Skip to content
Home » என் வாசம் நீ உன் சுவாசம் நான் -13

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -13

அத்தியாயம்-13

Thank you for reading this post, don't forget to subscribe!


மறு நாள் காலையில் அவளிடம் இருந்து அழைப்பு வந்தது.
“குட் மார்னிங் சார்! எங்க இருக்கீங்க? “
” குட் மார்னிங் சந்திரா! இங்க ஆபிஸ்ல தான் இருக்கேன், சொல்லுங்க என்ன விஷயம்?”. எதையோ கணினியில் தீவிரமாக பார்த்துக் கொண்டே சொன்னான்.
“சார் நீங்க கொஞ்சம் பிரீயா இருந்தா இங்க *ஹாஸ்பிடல் வரைக்கும் வர முடியுமா ?”
“என்னாச்சு சந்திரா நீங்க நார்மல்தானே?” குரலில் படபடப்பு தெரிந்தது.
“சார் சார் ! நான் நார்மல்தான். பட் இங்க ஒரு பெரியவருக்கு AB நெகடிவ் பிளட் தேவைப்படுது. அதான் உங்களால குடுக்க முடியுமான்னு! “
“இதை முதல்லயே சொல்லக் கூடாதா ? எந்த இடம்?”
கேட்டுக் கொண்டு அவசரமாக காரைச் செலுத்தினான்.
காரை விட்டு இறங்கும்போதே சந்திராவுக்கு அழைத்து கூறி விட்டான்.
காரை நிறுத்தி விட்டு ஓட்டமும் நடையுமாக சென்றவன் உடனடியாக ரத்தம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தான். அங்கே சந்திரா காத்திருந்தாள்.
“குடுத்துச்சா?”
அவர்கள் கொடுத்திருந்த ஜூசை உறிஞ்சியபடியே” ம் “கொட்டினான். இவன் கையில் பிளாஸ்டர் போட்டிருந்த இடத்தை லேசாக தொட்டுப் பார்த்தாள் ” வலிக்குதா ?”
“ம்!” சொல்லிக் கொண்டே பாக்கெட்டை குப்பை தொட்டியில் போட்டு விட்டு இருவரும் வெளியில் வந்தனர்.
” நீ என்ன இங்க ?”
“எனக்கு இங்கதான் டெலிவரிக்கு டாக்டர் பாக்கறோம். அதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ நர்ஸுங்க வந்து அவசர அவசரமா ஏ பி நெகடிவ் கிடைக்குமான்னு கேட்டுட்டுருந்தாங்க. அதே சமயம் டிவி லையும் போட்டாங்க. அதான் உங்களுக்கு கால் பண்னேன்” .
“யாருக்காம் ? அவங்ககிட்ட கேட்டீங்களா?” சந்திரா தான் கேட்டாள் .
” ம்” கேட்டேன். யாரோ ஒரு பெரியவருக்காம் . இன்டெர்ஸ்டைன்ஸ்ல ஏதோ ஆபரேஷன். சடன்னா இன்டெர்னல் ப்ளீடிங் ஆக ஆரம்பிச்சுடுச்சு அதான் நிறைய ப்ளாட் தேவைப்படுது. நாங்க வச்சுருந்தது தவிரவும் தேவைப்படுது. அதான் டிவி லையும் போட்டிருக்கோம் உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தாலும் சொல்லுங்கன்னு சொன்னாங்க, விளக்கினான் சூர்யா.
” ஆனா அவங்க பேமிலி மெம்பர்ஸ் யாருக்காவது இருக்குமில்ல ?” சந்திரா தனது சந்தேகத்தைக் கேட்டாள் .
” மே பீ “! தோளைக் குலுக்கினான் ஆடவன்.
” சரி!” நீங்க கிளம்புங்க. எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் ஆகும். நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்.”
“ஓகே ! உன் கூட யாரு இருக்கா ?”
“நான் தனியாத்தான் வந்தேன்”
” வாட் ” அவன் குரலில் கோபம் தெறித்தது.
“இல்ல! காயத்ரிக்கு உடம்பு முடியலன்னு அம்மா அவளோட இருக்காங்க. அப்பா வேல விஷயமா வெளியூர் போய் இருக்கார்.
“உன்னோட ஹஸ்பண்ட் இல்ல மாமியார் வீட்டுலேர்ந்து யாரையாவது கூட்டிட்டு வந்துருக்கலாமில்ல?”பதில் பேசாமல் நின்றாள். அதன் அர்த்தம் அவர்கள் யாரும் வரத் தயாராக இல்லை என்று இவன் நினைத்தான்.
“இல்ல வேற ஒரு நாள் வர வேண்டியது தானே?” அவன் முகம் கடுகடுவென இருந்தது.
“வா !”சுள்ளென கத்தினான்.
பயந்துதான் விட்டாள் பெண்ணவள்.
மகப்பேறு மருத்துவம் தனியாக அமைந்திருந்தது.
அந்த பிளாக்கிற்கு இருவரும் மெதுவாகச் சென்றனர். வேண்டுமென்றே இப்போது அவள் கையை அவன் பிடிக்கவில்லை.
கோபத்தில் இருந்தாலும். வீணாவிற்கு அழைத்து “அன்று அவன் வர மாட்டான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்” என்று சொல்லி விட்டான்.
“சார்! எனக்காக நீங்க ஆபிஸ் போகாம இருக்க வேணாம். நீங்க போங்க”.
அவன் முறைத்த முறைப்பில் இவள் பக்கென வாயை மூடிக் கொண்டாள் .
இவர்கள் சென்று அமர்ந்துக் கொண்டார்கள்.
“சூர்யா !”
அவள் அழைப்பில் இவன் திரும்பினான். எப்போதுமே அவள் சார் என்றுதான் அழைப்பாள்.
வெகு சில தருணங்களைத் தவிர.
“இது எனக்கு பழக்கப் பட்ட இடம்தான். ஆட்டோல வந்துட்டு ஆட்டோல தானே போகப் போறேன். அதான் யாரும் இல்லனாலும் பரவால்லன்னு. இது சமாதானமா? சால்ஜாப்பா?”
அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மனம் மட்டும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தது .
இவள் மறு வார்த்தை பேசுமுன் மருத்துவர் இவளை அழைத்தார்.
” குட் ஆப்டர் நூன் மேம் , ஹொவ் ஆர் யூ ? ” பாங்காய்ப் பேசியவனை ஆர்வத்துடன் பார்த்திருந்தாள் சந்திரா.
அவளை மருத்துவரும் பார்த்தார். லேசாக புன்னகை சிந்தியவர் ,
“வாங்க உள்ளே தனி அறைக்கு அழைத்துச் சென்றார்”.ஸ்கேனை பார்த்துக் கொண்டிருந்தார் மருத்துவர் .
சந்திரா ” மேம்! அந்த டாக்டர் இல்லையா?” எனக் கேட்டாள் .
“நோ மா! ” அவங்க ஒரு டெலிவரில மாட்டிக்கிட்டாங்க. கொஞ்சம் க்ரிட்டிக்கல்கேஸ் . அதான் நான் பார்க்க வந்தேன்.
அவளை நன்றாக பரிசோதித்தவர்,
“பரவால்லயே! இப்போ பிபி கொஞ்சம் குறைஞ்சுருக்கு! பட் இன்னும் நார்மல் ஆகல. வெய்ட் ஏறணும்.குழந்தை நார்மலாதான் இருக்கு. இப்போ நாள் ஆகிடுச்சு. நீங்க இனிமே செக்ஸ் வச்சுக் கூடாது” என்றார் மருத்துவர் சூர்யாவிடம்.
ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு இன்னும் கோபம் ஏறியது.
” யாராவது கூட வந்தாங்கன்னா அவங்கள புருஷன்னு நினச்சுடுவீங்களா? நான் இவங்க பிரண்டு. தனியா இருக்காங்களேன்னு கூட வந்தேன்” சொல்லி விட்டு வெளியில் சென்று விட்டான்.
மருத்துவருக்கு முகம் வெளிறி விட்டது.
“சாரி மேடம்! பொதுவா ஹஸ்பண்ட் தான் வருவாங்க. அதான்” மருத்துவர் விளக்கம் அளித்தார்.
“இட்ஸ் ஓகே டாக்டர். நாந்தான் சாரி சொல்லணும்.”
“நீங்க உடம்ப பார்த்துக்கோங்க. இந்த டானிக்கை சாப்பிடுங்க. நல்லா வாக்கிங் போக ஆரம்பிக்கணும்.” சொல்லி விட்டு இவளது பைலை இவளிடம் அளித்தார். மெதுவாக வெளியில் வந்தவளுக்கு அவனை எதிர் கொள்ளவே பயமாக இருந்தது.
“போலாமா?” சந்திராவின் குரல் வெளில வந்ததா ? அவளுக்கேத் தெரியவில்லை.
ஏனோ சந்திராவின் கணவன் மீது கோபம் கோபமாக வந்தது சூர்யாவுக்கு. மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனைக் கொட்டிக் கொண்டிருந்தான்.
கண்கள் சிவந்து உண்மையான அக்னி நட்சத்திர சூரியனைப் போலவே இருந்தான் சூர்யா.
“சந்திரா”
“ம்!”
” இனிமே உங்க வீடு ஆளுங்கள கூட்டிட்டு வா. இல்லனா சொல்லு ஆபிஸ்லேர்ந்து ஆயாவை அனுப்பறேன். அதுவும் இல்லையா எங்க அம்மாவையாவது அனுப்பறேன். உங்க அம்மாவுக்கு செய்ய முடியாததை எங்க அம்மா செய்வாங்க” சுளீரென்று வார்த்தைகள் கொட்டின.
“அவளுக்குத் தெரியாதா? அத்தை இருந்திருந்தால் தான் ஏன் இப்படி அனாதையாக இருக்க வேண்டும்?”
வழக்கம்போல தலை குனிந்தாள்.
“சரியா?” அவனின் உயர்ந்த குரல் அவளுக்கு பழக்கம் இல்லை. தூக்கி வாரிப் போட்டது.
பயத்தில் அவளை போலவே அவள் குழந்தைக்கும் தூக்கிப் போட்டது போலும். சிறு அதிர்வு வயிற்றில் தெரிந்தது. அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன்னிடம் இருந்த தண்ணீரை குடித்து தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டாள் .
கோபத்தில் இருந்தவனுக்கு, இப்போது பயமும் பதட்டமும் சேர்ந்தது.
“சந்திரா! சாரி! சாரி! நீ ஆல் ரைட்டா? “
“ம்!” லேசாக தலையை ஆடியவள் அடுத்த மிடறு தண்ணீர் குடித்தாள் .
“வரியா டாக்டர் பாக்கலாம் ? நர்ஸை கூப்பிடவா? ” அவன் குரலில் பதட்டம் இருந்தது.
காத்திருங்கள் என்று கையை காட்டினாள்.
இழுத்து மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்தினாள் . அப்போதும் மனதில் ஏதோ ஒரு படபடப்பு இருந்தது.
“சூர்யா !”
“என்ன சந்திரா ?”
ஏனோ அவன் அவள் வயிற்றில் கை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. பொதுவாகவே கர்ப்ப காலத்தில் சாதாரணமாக, இயல்பாக கணவன் மனைவிக்குள் நடப்பதுதான். இவள் தான் வேறு மாதிரி அல்லவா?
எத்தனையோ முறை ராகவ் உரிமையாக வந்து அவள் வயிற்றில் கை வைக்க வருவான் தான். அப்போதெல்லாம் கத்தி திட்டி அவனை வெளியில் அனுப்புவாள். அப்படியும் அடங்காதவன். திரும்ப திரும்ப வருவான்.
அவளை பின்னிருந்து அணைப்பான் . வயிற்றில் முத்தமிட வருவான். கேட்டால் என் குழந்தை என்பான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையும் அவன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவளுக்கு நெருப்பின் மீது இருப்பதைப் போலவே இருக்கும். இவளுக்கு பிபி ஏறுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.
இதை தந்தையிடம் சொல்லவும் பயமாக இருந்தது. ஏனெனில் இது தங்கையின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அப்படியே சொன்னாலும் தந்தையால் என்னதான் செய்ய முடியும்? கண்டிப்பாக தாயும் நம்பப் போவதில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே நாட்களை கடத்தி கொண்டிருந்தாள். முதலில் சீண்ட ஆரம்பித்தவன் 5 மாதங்கள் ஆனதும் அவன் தாயுடன் ஐந்து வகையான உணவுகளுடன் வந்திறங்கினான்.
அனைவரின் முன்பும் அவளுக்கு உணவு ஊட்டினான். இவள் தந்தை உட்பட அனைவருக்குமே அது தவறாகப் படவில்லை. மறு நாளே இவளுக்கு புடவை வாங்கி வந்தான். அலுவலகத்தில் இருந்து வந்தவளுக்கு பின்னோடே இவள் அறைக்கு வந்தவன்,
“இங்க பாரு சந்திரா! இந்த புடவை உனக்கு” என்று இவள் தோளில் போட வந்தான். அவனின் வேறு மாதிரியான எண்ணம் தெரிந்தவள் சட்டென விலகி நின்றாள்.
“எனக்கு புடவைலாம் வேண்டாம். முதல்ல தள்ளி நில்லுங்க”……..இப்படியாக அவனை விலக்கி நிறுத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள் இன்று தானே வெட்கதை விட்டு சூர்யாவிடம் இப்படி ஒரு கேள்வி கேட்க காரணம்?……
இருக்கிறது. தனக்கென்று யாரும் இல்லை என்ற அவளது சுய பச்சாதாபம் தான். அவளுக்கு தேவையான அன்னையின் அன்பும் கவனிப்பும் இருந்திருந்தால் அவளால் எதையும் சமாளித்திருக்க முடியும்.
“நோ! சந்திரா நான் முடியாது” தீர்மானமாய் சொன்னான்.
கண்களில் குளம் காட்டியது.
“சரி! என்ன ஆட்டோ ஏத்தி விடுங்க. நான் போய்க்கறேன் ” அவனின் ஒதுக்கம் அவளுக்கு தனிமையில் அழ வேண்டும் போல இருந்தது. அப்போது அவளுக்கு சரி, தப்பு எதுவும் தெரியவில்லை.
நானே வீட்டுல விடறேன். இவனுடன் காரில் ஏறி அமர்ந்தவளுக்கு ஏனோ சரியாக அமர முடியவில்லை. இவள் நெளிவதை பார்த்தான்.
“சந்திரா வேண்ணா ஹாஸ்பிடலுக்கு போகலாம்”
” இல்ல பரவால்ல என்று அவள் சொன்னாலும் அவனால் அவளை பார்க்க முடியவில்லை. காரை ஓரம் கட்டினான்.
அவன் எதிர்பாராத நேரத்தில் சட்டென அவன் கையை எடுத்து இவள் வயிற்றில் வைத்துக் கொண்டுவிட்டாள் . அதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் குழந்தையும்தான் அவனைத் தேடியதோ? இவன் கை பட்டதும், அந்த இதமான குளிர்ச்சியில் இவளுக்கு பதட்டம் குறைய ஆரம்பித்தது. மெதுவாக தலையை சாய்த்துக் கொண்டாள் . சூர்யாவுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. முதலில் கையை வைக்க மாட்டேன் என்றுக் கூறியவனால் , குழந்தை உதைப்பதை உணர முடிந்தது. அந்த நிமிடங்கள் அவனுக்கு தான் யார் சந்திரா யார் இந்த குழந்தை யாருடையது என்பதெல்லாம் நினைவில் இல்லை. மனம் முழுவதும் ஏதோ ஒரு இனம் தெரியாத புது அனுபவம், உணர்ச்சி அவனுக்கே தெரியவில்லை…………

4 thoughts on “என் வாசம் நீ உன் சுவாசம் நான் -13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *