் ஒருவன் அவளை இழுக்க வரவும் ஓங்கி காதோடு ஒரு அடி வைக்கவும் சுருண்டு விழுந்தான்….
ஆதியை பார்த்து மிரண்டவர்கள் தெறித்து ஓடினர்..
அந்த நேரம் பார்த்து ரோந்து பணியில் உள்ள காவல்துறை வாகனம் ஒன்று நடந்து செல்லும் இவர்கள் அருகே வந்தது.
ஏய் எந்த ஊரு இந்நேரத்தில் இங்க என்ன பண்ற என விசாரிக்க..
ஆதி தான் யாரென்பதையும் இங்க நடந்த வற்றை யும் கூறவும்
சாரி சார் வந்ததும் மரியாதை இல்லாம பேசிட்டேன் ஏறுங்க பக்கத்தில் ஹோட்டல் இருக்கும் இடம் கூட்டிட்டு போறேன் என கூறவும்
தேங்க்ஸ் சார் போலிஸ்காரங்கனா ஒரு மாதிரி என நினைச்சு ட்டு இருந்தேன்.. என்ன மன்னிச்சிருங்க என கேட்கவும்,
விடுங்க சார் இது பழகிடுச்சு என சலிப்பு டன் கூறினார்
மேலும் யாரோ ஒருசிலவங்க பண்ற தப்பினால டிப்பார்மன்ட்க்கு கெட்ட பேரு என பேசிக்கொண்டே செல்லும் வழியில் ஹோட்டலும் வந்தது…
ஆதி இறங்கிக் கொண்டே சரி மேம் நா வரேன் சார் உங்கள ட்ராப் பண்ணிருவாங்க என கூறினான்….
அந்த பெண்ணு ம் சரியென்பதாய் தலையை ஆட்ட
ஜீப் கிளம்பியது……….
ஜீப் தெருமுனையைய கடந்தது….
அந்த முனையில் இதற்காகவே காத்திருந்தவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஒப்படைக்க, அவர்கள் அந்த பெண்ணை இழுத்துச்சென்றனர்.
காலை எட்டு மணி அளவில் ஹோட்டலை விட்டு வெளியேற செல்லும் போது நியூஸில் இளம்பெண் கற்பழிக்கபட்டு கொலை என ஓடவும் கூர்ந்து பார்த்தால் இரவு அவன் கூட வந்த பெண்…
ஆதி பெண்பார்க்கும் படலத்தை பார்ப்பானா இல்லை ???கொலை செய்தவர்கள் யார் என கண்டுபிடிப்பதில் இறங்குவானா???
கதை எப்படி போகுது னு கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ🙈
Intresting
Nice
வாவ்…. வெரொ, வெரி இன்ஸ்ட்ரெஸ்டிங்.
Hero la🤣so kuttram nadathathu enna
ஆதி சாதாரணமா நம்பி ஒரு பொண்ணை ஒப்படைச்சிட்டு போய்ட்ட பாரு என்ன நடந்திருக்குனு😏😏😏😏😏உனக்கு எல்லைல மட்டுமில்லை நாட்டுக்குள்ளயும் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு😌😌😌😌😌வதுவோட பாடிகார்ட்ஸ் கிட்ட வாங்குவனவனுங்க திரும்பி வருவானுங்களா🤨🤨🤨🤨🤨🤨கமிஷ்னரைக் கொன்னவங்களையும் காரணத்தையும் கண்டுபிடிக்கப்படுமா🤔🤔🤔🤔🤔🤔