பாகம்- 20
விமான நிலையத்திற்கு செல்லும் சூர்யா அன்னையிடமிருந்து தப்பித்து ஓடலாம். அவனின் மன உறுத்தல்? அவனைச் சும்மா விடுமா? கால் டாக்சியில் ஏறி அமர்ந்தவனுக்கு என்னதான் கண்ணை மூடி அமர்ந்தாலும் அவளே வந்து நின்றாள்.
“என்ன கைய புடிச்சு இறக்கி விட மாட்டிங்களா?” மிரட்டினாள். கடற்கரையில் ஒட்டி நின்றிருந்தாள். அவன் மிச்சம் வைத்தத் தண்ணீரை குடித்தாள். அவனின் வெற்றிக்காகச் சந்தோஷமாய் கேக் சாப்பிட்டாள். ஏதேதோ எண்ணங்கள். மனம் அலைக்கழித்தது.இன்னொருத்தனின் மனைவி எப்படி தன்னை உரிமையுடன் அழைக்க முடியும்?. தந்தை இறந்தபோது எப்படி வந்து நின்றாள்? ஏதோ ஒன்று சந்திராவிடம்…. யோசித்து பார்த்தவனுக்கு அவளின் காதலும் ஏக்கமும் கலந்த பார்வை, அதோடு கழுத்தில்
‘எஸ்! அதைஎப்படி மிஸ் பண்ணேன்? அப்படின்னா அவ என்ன மட்டும்தான் கணவனா நினச்சுருக்களா? டாக்டரும் அன்னிக்கு ivf குழந்தைதான்னு சொன்னாங்களே? யாருக்காக இந்தக் குழந்தை? உனக்கு என்ன பிரச்சனை?எதுக்காக என்னை அவளோ ஹார்ஷா திட்டிப் படிக்க அனுப்பின? அவ அப்டி பேசி இருக்கலைன்னா நான் ஒரு சாதாரண ஆளா தானே இருந்திருப்பேன்’ புரியாத பல விஷயங்கள் லேசாகப் புரிந்தது. தான் செய்தது தவறு என்பதும் நன்றாகவேப் புரிந்தது. அவள் என் மனம் கவர்ந்தவள் மட்டும்தானா? இல்லை! அவளுக்கு என்னைப் பற்றிய புரிதல் இருந்தது. நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனக்காக, என் அன்னைக்காக யோசிப்பவள். நான்தான் அவளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் ஏன் அவளைப் பேச விடல? எல்லாமே என் தப்புதான். உடனே அவளைப் பாக்கணும். மன்னிப்பு கேட்கணும். அவளால் என்னோட சூடு சொல் தாங்க முடியாது’ சூரியனுக்கு இப்போது தான் ஞானம் பிறந்தது. இதோ மாயாவிடம் பேசி விஷயத்தை அறிந்து கொண்டவன் ஓடி ஓடி வந்து நிற்கிறான் தன்னவளுக்காக. தன் உரிமையைத் தேடி.
சந்திராவின் கையைப் பிடித்துக் கொண்டு சாரா என்ற அழைப்புடன்.
ஏனோ இந்த ஒரு அழைப்புக்காகத் தன்னையே அர்ப்பணித்து ஏங்கிக் காத்திருந்தவள் அவன் பல முறை அழைத்தும் கண் திறக்கவில்லை. காரணம் அவன் மட்டுமா? வாழ்க்கை கொடுத்த பல அடிகள் தானே காரணம்? ஆனால் தான் மட்டுமே காரணம் என்று நினைத்தவன் கண் கலங்கி நின்றிருந்தான். அவள் இல்லை எனறால் அவனால் எப்படி வாழ முடியும்? அவள் இல்லாத வாழ்வு பயமாக இருந்தது. அவள் வேண்டும். பொக்கிஷமாக உள்ளங்கையில் மூடி வைத்துக் கொள்ள வேண்டும். மனம் ஏங்கியது. அவளின் கலைந்திருந்த தோற்றம், வீங்கி இருந்த கண்கள் இவனின் சொல்லால் அவள் எத்தனை கதறி இருப்பாள் என்று அவனுக்குப் புரிய வைத்தது. அவள் கையைப் பிடித்துக் கதறினான். ம்ம் !அவள் எதற்கும் மசியவில்லை. ஜுரம் அதிகமாகவில்லை என்பது மட்டுமே ஆறுதல்.
அப்போது சட்டெனப் போர்வையை நகத்தி அவள் வயிற்றில் கைவைத்தான். குழந்தையிடம் பேச ஆரம்பித்தான்.
“நீயும் அம்மாவும் எனக்குப் பத்திரமா வேணும் செல்லம். அம்மாகிட்ட என்னை மன்னிக்கச் சொல்லுடா. சாரிடி! சாரிடி! என்னை மன்னிச்சுடுடி! எனன பெரிய படிப்பு படிச்சாலும் உன்ன படிக்காத தெரியாத முட்டாள் டீ நானு! உன்னோட சூர்யா! என்னை மன்னிச்சுடுடி! சாரி சந்திரா! சாரிடி! மீண்டும மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருந்தான்.வயிற்றின் மீதே கண்ணீர் சிந்தினான். அன்னை போலவே மகளும் சூர்யாவுக்காக ஏங்குபவள்தானே? அன்னையாக இருந்தாலும் சும்மா விடுவாளா குட்டி தேவதை! விடாமல் வேகமாக அசைந்தாள், உதைத்தாள். தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து அன்னையை எழுப்பி விட்டாள். பெரு மூச்சும் சத்தமும் சேர்ந்து கண் விழித்தாள் சந்திரா. அவள் பார்த்தது சூர்யாவின் அழுத முகத்தைத் தான். நர்ஸ் ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தாள்.
பரிசோதித்த டாக்டர், “இப்ப பரவால்ல. ஆனா டெம்ப்ரேச்சர் இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் பாக்கலாம்” என்று கூறி சென்று விட்டார். “சாரா ப்ளீஸ்” கையைப் பிடித்துக் குலுங்கி அழுதான்.
அமர்ந்திருந்தவனின் தலையைக் கோதினாள். அவளால் அவனிடம் கோபப் பட முடியாது. “என்ன கல்யாணம் பண்ணி சீக்கிரமா உங்களோட கூட்டிட்டு போறீங்களா?” தெம்பு இல்லாமல் மெல்லியதாகச் சத்தம் வந்தது. கண்களின் ஓரம் நீர் கசிந்தது. எப்படி எல்லாமோ தன் காதலை சொல்ல நினைத்தவள் இன்று இந்தக் கோலத்தில் திருமணத்திற்க்கு கேட்கிறாள்.
“எத்தனை தடவைடீ பண்ணறது?” மிரட்டுகிறானா? புரியாமல் விழித்தாள்.
“என்ன பாக்கற? இதுக்கு என்ன அர்த்தம்? அவனின் செயினை காட்டினான். சரி! இன்னொரு வாட்டி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு. இனிமே நீ எதையும் மனசுல வச்சுக்காம என்கிட்டயோ இல்ல அம்மாகிட்டயோ சொல்லிடனும்” “சரி” சந்திராவின் தலை ஆடியது. “என்னை இப்படி கொடுமை பண்ணிட்டியேடி!” குரல் திட்டிக் கொண்டிருந்தாலும் அவள் கழுத்தில் முகம் புதைத்துக் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தான். அவனின் சூடான கண்ணீர் அவளுக்குச் சங்கடமாக இருந்தது. அவனின் பயம் அவளுக்குத் தெரியும். அழுது கொண்டிருந்தவனை பார்த்துக் கொண்டே கணேசனும் சாரதாவும், ராகவனும் உள்ளே வந்தனர்.
அந்த நிலையில் சந்திராவை பார்த்த ராகவனின் முகம் பிராகாசமாய் கோபத்தைக் காட்டியது. பல்லைக் கடித்தான்.அப்போது சூர்யா அருகே இருந்தாலும் ராகவனைப் பார்த்த சந்திராவின் முகம் வெளிறியது. சூர்யாவின் கைப்பிடியை இறுக்கிக் கொண்டாள்.
கணேசனுக்கு முன்னால் அவசரமாக அடி எடுத்து வைத்த ராகவன், அவசரமாகச் சந்திராவை தொட வந்தான். சூர்யாவுடன் அவள் இருப்பது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவள் தனக்குத் தான் சொந்தம். அவசரமாக அவளை நெருங்கியவனைக் கையாலேயே தடுத்தான் சூர்யா.
அவனை அவளிடம் நெருங்க விடாமல், “என்ன மிஸ்டர்? அங்கேர்ந்தே பேசுங்க”. அவனின் ஆளுமைக்குரலில் சற்று பயந்துதான் போய்விட்டான் ராகவன்.வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை.
“நான் நான் இந்தக் குழந்தைக்கு அப்பா” குரலில் ஏன் இத்தனை தடுமாற்றம்? “ஏதோ இன்ப்ளுயென்ஸ் பண்ணி கல்யாணம் ஆகாத பொண்ணுக்கு IVF பண்ணிடீங்க. இதோ குழந்தை பொறக்க போகுது.சோ வாட் ? உங்களோட சம்பந்தம் குழந்தைக்கு மட்டும்தான். இவ என்னோட பொண்டாட்டி. மைண்ட் இட்?” விரல் நீட்டி எச்சரித்தவனை,
“என்ன விட்டா ஓவரா பேசற?” எகிறினான் ராகவ். “மரியாதையா ஒதுங்கிப் போ! இல்ல நீ பண்ண விஷயங்கள் போலிஸுக்கு போகும்.வாயில் ஜிப் போலக் காட்டி “யூ அவுட்” என்றான். போலீசுக்குப் போனால் அவன் மட்டுமா ஜெயிலுக்குப் போக வேண்டும்? அந்தச் சமயத்தில் ராகவனுக்கு யோசிக்கத் தெரியவில்லை போலும். அவன்தான் சூர்யாவின் தோற்றத்திலேயே அடங்கி விட்டானே! அவன் செல்வதையே அனைவரும் திருப்தியோடுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் சென்றதை பார்த்து விட்டுக் கணேசன், “தம்பி உங்களுக்கு எப்படி?” அவரிடமும் தடுமாற்றம் இருந்தது. அவரும் தானே இதற்கு உடந்தை? “என்ன நடந்ததுன்னு எனக்குத்தெரியாது. இவ கைப்பிடி இறுகினதுமே புரிஞ்சுகிட்டேன், மத்தபடி இன்ப்ளூயன்ஸ் பண்ணி இருக்கலாங்கறது என்னோட யூகம் தான்.” சாதாரணமாகச் சொன்னான். அவளுக்கு இது எத்தனை பெரிய விஷயம்? இந்தப் பாதுகாப்பிற்காகத் தானே எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் பெண்கள் அமைதியாகக் கணவனுடன் இருப்பது? அவள் மனம் நெகிழ்ந்தது. இந்தப் பாதுகாப்பு சந்திராவுக்கு சூர்யா கொடுப்பான். மாயாவுக்கு? சூர்யா பார்த்துக் கொள்வாந்தான். ஆனால் இவன் என்னுடையவள் என்ற உரிமை யாரால் கொடுக்க முடியும்? “நீ சாப்பிட்டியா?” யார் வவேண்டுமானாலும் கேட்க முடியும். ஆனால் ரொம்ப பசிக்குதுடி. சோறு வை” யாரால் அத்தனை உரிமை எடுத்துக் கொள்ள முடியும்?
இன்பத்தில் இன்பமாக இருப்பது யாராலும் செய்ய முடியும். அது அவள் முதல் கணவன் செய்தது. ஆனால் நம் ராஜு நிச்சயம் ஏதாவது வித்தியாசமாகச் செய்வான்.
“சூர்யா” சந்திராவின் மெல்லிய அழைப்பில் திரும்பினான். அவள் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தாள். ஆனால் அதில் இருக்கம் தளர்ந்திருந்தது. அவனை அருகே அழைத்தவள், என்ன செய்திருப்பாள்?
தொடரும்
Ipovathu love soniye intha seigailaye una purinji avana thurathitan surya apove unmaiya soli irukalam la
Thanks ma
அப்பாடா…! இப்பவாவது ரெண்டு பேரும் வெளிப்படையா லவ்வை சொல்லலைன்னாலும்
புரிஞ்சுக்கவாவது செய்றாங்களே. இது போதும். இனி அந்த ராகவ்வை தள்ளியே நிப்பாட்டனும்…
அவன் கொட்டத்தை அடக்கணும்.
ஹாஹா
Very interesting
Thanks ma
Good