காலையிலே அந்த கிராமத்திற்கு வருகை தந்திருந்தாள்..கலெக்டராக இல்லாமல் நார்மலாக புளூ கலரில் ஜீன் ம் சாண்டல் கலர் டாப்ஸ் ம் அவளின் அழகை மேலும் மெருகேற்றியது …
கண்களில் கூலர் அணிந்து கொண்டு வந்தவளை பார்க்க ஒரு கூட்டமே வந்திருந்தது…
வாங்கம்மா! வாங்க !என அவளை அன்போடு அழைத்து ஒரு நாற்காலியில் அமர வைத்தார் காளியம்மா.
“என்ன எல்லோரும் அப்படி பாக்குறீங்க நானும் மனுஷிதான் உங்கள்ல ஒருத்தி தான்.சும்மா எல்லாரையும் வந்து பார்த்துட்டு போலாம்னு வந்தேன். உங்க ஊர்ல வந்தவங்களுக்கு ஒரு காபி டீ லா குடுக்க மாட்டீங்களா, இல்ல உங்கள்ல ஒருத்தி யா என்ன ஏத்துக்கலையா? என உதட்டை பிதுக்கிக்கொண்டு கேட்கவும்,
ஏய் !!அங்க என்னடி பாத்துட்டு இருக்க! நம்ம வீட்டு புள்ள வாயத்தொறந்து காபி கேட்குது ஒருத்தியாச்சும் நகருதான்னு பாரு என முனியசாமி கூறவும்,
நா ஒரு கேனச்சிறுக்கி வந்தவகளுக்கு ஒன்னும் குடுக்காம இருக்கேன் பாரு என தலையில் அடித்தவாரே உள்ளே சென்று,
கருப்பட்டி சுக்கு தட்டிபோட்டு காபி எடுத்து வந்தார்.
இல்ல ம்மா எங்க வீட்ல எல்லாம் குடிப்பிகலா! நீங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சுருக்கீக அதான் யோசனை என தலைய சொறிந்தவாரே கூறினார்.
அந்த காபியை ரசித்து குடித்துக் கொண்டிருக்கும் போது
ஒரு ஏஞ்சல் அவளை எட்டி பார்த்து மறைந்துகொள்வதாக இருந்தது…அவளை தன் அருகே அழைத்தவள் தூக்கி மடியில் அமர வைத்தாள். தனக்கு அளித்த காபி யை கீழே வைத்து இன்னொரு கோப்பை வாங்கி ஊதி குடுக்க அந்த குட்டி ஏஞ்சல்ம் சுவைத்தது அந்த மொழு மொழுவென இருந்த அந்த குழந்தையை பார்க்கும் போது ,அவளுக்கு தன் கடந்த காலம் நினைவுக்கு வந்தது..
தன் தாத்தா வோடு வாழ்ந்த நாட்கள்…..
தாத்தா!!…..தாத்தா!!…பசிக்குது
என்றபடி அந்த சிறுமி தன் தாத்தாவை தேடிக்கொண்டு வந்தாள்…
“அட பொம்மு இந்தா வந்துட்டேன் டா….
இந்தா இந்த காபி தண்ணிய குடி
உனக்கு தான் டா சமைச்சிட்டு இருக்கேன் இன்னும் செத்த நேரத்தில சாப்பாடு ரெடி”… இரவு நேரத்து க்கான உணவை சமைத்துக் கொண்டிருந்தார்…..
தாத்தா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல மேஜிக் ஷோ நடக்குது தாத்தா எல்லாரும் 2 ரூபாய் கொண்டு வர சர்மிளா டீச்சர் சொன்னாங்க”எனக்கு காசு வேணும் என்று அந்த சிறுமி கூறவும்….
என் கிட்ட இல்லை யே பொம்மு காசே இல்ல அந்த முருகேசு கிட்ட தான் பத்து ரூபாய் கடன் வாங்கியாந்தேன்…என்று தன் இயலாமையை அந்த பெரியவர் கூறவும்….
சரி தாத்தா பரவாயில்லை நா பெரிய படிப்பெல்லாம் படிச்சு கலெக்டர் ஆகி எல்லா பிள்ளைங்களையேம் ஃப்ரியா கூட்டிட்டு போவேன்….மழலை மாறாமல் கூறவும்…. தன் பேத்தியை அணைத்துக் கொண்டார்…..
நல்லகண்ணு தாத்தாவுக்கு ஒரே மகன் நடராஜன்…. ஒரு கோயில் திருவிழா போயிட்டு வரும் போது ஒரு விபத்தில் மனைவி மரகதம், பையன், மருமகள் என தன் மூன்று உயிர்களை பறிகொடுத்துவிட்டு……..
தங்கள் அன்றாட வாழ்விற்கு போராடும் மக்கள் ரோட்டோரத்தில் ஒரு குடிசை போட்டு தங்கியிருந்தனர் அந்த குடிசை களுக்கு மத்தியில் தானும் ஒரு குடிசை அமைத்து தன் பேத்திய கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்….. அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள் விண்ணுலக தேவதை போல் மின்னும் ஒரு குட்டி இளவரசி “முத்துலட்சுமி”
………
அந்த இடத்திற்கு ஒரு ஜீப் வந்து சாலையை தேய்த்து கொண்டு நின்றது…….
அதிலிருந்து ஒரு கடா மீசையோடு இறங்கி வந்தார்.. அந்த பகுதி இன்ஸ்பெக்டர் ஹரிஹரன்……
குடிசை பகுதியை நோக்கி வந்தவர் எல்லோரையும் அழைக்க….
என்னப்பா!!நம்ம இடத்துக்கு போலீஸ் வந்திருக்கு, என ஒருவரை யொருவர் பார்த்து கொண்டு
போலிஸ் க்கு பயந்து அனைவரும் வந்து குழுமி இருக்க!!
ஏண்டா பஞ்ச பரதேசிகளா!!உங்கள தங்க இடம் கொடுத்து இருந்துக்கோங்கணு விட்ட பெரிய வீட்லயே கை வைப்பீங்கலா… ஒழுங்கா எடுத்த நகை யெல்லாம் குடுத்துருங்க இல்ல மொத்தமா தூக்கிட்டு போய்..தொலைச்சிருவேன்னு ஆவேசமாக ஹரிஹரன் கத்தவும்!!
“அய்யா ! நாங்க வயித்துபொழப்புக்காக சின்ன புள்ளைங்க விளையாட்டு சாமான் விக்கிறோம் நாங்க எதுக்கையா பெரிய வீட்டுக்கு போகப்போறோம் உங்களுக்கு எதும் தெரியாதது இல்ல “னு பெரியவர் கூறவும்…….
எனக்கே பாடம் எடுக்க வந்துட்டியானு எட் வயது வித்தியாசம் பாராமல் அந்த கொடூரன். மிதிக்கவும் எட்டி போயி விழுந்தார் அந்த பெரியவர்…..
மறுபடியும் அடிக்க எத்தனிக்க….
அப்பா !!அலறிக்கொண்டு வந்தாள் ஒரு இளம் மங்கை ,
எங்களுக்கு எதும் தெரியாது சார் எங்க அப்பாவ அடிக்காதீங்க என காலில் விழவும் ….
காலில் விழுந்த அந்த பெண்ணின் ஆடை விலகி இருக்க
அந்த ராட்சசனின் கண்களில் காம அரக்கன் குடியேறவும் ….. அவளின் தலைமுடியை கொத்தாக பிடித்து உன் கிட்ட தான் முதல்ல விசாரிக்கணும்னு தர தர வென தன் ஜீப் ல் ஏற்றி இழுத்துக்கொண்டு போனான்………..
…….
ம்மா!! ம்மா!! கையில காபி வச்சிகிட்டு என்ன யோசனை என காளியம்மாள் லேசாக தோளைதட்டவும்,
ஹான்!என நினைவு வந்தவளாக காபியை சுவைத்து குடித்தாள் …
அம்மா திடுதிப்பென வந்திருக்கீங்கலே என்ன விஷயம்மா?? என காளியம்மா வினவினார்.
ஒன்னுமில்லமா ! இந்த கிராமம்
இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லாம இருக்குதே அது ஏன்? இங்க நல்ல ஸ்கூல் இருந்தா என்ன ஒரு வாட்டர் டேங்க் இருந்தா என்ன இன்னும் பல திட்டங்களை செய்யலாம்னு தோணுச்சு அதான் பாத்துட்டு போகலாம்னு
அங்கிருந்த வர்களில் ஒரு பெண்மணி ஒருவர் மனு மாதிரி ஒன்றை நீட்டவும்,
இப்ப தான சொல்லிருக்கேன் உங்கள் ல ஒருத்தியா பாருங்கனு என கூறவும்,
அந்த பெண்மணி கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வரத் தொடங்கியது.
நாற்காலியில் அமர்ந்திருந்தாள் எழுந்து ஓடிவந்து அந்த பெண்மணியை தாங்கினாள்.
என்னாச்சுமா??ஏன் அழறீங்க ? சொல்லுங்க மா என்னாச்சுமா ??என தேற்றவும், இந்த ஊர்ல நாங்க பக்கத்தில இருக்குற பட்டாசு ஆலையில காலையில இருந்து இரவு வரை வேலை பாத்தாதான் எங்களுக்கு அன்றாட சாப்பாடே
அப்படி இருக்கும் போது என் பதினான்கு வயது மகள் ஸ்கூல் எல்லாம் போகல என்கூட வேலைக்கு வந்துருவா போன வாரம் நடந்த தீ விபத்தில் கருகி இறந்து ட்டா ஆனா அது தீ விபத்து இல்ல மினிஸ்டர் மகன் பண்ற அட்டூழியம் தான்… ஆனா அந்த மிருகத்துக்கு யாரோ ஒரு புண்ணியவான் தண்டனை கொடுத்து எங்க நம்பிக்கை பாப்பாத்தி இருக்கார்… இங்க உள்ள ஒவ்வொரு குடும்ப த்திலும் வயசுக்கு வந்த புள்ளைங்க தீ விபத்தில் இறந்து போயிடுது இவங்களை எதிர்க்கவும் எங்களுக்கு தைரியம் இல்ல இதுக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் அவங்க கிட்ட காசு வாங்கிட்டு கண்டுக்காம போயிருவாங்க முதன் முதலில் எங்களோட உக்காந்த அதிகாரி நீங்கதான் மா எங்களுக்கு இந்த அரக்கன் கிட்ட இருந்து முழு விடுதலை வாங்கி தாங்க ம்மா என கேட்கவும்..
அய்யோ அம்மா அது என் கடமை உங்க பொண்ணு மரணத்திற்கு கண்டிப்பாக நியாயம் கிடைச்ச மாதிரி எல்லாம் மாறும்…
ஹலோ….. என்னாச்சு இன்னும் லொகேஷன் வரல இன்னும் என்ன பண்றீங்க என சிடு சிடு வென பேசவும்
இந்தா வந்துட்டோம் மேடம் என பவ்யமாக போனை வைத்துவிட்டு
சதாசிவத்திற்கு போன் போட்டு சொல்லலாமென நினைத்துக்கொண்டு
ஹலோ சார் நா முத்துக்குமார் பேசுறேன் சார்
“எந்த முத்துக்குமார் ஹான் சொல்லு ,நா என் மருமகன பறிகொடுத்துட்டு உக்காந்துருக்கேன் உங்களுக்கு விளையாட்டு ****போச்சா வேலை போகும் னா குடும்பத்தோட தாமிரபரணி ஆத்துல விழுந்து சாவுங்க ஏண்டா எனக்கு போன் போட்டு ஏன் உயிர ஏன் வாங்குற என கிழித்து எறிந்தார்” சதாசிவம்
டேய் அந்த சிறுக்கி அங்க வந்திருக்காலாம்..
அய்யா !அம்மா புள்ளைங்களாம் வந்துருக்கும் போது அந்த அக்கா(சதா வோட இரண்டாவது சேனல்) வர சொன்னா நல்லா இருக்காது என.. வலதுகை கூறவும்
இங்க வாடா என அருகில் அழைத்து காது கிழிய ஒரு அறை விட்டார்…
நா அந்த கலெக்டர் சிறுக்கிய காலி பண்ண சொன்னா நீ என்ன காலி பண்ண பாக்குறியா.. போ போய் சொன்ன தை செய் கலவரத்தில் முடிஞ்ச மாதிரி முடிச்சு விடு என சொன்னவுடன்
நாலு கார்களில் தடியர்கள் கிளம்பினர். .
ப்ரியா ஒவ்வொரு வரிடமும் குறைகள் அனைத்தும் கேட்டு விசாரித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில VAO வந்திருந்தார்…
மேடம் என தயங்கிய படியே கொஞ்சம் தனியா பேசணும் என கூறவும்
இங்கயே பேசலாம் மிஸ்டர் முத்துக்குமார் நம்ம மக்களோட சர்வண்ட் தான் அவங்க கிட்ட ஒழிவு மறைவு வேணாம் என ப்ரியா கூறிவிட்டு, இங்க ஸ்கூல் ஏன் இல்ல தண்ணீர் வசதி இல்ல ரோடு சரியா இல்ல ஏன் இந்த மக்கள் மட்டும் அடிமையா ஏன் இப்படி கொத்தடிமைகளா நடத்துறீங்க என கேள்விகளால் வறுத்தெடுத்தாள்.
இல்ல மேடம் இது நா இங்க வாரதுக்கு முன்னாடியே நடக்குது டிரான்ஸ்பர் மிரட்டல் னு சொல்லும் போது நாங்க மட்டும் என்ன செய்வோம் நானும் புள்ளக்குட்டிக்காரன் மேடம் என கூறினார்..
யூ ஷட் டப் உங்க அலட்சியம் இவங்க வாழ்வாதாரத்தை மொத்தமா பாதிச்சிருச்சு பாத்திங்கலா இந்த பிஞ்சு முகத்தை படிக்க வேண்டிய வயசுல பட்டாசு கம்பெனியில , ஆமா இந்த குழந்தை தொழிலாளர் சட்டம் எல்லாம் எங்க சார் அதுவும் உங்க கடமைதான,
ஷீட் கவுண்ட்ரஸ் ஒரு ஊர என்ன பண்ணி வச்சிருக்கீங்க மிஸ்டர் முத்து என கடும் கோபத்தில் கத்திக்கொண்டுருக்கவும்
அங்கு ஹார்ன் சத்தம் பெரிதாக கேட்டது தூரத்தில் காற்றை கிழித்துக்கொண்டு நாலு கார்களும் வரிசையாக வர
முத்துக்குமார் முகத்தில் புன்னகை தவழ!
டேய் இவள காலி பண்ணுங்கடா என கத்தி கம்பு என ஆயுதங்களை தூக்கிக்கொண்டு வந்தனர்.
அடிக்க வந்தவர்களில் ஒருவன் கத்தியை எடுத்து ப்ரியா வயிற்றில் குத்த……
எல்லாம் திகைத்துப்பார்க்கவும்……….
கதை எப்படி போகுது னு கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ🙈🙈🙈
வாவ் சூப்பர்…! பட், ரெகுலரா வர மாட்டேங்குதே.
Superb going good
சூப்பர்ங்க..