Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-31

ஐயங்காரு வீட்டு அழகே-31

அத்தியாயம்-31

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

   ஷாலினி லேசாக வெட்கப்பட்டு, “எங்க வீட்ல எனக்கு அலைன்ஸ் பார்த்துட்டாங்க. மேரேஜ் டேட் பிகாஸ் ஆகிடுச்சு.” என்றதும் ஆளாளுக்கு வாழ்த்து சொல்ல கைகுலுக்கினார்கள். ரோஸ்லின் கூட வாழ்த்தினாள்.
அதை தொடர்ந்து “தாய்லாந்துல வேலை பார்க்கறார். அதனால் நானும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணணும். இந்த இடைப்பட்ட நாள்ல அம்மா வேலைக்கு எல்லாம் போக வேண்டாம், என் கூடயிருன்னு சொல்லிட்டாங்க. உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றவள் பார்வை ராவணனை தவிர்க்க கஷ்டப்பட்டது. இந்த நேரம் அவனை பார்த்தால் காருண்யா கண்ணுமுழியை நோண்டிவிடுவாளெனு அறிந்தவளே.

    “அப்பறம் நிச்சயம் ட்ரீட் வைக்காம கிளம்ப மாட்டேன். இரண்டு நாள்ல பெரிய கேரியரோட வருவேன்.” என்று நகைத்தாள்.

  ஆளாளுக்கு பிறகு அவர் பெயர் என்ன, என்ற படிப்பு என்று ஆர்வமாய் கேட்க, ராவணன் இறாலை எடுத்து சாதத்தோடு சேர்த்து விழுங்குவதை தான் காருண்யா பார்த்தாள்.

அவன் சப்புக்கொட்டி ருசிக்க, லேசான வருத்தம் எட்டி பார்த்தது.
இத்தனை நாள் தனது சமையலில் வத்தக்குழம்பு, பலாகாயில் செய்த கிரேவியில் மட்டும் இப்படி அசைப்பபோட்டதாக நினைவு சென்றது.

இந்த கதைகளில் சினிமாவில் வருவது போல அவன் தட்டிலிருந்து எடுத்து சாப்பிட்டு சமரசத்திற்கு வழி போடலாமென்றாலும், அவன் தட்டில் உள்ளது எல்லாமே அசைவமாக இருந்து தொலைக்கின்றது.
தான் ஐயங்கார், எப்படியும் வருபவனும் தன் இனத்தில் இருப்பதால் இதுபோன்ற பிரச்சனை வருமென்று அவள் நினைத்ததில்லை.

“என்ன மீன் வேண்டுமா?” என்று நீட்டி கேட்க, வேகமாய் தலையசைத்து மறுத்தாள்.

“பின்ன என் முகத்தையே பார்க்கற? இது ஆபிஸ் டீம் லஞ்ச். என்னையே பார்த்துட்டு இருந்தா என்னை மத்தவங்க ஓட்டறதுக்கா? இப்ப கிண்டல் கேலி எவன் செய்தாலும் கத்திவிடுற மோட்ல இருக்கேன். உன் தட்டை பார்த்து திண்ணு.” என்று அதட்டிவிட்டு, ‘வச்சது வச்சபடி இருக்கு. என்னையே பார்த்து சோககீதம் வாசிப்பதா பாவலா’ என்று சத்தமின்று முனங்கினான்.

மீண்டும் அலுவலகம் திரும்பினார்கள். ஆண்களில் சிலர் அப்படியே மெதுவாக சிகரெட் பிடிப்பவர்கள் அன்னநடையிட்டு கழண்டு கொள்ள, ராவணனும் அவர்களோடு சேர்ந்து வர முடிவு செய்தான்.
ராவணன் புகை மது எதுவும் தொடாததை அறிந்ததால் காருண்யா ரோஸ்லினோடு நடந்தாள்.
ஷாலினி கட்டாயத்தின் பேரில் இவர்களோடு இணைந்து நடந்தாள்.

“உங்களுக்குள் சண்டை சரியாகலைன்னு தெரியுது காருண்யா. பட் ரியலி சாரி. ராவணன் இங்க வந்தப்ப எத்தனையோ பேர் அவரை சைட் அடிச்சாங்க. நானும் சைட் அடிச்சேன். ஏன் அவர் மேல லவ் பண்ற லெவலுக்கு இன்ட்ரஸ்ட் கூட இருந்தது.
அதெல்லாம் உனக்கும் அவருக்கும் கல்யாணம் என்று அவர் பத்திரிக்கை நீட்டறவரை.
பிறகு உங்களுக்கு கல்யாணம் ஆனதும், சீ இந்த பழம் புளிக்கும்னு ஒதுங்கிட்டேன்.
அப்ப தான் வீட்ல வரன் பார்த்தாங்க. அவரும் நான்வெஜ் ப்ரியர்‌. அவருக்காக தான் என்வி சமைக்க கற்றுக்கிட்டு வர்றேன்.
அம்மா இரண்டு வருஷமா அசைவம் சாப்பிடுவதை சுத்தமா நிறுத்திட்டுட்டாங்க. அப்பாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம் என்பதால் நான் என்ன சமைச்சாலும் கொஞ்சமா டேஸ்ட் பண்ணிட்ஞு நல்லாயிருக்குன்னு சொல்வார். அது எனக்கு உண்மையான கருத்து சொல்லறாரா இல்லையானு டவுட். அதோட அப்பா இரண்டு பீஸ் சாப்பிடறார். இரண்டு பீஸுக்கு சமைக்க முடியுமா?. நான் மட்டும் சாப்பிடவும் முடியாது. அதான்… ராவணனுக்கு தினமும் ஒன்னு கொண்டு வந்து ட்ரையல் எடுத்தேன். ஆக்சுவலி இதை முதல் நாள் சமைச்சி கொண்டு வந்தப்பவே, ராவணன் என்னிடம், ‘நீ எதுக்கு எனக்கு சமைச்சி கொண்டு வர்ற? எனக்கு எதுன்னாலும் செஞ்சு தர்ற என் காரு இருக்கா’ன்னு கோபமா சொன்னார். என் நிலையை எடுத்து சொல்லவும், ‘சரி நீ சமைச்சி தா.. நான் டேஸ்ட் பண்ணி சொல்லறேன்’ சொன்னார்.

இந்த இடைப்பட்ட நாள்ல நான் தினமும் கொண்டு வந்ததுக்கு காரணம் இதான். அவரை தப்பா நினைச்சிடாத. என்னையும் தான்.
எனக்கு முதல்லயிருந்தே உன்னோட பேச பழக பயம். மூஞ்சில அடிச்சாப்ல பேசிடற.

ராவணன் நல்ல கேரக்டர்… யார் பக்கத்துல வந்து பேசி சிரிச்சாலும் மயங்கற ரகமில்லை‌. இது உனக்கு தெரியும். நீ தான் சைல்வுட் பிரெண்டாச்சே‌. இப்ப புருஷன் என்ற கண்ணோட்டத்தில் பயந்திருக்க. நீ அப்படி கூட பயப்பட வேண்டியதில்லை.
அவர் பெயர்ல தான் ராவணன். எனிவே… மன்னிச்சிடு. கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைப்பேன் நீயும் உன் ராவணனும் வரணும். ரோஸ்லின் நீயும்‌” என்று கூற, காருண்யா தலையாட்டினாள்.

காருண்யா ரோஸ்லின் அவரவரிடம் வந்து சேர்ந்தனர்.

ரோஸ்லின் தலையில் கைவைத்து, ”ஓஎம்ஜி… காருண்யா.. இவ இப்படியொரு தாட்ஸ்ல சமைச்சி கொண்டு வந்து ராவணனிடம் நீட்டுவானு தெரியாது. நீ என்னென்னவோ பேசிட்ட. அந்த ராவணன் மன்னிச்சு வரம் கொடுப்பாரா?” என்று தோளை தீண்ட, “நீ வேற ஏன் நேக்கு பயம் காட்டுற ரோஸ்லின். அவா இப்படி பிளேட்டையே மாத்திடுவானு யாருக்கு தெரியும். ராவணன் வந்ததிலருந்து என்னை தவிர எல்லாரும் சைட் அடிச்சியிருக்கேள்.” என்று கூற, ரோஸ்லினோ “ஏய்.. இப்ப அது மேட்டர் இல்ல. அவன் உன்னோட பேசி சமாதானம் ஆகற வழியை பாரு. உன்னவர் வர்றார்.” என்று நழுவியிருந்தாள் ரோஸ்லின்.

ராவணன் சிஸ்டமில் தனக்கு லாவகமாக சேரை போட்டு கணினிக்குள் தலையை விட்டான். வேண்டுமென்றே காருண்யா பக்கம் திரும்பவில்லை.

அவளுமே வேதாளம் போல வேண்டுமென்ற தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் சந்தேகமென்று ‘ராவணன் இது வரலை’ அது வரலை.’ என்று அவன் பெயரை ஜெபித்து அழைக்க, “இங்க பாரு… சும்மா நொய் நொய்னு என் பெயரை ஏலம் விடாத. சந்தேகம் வந்தா கூட இவன்கிட்ட கேட்கணுமானு நினைக்கறவ நீ. இப்ப மட்டும் என்னவாம்?
என்ன சமாதானத்துக்கு அடிதளம் போடறியா? நீ பேசிய பேச்சுக்கு… டி.. தனியாவே வாழ்ந்துப்பேன்.” என்று டிவோர்ஸ் என்ற வார்த்தையை கவனமாய் தவிர்த்தான். ஆனாலும் பேசாத விஷயம் புரியாதவள் அல்ல.

கண்ணீல் நீர்த்திரையிட திரும்பி கொண்டாள்.
”என்னை சந்தேகப்படுவாளாம் காரணம் தெரிந்ததும் சாரி கேட்பாளாம். மறந்து மன்னிச்சு பழைய ராவணனா இருக்கணுமா? இதே நான் சந்தேகப்பட்டிருந்தா மட்டும் இந்த ஆம்பளைங்க அப்படியிப்படின்னு உருட்டறது. ஆம்பளை என்னை மட்டும் சந்தேகப்படலாமா. ஏன் எங்களுக்கு வலிக்காதா?’ என்று உறுமியவனின் போன் ரிங்கானது.

“பச் இவங்க வேற… இவங்களிடம் என்னத்த சொன்ன? சும்மா போன் போட்டு சோதிக்கறாங்க. சண்டை சரியாச்சான்னு செக் பண்ணறாங்க. ஏன் ஊருக்கே டமாராம் அடியேன்” என்று திட்டிவிட்டு, போனை எடுத்து அட்டன் செய்து “வேலை நேரத்துல கால் பண்ணாதிங்கன்னு எத்தனை தடவை சொல்லறதும்மா” என்றான்.‌

ரோகிணியோ, ”ஏன்டா.. கத்தற. உனக்கு வேலை இருக்கு. எனக்கு எந்த வேலையும் இல்லை. ஒரே ஒரு பிள்ளை கல்யாணம் செய்து தனிக்குடித்தனத்துல சென்னையில இருக்க. நீயா இங்க வந்து ஆறு மாசமாகுது. உன் நலத்தை போன் போட்டு தான் கேட்க முடியுது. ஆபிஸ் பிராஜக்ட் முடிந்திருக்குமே. இந்த சனி ஞாயிறு காஞ்சிபுரம் வர்றியா?” என்று கேட்டார்.

“இல்லை.. வரமுடியாது. போனை வையுங்க” என்று துண்டித்தான்.‌

லேசாக விசும்பியபடி, ”ரோகிணி மாமி எல்லாம் மென்மையானவா. அவாளிடமே இப்படி பேசறேள். எல்லாம் என்னால தானே. சண்டையை அன்னிக்கு இருந்த கஷ்டத்துல குரல் காட்டி கொடுத்துடுச்சு. என்னவோ வேண்டுமின்னே சொன்னேன்னு குற்றம் சுமத்தறேள்?” என்றாள்.

“இங்க கண்ணை கசக்கி சீன் போட்ட, பெங்களூர் ஆபிஸுக்கே மாற்றல் வாங்கிடுவேன். இங்க நான் உனக்கு புருஷன் இல்லை.

ஷாலினி சாரி கேட்டு அவ என்ன ரீசன்ல என்னிடம் பழகினானு சொன்னதும் என்னிடம் பேசற. இதானா நீ என் மேல வச்ச நம்பிக்கை. ஒரு ஆள் என்னை பத்தி ஸ்டேட்மெண்ட் தரணுமா? நீயா புரிஞ்சுக்கலையே. இதுல நீயும் நானும் சைல்வுட் பிரெண்ட் வேற” என்றான்.

காருண்யா அதன்பின் இனி இங்கே வைத்து தங்கள் சண்டை சமாதானம் எதுவும் பேசக்கூடாதென்று விளங்க, வேலையை கவனித்தாள்.

ராவணனோ நிம்மதியாக தன் வேலையில் மூழ்க, மாலையில் அவன் வண்டியை கிளப்பும் நேரம் அவள் முன் வர, “வழியை விடு” என்றான்.‌

“ஆபிஸ்ல மத்தவா எல்லாம் ஒரு மாதிரி பார்க்குறா. ஏன் இப்படி பண்றேள். பைக்ல கூட்டுட்டு போங்கோ” என்று ஏறினாள்.

“இறங்குடி” என்றான்.

”மாட்டேன்… கூட்டிட்டு போங்கோ” என்று அடம்பிடிக்க, மற்றவர் எதிரில் அவளை இறங்க கூறி சண்டையிடாமல் அழைத்து சென்றான்.

வீட்டுக்கு வந்ததும், “ஏ… 70 ருபீஸ் ஜிபே பண்ணு. ரேப்பிட்டோல அவ்ளோ தான் சார்ஜ் காட்டுது.” என்றான்.

காருண்யா ஏதோ பேச வர, ”நான் என் பொண்டாட்டியா அழைச்சிட்டு வரலை. நீயா வந்த. சோ.. பே பண்ணு” என்று அறைக்குள் செல்ல, ”ஒன் லேக் சம்பளம் வாங்கிட்டு, நாற்பதாயிரம் வாங்கற என்னிடம் எண்பது ரூவா வசூல் செய்யறேள். ஆனாலும் அனுப்பிட்டேன்.” என்று கத்த அறைக்குள் இருந்தவனோ, உடைமாற்றி மெத்தையில் விழுந்தான்.

மெத்தையில் பெண்ணவளின் வாசம் நுகர, ‘என்ன போய் வழியறான், ஆம்பளை புத்தின்னு பேசிட்டா.’ இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை‌.’ என்றவன் அவள் தலையணையை தூரயெறிந்தான்.

அடிக்கடி ராவணனின்  உடலும் மனமும் காருண்யா தேடுகின்றது‌. உடலை தாண்டி மனதை தேடும் நாளிற்காக அவன் காத்திருந்தான். அவனுக்குமே இந்த கட்டாய கல்யாணத்தில் காதல் இல்லாமல் கரையை கடந்துவிட்டோமோ என்ற உறுத்தல் விளைந்தது. 

ராவணன் திருமணத்தை பற்றி எந்த கனவும் கண்டதில்லை. ஆனால் காதல் திருமணம் செய்ய விருப்பப்பட்டான். எந்த பெண்ணும் மனதில் பாதிக்காததால் இத்தனை காலம் காதலில் விழாமல் இருக்க, கல்யாணம் செய்யும் பொழுது அவனுமே, கல்யாணம் செய்தப்பின் கட்டியவளை காதலிக்க முடிவெடுத்தான்.
தோழியே மனைவியாக மாறிவிட்டாள். ஆனால் இந்த காதல்? கடையிலா கிடைக்கும். மோகத்துடன் ஆண் கரையை கடந்தது காலதாமதமாக வலித்தது.
ஏதோவொரு நேரம் மனம் நீ அவளை விரும்பியதாக எடுத்துரைக்க, அதே மனம் அதெல்லாம் காதலிக்கவில்லை என்று பின்வாங்கி, அவன் தாலிக்கட்டியதால் முட்டுக் கட்டுவதாக தெரிந்தது.
எது தான் உண்மை.‌ காருண்யாவை காதலிக்கின்றேனா? அல்லது அது மணந்ததால் ஏற்பட்ட நெருக்கமா? என்று குழம்பினான்.
என்னயிருந்தும் தன்னை மற்ற ஆண்கள் போல கோடிட்டு காட்டியவளிடம் கோபம் இம்மியும் குறையாமல் கொதிக்க, நீயும் அவளை விரும்பவில்லை என்று மனம் கூச்சலிட்டு நகைத்தது‌. அந்த கோபமும் அவன் காருண்யாவிடம் தான் காட்டினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

13 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-31”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 31)

    அடேய்… நானே சொல்வேன்டா. உங்க ரெண்டு பேருக்குள்ள காதலும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
    தாலி கட்டிட்டோம் புருசன் பொண்டாட்டியாகிட்டோம் என்கிற சராசரி ஃபீலிங் மட்டும் தான் ஓடுது. காதல் எல்லாம் புள்ளை குட்டி வந்த பிறகு வேணுமின்னா வரலாம்.
    அது கூட இப்படி வெஜ்க்கும் நான்வெஜ்க்கும் சண்டை போடாம இருந்தால் மட்டுமே அந்த காதல் வரும், இல்லைன்னா நிதைக்கும் நோகுதல் தான் வரும்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    IPOVATHU YOSICHIYE RENDU PERKUM LOVE ILLA NU MRG AGIDUCHINU LIFE START PANITINGA SIKRAM BUT PURITHAL IRUKUM NINACHEN VARALA EPO VANTHU EPO SERA PORINGA THIRUPI PALAYA MARI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *