Skip to content
Home » என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ -10

என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ -10

ஆதி அதிர்ந்து பார்க்க !!அது வேறு யாருமல்ல  ரயில்வே ஸ்டேஷனில்  ஒரு பெண்ணை போலிஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தான் அல்லவா  ஒரு போலீஸ் ஒருத்தர் அவர்தான்  கணேசமூர்த்தி .

கொன்றுவிடும் அளவிற்கு கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கி கொண்டு இருந்தான்.

இப்படி பேசிட்டு இருந்தா எப்படி??பொண்ண வர சொல்லுங்க  என  உட்கார்ந்து இருந்தவர்களில் ஒருவர் கூறவும்,

சற்று நேரத்தில்  ,மாலதி வந்து “ஒரு பொம்பள பெறுக்கிக்கு என் தங்கச்சி கிடையாது “எல்லாரும் வெளியே போங்க என கத்தினாள்.

ஏய் !!வாரத்தை அளந்து பேசு! அண்ணன் பொண்ணு னு பாக்குறேன் இல்ல நாக்க இழுத்து வச்சு அறுத்துருவேன்.யார பாத்து பேசுற என் புள்ள தங்கம் டி உங்களுக்கு புடிக்கலைனா  முன்னாடி யே சொல்ல இருக்கணும் நாலு பேர் முன்னாடி இப்படி நாக்கழுகி  போற மாதிரி பழிய தூக்கி போடுறியே !! நீ விளங்குவியா உன் குடும்பம் நல்லா இருக்குமா??என கத்த தொடங்கினார்.

முருகன் கடும் கோபத்தோடு…..

என்னடி சபையில என் மகளபாத்து சாபம் விடுற, என் தங்கச்சியாச்சே!உன் புள்ள ஊரவிட்டு போயி எங்க எப்படி இருந்தாலும் பரவாயில்லை என் தங்கச்சி முண்டச்சியானாலும் கவுரவம் பாக்காம  என பெண்ணை கட்டி வைக்க சம்மதிச்சா என் புள்ளையே  சாபம் விடுறியா !!வெளியே போங்க என அடிக்க வரவும்,

ஆதி எட்டி கையை பிடித்தான்..

எங்க அம்மா க்கு தம்பி னு பாக்குறேன். இல்ல நீ பேசுன பேச்சுக்கு தலை இன்னேரம்  ரோட்ல  விழுந்து ருக்கும் என எச்சரித்தான்.

நல்லா இருக்குப்பா !! நல்லா இருக்கு!! ஒரு தாய் மாமன் னு பார்க்காம சட்டைய புடிக்கிறியே இது சரிதானா ??என கூட்டத்தில் பெரியவர் ஆதியை அடக்க முயற்சித்தார்…

தாய் மாமனா? இவரா?  இவ்ளோ நேரம் எங்கய்யா  போன என் அம்மா வ தப்பா பேசும் போது? ,இன்னொரு உண்மைய சொல்றேன் கேளுங்க!   எங்க அப்பா மிலிட்டரி ல இறந்த போது வந்த பணம் அவ்வளத்தையும்  தங்கச்சி தங்கச்சி பின்னாடி வந்து வாங்கிகிட்டு  எங்கள நடுத்தெருவில விட்டவர்  தான? இவரெல்லாம் பெரிய மனுஷன் அவர் பொண்ண தரதும்  தாரததும் அவர் இஷ்டம்  ஆனா எங்க அம்மா மேல கை வச்சான்  குடல் சரிஞ்சிடும் என கோபத்தில் ருத்ரமூர்த்தியாய் நின்றான்.

எலேய்!!!!  போலிஸூ  அந்த பொண்ணுக்கு நடந்தது க்கும் உனக்கும் சம்பந்தம் இருந்துச்சு னு தெரிஞ்சது நீ செத்தடா! என கூறிவிட்டு வெளியேறினான்.

ஏய்யா ! நீ எதும் நினைச்சுக்காத சாமி என சரோஜா ஆதியை சமாதான படுத்திக் கொண்டே வர

பெரியம்மா அதெப்படி அத்தனை பேர் முன்னாடி பேசலாம் ஆதாரம் காமிக்க முடியுமா அண்ணா பேசாம வந்துடுச்சு, இல்ல அந்த டோரிக் கண்ணன்  கண்ண நானே நோண்டிருப்பேன். என ரவி தன் பங்குக்கு கத்தவும்,

டேய் !பேசாம வாடா  அவர் லாம் ஒரு ஆளுனுகிட்டு ம்மா  நீ சொன்னது க்காக வந்துட்டேன் இனி நானா சொல்றவரை பொண்ணு அது இது னு சொன்ன பாத்துக்க என கூறிவிட்டு விறு விறு என சென்றுவிட்டான்…

சிறிது நேரத்திற்கு முன்பு…

மாலதியும் அவளது கணவனும் வந்திருந்தனர் உள்ள சென்ற  அவர் ஆதி யை பார்த்து திகைத்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு இந்த கல்யாணம் நடந்தா எப்படியும் நம்மை மாட்டி விட்டுடக்கூடும் என நினைத்து
மாலுமா” இவர்தான் மாப்ளையா  ……. சரி விடு “என்னங்க சொல்றீங்க  ” மாலதி கேட்கவும்

இல்லமா  அப்புறம் பேசிக்கலாம்  என நழுவப்பாரக்கவும் ,
இப்ப சொல்றீங்க ளா? இல்லையா என கண்களை உருட்ட…

இல்ல ஒரு வாரத்திற்கு முன்னாடி ஒரு பையனும் பொண்ணும் லாட்ஜ் ல ட்ராப் பண்ணேன்  மிட் நைட்ல அது இந்த யைனா  இருப்பான் னு நினைச்சுக்கூட பாக்கல இருந்தாலும் மாமா இந்த ஊர்ல செல்வாக்கா வாழ்ந்தவர் அத நினைச்சு தான் மனசு உறுத்துது என மெதுவாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவும்,

வெகுண்டவள் ஆதி மீது வீண் பழி சுமற்றி நிச்சயத்தை நிறுத்தி விட்டாள்…

. . ..

ரஞ்சித் ன் கார் வேகமாக வந்து அந்த இடத்தை வந்தடைந்தது. முத்து எங்க? என கேட்டுக் கொண்டே கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைய…. ஷிட்  என அந்த கான்கிரீட் சுவற்றில் குத்தினான்.

வெளியே வந்து ,”காளிங்கா  அய்யா வை நா சொல்கிற இடத்துக்கு கூட்டிட்டு வா எதும் சொல்லாத ” என கூறிவிட்டு போனை அணைத்தான்.

அதற்குள்ளாக பாடி ஜீ எச் க்கு கொண்டு செல்லப்பட்டது.
ரஞ்சித், முத்தையன், காஜா  அனைவரும் பார்மாலிட்டிஸ் முடித்து காரில் ஜீ எச் கிளம்பினர்…

ஒரு மணி நேரத்தில்   தகவல் பெறப்பட்டு சிட்டி யே ஸ்தம்பித்தது. திறந்திருந்த  கடைகள் அடித்து  நொறுக்கப்பட்டது.பேருந்துகள் தீக்கிரையாக்க பட்டுஆங்காங்கே சட்ட ஒழுங்கு சீர் குலைக்கப்பட்டது… செய்வதறியாது தயங்கி நின்றனர்…

ஐஜி கத்த தொடங்கினார் என்ன நடக்குது??இங்க டெய்லி ஒரு கொலை முக்கியமான விஐபி பார்த்து பார்த்து கொலை பண்றாங்க நாம என்ன பண்ணிட்டு இருக்கோம்  ரஞ்சித், ஐயம் சாரி சீக்கிரம் குற்றவாளிகள படிக்க பாருங்க என தனது அறையில் மீட்டிங் கில் டிப்பார்ட்மண்ட் ஆளுங்களை  வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.

மினிஸ்டர் மகன் என்பதால் விரைவாக பாடி ஒப்படைக்க பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தோட்டத்தில் சதாசிவம் , ரஞ்சித், சில காவலர்கள் அனைவரும் துக்கத்தை தாளாமல் மதுக்கின்னங்களை வயிற்றில் சரித்துக்கொண்டிருந்தனர்

டேய் !என்ன போலீஸ் டா நீ???எம் மருமகன கொன்னவனை  பிடிக்க முடியல உனக்கு  எதுக்கு டா கமிஷனர்  யூனிபார்ம் எங்கயாச்சு ம் வாட்ச்மேன் வேலைக்கு போடா என வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார்..

கோபம் தாளாமல்  அந்த கண்ணாடி டீ நா வின் மீது குத்த சல்லி சல்லியாக நொறுங்கியது…

“போடா கோபத்தை என்கிட்ட காமிக்காம அந்த *காமி” என கூறவும்

நாற்காலியை எட்டி உதைத்து விட்டு கிளம்பினான்…

இங்கு ஸ்டேஷனில்…..

இந்தா பாரும்மா ” நீ பொண்ணு உன்னால கோர்ட் கேஸ் னு அலையமுடியாது  அப்படியே கேஸ் போட்டாலும் சாட்சி அது இது னு போட்டு நிம்மதி இல்லாம பண்ணிருவானுங்க… உன் நல்லது க்கு தான் சொல்றேன் டா தற்கொலை னு கையெழுத்து போட்டு இத க்ளோஸ் பண்ணிருவோம். அவனுங்கள கடவுள் பாத்து ப்பான்.. என் பொண்ணா  நினைச்சு சொல்றேன்மா ” என எட்டு கனகராஜ் வித்யா விடம் கூறிக் கொண்டிருந்தார்…..

எங்கள மாதிரி மனுஷங்களுக்கு பாதுகாப்பே இல்லையா??நாங்க இந்த பூமியில  சபிக்கபட்டவங்களா…. சட்டம் காப்பாற்றும் நினைச்சு தான இங்க வர்றோம் நீங்களே சட்டத்த விக்குறீங்களே நாங்க எங்க போவோம் என மனம் உடைந்து தேம்பி தேம்பி அழவும் ..

விடு வித்யா !!இவனுங்க காசு வாங்கிட்டு இப்படித்தான் பேசுவானுங்க நம்ம குடுத்து வச்சது  அவ்வளவு தான் என  ஹாஸ்டல் வார்டன் ஆறுதல் கூறி அழைத்து சென்றாள்..

வித்யா விற்கு அழுது அழுது கண்ண எல்லாம் தடித்து இருந்தது..

ஏம்மா  !!இந்த பாடி யார் வாங்க வந்தாங்க என அந்த ஆள் கூறவும் வார்டணும்  வித் யாவும் கையொப்பம் இட்டு பெற்றுக்கொண்டனர்.

வித்யா” சின்ன வயசுல இருந்து ஒன்னா இருந்தோமே  இப்படி விட்டு போயிட்டியே டி நா என்ன பண்ணுவேன். நீ இல்லாத இந்த உலகத்தில  எப்படி இருப்பேன். அய்யோ என் தங்கம் விட்டு போயிருச்சே ” என கதறி அழும் வித்யா வை காண்போரை யும் கண்கலங்க வைத்தது.

சிறிது நேரத்தில் பொது மயானத்தில் தகனம் செய்யபட்டது.

இதையெல்லாம் தூரத்திலிருந்த கவனித்துக் கொண்டிருந்த ஆதி ஒரு முடிவெடுத்தவனாக  அங்கிருந்து கிளம்பி சென்றான்..

யோவ் !நெடு மரம்  யோவ்! இந்தா பாருயா!! என்ன  நாம கூப்பிட கூப்பிட போயிட்டே இருக்கான்.என நினைத்தவள்  ஒரு குட்டி கல்லைத் தூக்கி அவன் மீது வீசி எறிந்தாள்.

என்னடா நம்மேல விழுது என நினைத்தவன்  திரும்பி பார்க்க அவள்.

என்ன பாப்பா ஸ்ஸ்ஸ்கூல் போகலையா  என நக்கல் தொனியில் கேட்க,

நா ஒன்னும் ஸ்கூல் போற பொண்ணு இல்ல காலேஜ் செகண்டியர் படிக்கிறேன்.

ஓ சரி இங்க என்ன பண்ற  காலேஜ் போகாம? அது வேற ஒன்னுமில்ல  அவ என் ஃப்ரண்டுதான் .நானும் அவளும் ஒரே நியூஸ் சேனலில் தான் ஒர்க் பண்றோம் இப்ப அவ இல்ல.. அவசர பட்டு சூசைட்  பண்ணிகிட்டா  என சோகமாக கூறவும் , “அந்த பொண்ணு சூசைட் தான் பண்ணுனா  அது உண்மை அப்படித்தான “என பதில் ஆதி கேட்கவும்,

கொஞ்சம் யோசித்தவளாக ஆமா ல்ல அவ என்ன விட தைரியசாலியாச்சே இருங்க எல்லா வெளியே கொண்டு வரேன்…

இத த்தான் மொதல்ல கண்டுபிடிக்கிறோம் என தீர்மானம் பண்ணி கொண்டே” உங்க நம்பர் குடுங்க மிஸ்டர் நெடு மரம்” என கேட்கவும்

“அடுத்த டைம் நம்ம மீட் பண்ணினா நா நம்பர் தரேன்” என பதிலளித்து விட்டு நடந்தான்..

அதெப்படி சார்! மர்டர் நடந்தத தற்கொலைனு கேஸ முடிப்பிங்க??போனில் பேசியவாரே  வந்த முத்தையன்

இது என்னோட ஸ்டேஷன் ராபின் இது என்னது என்ன பண்ணி வச்சிருக்க ??

என்கிட்ட கேட்காம நீயா எப்படி டிசிசன் எடுக்கலாம் என முத்தையா எல்லோரையும் லெப்ட் ரைட் வாங்கி கொண்டிருந்தார்.

ராபின் ” சார் இது கமிஷனர் தான் இது முடிக்க சொன்னது அப்புறம் அந்த பொண்ணு அனாதை சார் இப்படியே விட்டு லாம் சார் ப்ளீஸ் கண்டுக்காதிங்க” ன வற்புறுத்தி ஒத்துக்க வைக்கவும்,

யோசித்த வராக  காற்றை மாசு படுத்தும் வண்ணமாக சிகரெட்டை எடுத்து வாயில் பத்தவைத்தார்….

கதை எப்படி போகுது னு கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ

3 thoughts on “என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ -10”

  1. பொண்ணு பார்க்க போன இடத்தில தான் தகராறு ஆகிட்டு..இந்த காலேஜ் பொண்ணையாச்சும் கோபக்கார நெடுமரம் கூட சேர்த்து வைப்பீங்களா….வித்யாவை எதிர்த்து நிக்க விடாம போக வச்சுட்டாங்க…சாதாரண மனுசங்களுக்கு சட்டம் சாதகமா இருக்காது, அலைய வச்சே கொன்றுவாங்க அதுவே காசு இருந்தா உடனே முடிச்சு குடுப்பாங்க…உண்மையான சமூக நிலவரம்…அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *