மறுநாள் வழக்கம் போல அலுவலக்கதிற்கு சென்ற அவள் தனக்கான ஃபைல் களை பார்க்க தொடங்கினாள்.
அந்த நேரத்தில் ஒரு பெண்மணி அலுவலகத்திற்கு வந்து மனு குடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களிடம் போராடிக்கொண்டிருந்தாள்.
ஐயா தயவு செய்து இந்த மனுவ அந்த அம்மாகிட்ட கொடுத்துடுங்க என ஒரு பெண் அந்த ஊழியரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
அந்த ஆள் அந்த பெண்ணை பார்த்து எத்தனை தடவை சொல்றது இங்க எல்லா வரக்கூடாது என கூறி அந்த பெண்மணியை பார்க்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்.
அக்கணம் பைல்கள் பாத்துக்கொண்டிருந்தா ப்ரியாவிடம் உதவியாளர் வந்து பக்கத்தூரிலிருந்து ஒரு ஆள் பாக்க வந்திருப்பதாக கூறவும் சரி ” வர சொல்லுங்க என கூறினாள்.
“வணக்கம் மா” என கரம் கூப்பி மரியாதை தெரிவித்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் குமாரசாமி வாத்தியார் வயது ஒரு ஐம்பது வயதிருக்கும்
நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன் என்று தகவல்களை தெரிவித்துக் கொண்டு தான் வந்ததற்கான காரணங்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்
ஒரு அரைமணிநேர அவர் கூறவதையெல்லாம் கேட்டு கொண்டு
சரி “என்னால முடிஞ்சத நா பண்றேன் ” என ப்ரியா கூறவும் அவர் மிகுந்த மகிழ்ச்சி யோட வெளியேறினார்..
அவர் வெளியேறவும் அந்த கிராமத்தின் VAO வை வந்து பாக்க சொல்லுங்க என தனது உதவியாளரிடம் தெரிவித்தாள்
சரி …வர சொல்கிறேன் மேடம் என வெளியேறி சென்றவர் VAO விற்கு அழைக்காமல் வைத்தியநாதன் கூட இருப்பவனுக்கு அழைத்தான்.
ஹலோ ராஜரத்தினம் மா நா கலெக்டர் ஆபிஸ் ல இருந்து பேசுரேன் அந்த அம்மா VAO வந்து பாக்க சொல்லிருக்கு கூடுதலா அந்த வாத்தியும் வந்து போயிருக்கு னு தகவல் தெரிவிக்கவும்
அவன் வைத்தியநாதனிடம் தெரிவிக்க இந்த வாத்தி கக்கு அவ்வளவு தைரியம் வந்துடுச்சா “டேய் அந்த வாத்தி நம்ப குடோனுக்கு கொண்டுவந்து கை கால முறிச்சி விடுங்கடா என கட்டளையிடவும்
சரி என அல்லக்கைகள் கிளம்பி சென்றனர்.
வந்தவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கிய அவரை தூக்கி க்கொண்டு ஊர் எல்லையில் உள்ள பழைய வெடிமருந்து ஆலைக்கு கொண்டு சென்றனர்
அங்கு அவரை கட்டிப்போட்டு நையப்புடைத்தனர் உயிரோட இருந்தாதான எங்க அய்யாவுக்கு எதிர்த்து கேள்வி கேட்ப என கோபத்துடன் அருகிலிருந்த கட்டையகொண்டு ஒங்கியவாரு வந்தான்.
—–
இது ஒரு புறமிருக்க….
சுற்றிலும் பனைமரங்களும் வயல் வெளிகளும் வாழைத்தோப்புகளும் நிறைந்த சாலையில்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
இந்த பாடலை பாடிக்கொண்டே முனிஷ்வரன் தனது சைக்கிள் மிதிக்க
அடேயப்பா எம்ஜிஆர் பாட்டு பாட்டு தான் அதுல உள்ள சுகம் இப்ப உள்ள பாட்டுக்கு வருமா என முனிஷ்வரனின் நண்பர் அவரும் சைக்கிளை மிதித்துக்கொண்டே கூறிவும்..
ஆமா கந்தா இப்ப ஒரே கால கைய ஆட்டுரானுங்க..கேட்டா அதான் புதுசா வந்த ஆட்டமாம் என் பேரப்புள்ள வேற ஒரே குதியாட்டம் வீட்ல.
நின்னு கேட்டா ஒரே கெட்ட வார்த்தை யா இருக்கு என சலிப்பு டன் கூறிக்கொண்டே தங்களது அன்றாட பணிக்கு சென்றுகொண்டிருந்தனர்
இவர்கள் இருவரும் அருகில் உள்ள கிராமத்துக்கு பால் ஊத்த செல்பவர்கள்
ஊர் எல்லையை அடையும் தருவாயில் முனிசு ஒரு நிமிஷம் நில்லு வந்துடுறேன் என சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க அந்த குப்பை கிடங்கு பக்கம் நெருங்கினான்
அருகில் கிடந்த அந்த சாக்குமூட்டையிலிருந்து ஒரு வீச்சு வருவதை கண்டு முனிசு” இங்க வாயேன் இங்க ஏதோ ஒன்னு இருக்கு “என கூறவும்
“இந்த கறிக்கடக்காறனுங்க பாக்குற வேல கந்தா கழிவ பூரா இங்க வந்து கொட்டி ஊர பூரா நோக்காடாக்குறாருங்க(நோய்) என கூற,
“இல்ல முனிசு வேற என்னமோ இருக்கு நீ பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் குடுத்துட்டுவா” என கந்தன் கூறவும்
“வேணாம் கந்தா நமக்கு இது வேண்டாத வேல நம்ம அன்னாடகாச்சி நம்ம பொழப்பு போயிரும் வா போலாம்” என கையை பிடித்து இழுத்து சென்றான்.
அவரவர் தங்களுக்கு தெருக்களுக்கு சென்றனர் கந்தனுக்கு மனசு உறுத்தவே பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்கு சென்றான்..
ஐயா! ஐயா! என அந்த பெரிய வீட்டின் வாசலிலிருந்து சத்தம் போட
யாருப்பா அது என கேட்டுக்கொண்டே வெளியே வந்தார் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் சுந்தராஜன்
என்ன கந்தா இங்க வந்துருக்க? எதும் விஷேஷமா ?மாடு எதும் ஈனிருக்கா? சீம்பால் எதும் கொண்டுவந்துருக்கியா? என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக !
ஐயா! நம்ம ஊர் எல்லையில் இருக்குள்ள அந்த குப்ப மேட்ல எதோ கிடக்குய்யா
பெரிய சாக்குமூட்டையில சந்தேகமா இருந்துச்சு அதான் இன்னும் யாருக்கும் பால் கூட ஊத்தல உங்க கிட்ட ஒடியாந்தேன் என கந்தன் கூறினான்
“சரி கந்தா நீ போய் வேலையப்பாரு” நா என்ன னு பாக்குறேன்னு உள்ளே சென்று சட்டையை அணிந்துக்கொண்டு வந்தார்
வந்தவர் இன்னும் அவன் கிளம்பாததைக்கண்டு கோபம் கொண்டவராய் “டேய் +++;* போடா போயி பொழப்ப பாரு என அர்ச்சனை களை தொடுக்க
அவன் கிளம்பி சென்றான்.
தனது வேலைக்காரனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் என்னதான் இருக்கு என பார்வை யிட
அவர் வரும் நேரத்தில் வானம் தனது படுக்கைய விட்டு எழும்பி தனது போர்வை யை சுருட்டிக்கொண்டு கிளம்பியது
“டேய் அது என்னானு பாரு ” என தனது வேலைக்காரனை ஏவ அவனும் அருகில் சென்று அந்த மூட்டை யை உந்து பார்க்க
ஐயா யாரையோ கொன்னு இங்க வந்து போட்ருக்கானுங்கய்யா என கத்தவும் அவரும் அருகே வந்து பார்த்து விட்டு க
சுந்தரராஜன் அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்
சிறிது நேரத்தில் …..
போலிஸ் ஜீப் வந்து நின்றது அதற்குள்ளாக ரிப்போர்ட்டர்களும் வந்து நின்றனர்
ஜீப் லிருந்து கொட்டாவி விட்டுக் கொண்டே இறங்கினார் முத்தையன் இன்ஸ்பெக்டர் மற்றும் காஜாமுகைதின் ஏட்டு மற்றும் சில காவலர்களும் இறங்கினர்
சார் இந்த கொலைக்கான மோட்டிவேஷன் என்ன செத்தது யாரு யாரு இங்க வந்து போட்ருப்பாங்க என கேள்விகளை தொடுத்துக்கொண்டே போனாள் அந்த இளம் யுவதி ஹரிணி
எம்மா எம்மா இரும்மா நீ பாட்டுக்கு அடுக்கிட்டே போற எங்களுக்கு முன்னாடி உங்களுக்கு தகவல் சொல்லிடுறாங்க நீங்க பாட்டுக்கு போலிஸ் தூங்குகிறது னெ நியூஸ் ல சொல்லிடுறீங்க என கொட்டாவி விடவும்
அவள் அவரை ஏறிட்டு பார்க்க
சரி இருமா வந்துடுறேன் சில (procedure) முறைகள் லா இருக்கு நா பாத்துட்டு வந்துடுறேன் என கூறிக்கொண்டே அந்த இடத்திற்கு சென்றார்.
யோவ் காஜா ஆம்புலன்ஸ் சொல்லியாச்சா என கேட்டுக்கொண்டே
அந்த கூட்டத்தை நோக்கி சென்றார் முத்தையன்
சரி இத யாரு முதல் ல பார்த்தது என கேட்க சுந்தரராஜன் கந்தன் வந்தது தனக்கு தகவல் தெரிவித்தது என அனைத்தையும் தெரிவிக்க
எவனாச்சும் எங்கயாச்சும் கொன்னு என் தாலி அறுக்க இங்க வந்து போட்ருவான் இனி யாரு என்ன லொட்டு லொசுக்குனு தேடி அலையணும்னு சலித்துக் கொண்டே அடுத்தகட்ட நடவடிக்கை க்கு தயாராகிக்கொண்டிருந்தார்
காஜா அந்த பொண்ண கூப்டு” என கூறவும்
காஜா அந்த நியூஸ் ரிப்போர்ட்டரை அழைத்து க்கொண்டு வந்தார்
இது யார் என்னனு விசாரணை போயிட்டு இருக்கு சீக்கிரம் கண்டுபிடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ரிப்போர்ட்டர்க்கு தெரிவித்தார்…
”ஆமா பாப்பா நாங்க வாரதுக்கு முன்னாடி நீ வந்துட்டியே எப்படி ?”
“உனக்கு தெரியக்கூடாதுனு தான உன் மம்மி கிட்ட சொல்லிட்டு வந்தேன் அதுக்குள்ள உனக்கு யாரு சொன்னது
“டேட் நீங்க போலிஸ் நா ரிப்போர்ட்டர் எப்பவும் நாங்க தான் பர்ஸ்ட் இருப்போம்’னெ சொல்லவும்
டேய் காஜா உன்ன நா உரிச்சு உப்பு க் கண்டம் போட்டா என்ன பார்வையில் முறைத்துவைத்தார்
“சரி கிளம்பு காலேஜ் க்கு டைம் ஆகுதுல்ல அப்பா வர லேட் ஆகும் என தனது மகளை கிளப்பிவிட்டிருந்தார்
காஜா என்ன ட்ராப் பண்ணிட்டு நீ போய் சீக்கிரம் கிளம்பி வந்துடு நம்ம எல்லா ரிப்போர்ட்ம் தயார் பண்ணிட்டு எஸ் பி ஆபிஸ் போகணும்” என இருவரும் தயாராகினர்….
பத்து அளவில் இருவரும் டாக்டர் அறையில் இந்த கேஸ் பற்றி கேட்டுக் கொண்டிருந்தனர்
டாக்டர் விவரித்துக்கொண்டிருந்தார் வயது ஒரு ஐம்பது வயது இருக்கும் “முகத்தை அடிச்சு உடைச்சிருக்காங்க
கை கால் நாகமெல்லாம் பிடுங்கிருக்காங்க அப்புறம் அவரோட பிறப்புறுப்பு பாதி அறுக்கப்பட்டு அதில் மிளகாய் தூள் கொட்டிருக்கு
இதெல்லாம் உயிரோட இருக்கும் போதே நடந்துருக்கு” என டாக்டர் கூறவும்…
முத்தையனுக்கு அந்த ஏசியிலும் வியர்த்து கொட்டியது…
“பக்கத்து ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணிடு எதும் மிஸ்ஸிங் கேஸ் எதும் இருக்கானு பாரு” என கூறிவிட்டு எஸ்.பி-க்கு போனில் அழைப்பு விடுத்து தகவல் சேகரித்ததை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
சார் அது யாருனு தெரிஞ்சிருச்சு என சத்தமிட்டுக் கொண்டே ஒடி வர……
-தொடரும்.
கதை எப்படி போகுது னு சொல்லிட்டு போங்கோ
Nice yar athu ethukaga ippadi panirukanga
ஒருவேளை, அந்த வாத்தியாரா இருப்பாரோ…??
ஒருவேளை, அந்த குமாரசுவாமி வாத்தியாரா இருப்பாரோ…??
எவ்வளவு கொடூரம்!!… யாரா இருக்கும்?
Interesting
உங்களது முத்தான கமெண்ட்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் 🥰🥰🥰 தொடரந்து ஆதரவு தாருங்கள் 🥰🥰🥰
Enna paavam pannano ippadi konu potu irukanga oru velai innun thodarumo🧐
ஒரு ஆசிரியருக்கே இவ்வளவு மோசமான நிலைமையா😵😵😵😵😵அப்போ இவனுங்களோட இத்தனை வருஷத்து அதிகாரத்துல எத்தனை பேரோ…..எவ்வளவு கொடூரமான மரணமோ🙄🙄🙄🙄🙄🙄யாரால இதெல்லாம் மாறப் போகுதோ….நம்ம கலெக்டர் இதை என்னனு கவனிப்பாங்களா இல்லையா🤷♀️🤷♀️🤷♀️🤷♀️