பாகம்-5
அவசரமாக அவள் வண்டிக்கு அருகில் வரவும் அவனும் வேகமாக வண்டியை உயிர்ப்பித்தான்.முதலில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு கல் பட்ட இடத்தில் கடுக்க ஆரம்பித்தது. ஒன்றும் சொல்லாமல், பல்லைக் கடித்துக் கொண்டு வண்டியை ஓட்டினான். அவனின் முக பாவத்தை கண்ணாடியில் பார்த்தவளுக்குத்தான் பயமாக இருந்தது.
“கடவுளே வீட்டுக்கு போய் என்ன நடக்குமோ ? “பயந்துக் கொண்டே வந்தாள்.
“இறங்கு!” அவனின் அதட்டலில் , ஏற்கனவே பயத்தில் இருந்தவள் அவசரமாக குதித்தாள் .
இவர்கள் இருவரையும் வாட்ச்மேன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
“அண்ணா! வேண்டிய கொஞ்சம் பார்க் பண்ணிடுங்களேன். கைல கொஞ்சம் அடிபட்டிருக்கு”
சந்திராவும் அப்போதுதான் பார்த்தாள் .
வேகமாக அவன் வீட்டிற்கு ஓடியவள், பெல்லை அழுத்தினாள். அவன் வருவதற்கும் அவன் அன்னை கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது.
“வாம்மா !”
“ஆன்டி! அவருக்கு கைல அடி . சீக்கிரம்! முதல் உதவி சாமான் எங்க? ” ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது.
இதோ வரேன் வேகமாக எடுத்து வந்தார்.
“என்னடா என்னடா ஆச்சு ? “
“ஒன்னும் இல்லம்மா. அப்புறம் சொல்லறேன்”
“சட்டயை கழட்டுடா” பதட்டத்தில் இருந்தார் அன்னை.
சந்திராவை ஒரு மாதிரியாக பார்த்தான் சூர்யா. ஏனெனில், அவள்தானே அவன் சட்டை பட்டன்களைக் கழற்றிக் கொண்டிருந்தாள்? அதில் வேகமும் பதட்டமும் மட்டுமே இருந்தது.
மெதுவாக வலது பக்கத்தை கழற்றியவள் இடது பக்கத்தை கழற்ற வில்லை . அது ரத்த வெள்ளத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. அவளுக்கு பயத்தில் மயக்கமே வந்து விடும் போல இருந்தது.
‘சீ! எல்லாத்துக்கும் நான் தான் காரணம். அடிப்பட்ட எடம் எப்படி இருக்குன்னு கூட கேட்கல. இவ்ளோ ரத்தம் வந்திருக்கு. நான் ஏன் பாக்கல?மனசுல எதை எதையோ யோசிச்சுகிட்டு கொஞ்சம் கூட அறிவே இல்ல, இவர் சொன்ன மாதிரி’ இவள்தான் தன்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாளேத் தவிர அவர்கள் இருவரும் வாயே திறக்க வில்லை.
மகனுக்கு வலிக்காத வண்ணம் மெதுவாக துடைத்து மருந்திட்டார் அன்னை.
“ஏம்ப்பா! டாக்டர் கிட்ட போகலாமா ? “
“இல்லம்மா! வெறும் கல்லடிதான். அதோட வெளில ரொம்ப மோசமா இருக்குமா. இல்லாட்டி நானே வர வழில எங்கயாவது பார்த்திருப்பேனே ?”
“கொஞ்ச நேரம் பாக்கலாம். வீக்கம் ஏதாவது இருந்தா போய் தாம்பா ஆகணும். என்னாச்சு எப்படி அடிபட்டிச்சு?”
கேட்ட சூர்யாவின் அன்னைக்கு நடந்தது எல்லாவற்றையும் கூறினாள் சந்திரா.
“ரொம்ப சாரி ஆன்டி!” கண்களில் கண்ணீர் முட்டியது.
“எங்கையோ எவனோ கல்லடிச்சதுக்கு நீ என்னம்மா பண்ணுவ? ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு. நல்ல வேளை! ஏன்தான் மக்களோட கஷ்டத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களோ?” சொல்லிக் கொண்டே இருவருக்கும் பருக நீரைத் தந்தாள்.
“நான் கிளம்பவா ஆன்டி? வீட்டுல தேடுவாங்க”
“ஆமாம்! கிளம்புமா”.
“சரிங்க ஆன்டி!” ஏனோ மனம் அவனை விட்டு பிரிய முடியாமல் தவித்தது. இரவு முழுவதும் அவன் நினைவாக இருந்தது. சாப்பிட்டாரா ? தூங்கினாரா ? மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. பொதுவாகவே அவள் எந்த ஆண்களிடத்திலும் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. தான் ஒரு வார்த்தை பேசினால் அவர்கள் பத்து வார்த்தை பேசுவார்கள். தேவை இல்லாத பிரச்சனைகள் வரும் என்பதால் அலுவலகத்திலும், ஆண்களிடத்தில் என்ன என்றால் என்ன ! அதற்கு மேல் எதுவும் இல்லை. அதற்காக இவள் சந்நியாசி எல்லாம் ஒன்றும் இல்லை. இவன் முதன் முதலில் இவளை பார்த்தது, தினமுமே பார்த்துக் கொண்டிருப்பது, அவன் இவளை பார்த்தும் பார்க்காதது போல இருப்பது. எல்லாமே சேர்ந்து அவன் மீது அவளுக்கு ஒரு மதிப்பைத் தந்தது. கண்டிப்பாக ஈர்ப்பையும் தந்தது. அவளுக்கும் திருமண வயது அல்லவா ? இதெல்லாம் இயல்பாக வர வேண்டியதுதானே ? எல்லா சிந்தனைகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்தாள் . மறுநாள் அவன் முகத்தில் எப்படி விழிப்பது? ஆமாம் இது ரொம்ப பெரிய பிரச்சனைதான்.
மறுநாள் காலை ,
தந்தையுடன் வந்து நின்றாள். (எப்படி நம்ம ஐடியா ? )
அப்பொழுதுதான் மெதுவாக எழுந்திருந்தான் சூர்யா.
“வணக்கம் தம்பி ? எப்படி இருக்கீங்க ? இப்ப பரவால்லையா ?”
“வணக்கங்க! இப்ப பரவால்ல”
“கைய பாக்கலாங்களா ?”
“ஓ சூயூர் !”
“வலி இருக்குங்களா ?”
“ம்! கொஞ்சம் இருக்கு”
“சரி! எங்க குடுமப டாக்டர் இருக்காரு. போய் ஒரு தடவ அவரை பார்த்துட்டு வந்துடுவோம்”
“இப்ப பரவால்ல. அதெல்லாம் வேணாம்”
“என்னங்க நீங்க! இந்த சின்ன அடிக்கு டாக்டர் எல்லாம் வேணாம்”
“சரி அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல போய் முகத்தை கழுவிட்டு வாங்க. காபி சாப்பிடுங்க”
அதற்குள் அவன் அன்னை காபி கொண்டு வந்திருந்தார்.
“என்ன தங்கச்சி ? தம்பி டாக்டர் வேணாங்கறார்?”
அவர் பேசுவதை , சூர்யாவின் அன்னை பிரமிப்பாய் பார்த்தார்.
“ஆன்டி !” தோளை தொட்டாள் சந்திரா.
“ஆன்டி என்னாச்சு?”
“இல்ல!யாரும் இப்படி உரிமையா என்ன தங்கச்சின்னு சொன்னதில்லை”,
“ம்! அதெல்லாம் இருக்கட்டும். நீங்க டாக்டர் கிட்ட பேசுங்க. அட்ரஸ் குடுங்க நாங்க போயிட்டு வர்றோம்” என்றார் சூர்யாவின் அன்னை.
“என்னோட பொண்ண எவ்ளோ பெரிய ஆபத்துலேர்ந்து காப்பாத்தி இருக்காரு. சும்மா அப்படியே விட்டுட முடியுமா ? நானே கூட்டிட்டு போறேன். நீங்க வீட்டுல ரெஸ்ட் எடுங்க.”
“அதெல்லாம் பரவால்ல . நான் பார்த்துக்கறேன். நீங்க பயப்பட வேணாம்” அவர் மனதிற்குள் இருந்த பயத்தை அவன் கண்டுக் கொண்டான்.
அவரும் எதையும் மறைக்க விரும்பவில்லை.
“அதுனால இல்ல தம்பி. நேத்து நான் பண்ணி இருக்க வேண்டியதை நீங்க பண்ணி இருக்கீங்க. பெண் குழந்தைங்களை வெளில அனுப்பிட்டு பெத்தவங்க பயந்துகிட்டு இருக்கோம். நீங்க செஞ்சது உங்களுக்கு வேண்ணா சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனா எனக்கு? உங்கள எப்படிங்க அப்படி விட முடியும்? நானும் வந்து டாக்டர பார்த்தாதான் நிம்மதியா இருக்கும். நீங்க இருங்க நான் டாக்டர் கிட்ட பேசிவிட்டு வரேன்”
அவர் ஹாலுக்கு சென்றார்.
“டேய்! புரிஞ்சுக்கோடா பாவம்டா அவரு” இது அன்னை.
“ஓகே மா “
“சரிடா நான் போய் உனக்கு இட்லி வைக்கறேன்”. மெதுவாக காபியை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான். அதில் சர்க்கரை இல்லை. அதற்காக சமையல் அறைக்கு செல்ல எத்தனித்தான் .
“என்ன வேணும் ?” என்றாள் சந்திரா .
சர்க்கரை எடுத்துக் கொண்டு வந்தாள் . இவனுக்கு அளவு கேட்டு போட்டாள் . சர்க்கரையை கலக்கியவன், “என்ன மேடம் என்கிட்டேர்ந்து திட்டு வாங்காம இருக்க பெரிய சிபாரிசோட வந்துட்டாப்ல இருக்கு?”
‘அச்சோ! இவருக்கு எப்படி தெரிஞ்சுது?’ வெளியில் காட்டிக் கொள்ளாமல்,
“நான் டப்பாவை உள்ள வச்சுட்டு வந்துடறேன்” மெதுவாக நழுவினாள் . அவள் தப்பிக்காமல் கையை இருக்க பற்றினான். “
“எங்க ஓட்டம்?”
மெதுவாக தலை குனிந்து நின்றாள் . அவனுக்கே பாவமாகி விட்டது. ஆச்சர்யமாகவும்தான். எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன், இன்று இன்னொரு பெண்ணின் கையை பிடித்துக் கொண்டிருக்கிறான்.
“சரி! போனா போ. இப்போ உன்ன பார்த்தா பாவமா இருக்கு”. சட்டெனெ கையை விடுவித்தான்.
“தம்பி பேசிட்டேன். நீங்க டிபன் சாப்பிட்டு ரெடியா இருங்க. நானும் வந்துடறேன்”
“சரிங்க”
“வரேன்” என்று சொல்லக் கூட தோன்றாமல் திரும்பி திரும்பி பார்த்துக் கொன்டே சென்றாள் சந்திரா. குழந்தை போல் நடந்துக் கொள்ளும் அவளின் ஒவ்வொரு அசைவையும் மனதில் உள்வாங்கி கொண்டான் அவன்.
நல்ல வேளை, பெரியதாக ஒன்றும் இல்லை என்று விட்டார் மருத்துவர்.
அந்த வாரம் வெள்ளிக் கிழமை மாலை ,
அன்னையுடன் சூர்யாவின் வீட்டிற்கு வந்தாள் . அவன் இன்னும் வந்திருக்கவில்லை.
“வாங்க!வாங்க!” வாயார அவன் அன்னை அழைத்தார்.
“தப்பா எடுத்துக்காதீங்க. இதோ ஒரே நிமிஷம்” அவசரமாக சென்றார்.
“பரவால்லங்க !” என்றாள் சுந்தரி.
அம்மா ஒரு நிமிஷம் சொல்லி விட்டு சூர்யாவின் அன்னையின் பின்னோடே சென்றாள் சந்திரா.
அடுப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தார் அவர்.
“ஆன்டி ! என்ன பண்ணனும்னு சொல்லுங்க நான் பண்ணறேன். முதல்ல எங்கம்மாக்கு வெத்தல பாக்கு குடுங்க. அவங்கதான் சுமங்கலி. நான் கொஞ்சம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வாங்கிக்கறேன்” சொல்லிக் கொண்டிருந்த வாக்கில் சுண்டலுக்கு தாளிக்க இரும்புக் கரண்டியை அடுப்பில் வைத்தாள் . அப்படியே அடுப்பில் இருந்த பாயசத்தையும் கிளறினாள் . இன்னொரு பக்கம் முந்திரி வறுத்த முந்திரி திராட்சையை அதில் கலந்தாள் .
இவள் தாளிப்பதற்குள் சுந்தரிக்கு சூர்யாவின் அன்னை பூவைக் குடுத்தார்.
“இதோ வந்துடறேன்” சொல்லி விட்டு தயாரான பாயாசத்தையும் சுண்டலையும் அம்மனுக்கு வைத்து நீர் சுற்றினாள் சூர்யாவின் அன்னை.
அதற்குள் அழகாக ஒரு கிண்ணத்தில் சுண்டலையும் பாயாசத்தையும் தன் அன்னைக்கு வேண்டிய அளவில் தயார் செய்தாள் .
“உங்கம்மாக்கு வேண்ணா குலோப் ஜாமுன் கொடுக்கலாமா ? இது ரொம்ப சூடா இருக்கே ?”
எப்படி அவள் நிமிடத்தில் இந்த வீட்டுப் பெண் ஆனாள் ?
“பரவால்ல ஆன்டி! எது வேண்ணாலும் குடுங்க”
சட்டென்று குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குலோப் ஜாமூனை எடுத்துக் கொடுத்தார்.
இரண்டையும் ரசித்து சாப்பிட்டாள் சுந்தரி.
“ரொம்ப நல்லா இருந்துது”
அதற்குள் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் குங்குமம் மருதாணி என்று சூர்யாவின் அன்னை வாங்கி வைத்திருந்ததை வருபவர்களுக்கு கொடுக்க அழகாய் பைகளில் போட்டு வைத்தாள் .
“சந்திரா அம்மா, நான் சந்திராவை கொஞ்சம் நேரம் கழித்து அனுப்பவா ?”
“சரிங்க! நீங்க என்ன சுந்தரின்னே கூப்பிடலாம்”
சூர்யாவின் அன்னைக்கு அது ஏதோ வேறுபாடாகத் தெரிந்தது.
அதற்கு அடுத்து இரண்டு பேர் வந்தனர். அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார் சூர்யாவின் அன்னை.
பிறகு சூர்யா வந்தான்.
மீண்டும் அவர்களிடம் ஒரு நிமிஷம் என்று மகனை கவனிக்க எழுந்துக் கொண்டார்.
“நீங்க இருங்க ஆன்டி, சாருக்கு நான் பார்த்துக் கொடுக்கறேன். நீங்க இவங்களோட இருங்க” .மெதுவாக தோள் தொட்டு சொன்னாள் .
“சார்” என்று சொன்னதாலோ என்னவோ மற்றவர்களுக்கு ஒன்றும் தவறாக தெரியவில்லை.
அவன் அறைக்குச் சென்றவள்,
மெதுவாக கதவைத் தட்டினாள் . அன்னையாக இருக்கும் என்று நினைத்தவன்,
“எஸ்” என்றான் .
அவனால் கை சட்டையை அவிழ்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான். தோள் வலித் தாங்கவில்லை. வலியில் முகம் கசங்கியது.
மெதுவாக அவனுக்கு உதவி செய்தாள் சந்திரா . ஏனோ சட்டென்று அவனுக்கு தாங்கள் இருவரும் கணவன் மனைவி போலத் தோன்றியது.
“சந்திரா!”
“ம்ம் !”
“வேற யாரா இருந்தாலும் இப்படித்தான் உதவி செய்வியா?” அவன் கண்கள் அவளை ஆர்வமாகத் தீண்டியது.
கன்னங்கள் சிவக்க லேசாக தலை குனிந்து பொத்தான்களில் கவனம் வைத்துக் கொண்டிருந்தவள் என்ன சொல்லி இருப்பாள்? .
தொடரும்………
X

கன்னங்கள் சிவக்க லேசாக தலை குனிந்து பொத்தான்களில் கவனம் வைத்துக் கொண்டிருந்தவள் என்ன சொல்லி இருப்பாள்?
தொடரும்………
Tak nu surya veetu ponna Marita chandra . Next epi sikram podunga
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லிருப்பாளோ???…
Sema interesting
Nice going